Saturday, August 24, 2019

மனித பலியைப் பற்றி கடவுள் என்ன கூறுகிறார்?

மனித பலியைப் பற்றி கடவுள் என்ன கூறுகிறார்?

எரேமியா தீர்க்க தரிசி வாழ்ந்த கால கட்டங்களில் இஸ்ரயேல் மக்கள் கடவுளுடைய சட்டங்களை விட்டு விலகி வேற்று தெய்வங்களுக்கு வழிபாடு செய்தனர் என்பதை அவருடைய புத்தகங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.கடவுள் வேற்று தெய்வ வழிபாட்டைப்பற்றி என்ன கூறுகிறார்?

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.[யாத் 20:4,5]
அன்றாட வாழ்க்கையில் நிகழும் தவறுகளுக்காக "பலி கொடுத்தல்" என்ற முறையினை கடவுள் இஸ்ரேல் மக்களுக்கு கொடுத்திருக்கிறார்.இப்பலிகளில் பல வகைகள் உண்டு.ஆடு,மாடு,புறா போன்றவைகளைத்தான் பாலி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.இவைகள் இல்லாத அல்லது வாங்கும் திராணி இல்லாத ஏழைகளுக்காக வேறு வழியையும் கடவுள் கொடுத்துள்ளார்.ஆடு மாடு போன்றவற்றினை பலியிட்டு அவற்றின் இரத்தத்தை தெளித்தால் மட்டுமே தவறுகள் மன்னிக்கப்படும் என்ற நிலை இல்லை.

இரத்தம் இல்லாமல் வெறும் "மாவை"கே கொண்டு கூட பாவ நிவாரணம் பெற இயலும்.எனவே "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு என்பது இல்லை" என்ற கூற்று தவறு.எங்கு இந்த மேற்கூறிய கூற்று கூறப்பட்டுள்ளது? எபி 9:22-ல் உள்ளது.
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
ஆனால் இந்த பாவ மன்னிப்பு முறைகளைப்பற்றி தெளிவாக கூறும் லேவியராகமம் புத்தகம் கீழ்கண்டவாறு கூறுகிறது. 

இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,

அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்குஇடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.

இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.[லேவி 5:11-13]
எனவே லேவி5:11-13-க்கு எபி 9:22 வசனம் முரண்படுகிறது. இயேசுவின் இரத்தம் பாவ மன்னிப்பிற்கு அவசியம் என்ற கூற்று தவறு என்று இது நிரூபிக்கிறது.இது கூட அறியாமை என்ற அளவில் விட்டு விடலாம் போன்று தோணுகிறது.ஆடு,மாடுகளை தவிர மனித இரத்தத்தை கடவுள் அனுமதிக்கிறாரா? என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.அல்லது மனிதனை பாலி கொடுப்பதை அவர் அனுமதிக்கிறாரா?

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் இதைப்பற்றி சில விபரங்கள் உள்ளது.
அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.[எரே 32:35]
மேற்கூறிய வசனம் மிகத்தெளிவாக உண்மைகளை கூறுகிறது."நான் அவர்களுக்கு கற்பித்தது இல்லை " என்று கடவுள் கூறுகிறார்.யார் இந்த மோளேக்கு? பிரிட்டானியா தகவல் களஞ்சியம் கீழ்கண்டவாறு கூறுகிறது.
Moloch, also spelled Molech, a Canaanite deity associated in biblical sources with the practice of child sacrifice.
அதாவது குழந்தைகளை பலி கொடுக்கும் நிகழ்விற்கு தொடர்புடைய கானானிய கடவுள் என்று கூறுகிறது.மிக புகழ் பெற்ற "ரேசி" என்ற யூத "ரபி" கீழ்கண்டவாறு கூறுகிறார்.
Tophet is Moloch, which was made of brass; and they heated him from his lower parts; and his hands being stretched out, and made hot, they put the child between his hands, and it was burnt; when it vehemently cried out; but the priests beat a drum, that the father might not hear the voice of his son, and his heart might not be moved.
இதனுடைய தமிழாக்கம் என்னவென்றால்,"மோளேக்கு என்பவன் தொபேத்து என்று அழைக்கப்படுகிறான்.இது வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு சிலை.இச்சிலையின் கைகள் விரித்தவாறு இருக்கும்.இதனுடைய அடிப்புறத்தில் இருந்து தீமூட்டுவார்கள்.விரித்த கரங்களுக்கிடையே குழந்தையை வைப்பார்கள்.ஏற்கனவே சிலை அடிப்புறத்தில் இருந்து வெப்பமூட்டப் பட்டு கொண்டிருக்கிறது.எனவே குழந்தை மிக கடுமையாக அழும்.ஆனால் அந்த குழந்தையின் சத்தம் அதனுடைய தந்தைக்கு கேட்டு அவன் கலங்காதவாறு பூசாரிகள் மிக சத்தமாக மேளம் அடிப்பார்கள்".

இதை படிக்கும் பொழுது நமக்கு எவ்வளவு பயமாகவும் வெறுப்பாகவும் உள்ளது.இதைத்தான் எல்லாம் வல்ல இறைவன்,ஆபிரகாம் வழிபட்ட இறைவன்அதாவது இஸ்ரயேலின் கடவுள் வெறுக்கிறார்.யூத மக்கள் அக்காலத்தில் இக்காரியத்தில் ஈடு பட்டத்தின் காரணமாக அவர்களை மற்ற நாடுகளில் சிதறடிக்கிறார்.

நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.[லேவி 18:21]
பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலை செய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.[லேவி 20:2]
மேலும் மற்றொரு தகவலையும் நாம் காண வேண்டும்.மனித இரத்தம் சிந்தப்படுதலை கடவுள் வெறுக்கிறார்.அதற்கு பலி வாங்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.[ஆதி 9:6]
பலி கொடுக்க வேண்டும் என்று கடவுள்  எதை குறித்து கூறியிருக்கிறாரோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.மனித இரத்தத்தை பாலி கொடுக்க வேண்டும் என்று அவர் எங்கும் கூற வில்லை.பதிலாக உபா 12:30-ஐ பாருங்கள்.
அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக் குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
மனித இரத்தம் சிந்தப்படுதலை கடவுள் விரும்ப வில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. எனவே,
  • இயேசு நமக்காக பலியிடப்பட்டார் என்பது திருமறைக்கு விரோதமானதாகும்.
  • இயேசு என்ற மனிதனின் இரத்தம் பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் என்பது திருமறையில்,அதாவது பழைய ஏற்பாட்டில் எங்கும் கூறப்படாத ஒன்றாகும்.
  • தவறுகள் மன்னிக்கப்படுவதற்கு குறைந்தபட்சமாக பழைய ஏற்பாட்டு முறைப்படி சிறிதளவு மெல்லிய மாவே போதுமானது.
  • இயேசு பலியானார் என்பது "மனித பலி" என்ற வகையில் சேர்ந்து விடும்.அது கடவுளுக்கு அருவருப்பானது.
புதிய ஏற்பாடு என்பது ஏறத்தாழ கடவுளுடைய,அதாவது எல்லாம் வல்ல இறைவனால் இஸ்ரேலின் இறைவனுக்கு,விரோதமாக உள்ளது.அவரை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக இயேசுவை வணங்க செய்வது ஆகும்.அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது.

ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களாக கிரேக்க,ரோம வழிமுறைகளின் படி நாம் ஏமாற்றப்பட்டு கொண்டு வந்துள்ளளோம்.பழைய ஏற்பாடு மட்டுமே திருமறை,அதாவது பைபிள்.இப்பொழுது சிறிது சிறிதாக கேள்விகள் கேட்க ஆரம்பிக்க பட்டு விட்டது.இயேசு என்ற ஒருவரைக்கொண்டு உண்மையான கடவுள் எப்படி மறைக்கப்பட்டார் என்பதை தெரிவிக்கும் பக்கம்தான் இது.

தொடர்ந்து இப்பக்கத்தை பாருங்கள்.எல்லாமே வல்ல இறைவனால் அனுமதிக்கப்பட்டால், எப்படி கடவுள் மறைக்கப்பட்டு இயேசு உயர்த்தப்பட்டார்,அதன் பின்னணி காரணங்கள் என்ன,யூத மக்கள் மீதான வெறுப்புணர்வு இதற்க்கு எப்படி காரணமாக அமைந்தது என்று நாம் தொடர்ந்து காணவிருக்கிறோம்.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1Iu4qdTFCc2rfZHs2x4yZIlLqv0izv3mN/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts