ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாத உலகம் சாத்தியமா?
இதுதான் நாம் அனைவரும் விரும்பும் உலகம்.ஏழை பணக்காரன் பாகுபாடற்ற ஒரு உலகத்தை நாம் படைக்க வேண்டும் என்று சிந்தனையாளர்கள் பலர் நினைப்பது உண்டு.ஆனால் அது சாத்தியமா? கடவுள் தவறாக இந்த உலகத்தை படைத்து விட்டாரா?ஏழைகள் என்றொரு வர்க்கம் இருப்பதற்கு அவர் அனுமதிக்கிறாரா?இவைகளை பற்றி பார்ப்பதற்கு முன்னால் நாம் ஒரு எடுத்துக்காட்டை பார்த்து விடுவோம்.
நாம் அனைவரும் அருவிக்கு குளிப்பதத்திற்காக சென்றிருப்போம். அருவியிலிருந்து விழும் தண்ணீர் என்ன செய்கிறது?விழுந்து ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறதா அல்லது ஓடுகிறதா?உறுதியாக தேங்கி நிற்க இயலாது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.ஒரு வேலை தேங்கி நிற்பதாக நாம் கற்பனை செய்து கொண்டால்,தேங்கி நிற்கும் இடத்தில் தண்ணீரின் அளவு மிகவும் அதிகரித்து அந்த அருவியை இல்லாமல் போக செய்து விடும்.எனவே தண்ணீரானது ஓட வேண்டியிருக்கிறது.
தண்ணீரானது ஓடாமல் நின்று விட்டால் அது குட்டையாக மாறி விடும்.அப்படி குட்டை உருவாக்க வேண்டுமானால் அந்த இடம் பள்ளமாக இருக்க வேண்டும்.சரி,அருவி ஏன் மேலிருந்து கீழே விழுகிறது?தண்ணீர் ஏன் ஆறாக ஓடுகிறது?அப்படியே நிக்க வேண்டியதுதானே?இவை அனைத்திற்கும் அடிப்படை,பூமியின் மேடு பள்ளம்.
பூமியானது மேடு,பள்ளம்,மலைகள்,குன்றுகள் போன்றவைகள் அற்ற ஒரு சமதள பூமியாக படைக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?அருவிகள்,ஆறுகள்,நதிகள்,கடல்,குளம்,குட்டைகள் இருக்குமா?நிச்சயமாக நம்மால் கூற முடியும் இருக்க முடியாது என்று.சுருக்கமாக கூற வேண்டுமாயின்,தண்ணீரின் "இயக்கம்" இருக்காது.விளைவு?விவசாயம் இருக்காது.உணவு இருக்காது.மலை ஏறத்தாழ இருக்காது.உலகம் அப்படியே தன்னுடைய இயக்கத்தை நிறுத்தி கொண்டு விடும்.உயிரினங்கள் இருக்காது.விளைவுகள் நாம் கூறியவற்றை விட மிக மோசமாக இருக்கும்.
எனவே "மேடுகள்,மலைகள்,குன்றுகள்,பள்ளங்கள்" அவசியமாகிறது.கடவுள் எவ்வளவு அருமையாக படைத்திருக்கிறார்?அவருடைய அறிவுக்கு ஏதாவது ஈடாகுமா? அவருக்கு யாரையாவது அல்லது எதையாவது சமமாக்க முடியுமா?அவர் கூறுகிறார்,
நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.[ஏசா 45:12].
வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.[ஏசா 45:18]
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. [ஏசா 45:22]
அவர் தன்னை பற்றி எண்ணற்ற இடங்களில் கூறியிருக்கிறார்.அவர் தன்னை மனிதன் அல்ல என்றும்,தனக்கு ஈடு இணை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
சரி,இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம்.மேடு-பள்ளம் இல்லா விட்டால் உலகம் இல்லை.உலக இயக்கம் இல்லை.தண்ணீரானது ஓட வேண்டும்.அதற்க்கு மேடு-பள்ளம் வேண்டும்.அது போன்று ஏழை-பணக்காரன் இல்லை என்றால் "உழைப்பு" இருக்காது.உழைப்புதான் "இயக்கம்".மனிதன் சோம்பேறியாக இருந்திருப்பான்.ஏனென்றால் அவனுக்கு உழைப்பு தேவை இல்லை.காரணம் "சமநிலைமை"தான் அடைந்து விட்டோமே.தண்ணீரின் இந்த "ஓட்டம்" பள்ளத்தை மேடாக்குகிறது,மேட்டை பள்ளமாக்குகிறது.
எனவே "சமநிலைமை" என்பது சாத்தியமற்றது.இதன் காரணமாக பணக்காரர்கள் அனைவரும் "உயர்ந்தவர்கள்" என்றும்,ஏழைகள் அனைவரும் "தாழ்ந்தவர்கள்" என்றும் பொருள் அல்ல.அதை கடவுள் அனுமதிக்கவே இல்லை.பிறப்பால் "உயர்வு-தாழ்வு" என்பதை திருமறையில் எங்கும் குறிப்பிடப்படவே இல்லை.
மேடு-பள்ளம் எப்படி முக்கியமோ அவ்வளவு முக்கியம் "ஏழை-பணக்காரன்".கடவுள் தெரியாமல் இதை அனுமதிக்க வில்லை.ஏழைகளை ஒடுக்குவதையோ,அவர்களை வெறுப்பதையோ கடவுள் வெறுக்கிறார்.அவர்தான் உலகத்தை படைத்தவர்.மேட்டை பள்ளமாகவும்,பள்ளத்தை மேடாகவும் மாற்ற அவரால் மட்டுமே கூடும்.அவர் கூறுகிறார்,
முடிவாக ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு பணத்தின் அடிப்படையில் மட்டுமே அன்றி பிறப்பின் அடிப்படையில் அல்ல.ஏழையாக பிறக்கும் ஒருவன் உழைத்து கடவுளுடைய ஆசியை பெரும் பட்சத்தில் அவன் பணக்காரனாக மாறுவான்.
மேடு பள்ளங்களற்ற உலகத்தை எப்படி கற்பனை செய்ய இயலாதோ அவ்வாறே ஏழை-பணக்காரன் அற்ற உலகத்தை கற்பனை செய்ய இயலாது.நாம் ஏழைகள் என்று நினைத்து வருத்தப்பட வேண்டாம்.கடவுளுடைய கைவேலையில் நாம் அவ்வாறு இருக்கிறோம்.
இக்கருத்தை தவறாக நினைக்கவும் வாய்ப்பு உள்ளது.எப்படியென்றால்,பணக்காரனாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க கூடாது.மேலும் தவறான அடிப்படையில் பணம் சம்பாதிக்க முயலவும் கூடாது.நேர்மையான உழைப்பையே கடவுள் விரும்புகிறார்.பல நேரங்களில் நேர்மையான உழைப்புக்குத்தக்க பலன் இல்லாமல் போகலாம்.அந்நேரங்களில் கவலை நம்மை வாட்டும்.கடவுளிடம் விண்ணப்பம் செய்வது தவிர வேறு வழியும் இல்லை.உண்மையில் நாம் ஏழைகளாக இருப்பதை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியாது.இதை எழுதும் நானும் இப்பொழுது ஏழைதான்.வருத்தமாகவும் இருக்கிறது.ஆனாலும் நம்மால் என்ன செய்ய முடியும்?என்னால் உழைக்க முடியும்.ஆனால் ஆசீர்வதிக்க கடவுளால் மட்டுமே முடியும்.
உலகின் இயக்கத்திற்கு நாமும் காரணமாக இருக்கிறோம் என்பதையும் நாம் ஒரு கணம் நினைக்க வேண்டும்.அதற்க்கு வேறு யாரும் இருக்கலாமே நான் ஏன்? என்று நீங்கள் நினைக்கலாம்.நானும் அவ்வாறு நினைத்துஉள்ளேன்,நினைத்து கொண்டிருக்கின்றேன்.ஆனால் வேறு என்னதான் வழி என்று நீங்கள் நினைத்து பாருங்கள்.ஒன்றும் இருக்காது.கடவுள்தான் எல்லாம்.ஏழைகளாகிய நாம் அவருடைய திட்டங்களில் ஒரு அங்கம் அவ்வளவுதான்.
வேறு வழி இல்லை என்பதினால் அவருடைய பாதங்களில் விழுவவோமாக.எனவே "சமநிலை" என்பது சாத்தியமில்லை.மலையானது தான் மலையாக படைக்கப்பட்டு விட்டோமே என்று கவலை பட முடியாது.பள்ளமானதும் தான் பள்ளமாக படைக்கப்பட்டு விட்டோமே என்று கவலை பட முடியாது.இரண்டும் உலகின் இயக்கத்திற்கு தேவை.நாம் உழைப்போம்.பலனை கடவுள் தருவார்.இக்கட்டுரையின் முடிவான கருத்துக்கள்,
நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.[ஏசா 1:17]
உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.[லேவி 19:10]
யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.[லேவி 19:33]எனவே ஏழைகளை அவர் கவனித்து கொண்டிருக்கிறார்.அவர்களை தாழ்வானவர்களாகவும், அவர்களை ஒடுக்குகிறவர்களையும் அவர் சும்மா விடமாட்டார்.ஏழைகளும் அவருடைய படைப்புகள்தான்.
முடிவாக ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு பணத்தின் அடிப்படையில் மட்டுமே அன்றி பிறப்பின் அடிப்படையில் அல்ல.ஏழையாக பிறக்கும் ஒருவன் உழைத்து கடவுளுடைய ஆசியை பெரும் பட்சத்தில் அவன் பணக்காரனாக மாறுவான்.
மேடு பள்ளங்களற்ற உலகத்தை எப்படி கற்பனை செய்ய இயலாதோ அவ்வாறே ஏழை-பணக்காரன் அற்ற உலகத்தை கற்பனை செய்ய இயலாது.நாம் ஏழைகள் என்று நினைத்து வருத்தப்பட வேண்டாம்.கடவுளுடைய கைவேலையில் நாம் அவ்வாறு இருக்கிறோம்.
இக்கருத்தை தவறாக நினைக்கவும் வாய்ப்பு உள்ளது.எப்படியென்றால்,பணக்காரனாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க கூடாது.மேலும் தவறான அடிப்படையில் பணம் சம்பாதிக்க முயலவும் கூடாது.நேர்மையான உழைப்பையே கடவுள் விரும்புகிறார்.பல நேரங்களில் நேர்மையான உழைப்புக்குத்தக்க பலன் இல்லாமல் போகலாம்.அந்நேரங்களில் கவலை நம்மை வாட்டும்.கடவுளிடம் விண்ணப்பம் செய்வது தவிர வேறு வழியும் இல்லை.உண்மையில் நாம் ஏழைகளாக இருப்பதை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியாது.இதை எழுதும் நானும் இப்பொழுது ஏழைதான்.வருத்தமாகவும் இருக்கிறது.ஆனாலும் நம்மால் என்ன செய்ய முடியும்?என்னால் உழைக்க முடியும்.ஆனால் ஆசீர்வதிக்க கடவுளால் மட்டுமே முடியும்.
உலகின் இயக்கத்திற்கு நாமும் காரணமாக இருக்கிறோம் என்பதையும் நாம் ஒரு கணம் நினைக்க வேண்டும்.அதற்க்கு வேறு யாரும் இருக்கலாமே நான் ஏன்? என்று நீங்கள் நினைக்கலாம்.நானும் அவ்வாறு நினைத்துஉள்ளேன்,நினைத்து கொண்டிருக்கின்றேன்.ஆனால் வேறு என்னதான் வழி என்று நீங்கள் நினைத்து பாருங்கள்.ஒன்றும் இருக்காது.கடவுள்தான் எல்லாம்.ஏழைகளாகிய நாம் அவருடைய திட்டங்களில் ஒரு அங்கம் அவ்வளவுதான்.
வேறு வழி இல்லை என்பதினால் அவருடைய பாதங்களில் விழுவவோமாக.எனவே "சமநிலை" என்பது சாத்தியமில்லை.மலையானது தான் மலையாக படைக்கப்பட்டு விட்டோமே என்று கவலை பட முடியாது.பள்ளமானதும் தான் பள்ளமாக படைக்கப்பட்டு விட்டோமே என்று கவலை பட முடியாது.இரண்டும் உலகின் இயக்கத்திற்கு தேவை.நாம் உழைப்போம்.பலனை கடவுள் தருவார்.இக்கட்டுரையின் முடிவான கருத்துக்கள்,
- மேடு-பள்ளம் உலகின் இயக்கத்திற்கு அடிப்படை.
- ஏழை-பணக்காரன் பாகுபாடும் அப்படியே.
- அதன் அடிப்படையில் உயர்வு-தாழ்வு பார்க்க முடியாது.
- ஏழைகளை கடவுள் கண்ணோக்கி கொண்டிருக்கிறார்.ஏனெனில் அவர்கள் அவரின் படைப்புகள்.யாரும் அவர்களை தாழ்த்த அவர் அனுமதிக்க வில்லை.திருமறையும் அதைத்தான் கூறுகிறது.
பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.[ஏசா 58:10]
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.[நீதி 22:22-23].இவைகளை மனதில் கொண்டு வாழ பழகுவோம்.உலக இயக்கத்திற்கு "ஏழை-பணக்காரன்" தேவை.ஆனால் அதன் அடிப்படையில் "உயர்வானவன்-தாழ்வானவன்"அல்ல.ஆபிரகாமின் கடவுளாம் "எல்லாம் வல்ல இறைவனை" நாம் தொழுது கொண்டு அவருக்கே துதிகளை செலுத்துவோமாக.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1br4yBHST4FzRAfi3kME6qMXUsgYfPR59/view?usp=sharing
https://drive.google.com/file/d/1br4yBHST4FzRAfi3kME6qMXUsgYfPR59/view?usp=sharing
No comments:
Post a Comment