Saturday, August 10, 2019

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே![ஏசா 14:12]

என்ன ஒரு கடுமையான வார்த்தைகள்!யாரைக்குறித்து தீர்க்கதரிசி இப்படி பேசுகிறார்? யாரை குறிப்பதற்கு இந்த வசனத்தை நாம் பயன் படுத்துகிறோம்? அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி  யார்? ஜாதிகளை,அதாவது பல இன மக்களை, ஈனப்படுத்தினவன் யார்? ஒவ்வொரு வார்த்தையாக நாம் பார்க்க போகிறோம்.

முதலில் யூத பைபிள் எப்படி இந்த வசனத்தை கொண்டுள்ளது என்று பார்க்கலாம்.
“How did you come to fall from the heavens,

morning star, son of the dawn?

How did you come to be cut to the ground,

conqueror of nations?"
இதன் தமிழ் மொழியாக்கம் என்னவென்றால், 
"அதிகாலை உதயபொழுதின் மகனாகிய விடிவெள்ளியே! நீ எப்படி வானங்களிலிருந்து கீழே விழுந்தாய்?பல நாடுகளை வென்றவனே! நீ எப்படி தரையில் விழுமாறு வெட்டப்பட்டாய்?"
அடுத்து NIV பைபிள் எப்படி மொழிபெயர்த்துள்ளது என்று காணலாம்.
How you have fallen from heaven,
    morning star, son of the dawn!

You have been cast down to the earth,

    you who once laid low the nations!
இதனுடைய தமிழ் மொழியாக்கம் எப்படி என்று பார்க்கலாம்.
"அதிகாலை உதயபொழுதின் மகனாகிய  
விடிவெள்ளியே! நீ எப்படி வானத்திலிருந்து கீழே விழுந்தாய்?
பல நாடுகளை கீழ்ப்படுத்தினவனே! நீ எப்படி கீழே விழத்தள்ளப்பட்டாய்?"

அடுத்ததாக KJV பைபிள் எப்படி மொழிபெயர்த்துள்ளது என்று காணலாம். 
How art thou fallen from heaven,
O Lucifer, son of the morning! how art thou cut down to the ground,
which didst weaken the nations!
இதனுடைய தமிழ் மொழியாக்கம் எப்படி என்று பார்த்து விடுவோம். 
"விடியற்காலை பொழுதின் மகனாகிய லூசிஃபரே! நீ எப்படி வானத்திலிருந்து கீழே விழுந்தாய்?பல நாடுகளை ஈனப்படுத்தினவனே நீ எப்படி தரையில் விழுமாறு வெட்டப்பட்டாய்?"
மேற்கூறப்பட்ட  விளக்கங்களிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள முடிகிறது?கீழ்கண்டவைகளை புரிந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்.
  • முடிவாக சொல்ல வரும் கருத்துக்களின் அடிப்படையில் மூன்று மொழிபெயர்ப்புகளும் சிறு அளவில் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.
  • ஆனால் KJV பைபிள் முற்றிலும் மாறான ஒரு வார்த்தையை கொண்டுள்ளது.அது "லூசிபர்" ஆகும்.
யார் இந்த லூசிபர்? ஏன் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" "லூசிபர்" என்று மொழிபெயர்க்கப்பட்டது?இதற்க்கு நாம் பதில் காண வேண்டுமானால்,இந்த "லூசிபர்" யார் என்று தெரிய வேண்டும்.பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் என்ன கூறுகிறது என்று நாம் முதலில் காணலாம்.
"Lucifer, (Latin: Lightbearer)Greek Phosphorus, or Eosphoros, in classical mythology, the morning star (i.e., the planet Venus at dawn); personified as a male figure bearing a torch, Lucifer had almost no legend, but in poetry he was often herald of the dawn. In Christian times Lucifer came to be regarded as the name of Satan before his fall."
விளக்கு ஒன்றை பிடித்து கொண்டிருக்கும் ஆண் மகனாக,நாம் அதிகாலையில் பார்க்கும் விடிவெள்ளியை கிரேக்க மற்றும் லத்தீன் இதிகாசங்களில் கற்பனை செய்து கொண்டுள்ளதாக பிரிட்டானிக்கா கூறுகிறது.மேலும் கிறித்தவம் பரவிய கால கட்டங்களில் இவன், "சாத்தான்" என்று பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒருவனை குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறான்.இங்குதான் குழப்பம் ஆரம்பிக்கிறது.

என்ன குழப்பம்?

