சாத்தான் என்பவன் யார்?-பாகம்-1
பைபிளில் சாத்தானைப் பற்றி நிறைய உள்ளது.நமக்கும் அவனைப்பற்றிய பல கருத்துக்கள் இருக்கும். உண்மையில் அவனைப்பற்றி நமக்கு என்ன தெரியும்?அவனைப்பற்றிய யூதர்களின் கருத்து என்ன?அவர்களுடைய பைபிள் மற்றும் நம்முடைய பைபிள் சாத்தானைப்பற்றி என்ன கூறுகிறது? முதலில் சாத்தானைப்பற்றி பொதுவாக கிறித்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்த்து விடுவோம்.சாத்தான் என்பவன்,
சாத்தான் என்ற சொல் பைபிளில் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 27 இடங்களில் வருகிறது.முதன் முதலில் எங்கு வருகிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எண்ணாகமம் புத்தகத்தில் முதன் முதலாக வருகிறது.அதுவும் ஆச்சரியமான விதத்தில் வருகிறது.
- கீழே விழத்தள்ளப் பட்ட தூதன்.
- அவன் கடவுளுடைய கட்டளைகளை விரோதிப்பவன்.
- அவன் கடவுளுடைய எதிராளி.
- அவன் லூசிபர் என்றும் அழைக்கப்படுகிறான்.
- அவன் பிசாசு என்றும் அழைக்கப்படுகிறான்.
- அவன் கடவுளுக்கு பயப்படும் அவருடைய மக்களை துன்புறுத்துபவன்.
- அவன் எப்பொழுதும் கடவுளுடைய மக்களுக்கு விரோதமாகவே இருப்பான்.
- கடவுளுக்கு எதிர்த்து நிற்பவன்.
- அவன் தன்னிச்சையாக,சுதந்திரமாக எந்த நேரத்திலும் யாரையும் துன்புறுத்துபவன்.
- அவன் பாதாளத்தில் வாழ்பவன்.
- அவன் எப்பொழுதும் குற்றம் சாற்றுபவனாகவே இருக்கிறான்.
சாத்தான் என்ற சொல் பைபிளில் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 27 இடங்களில் வருகிறது.முதன் முதலில் எங்கு வருகிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எண்ணாகமம் புத்தகத்தில் முதன் முதலாக வருகிறது.அதுவும் ஆச்சரியமான விதத்தில் வருகிறது.
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்(எண்:22:22).இந்த வசனத்தில் வருகின்ற "எதிராளியாக" என்ற வார்த்தைக்குறிய ஹீப்ரு வார்த்தை என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த வார்த்தை என்னவென்றால்,"שָּׂטָן-satan" என்பது ஆகும்.மேற்சொன்ன வசனத்தை சற்று மாற்றி கீழே தந்துள்ளேன்.
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு சாத்தானாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்(எண்:22:22).இந்த இரண்டு வசனங்களையும் நன்றாக படித்து பாருங்கள்.மேலும் தொடர்வதற்கு முன்னர் "சாத்தான்" என்ற வார்த்தையை பற்றி ஒரு சில விபரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
- சாத்தான் என்ற வார்த்தை ஹீப்ரு மொழியை சேர்ந்தது ஆகும்.
- நாம் நினைப்பது போல் அது ஆங்கில மொழியையோ அல்லது வேறு எந்த மொழியையோ சேர்ந்தது அல்ல.
- இந்த ஹீப்ரு வார்த்தையின் பொருள் "எதிராளி" அல்லது "பகைவன்" என்பது ஆகும்.இந்த வார்த்தையின் மூல வார்த்தையும் "satan" என்பதே ஆகும்.அது ஒரு வினைச்சொல் ஆகும்.அதன் பொருள் "குற்றம் சாட்டு" அல்லது "பழி கூறு" என்பது ஆகும்.
- இதனுடைய ஸ்ட்ராங்க் நம்பர் 7854 ஆகும்.
- இவ்வளவு நாள் என் உயிர் நண்பனாக இருந்தவன் இன்று எனக்கு "எதிராளியாக" மாறிவிட்டான்.
- இந்த தேர்தலில் என்ன "எதிர்த்து" களமிறங்குபவர் திரு.மணி அவர்கள்.
- என் மகன் என்னுடைய சொல்லை மதிக்காமல் எப்பொழுதும் என்னை "எதிர்த்து" பேசுகிறான்.
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்(எண்:22:22).இங்கே கர்த்தருடைய தூதன் பிலேயாமுக்கு "எதிராளியாக" நின்றான்.கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளை செயல்படுத்தும் ஒரு தூதன்தான் இங்கு "சாத்தான்" என்று குறிப்பிடப்படுகிறான்.கர்த்தரால் கீழே விழத்தள்ளப்பட்ட தூதன் எப்படி அவருக்கு கீழ்ப்படிந்து செயல்படுவான்? ஏற்கனவே கீழ்ப்படியாமல் போனதினால்தானே அவன் கீழே விழத்தள்ளப்பட்டான்.முரண்படுகிறதல்லவா? இது ஒரு செயலைக் குறிக்கும் வார்த்தை என்று மட்டும் நினைத்து பாருங்கள் உங்களுக்கு சுலபமாக புரிந்து விடும்.கீழ்வரும் கேள்விகளிக் கவனியுங்கள்.
- இவன் "லூசிபெராக" இருந்தால் அப்பெயர் ஏன் பயன்படுத்தப்படவில்லை?
