Friday, April 12, 2019

தேவனுடைய சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்?

தேவனுடைய சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்?
இரா.இருதயராஜ்.

தேவனை யாரும் பார்க்க முடியாது என்று ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம்.யாத்:33:20-ம் வசனம் அதை நமக்கு தெளிவாக்க கூறுகிறது.ஆனால் யோ:5:37-ல் கூறப்பட்டுள்ள வசனம் என்ன?
என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.(யோ:5:37).
இயேசு யூதர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இந்த வசனத்தை  அவர்களிடம் கூறுகிறார்.யூதர்கள் ஒருபோதும் தேவனுடைய சத்தத்தை கேட்டது இல்லை என்று இயேசு கூறுகிறார்.இந்த வசனத்தின் மூலம் எனக்கு பல கேள்விகள் எழுகின்றன.
  • இஸ்ரேல் மக்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கிறார்கள் என்பதற்கு முதலில் மோசே சாட்சி.பல இடங்களில் இதற்க்கு சாட்சி இருந்தாலும் வசனம் எண்:12:8-ஐ நாம் பார்க்கலாம்."நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.
  • மேலும் இஸ்ரேல் மக்களும் தேவன் பேச கேட்டிருக்கின்றனர் என்பதற்கு உபா:5:4,24,25,26 வசனங்கள் சாட்சி.
இப்படிப்பட்ட வசனங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ளன.அப்படி என்றால் இயேசு தவறாக கூறியிருக்கிறாரா?மற்ற சுவிஷேசங்களின் மூலமாக நாம் அறிந்த இயேசு அப்படிப்பட்ட அறியாமையில் இருந்ததாக நம்மால் கூற இயலாது.அப்படியென்றால் ஏன் இந்த வார்த்தைகளை கூறினார்?உண்மையில் இயேசு தேவ குமாரன் என்றும் கடவுளிடம் இருந்து வந்தவர் என்றும் நாம் எடுத்துக்கொண்டால்,அவர் எப்படி இந்த அறியாமையில் இருந்தார்?

மேற்கூறிய கேள்விகளுக்கு என்ன பதில் உள்ளது? இயேசுவின் இந்த பதிலைக் குறித்த என்னுடைய அனுமானங்களை கீழே தந்திருக்கிறேன்.
  • யோவான் சுவிஷேசம் மற்ற சுவிஷேசங்களில் இருந்து மாறுபட்டதாய் உள்ளது.
  • யோவான் வழிமொழியும் இயேசு மற்ற சுவிஷேசங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவிடம் இருந்து மாறுபடுகிறார்.
  • யோவானுக்கென்று ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருப்பதாக கருதுகிறேன்.
  • இயேசு என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அப்பாத்திரத்தை சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு இணையாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.
  • ஆனாலும் பழைய வேதாகமத்தின் முழு அறிவு இல்லாத காரணத்தினால் மேற்கூறிய தவறை செய்திருக்கிறார்.

எனவே இயேசு அறியாமையில் இந்த பதிலைக் கூறவில்லை.பதிலாக அவர் கூறியதாக கூறும் யோவானே அறியாமையில் இருந்திருக்கக்கூடும்.

பழைய ஏற்பாட்டின் கடவுள் தன்னை "ஈடு இணையற்ற கடவுள்" என்கிறார்.ஆனால் யோவானோ,"மகன்" என்ற போர்வையை கொண்டு இயேசுவை மூடி அவரை கடவுளுக்கு சமமாக்க முயற்சி செய்திருக்கிறார்.எனவே "தந்தை கடவுள்","தாய் கடவுள்","மகன் கடவுள்" போன்ற அருவருக்கத்தக்க கருத்துக்களை உட்புகுத்த முயற்சி செய்திருக்கிறார். 



இதை நாம் புரிந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனாகிய "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு போன்றவர்கள் வழிபட்ட மெய்யான கடவுளையே நாமும் வழிபடுவோமாக.

No comments:

Post a Comment

My Posts