நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால் வருகிறவனாகிய எலியா இவன்தான்(மத்:11:14)
மத்தேயு எழுதின நற்செய்தி புத்தகத்தில் இந்த வசனம் உள்ளது.அதாவது இயேசு, மக்களிடம் பேசும்பொழுது இந்த வார்த்தையை கூறுகிறார்.யோவானை பற்றி இவ்வாறு கூறுகிறார்.ஏன் இவ்வாறு கூறினார்? அதற்கு நாம் மற்றொரு வசனத்தை பார்க்க வேண்டும்.
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.(மல்கி:4:5).
அதாவது கர்த்தருடைய நாள் வருவதற்கு முன்னர் எலியா தீர்க்க தரிசி இந்த உலகத்திற்கு அனுப்பப்படுவான் என்று மல்கியா தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் கூறுகிறார்.அதனால் யூத மக்கள் மல்கியா தீர்க்கதரிசி உரைத்த இந்த எலியாவை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.இந்த சூழ்நிலையில் யோவானைப்பற்றி இயேசு பேசுகிறார்.அந்த வானத்தை நாம் பாப்போம்.
நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.(மத்:11:14)
யோவான் பற்றிய இயேசுவின் கருத்து இது.இந்த நிகழ்வை நாம் யோவான் எழுதிய நற்செய்தி புத்தகத்தில் பார்ப்போம்.எருசலேமில் இருந்த யூதர்கள் யோவானிடம் ஆள் அனுப்பி விசாரிக்கின்றனர்.அவர் யார் என்று கேட்கின்றனர்.அதற்கு அவருடைய பதில் கீழ்கண்ட வசனங்களில் உள்ளது.
அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.(யோவா:1:21)இங்கு யோவான் தன்னை எலியா அல்ல என்று கூறுகிறான்.அப்படி என்றால் கீழ்கண்ட கேள்விகள் நமக்கு எள்கின்றன.
- யோவான் தன்னை எலியா அல்ல என்று கூறுகின்றான். ஆனால் இயேசுவோ யோவான்தான் எலியா என்று கூறுகின்றான்.
- யார் கூறுவதை நாம் நம்புவது?
- ஏன் இந்த குளறுபடி?
முடிவுரை:
மத்தேயு எழுதிய நற்செய்தி புத்தகத்தை நன்றாக படித்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தி தெரிந்திருக்கும்.பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை மேற்கோள் காட்டி அது இயேசு மூலம் இவ்வாறு நிறைவேறி இருப்பதாக அவர் அடிக்கடி கூறியிருப்பார்.அந்த வகையில் மத்தேயு,மல்கியாவில் உள்ள அந்த குறிப்பிட்ட வசனத்தை மேற்கோள் காட்டி அது யோவான் மூலமாக நிறைவேறி விட்டதாக கூற முற்பட்டிருக்கிறார்.
ஆனால் யோவான் எழுதிய நற்செய்தி புத்தகம் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.இயேசு தெய்வீக தன்மை கொண்டவர் மற்றும் அவர் கடவுளிடம் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்கும் விதமாக அவர் இப்புத்தகத்தை எழுதி இருப்பார்.தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதலைப் பற்றி இப்புத்தகத்தை எழுதிய யோவானுக்கு கவலை இல்லை. எனவே மத்தேயு புத்தகம் எழுதி ஏறத்தாழ 100 வருடங்கள் கழித்த பின்னரே யோவான் இந்த நற்செய்தி புத்தகத்தை எழுதுகிறார்.எனவே மத்தேயு என்ன கூறி எழுதி இருந்தார் எனபது யோவானுக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.யோவான்ஸ்நானன் எலியா அல்ல என்று குறிப்பிட்டு இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு விட்டது.
அப்படி என்றால் நாம் யோவான்ஸ்நானனை யார் என்று கொள்வது? இவர்கள் எழுதிய புத்தகங்களை எவ்வாறு நம்ப இயலும்? புதிய ஏற்பாடு என்பது ஒரே ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள "ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு" போன்றவர்கள் வழிபட்ட உண்மையான கடவுளுக்கு இணையாகவோ அல்லது அவரது உன்னதத்தை குறைப்பது போன்றோ எழுதப்பட்டிருக்கிறது.
நாம் இதனை புரிந்து கொண்டு உண்மையான கடவுளாகிய ஆபிரஹாம் வழிபட்ட கடவுளையே வழிபடுவோமாக.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1pTTT1I4tNOB-wdo0tSEVAyLRUsvv7tak/view?usp=sharing
https://drive.google.com/file/d/1pTTT1I4tNOB-wdo0tSEVAyLRUsvv7tak/view?usp=sharing
No comments:
Post a Comment