- இவன் பிசாசாக இருந்தால் கர்த்தருடைய கட்டளைக்கு ஏன் கீழ்ப்படிந்தான்?
- ஏன் கர்த்தருக்கு விரோதமாக செயல் படவில்லை?
- ஏன் பிலேயாமுக்கு ஆதரவாக செயல்பட வில்லை?
கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.(எண் :22:32).மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலும் "எதிரியாக" என்ற வார்த்தைதான் உள்ளது.கர்த்தருடைய எண்ணங்களுக்கு விரோதமாக பிலேயாமுடைய செயல் இருந்ததினால் கர்த்தருடைய தூதன் பிலேயாமுக்கு எதிரியாக மாறி விட்டான்.
- எனவே கர்த்தருடைய தூதன்தான் இங்கே "சாத்தான்".
- "சாத்தானாக" மாறிய கர்த்தருடைய தூதன் கர்த்தருக்கு கீழ்ப்படிக்கிறான்.
- கிறித்தவர்களுடைய கருத்துப்படி, இந்த "கர்த்தருடைய தூதனாகிய சாத்தான்" கர்த்தருக்கு விரோதமாகத்தானே செயல் பட்டிருக்க வேண்டும்? அவ்வாறு செயல் பட வில்லையே ஏன்?
- நம்முடைய தவறுதலான புரிதல்தான் இதற்கு காரணம்.
"Satan, in the Abrahamic religions (Judaism, Christianity, and Islam), the prince of evil spirits and adversary of God. Satan is traditionally understood as an angel (or sometimes a jinnī in Islam) who rebelled against God and was cast out of heaven with other “fallen” angels before the creation of humankind. Ezekiel 20:14–18 and Isaiah 14:12–17 are the key Scripture passages that support this understanding, and, in the New Testament, in Luke 10:18 Jesus states that he saw Satan fall like lightning from heaven. In all three Abrahamic religions, Satan is identified as the entity (a serpent in the Genesis account) that tempted Eve to eat the forbidden fruit in the Garden of Eden and was thus the catalyst for the fall of humankind. (For further discussion of Satan in Islam, see Iblīs.)"அதாவது சாத்தான் என்பவன் "அனைத்து அசுத்த ஆவிகளுக்கும் தலைவன் என்றும் கடவுளுடைய முதல் எதிரி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மனுக்குலத்தின் தோற்றத்திற்கு முன்பே பரலோகத்தில் இருந்து கீழே விழத்தள்ளப்பட்ட தூதன்தான் அவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவன்தான் ஏவாளை உண்பதற்கு தடை செய்யப்பட்டிருந்த பழத்தை உண்ண தூண்டியவன்.
ஆனால் இந்த தகவல் களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் பைபிள் ஆதாரம் கிடையாது.உலக அளவில் போற்றப்படும் ஒரு தகவல் களஞ்சியம் எவ்வாறு பைபிளுக்கு முரண்படுகிறது என்பதை பாருங்கள்.இந்த தகவல் களஞ்சியத்தின் கூற்று படி,
- "சாத்தான்" என்பவன் தனியொரு குறிப்பிட்ட தூதன்.
- கடவுளுடைய "முதல் எதிரி".
- கீழே விழத்தள்ளப்பட்ட தூதன் என்பதற்கு ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தையும் எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்தையும் மேற்கோள் காட்டுகின்றனர்.அது தவறு என்பதை பின்னொரு கட்டுரையில் எழுத இருக்கிறேன்.
- ஏவாளை தூண்டியவன் "சாத்தான்" என்பது தவறு.உண்மையில் "சர்ப்பம்" என்றுதான் உள்ளதே அன்றி "சாத்தான்" என்று அல்ல.
- இந்த "சாத்தான்" தனியொரு தூதன் என்றால்,கடவுளுடைய முதல் எதிரி என்றால் ஏன் அவன் கடவுளுக்கு கீழ்ப்படிந்தான்?
எனவே சாத்தான் என்பவன் நாம் நினைப்பது போல் ஒருவன் கிடையாது.அவன் யார் என்பதை கீழ்கண்டவாறு கொடுத்துள்ளேன்.
- "சாத்தான்" என்பவன் ஒரு சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடிய ஒரு தனி ஒரு தூதன் அல்ல.
- "சாத்தான்" என்பவன் கடவுளுக்கு கட்டுப்பட்ட சுயமுடிவுகள் எடுக்க முடியாத ஒரு தூதன்.
- "சாத்தான்" என்பது செயலைக் குறிக்கும் வார்த்தை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
- "எதிர்த்தல்" என்ற செயலை செய்யும் யாரும் "சாத்தான்"என்று அழைக்கப் படலாம்.
- பூமியில் கடவுளுக்கு எதிராக உள்ளவர்களை "எதிர்க்கும்" அனைத்து மக்களும் அல்லது தூதர்களும் "சாத்தான்களே".
- "எதிர்த்தல்" அல்லது "பகைத்தல்" செயலை செய்யும் யாவரும் "சாத்தான்களே". உடனே நாம் அவர்களை தவறாக நினைக்க கூடாது.
இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒருவேளை தகவல் களஞ்சியம் சரி என்றும் என்னுடைய கூற்றுகள் தவறு என்றும் நினைக்கலாம்.அப்படியேன்றால் நீங்கள் அதை நிரூபிக்க வேண்டும்.தொடர்ந்து இரண்டாம் பாகத்தை படியுங்கள்.
இரா.இருதயராஜ்.
No comments:
Post a Comment