உவமைகள் பேரழகு - ஏசாயா 47-ம் அதிகாரம்
உவமைகளை கையாள்வது என்பது ஒரு கலை.தமிழ் மொழியில் உவமைகள் பயன்பாடு மிக அதிகம்.பெண்ணை நிலவுக்கு ஒப்பிட்டு,நிலவை புகழ்வது போன்று பெண்ணை வர்ணிப்பது என்பது தமிழ் கவிஞர்களுக்கு காய் வந்த கலை.அது போன்று ஹீப்ரு மொழியிலும் உவமைகளை மிக அருமையாக கையாண்டு இருப்பர்.குறிப்பாக இறைவாக்காளர் ஏசாயா மிகவும் நுணுக்கமாக கையாண்டு இருப்பார்.
பாபிலோன் நாடு செல்வ செழிப்புடன் இருந்த காலம்.யூத மக்களை அடிமைகளாக பிடித்து செல்வதை பற்றியும்,யூத நாடு அடிமைப்பட்டு போவதை பற்றியும் ஏசாயா முன்னறிவித்து இருப்பார்.இதன் காரணமாக இந்நாட்டைப் பற்றி கோபம் கொண்டு அது எவ்வாறு தன்னுடைய இடத்தை இழக்க போகிறது என்று தன்னுடைய புத்தகத்தில் கூறியிருப்பார்.அவ்வாறு கூறும் பொழுது பாபிலோன் நாட்டை ஒரு இளம்பெண்ணுக்கு சமமாக்கி வர்ணித்து இருப்பார்.இப்பொழுது அவர் கூறுவதை கவனியுங்கள்.
1 மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்; மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு; “மெல்லியலாள் “, “இனியவள்” என்று இனி நீ அழைக்கப்படாய்.2 எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை; உன் முக்காடுதனை அகற்றிவிடு; உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.3 உன் பிறந்தமேனி திறக்கப்படும்; உன் மானக்கேடு வெளிப்படும்; நான் பழி வாங்குவேன்; எந்த ஆளையும் விட்டுவையேன்.[ஏசா 47:1-3]
இந்த அதிகாரம் முழுவதும் இவ்வாறே இருக்கும்.ஒரு "கன்னி பெண்" எவ்வாறு பாதுகாக்கப்படுவாள் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும்.அப்படிப்பட்ட பாதுகாப்பையும் பாசத்தையும் அவள் இனி எதிர்பார்க்க முடியாது என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.
பாபிலோன் நாட்டை "ஒரு கன்னி பெண்" என்று வர்ணித்து எழுதுவது என்பது நமக்கு இரு செய்திகளை தருகிறது."கன்னி பெண்ணை" பழங்கால சமூகங்கள் எப்படி போற்றி பாதுகாத்தன என்பதையும்,பாபிலோன் நாடு கன்னிப்பெண்ணுக்கு சமமாக்க பட்டதால் அந்நாடு எவ்வகையான செழிப்பை கொண்டிருந்தது என்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.கன்னிப்பெண் என்பவள் அழகு நிறைந்தவள்.அது போன்று இந்நாடும் அழகு மிகுந்தது என்று கூறுகிறார்.ஆனால் அந்த அழகு இனிமேல் இருக்காது என்று இறைவாக்கு உரைக்கிறார்.
No comments:
Post a Comment