கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு[எரே 46:10]-தவறான மொழிபெயர்ப்பு.
மொழிபெயர்ப்பு என்பது எவ்வளவு சிக்கலான செயல் என்பது இந்த வசனத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.இந்த குறிப்பிட்ட வசனம் தவறுதலாக மொழிபெயர்க்க பட்டுள்ளது.நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்? மேலும் மொழிபெயர்ப்பவருடைய தன்மைகள்,அவருடைய கலாச்சாரம் இவைகளும் கூட மொழிபெயர்ப்புகளில் வெளிப்படுகின்றன.
முதலில் இந்த வசனத்தை தமிழில் பார்த்து விடுவோம்.
"ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு."
இந்த அதிகாரம் எதை குறித்து பேசுகிறது?எகிப்தின் மன்னனாகிய பார்வோன் நேகா, பாபிலோன் மன்னன் நேபுகாத்நேச்சரால் தோற்கடிக்கப்படுதலைக் குறித்து பேசுகிறது.மற்றொரு முக்கியமான தகவலையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.எரேமியா புத்தகம் சரியான வரிசையில் எழுதப்பட்டு இருக்காது.நாம்தான் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
சரி இப்பொழுது நம்முடைய செய்திக்கு வருவோம்.மேலே குறிப்பிட்ட வசனத்தில் என்ன தவறு?அதை புரிந்து கொள்வதற்கு முன் "யாகம்" என்றால் என்ன என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஐயர்[பிராமணர்கள்] பலர் ஒன்று கூடி,தீ வளர்த்து,மந்திரங்கள் ஓதி,வேற்று கடவுளிடம்[கடவுள் என்று அவர்கள் நம்புகிறவர்களை] விண்ணப்பங்கள் செய்வது.இப்படித்தான் நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம்.
இன்றைய கால கட்டத்தில் இப்படி நினைக்கத்தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.அதிலும் புதிதாக கிறித்தவ பாதைக்குள் வருபவர்கள் உறுதியாக இவ்வாறுதான் நினைப்பார்கள்.நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி என்னவென்றால்,பழந்தமிழர்களுக்கு "யாகம்" என்ற கருத்து புதிது.ஆரியர்களால் நமக்குள் திணிக்கப்பட்டதுதான் இந்த "யாகம்".நம் மக்கள் இது தெரியாமல் "யாகத்தை" கெட்டியாக பிடித்து கொண்டனர்.
எனவே ஒரு உண்மையான தமிழன் அல்லது தமிழ் அறிஞர் பைபிளை மொழிபெயர்த்திருந்தால் "யாகம்" என்று மொழிபெயர்த்திருக்க மாட்டார்.
மேற்கூறிய எரே 46:10-ஐ பல்வேறு மொழிபெயர்ப்புகளில் எப்படி மொழிமாற்றம் செய்துள்ளார்கள் என்று பார்த்து விடுவோம்.
But that day belongs to the Lord, the Lord Almighty—
a day of vengeance, for vengeance on his foes.
The sword will devour till it is satisfied,till it has quenched its thirst with blood.For the Lord, the Lord Almighty, will offer sacrificein the land of the north by the River Euphrates.-[NIV]
KJV எப்படி மொழிபெயர்த்துள்ளது என்றும் காணலாம்.
For this is the day of the Lord God of hosts, a day of vengeance, that he may avenge him of his adversaries: and the sword shall devour, and it shall be satiate and made drunk with their blood: for the Lord God of hosts hath a sacrifice in the north country by the river Euphrates.
தற்போது யூதர்களுடைய மொழிபெயர்ப்பை காணலாம்.
For on that day Adonai Elohei-Tzva’ot
will have a day of vengeance
for avenging himself on his enemies.
The sword will destroy, have its fill,
be made drunk on their blood.
Yes, Adonai Elohei-Tzva’ot
decrees slaughter in the land to the north
by the Euphrates River.
மேற்கூறிய மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளும் ஒரே பொருளைத்தான் தருகின்றன.அது என்னவென்றால்,சேனைகளின் கடவுளாகிய கர்த்தர் "யூப்ரடீஸ்" நதிக்கு வடக்கே மிகப்பெரும் பலியிடுதலை நடத்த இருக்கிறார்.அவருடைய பட்டயம் கூர்தீட்டப்பட்டு தயாராக உள்ளது.யாரை பலியிடப்போகிறார்? எகிப்தியரை!!
அதாவது எரேமியா புத்தகம் கவிதை நடையில் எழுதப்பட்ட புத்தகம்.உவமைகள் அதிகம் நிறைந்த புத்தகம்.எகிப்து தோற்கடிக்கப்பட போகிறது என்பதை கடவுள் தன்னுடைய தீர்க்க தரிசி மூலமாக உவமையாக விளக்கியிருக்கிறார்.ஒரு மாபெரும் பலியிடுதல் நடக்க போகிறது.இரத்த ஆறு ஓடப் போகிறது.இதுதான் தகவல்.
