சாத்தான் என்பவன் யார்? பாகம்-2
முதலாம் பாகத்தை நீங்கள் படிக்க வில்லை என்றால்,முதலில் அதை படித்து விடுங்கள்.இல்லையென்றால் தொடர்ந்து படிப்பது கடினமாக இருக்கும்.சாத்தான் என்பவன் நாம் நினைப்பது போல் உள்ளவன் அல்ல என்பதை தெரிந்து கொண்ட பிறகு,அடுத்த பைபிள் வசனத்தை நாம் காணலாம்.
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?(1 சாமு:29:4).
மேற்கூறிய வசனத்தில் "சத்துருவாயிராதபடிக்கு" என்ற தமிழ் வார்த்தைக்குரிய ஹீப்ரு வார்த்தை என்னவென்று முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.வார்த்தை எண் 7854, "satan" ஆகும்.ஒரு வேளை இந்த வசனத்தை கீழ்கண்டவாறு வாசித்தால்,நாம் என்ன நினைப்போம்?
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சாத்தானாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
மேலும் மாற்றி படித்து பார்க்கலாம்.
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் எதிராளியாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
இந்த வசனம் கூறும் பொருள் என்னவென்றால்,தாவீதைக் குறித்து பெலிஸ்தரின் பிரபுக்கள் பேசுகிறார்கள்.அவர்களோடு தாவீதும் போருக்கு வந்தால் தாவீது அவர்களுக்கு எதிராளியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது என்று பயப்படுகிறார்கள்.இதுதான் பொருள்.
தமிழர்களாகிய நாம் தமிழ் பைபிளை படிக்கிறோம்.அதில் "சத்துரு" என்று போட்டிருக்கிறது.அந்த வார்த்தையை பார்த்தவுடன்,நம்முடைய மனது கீழ்கண்டவாறு நினைக்க ஆரம்பிக்கிறது,
- ஐயோ! இது சாத்தான். இவன்தான் கீழே விழத்தள்ளப்பட்ட "அந்த குறிப்பிட்ட தூதன்".
- இவன் பெயர் "லூசிபர்".
- இவன் எப்பொழுதும் கர்த்தருக்கு விரோதமாகவே செயல் படுவான்.
- இவன்தான் பிசாசு.
மேற்கண்டவாறு நாம் நினைத்து கொள்கிறோம்.ஆனால் மேலே சொல்லப்பட்ட வசனத்திற்கு நாம் மனதில் நினைக்கும் பொருளை கொள்ள முடியுமா?அந்த இடத்திற்கு அப்பொருள் பொருந்துமா? தமிழ் பைபிளில் "சத்துருவாயிராதபடிக்கு"என்ற வார்த்தைக்கு பதில் "எதிராளியாயிராதபடிக்கு" என்ற வார்த்தையை கொண்டு மொழிபெயர்த்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
சரி இப்படி நாம் நினைப்பது தவறா? ஆம்,தவறுதான்.நம்மை தவறான பொருள் கொள்ளும்படி இட்டு செல்வது ஒரு பக்கமாக இருந்தாலும்,கிரேக்கர்களின் பல கடவுள் வழிபாட்டுக்கு நம்மை அழைத்து சென்று விடுகின்றன.
சாத்தான் என்று நாம் நினைப்பதற்கும் மேற்கூறிய வசனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறன்.அடுத்து ஒரு வசனத்தை நாம் காணலாம்.
அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,(2சாமு:19:22).
இங்கும் வார்த்தை எண்:7854-னது, "satan"-"சத்துரு" என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வசனத்தை மாற்றி படித்து பார்க்கலாம்.
அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் எதிரிகளாவதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,(2சாமு:19:22).
மிக சாதாரண பொருளைத்தான் மேற்கூறிய வசனம் கொடுக்கிறது. ஆனால் நாம் தேவை இல்லாமல் சாத்தான்-லூசிபர்-பிசாசு-கடவுளுக்கு விரோதி என்று பொருள் கொள்கிறோம். அடுத்த ஒரு வசனத்தை காணலாம்.
ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.(1இராஜ:5:4)
இங்கும் "விரோதி" என்ற வார்த்தையின் ஹீப்ரு வார்த்தை "satan",வார்த்தை எண்:7854 ஆகும்.சிறப்பாக பொருள் கொள்ளும் படி இங்கு ஒன்றும் இல்லை.நீங்களே இதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன்.
இவ்வாறாக மிகச்சாதாரணமாக நாம் புரிந்து கொள்ளும்படிதான் அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் உள்ளன.1இராஜ:11:14,23,25;1நாளா:21:1.இந்த வசனங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
அடுத்து நாம் பார்க்க இருக்கும் வசனம்தான் தவறுதலான புரிதலுக்கு இட்டு செல்லும் வசனம்.அதை நாம் மூன்றாம் பாகத்தில் காணலாம்.
இரா.இருதயராஜ்.
No comments:
Post a Comment