எபிரேய[ஹீப்ரு] மொழியில்தான் பைபிள் முதலில் எழுதப்பட்டது.இது உங்கள் அனைவருக்கும் தெரியும்.பின்னர் கிரேக்கம்,லத்தீன்,ஆங்கிலம்.கடைசிதான் ஆங்கிலம்.எனவே எபிரேய மொழியில் இந்த வசனத்தை பார்ப்பதுதான் முறையான ஒன்று.

இந்த குறிப்பிட்ட வசனம் முதலில் எதை பற்றி பேசுகிறது? அதற்கு வசனங்கள் ஏசா 14:3,4 ஆகியவற்றை படியுங்கள் உங்களுக்கு புரியும்.
  • இஸ்ரேல் மக்கள் தங்கள் சிதறியிருக்கும் நாடுகளிலிருந்து திரும்ப வருவார்கள்.
  • மற்ற இன மக்களே அவர்களை கூட்டிக் கொண்டு வருவார்கள்.இந்த மற்ற இன மக்கள் அவர்களுக்கு வேலை செய்வார்கள்.
  • தங்களை சிறை படுத்தினவர்களை அவர்கள் சிறை படுத்துவார்கள்.
  • தங்கள் நாட்டில் அமைதியோடு வாழ்வதை பற்றி ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக கடவுள் இவைகளை கூறுகிறார்.
  • அப்படி இஸ்ரயேல் மக்கள் திரும்பி வந்து தங்கள் நாட்டில் குடியிருக்கும் பொழுது அவர்கள் கூறுவதாக உள்ள வசனங்கள்தான் ஏசா 14:4-17 வசனங்கள்.
  • இவை அனைத்தும் அற்புதமான உவமைகளோடு கூறப்பட்ட வசனங்கள்.
இப்பொழுது இந்த சூழ்நிலையை நாம் கருத்தில் கொண்டு வசனங்களை படிக்க வேண்டும்.மேலும் பழங்கால பாபிலோன் நாடு மிகவும் செல்வ செழிப்பான ஒரு நாடாகும்.இன்றைய அமெரிக்காவில் எப்படி பல இன மக்கள் ஒன்று கூடி வாழ்கிறார்களோ அப்படி பாபிலோனில் பல இன மக்கள் வாழ்ந்தனர்.

அமெரிக்காவின் செல்வ செழிப்பு,வாய்ப்புகள் போன்றவைகளால் ஈர்க்கப்பட்டு எப்படி பல இன மக்கள் அங்கு சென்று குடியேறி வாழ்கிறார்களோ அப்படித்தான் பழங்கால பாபிலோன் இருந்தது.அதன் செல்வ செழிப்பை பற்றி வாயடைத்து போயிருந்தனர் பழங்கால மக்கள்.அமெரிக்கா எப்படி தற்போது உள்ளதோ அப்படிதான் பாபிலோன் இருந்தது என்பதை மனதில் கொள்ளுங்கள்.அதனுடைய செல்வ செழிப்புக்கு எடுத்துக்காட்டு பாபிலோனின் தொங்கு தோட்டம்.

பல ஆறுகள் பாய்ந்தோடின. எனவே "திரளான தண்ணீர்களின் மேல் இருப்பவளே" என்பது போன்ற உவமைகள் பாபிலோனை குறிக்க பயன்பட்டன. மிக உயர்ந்த கட்டிடங்களும் அகலமான வீதிகளும் அலங்கரித்தன.


பழங்கால பாபிலோனியா வரைபடத்தை பாருங்கள்.எப்படி பரந்து விரிந்திருக்கிறது என்று.மஞ்சள் நிறத்தில் இருப்பதுதான் பழங்கால பாபிலோன்.யூத மற்றும் இஸ்ரயேல் நாடுகளை உள்ளடக்கிஇருக்கிறது.எகிப்தையும் உள்ளடக்கி கொண்டுள்ளது.எரேமியாதீர்க்கதரிசி,எகிப்து பிடிக்க படுதலை பற்றி தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பழங்கால பாபிலோன் "தான் மிகப்பெரியவன்,தன்னை யாரும் தோற்கடிக்க முடியாது" என்றும் பெருமை கொண்டிருந்தான் என்றும் பைபிள் நமக்கு கூறுகிறது.சரி இப்பொழுது நம்முடைய செய்திக்கு வருவோம்.

இஸ்ரயேல் மக்கள் இந்த பாபிலோனிலிருந்து திரும்பி வருவர் .அல்லது மற்ற நாடுகளிலிருந்து திரும்பி வருவர்.அப்பொழுது அவர்கள் பாபிலோனைப் பற்றி கூறுகிறார்கள்.இதுதான் இந்த குறிப்பிட்ட அதிகாரத்தின் கருப்பொருள்.

இந்த வசனத்தில் வரும் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" எவ்வாறு எபிரேய பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது?கீழே பாருங்கள்.
  • "அதிகாலையின் மகன்" -  "மகன்" என்பதற்கு "ben(בן)" ஆகும்.
  • "அதிகாலை" - Strong Number 7836 - "விடியற்காலை" - shachar(שָׁחַר).
  • எனவே "Ben shachar" என்பது  "அதிகாலையின் மகன்".
  • அடுத்து "Heylel" - இந்த வார்த்தைதான் "Lucifer" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • Heylel(הֵילֵל) - Strong Number 1966 - பிரகாசமான ஏதாவது ஒன்று அல்லது ஒருவர்.
பிரகாசமான ஏதாவது ஒன்று என்பது எது? இந்த இடத்தை பொறுத்த வரையில் அது "விடிவெள்ளி" தான்.அதற்க்கு உயிர் உண்டா? உறுதியாக கிடையாது எனலாம்.ஏன் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது?

ஏனெனில் விடிவெள்ளி என்பது அதிகாலை நேரத்தில் தோன்றும்.மற்ற ஒளிரும் நட்சத்திரங்களை பார்க்கிலும் இந்த விடிவெள்ளி மிக பிரகாசமாக ஒளிரும். பார்த்தவுடன் இதை நாம் "விடிவெள்ளி" என்று கண்டு பிடித்து விடலாம்.பிரகாசமாக ஒளிர்வதால் இதற்க்கு தனி சிறப்பு உண்டு.
  • இது போல்தான் பாபிலோன் நாடு.பல நாடுகள் இருந்தாலும் இந்த பாபிலோன் தனி சிறப்புடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
  • தன்னுடைய செல்வ செழிப்பின் காரணமாக பெருமை கொண்டிருந்தது.
  • இந்த பெருமையைத்தான் கடவுள் 13,14-ம் வசனங்களில் இஸ்ரேல் மக்கள் கூறுவது போல் கற்பிக்கிறார்.
  • முடிவாக பாபிலோனின் பெருமையைக் குறிக்கவே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் வேறு விதமாக இன்று இந்த வசனம் பயன்படுகிறது.அதாவது,
  • இந்த "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" வேறு யாருமல்ல,அவன்தான் "சாத்தான்".
  • அவன் கீழே விழத்தள்ளப்பட்டான்.
  • அவன் கடவுளுக்கு விரோதமாக பெருமை கொண்டான்.எனவே கீழே தள்ளப்பட்டான்.
  • எனவே "சாத்தான்" என்பவன் "கீழே விழத்தள்ளப்பட்ட தூதன்".
கீழே விழத்தள்ளப்பட்ட தூதன் என்று இந்த அதிகாரத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.பின் எப்படி இந்த தவறான கருத்து உள்ளே வந்தது? இயேசு இறந்த பின் பல ஆண்டுகள் கழிந்த பின் கிறித்தவம் யூதர்கள் தவிர மற்ற இனத்தவரிடையேயும் பரவ ஆரம்பிக்கிறது.இந்த கால கட்டத்தில் கிரேக்க தாக்கம் அப்பகுதி முழுவதும் நன்றாக ஊடுருவி இருந்தது.அத்தகைய கிரேக்க கருத்துக்களில் ஒன்று என்னவென்றால்,கடவுள் நல்லவர் மற்றும் இந்த உலகத்தையும் நம்மையும் படைத்தது அவர்தான் என்றால் ஏன் உலகம் அருவருப்புகளால் நிறைந்திருக்கிறது?மனிதர்களிடம் ஏன் இவ்வளவு கேட்ட எண்ணங்கள் செயல்கள்? மனிதன் ஏன் இறக்க வேண்டும்? எனவே கெட்டவைகளுக்கு என்று ஒருவன் இருக்கிறான்.அவன் கடவுளுக்கு விரோதி.அதாவது "Devil ".கிரேக்கர்களை பொறுத்தவரை மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் வேண்டும்.அது "டெவில்" ல் உள்ளது.

இந்த  "கீழே விழத்தள்ளப்பட்ட தூதனிடத்தில்"தான் கெட்டவைகள்  உள்ளது என்பது காலப்போக்கில் ரோமர்களால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.இந்த "Devil" கடவுளுக்கு விரோதி.இவன்தான் தீமைகள் அனைத்திற்கும் காரணம்.இவ்விதமான கருத்துக்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானது.தீமைகளுக்கென்று ஒருவன் தேவை.அது இந்த அதிகாரத்தில் கிடைக்கிறது."வானத்தில் இருந்து கீழே விழத்தள்ளப்பட்ட" என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டனர்.