பின்னொரு இடத்தில் கூட,எகிப்தை நம்பி,நேபுகாத்நேச்சருக்கு தப்பியிருந்த யூத மக்கள் போக வேண்டாம் என்று எரேமியா கூறியிருப்பார்.எகிப்து தோற்கடிக்கப்பட போகிறது.அதை நம்பி யூத மக்கள் போக வேண்டாம்.இதுதான் தகவல்.
சரி தமிழில் என்ன பிழை? இரண்டு பிழைகள் உள்ளன.
- அதாவது "யூப்ரடீஸ்" நதிக்கு வடக்கே "சேனைகளின் கடவுள்"தான் "மாபெரும் பலியை" கொடுக்கப் போகிறாரே அன்றி அவருக்கு யாரும் பலி கொடுக்க வில்லை. அனைத்து ஆங்கில மொழிபெயர்ப்புகளும் அவ்வாறே உள்ளது. பதிலாக தமிழில்,"சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு" என்று உள்ளது.தவறான பொருளை தரும்படி மொழிபெயர்த்து விட்டனர்.
- இரண்டாவது,அது "யாகம்" அல்ல,பதிலாக "மாபெரும் பலி".இவ்வாறே மொழிபெயர்த்திருக்க வேண்டும்."மாபெரும் பலி" என்கிற பொது அவ்வார்த்தையின் பொருளை நாம் உள்வாங்கி கொள்ள முடிகிறது.கடவுள் எகிப்துக்கு மிகப்பெரும் தோல்வியை தரப்போகிறார்.அதில் இரத்த ஆறு ஓடும்.அது கடவுள் பழி தீர்க்கும் இடமும் கூட!
"ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் ஒரு மாபெரும் பலியிடுதலை கட்டளையிடுகிறார்."
அக்காலத்தில் "பிராமணர்களின்" துணை கொண்டு பைபிள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அவர்களின் "சமஸ்கிருத" வார்த்தைகள் தமிழ் பைபிளில் ஏராளமாக உள்ளன.அவர்களின் வழக்கமான "யாகம்" உள்ளே நுழைந்தது இப்படித்தான்.ஆனால் கடவுள் அதை கூற வில்லை."யாகம்" என்று மொழிபெயர்த்தத்தின் காரணமாக எரேமியா மூலம் கடவுள் கருத்தில் இருக்கும் "தீவிரத்தை" நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
"Sacrifices" என்ற வார்த்தை தமிழில் "யாகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.உண்மையில் தமிழில் அப்படி ஒரு வார்த்தையே கிடையாது.பிராமணர்கள் ஆங்கிலேயர்களின் வேலைக்காரர்களாக இருந்தபொழுது இப்படி நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் படிப்பறிவு கொண்டிருந்தோர் அவர்கள்தானே.எனவே மொழிபெயர்ப்புகளில் அவர்களுடைய தாக்கம் இன்றும் இருக்கிறது.
"யாகம்" என்றால் என்ன பொருள் என்று தேடி பார்த்த பொழுது கீழ்கண்ட தகவல் கிடைத்தது.
"Sacrifices" என்ற வார்த்தை தமிழில் "யாகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.உண்மையில் தமிழில் அப்படி ஒரு வார்த்தையே கிடையாது.பிராமணர்கள் ஆங்கிலேயர்களின் வேலைக்காரர்களாக இருந்தபொழுது இப்படி நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் படிப்பறிவு கொண்டிருந்தோர் அவர்கள்தானே.எனவே மொழிபெயர்ப்புகளில் அவர்களுடைய தாக்கம் இன்றும் இருக்கிறது.
"யாகம்" என்றால் என்ன பொருள் என்று தேடி பார்த்த பொழுது கீழ்கண்ட தகவல் கிடைத்தது.
Yajna or Yagna (also called yaga or yagam) is a Vedic sacrifice or an outer form of ritual worship, in which offerings are made to different deities in a prescribed and systematic manner by worshippers to nourish them and thereby supplicate them, so that they would assist the worshippers in achieving their goals and desires in life. It is usually done with the help of qualified priests
மேற்கண்ட ஆங்கில விளக்கம் "பலி கொடுத்தல்" என்ற பொருளுக்கு ஓரளவு ஒத்து போகிறது என்றாலும் அந்த இடத்திற்குரிய பொருளை தரவில்லை.பிராமணர்களின் உதவியோடு மொழிபெயர்க்கும்பொழுது அவர்களுடைய தாக்கம்தான் இருக்கும்.இங்கே கடவுள் மிகவும் கோபமாக பேசி கொண்டிருக்கிறார்.இரத்த ஆறு ஓடப்போகிறது.அதைத்தான் மொழிபெயர்ப்பு நமக்கு தர வேண்டும்.கடவுளின் கோபம் சரியான மொழிபெயர்ப்பில் மட்டுமே தெரிகிறது.
இரா.இருதயராஜ்.
பதிவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment