- இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்.
மேற்கூறிய வசனத்தை லூக்கா எழுதிய நற்செய்தி புத்தகத்தில் காணலாம்.இந்த வசனத்தில் சில முக்கிய கேள்விகள் எனக்கு எழுகின்றன.
1."லேகியோன்" என்றால் என்ன?
2.அது என்ன மொழியில் உள்ளது?
3.ஏன் அவ்வாறு எழுதப்பட்டது?
இந்த "லேகியோன்" என்ற வார்த்தையின் ஆங்கில வடிவம் "
Legion" என்பது ஆகும்.இந்த வார்த்தை ரோமர்களுடைய லத்தின் மொழியை சேர்ந்தது.இந்த வார்த்தையின் பொருள் என்ன என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும்.கேம்பிரிட்ஜ் மொழி அகராதி என்ன சொல்கிறது என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
"a division of 3,000–6,000 men, including a complement of cavalry, in the ancient Roman army"
உண்மையில் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது ஆகும்.அவ்வாறு கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளில் எப்படி லத்தீன் வார்த்தை வந்தது?கிரேக்க மொழியானது இந்த லத்தீன் வார்த்தையை கடன் வாங்கி இருக்கிறது.கிரேக்க மொழியில் இந்த வார்த்தை "λεγεων (legeon)" என்று எழுத படுகிறது.கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டிருந்தாலும், "லேகியோன்" என்ற வார்த்தை லத்தீன் மொழியை சார்ந்ததே ஆகும்.
சரி ஏன் இவ்வாறு எழுதப்பட்டது? அது நமக்கு தெரிய வில்லை.உண்மையில் இந்த கதை நடந்ததா? அதுவும் நமக்கு தெரியாது.ஆனால் கீழ்கண்டவாறு ஒரு புரிதலை நாம் கொள்ளலாம்.
இந்த லூக்கா புத்தகம் எழுதப்பட்ட காலம் சுமார் கி.பி.70-ம் நூற்றாண்டு ஆகும்.அந்த காலகட்டத்தில் யூதர்களை ரோமர்கள் மிகவும் கொடுங்கோல் ஆட்சி புரிந்த காலம்.தங்களை காப்பாற்ற "மேசியா" எப்பொழுது வருவார் என்று யூதர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலம் அது.இந்த காலகட்டத்தில் இயேசுவின் சீடர்கள் அவரை "கிறிஸ்து" அதாவது "மேசியா" என்று நம்பினர்.ரோமர்களின் ஆட்சியில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.
இப்பொழுது கதையை பாருங்கள்.இயேசுவிடம் கொண்டு வரப்பட்ட அந்த "பிசாசு பிடித்திருந்த மனிதன்" ஒரு யூதன்.அவனை பிடித்திருந்த பிசாசுகள் "லேகியோன்" அல்லது "Legion" என்று அழைக்கப்பட்டது.அதாவது "ரோம படைகளின் பிடியில் யூதர்கள் இருந்தனர்" என்பதை சொல்லாமல் சொல்கிறார் லூக்கா.அதனால்தான் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட லூக்கா புத்தகத்தில் நாசூக்காக ரோம வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் எனலாம்.இந்த பிசாசுகளை பன்றிகளுக்குள் செல்ல அனுமதி அளிக்கிறார் இயேசு.பன்றிகள் யூதர்களுக்கு அருவறுப்பானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அப்பன்றிகள் கடலுக்குள் சென்று மடிகின்றன.அதாவது ரோமர்களை இயேசு அழிப்பார் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இக்கதையில் வெளிப்படுகிறது.
எனவே இயேசுவை மேசியாவாக கற்பனை செய்து கொண்டு அல்லது நம்பி கொண்டு எழுதப்பட்ட புத்தகம்தான் லூக்கா எழுதிய நற்செய்தி புத்தகம் ஆகும் என்று ஏன் நாம் என்ன கூடாது? ரோமர்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுபட துடித்த யூதர்களில் சிலர்தான் இயேசுவின் சீடர்கள் ஆவர்.உயிர்தெழுந்ததாக கூறப்படும் இயேசு திரும்பி வந்து நம்மை மீட்பார் என்று அவர்கள் ஏன் நம்பியிருக்கக்கூடாது? ஆனால் இயேசு திரும்பி வரவில்லை.எனவே அடுத்த புத்தகம் எழுதிய யோவான் ஒரு படி மேலே போய் இயேசுவை உயர்த்தி,அவர் தெய்வீக தன்மை கொண்டவர் என்றும் சர்வ வல்லமை கொண்ட கடவுளின் சொந்த குமாரன் என்றும் கற்பனை செய்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார்.
இந்த வலி விலகல்தான் திரித்துவத்தின் அடிப்படை.கால போக்கில் அவரை கடவுளின் அங்கம் என்று ரோமர்கள் ஆக்கி விட்டனர்.ஏனெனில்,யூதர்களை அடக்குவதற்கு அவர்கள் வழிபட்டு முறைகளையும் மாற்ற வேண்டும் என்று ரோமர்கள் நினைத்தனர்.ரோமர்களுக்கு பல கடவுள் வழிபாட்டு முறை இருந்தது.எனவே மூன்று கடவுள்களில் ஒருவர்தான் இயேசு என்று பிற்காலங்களில் வலியுறுத்தப்பட்டது.இன்று நாம் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டோம்.மெய்யான கடவுளை விட்டு விட்டோம்.
ஆபிரகாமின் கடவுளே மெய்யான கடவுள் அவரையே தொழுது கொள்வோமாக.அவர் "சர்வ வல்லவர்".
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1jVCfeqJlu9WoZ1efL28vQ11wZceuvhj3/view?usp=sharing
No comments:
Post a Comment