சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று
"சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை".- இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால்,அனைத்தும் "வார்த்தை என்கிற தேவன் மூலம் படைக்கப்பட்டது" என்பது ஆகும்.தொடர்ந்து பார்ப்பதற்கு முன்னர் யோ:1:1-ஐ வாசித்து விடலாம் என்று நினைக்கிறேன்.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.(யோ:1:1)
இந்த வசனத்தில் வரும் "வார்த்தை" என்ற வார்த்தையை பற்றிய என்னுடைய முந்தைய படித்து விட்டு இக்கட்டுரையை படித்தால் புரிந்து கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பார்த்து விடுவோம்.
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God(Jh:1:1)-NIV.
ஆங்கிலம் மற்றும் தமிழ் வசனங்களை ஒப்பிட்டு படித்து பாருங்கள்.உங்களுக்கு ஒன்று புரிய வேண்டும்."வார்த்தை தேவனிடத்தில் இருந்தது" என்ற வாக்கியத்தில் "எந்த தேவனிடத்தில் இருந்தது?" என்பது குறிப்பிடப்படவில்லை."the Word was with God" என்றுதான் உள்ளதே அல்லாமல் "the God" என்று இல்லை.எனவே பொதுவாக "வார்த்தை"யானது ஏதோ ஒரு கடவுளுடன் இருந்தது என்று மட்டுமே பொருள் கொள்ள இயலும்.பைபிள்-ஐ பொறுத்தவரையில் ஒரே கடவுள்தான் உள்ளார்.அவரை "the God" என்று மட்டுமே குறிப்பிட முடியும்.எனவே யோவான் "தேவன்" என்று குறிப்பிட்டது யார் என்பது நமக்கு தெரிய வில்லை.இதை பற்றி முந்தைய கட்டுரையில் எழுதி உள்ளேன்.தற்போது இந்த வசனத்திற்கு வருவோம்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.(யோ:1:3)
இந்த வசனத்தின் மூலமாக எழும் கேள்விகள்.
- பைபிளில் ,அதாவது மெய் கடவுளாகிய "ஆபிரகாமின் கடவுளுக்கு" உலகத்தை படைக்கும் பொழுது யாருடைய உதவியாவது தேவைப்பட்டதா?
- அப்படி அவர் யாரோ ஒருவர் அல்லது யோவானின் கூற்று படி "வார்த்தையாகிய தேவனின்" மூலமாகத்தான் அனைத்தையும் படைத்தார் என்று ஆபிரகாமின் கடவுள் கூறியிருக்கிறாரா?
- மேற்கூறியபடி இல்லை என்று நிரூபித்து விட்டால் யோவான் எழுதிய சுவிஷேசத்தை நாம் நம்பலாமா?
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.(யோபு:38:4)
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.(ஏசா:44:24).
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.(ஏசா:48:13)
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (ஏசா:46:9)
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. (ஏசா:45:5)
மேற்கூறிய வசனங்கள் அனைத்தும் தெளிவாக கூறுவது என்னவென்றால்,"கர்த்தர்" ஒருவரே உலகத்தை தனி ஒருவராய் படைத்தார். யார் மூலமாகவும் அவர் எதையும் படைக்க வில்லை. அவரால் அனைத்தும் முடியும். அவரால் மட்டுமே முடியும். அவரே "கர்த்தர்". அவரே "கடவுள்". அவர் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுள்.அவரையே நாமும் எவ்வித குழப்பமும் இன்றி தொழுது கொள்வோமாக.
முடிவுரை:
யோவான் கூறிய கருத்து தவறு என்று நிரூபிக்க பட்டுவிட்டது.அவர் ஏன் இப்படி பட்ட முரண்பட்ட கருத்தை கூறினார்?யோவான் தான் நினைத்த ஒரு கருத்தை இயேசுவை கொண்டு நிறைவேற்ற விரும்பியிருக்கிறார்.ஆனால் கடவுளுக்கு யார் உதவியும் தேவை இல்லை.அதுபோல் யார் மூலமாகவும் அவர் எதையும் படைக்க வில்லை.கடவுள் மட்டுமே தானாகவே அனைத்தையும் படைத்திருக்கிறார்.கடவுள் இப்படி கூறியிருக்க,யோவான் ஏன் கடவுள் கூறிய வார்த்தைக்கு முரண்பட்டார்?யோவான் கடவுளின் வார்த்தைகளை அறியாமல் இருந்தால்,அவர் எழுதிய நற்செய்தியை எவ்வாறு நம்ப முடியும்?
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1OuK-QNXLTXz0JXFZLm14HdzgxPMY9ZIq/view?usp=sharing
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1OuK-QNXLTXz0JXFZLm14HdzgxPMY9ZIq/view?usp=sharing
----------------------------------------------------
No comments:
Post a Comment