ஏற்கனவே ஏசாயா புத்தகம் முழுவதும் உவமைகளால் நிறைந்த ஒன்றாகும்.உவமைகள் கூறும் கருத்தைத்தான் நாம் எடுக்க வேண்டுமே தவிர அப்படியே எடுக்க கூடாது.எருசலேம் நகரத்தை "கன்னிகை"யாகவும்,இஸ்ரேல் மக்களை தன்னுடைய மனைவியாகவும் உவமைகளால் கடவுள் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.நாம் அப்படியே எடுத்துக்கொள்ளலாமா? அது போலத்தான் இங்கும் உவமை கூறும் கருத்துதான் பார்க்கப்பட வேண்டும்.   

தமிழில் சரியாகத்தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில்தான் தவறு நிகழ்ந்துள்ளது.தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவு வசனங்கள் என்ன கூற வருகின்றன என்பதை விட்டு வேறு பொருளை நாம் கற்பித்துக் கொண்டோம்.KJV  பைபிள் மட்டுமே இவ்வாறு செய்துள்ளது.காரணம் KJV, லத்தின் மொழியை அடிப்படையாகக் கொண்டது.லத்தீன் மொழியை பயன்படுத்திய ரோமர்களின் ஒரு இதிகாச பாத்திரம்தான் இந்த "லூசிபர்".விடிவெள்ளியைத்தான் ரோம மக்கள் "லூசிபர்" என்று அழைத்தனர்.

காலையில் தோன்றும் விடிவெள்ளியை,அதாவது "வெள்ளி கோளை" ரோமர்கள் "லூசிபர்" என்று அழைத்தனர் அவ்வளவுதான்.ஆனால் அது எப்படி "சாத்தானாக" மாறியது? இங்குதான் கிரேக்க கற்பனைகள்,பாபிலோனிய கற்பனைகள் உள்ளே புகுகின்றன.ஏனெனில் கிரேக்க மொழியில் "ஒளிரும் பொருளுக்கு" பெயர் "Phosphorus" ஆகும்.

பக்கத்திலுள்ள படத்தை பாருங்கள்.சிறகுகள் உள்ள ஒரு குழந்தை "ஒளியை" ஊற்றுகிறது.இதுதான் கிரேக்கத்தில்  "Phosphorus",லத்தீனில் "லூசிபர்(lucifer)".அதாவது ஹீப்ரு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு பைபிளானது மொழிமாற்றம் செய்யப்பட்ட பொழுது லத்தீன் வார்த்தையையே பயன்படுத்தி விட்டனர்.ஆனால் குழப்பம் வேறு விதமாக உள்ளே நுழைந்து விட்டது.கிறித்தவம் பரவிய கால கட்டங்களில் இந்த "லூசிபர்" சாத்தானாக மாறிவிட்டான்.உண்மையில் "சாத்தான்" என்ற சொல்லிற்கு பொருள் நாம் நினைப்பது போல் அன்று.அதை பற்றி ஏற்கனவே விரிவாக இந்த வலைத்தளத்தில் கொடுத்துள்ளேன்.

கடைசியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
  • இந்த குறிப்பிட்ட அதிகாரம் பாபிலோனின் அழிவைப்பற்றி பேசுகிறது.
  • கடவுள் இஸ்ரேல் மக்களுக்கு கொடுக்கும் அமைதியை பற்றி பேசுகிறது.
  • பாபிலோன் நாடு எவ்வாறு தற்பெருமை கொண்டிருந்தது என்பதைப்பற்றி பேசுகிறது.
  • மிகவும் ஆச்சரியமான செய்தி என்னவென்றால்,ஏறத்தாழ 150 வருடங்களுக்கு பின் நடக்க இருக்கும் ஒரு செய்தியை ஏசாயா தீர்க்க தரிசி மூலமாக கடவுள் கூறுகிறார்.
  • ஏசாயா இந்த வசனங்களை கூறும் பொழுது யூத மக்கள் இன்னும் தங்கள் நாட்டில்தான் இருக்கின்றனர்.இன்னும் சிறை படக்கூட இல்லை.
கடவுளுடைய வசனங்களை பின் வந்த கிறித்தவர்கள் மிகவும் திரித்து கிரேக்க,ரோம கற்பனைகளுக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டனர்.அதிலும் கிரேக்க கருத்துக்களின் தாக்கம் மிக அதிகம்.கடவுளுடைய வார்த்தைகளை ஹீப்ரு மொழி உதவி கொண்டு படித்தால் மிக நன்று.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1iEWIvLeuNyAjMris8Un-a_62thv1oLq9/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts