"ஏலோகிம்(ELOHIM)" என்ற வார்த்தை தமிழ் பைபிளில் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது?
இரா.இருதயராஜ்
நம்மில் பலபேருக்கு "ELOHIM" என்ற வார்த்தை மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. திரித்துவ கொள்கைக்கு அடிப்படையாகவும், அக்கொள்கையை விளக்குவதற்கும் இந்த வார்த்தையை திரித்துவ கிறித்தவர்கள் பயன்படுத்துகின்றனர்.உண்மையில் இந்த வார்த்தையின் பொருள் என்ன? திரித்துவ கொள்கையை அது நிரூபிக்கிறதா? இந்த கட்டுரையில் அதைப்பற்றி நாம் பார்ப்போம்.
இந்த "ELOHIM" என்ற வார்த்தை எந்த மொழியை சேர்ந்தது என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இது "ஹீப்ரு(HEBREW)" என்ற மொழியை சேர்ந்தது ஆகும்.ஹீப்ரு மொழியில் உள்ள அணைத்து வார்த்தைகளும் ஒரு அடிப்படையான வார்த்தையில் இருந்து வந்தவைகளாகத்தான் உள்ளது.அந்த வகையில் இந்த "ELOHIM" என்ற வார்த்தை "ELOAHH" என்ற வார்த்தையில் இருந்து வந்ததாக உள்ளது.இந்த வார்த்தையின் மூல வார்த்தை "EL" என்ற வார்த்தை ஆகும்.இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.
"EL" -- மிக அதிக பலம் கொண்டவர் அல்லது கொண்ட ஒரு பொருள்,காட்டெருமையின் கொம்பு எவ்வளவு உறுதி உடையதோ அவ்வளவு உறுதி,பலம் கொண்டவர்.
"ELOAHH" -- மிக அதிக பலம் கொண்ட ஒருவர்.மிகவும் உறுதி உடையவர்.(இவ்வார்த்தை உயிரில்லா பொருளுகளை குறிக்க பயன்படுத்தப்படுவது கிடையாது).
இப்பொழுது இதன் பொருள்களை நாம் தெரிந்து கொண்டோம்.இவ்வார்த்தைகளை பயன்படுத்தும் விதங்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
"EL" -- ஒருமையில் இந்த வார்த்தையை "EL" என்றும், பன்மையில் "ELM" என்றும் பயன்படுத்துகிறோம்.
"ELOAHH" -- ஒருமையில் இந்த வார்த்தையை "ELOAHH" என்றும், பன்மையில் "ELOAHI" என்றும், "ELOHIM" என்றும் பயன்படுத்துகிறோம்.
இவ்வார்த்தைகளை பயன்படுத்தும் விதங்கள் பற்றி நாம் பார்த்து விட்டோம்.மேலும் தொடர்வதற்கு முன்னால்,நம் தமிழ் மொழியில் உள்ள சில விவரங்களை பார்த்து விட வேண்டியிருக்கிறது.உங்கள் முன்னால் உங்களை விட வயதில் மூத்தவர் ஒருவர் நிற்கிறார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.நீங்கள் உரையாட போகிறீர்கள்.உரையாடல் கீழ்கண்டவாறு உள்ளது.
நீங்கள்: ஐயா,தாங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?
மூத்தவர்: தம்பி,நான் மதுரையிலிருந்து வருகிறேன்.
நீங்கள்: உங்களுடைய வயது என்ன ஐயா?
மூத்தவர்: தம்பி,என்னுடைய வயது எழுபத்தைந்து.
கனத்த எழுத்துக்களை நன்றாக கவனியுங்கள்.உங்கள் முன்னாள் நிற்கும் வயது முதிர்ந்தவர் ஒருவர்தான்.ஆனால் அவரை எவ்வாறு நீங்கள் அழைக்கிறீர்கள்? "உங்கள்" என்றும் "தாங்கள்" என்றும் பன்மையில் அழைக்கிறீர்கள்.எதற்காக இப்படி அழைத்தீர்கள்? அவருடைய வயதின் நிமித்தமாகவும் அவருக்கு மரியாதையை கொடுக்கும் நிமித்தமாகவும் அப்படி செய்தீர்கள்.நீங்கள் பன்மையை பயன்படுத்தியதால் அவர் ஒன்றுக்கு மேற்பட்டவராக ஆக வில்லை.இதை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?மரியாதை காரணமாக நாம் பன்மை சொற்களை பயன்படுத்தலாம்.ஹீப்ரு மொழியும் இவ்வாறுதான் உள்ளது.மரியாதையின் காரணமாக பயன்படுத்திய ஒரு வார்த்தையின் மூலம் ஒரு தனி மனிதனை, "மனிதர்கள்" என்று எடுத்துக்கொள்ள முடியாது.தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு இது தெரியும்.தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர்களுக்கு இது எப்படி தெரியும்?இந்த குழப்பம்தான் "ELOHIM" என்ற வார்த்தையை புரிந்து கொள்வதிலும் உள்ளது.இதற்கு சான்றுகளாக பின் வரும் வசனங்களை கொடுத்துள்ளேன்.
சான்று 1:
வசனம் ஆதி:1:1.பைபிளின் முதல் வசனம்."ELOHIM" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. "ELOHIM" என்ற வார்த்தை "தேவன்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஏன் தேவர்கள் என்று மொழிபெயர்க்க பட வில்லை? இதே "ELOHIM" என்ற வார்த்தை பல இடங்களில் "தேவர்கள்" என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஏன் இப்படி இடத்திற்கு தகுந்தாற் போல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? வசனங்கள் யாத்:22:20,20:3,34:15,16,17 நியா:9:13 போன்ற எண்ணற்ற இடங்களில் "தேவர்கள்" என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஏன் "தேவன்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வில்லை?காரணம்,மேற்கூறிய வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள "தேவர்கள்" அணைத்தும் அந்நிய தேவர்கள் ஆவர்.அத்தேவர்களை வழிபட்டவர்கள் அனைவரும் பலதெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர்.எனவே அந்த வசனங்களில் "தேவன்" என்று மொழிபெயர்க்க இயலாது.அப்படி ஒருவேளை மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் மிகப்பெரும் தவறு நடந்திருக்கும்.ஏனென்றால் "தேவன்" என்றல் ஒருமையை குறிக்கும்.ஆனால் அவர்களோ பலதெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர்.எனவே "ELOHIM" என்ற வார்த்தையை உள்ளபடியே பன்மையில் மொழிபெயர்த்து உள்ளனர்.ஆனால் ஆதி:1:1 போன்ற வசனங்களில் குறிப்பிடப்படும் கடவுள் மெய்யான ஒரே கடவுளாவார்.அவரை பன்மையில் குறிப்பிட இயலாது.பின் ஏன் "ELOHIM" என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்? மரியாதையின் காரணமாக அவ்வாறு செய்து உள்ளனர்.அடுத்த சான்றில் அதை நிரூபிக்க உள்ளேன்.ஹீப்ரு மொழியும் தமிழ் மொழியும் ஒரு சில ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன.பைபிள் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டுள்ளது.எனவே அடிப்படை ஹீப்ரு தெரியாமல் பைபிளை நாம் படிக்க இயலாது.
நமது கேள்வி என்னவென்றால்,திரித்துவக் கொள்கையின் அடிப்படையில்,ஒருமையானது பன்மையாக கருதப்படலாம் என்றால்,பன்மையானது ஏன் ஒருமையாக கருத்தப்படக்கூடாது?"தேவன்" என்று குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள "ELOHIM" என்ற வார்த்தை பன்மையைக் குறிக்கும் வார்த்தை,எனவே மூன்று பேர் அதற்குள் உள்ளனர்,என்று நாம் வாதிட்டால் ஹீப்ரு மொழியின் பயன்பாடு நமக்கு தெரியவில்லை என்று பொருளாகும்.அடுத்த சான்றையும் கவனியுங்கள்.
சான்று 2:
மரியாதையின் காரணமாக தனி ஒருவரை பன்மையில் குறிப்பிடும் வழக்கம் தமிழர்களாகிய நமக்கு உள்ளது.ஹீப்ரு மொழியும் அவ்வாரே உள்ளது.ஆதி:1:1 வசனத்தையே முதலில் எடுத்துக்கொள்வோம்."ELOHIM" என்ற வார்த்தை இங்கு ஒருமையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.தவறான திரித்துவ கொள்கைக்கு அடிப்படை இங்குதான் உள்ளது.எனவே இதை முதலில் பார்ப்போம்.
திரித்துவ வாதிகளின் வாதங்களை முதலில் கருத்தில் கொள்வோம்.அவர்களின் வாதம் என்ன?
இரண்டாவது கேள்விக்கு பதில், மோசே தனி மனிதனாகவும்,கண்ணால் காணப்படக்கூடிய ஒருவனாக இருப்பதாலும்,திரித்துவக் கருத்தை திணிக்க முடியாது.கடவுள் அப்படி அல்ல காணப்பட முடியாதவர்.எனவே தனிப்பட்ட கருத்துக்களை அவர் மீது திணிக்கலாம் என்ற எண்ணம்தான் இதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்.பன்மையை இங்கு கொண்டு வர இயலாது.
மூன்றாவது கேள்விக்கு பதில்,திரித்துவவாதிகள் இந்த வசனத்திற்கு பதிலை கூறவில்லை என்பதுதான்.
இந்த ஒரு வசனம் மட்டுமல்ல எண்ணற்ற சான்றுகள் உள்ளன.அனைத்தும் பைபிளுக்கு உள்ளேயே இருக்கின்றன.அடுத்த சான்று மிகப்பெரும் சான்றாகும்.இறைவனே இங்கு தன்னைப்பற்றி கூறுகிறார்.வேறு யாரும் அல்ல.யாத் 20:2-ல் கூறப்பட்டுள்ள வசனத்தை பாருங்கள்.
கடவுள் தன்னைப்பற்றி தாமே குறிப்பிடும் பொழுது "ELOHI" என்று பன்மையில் குறிப்பிடுகிறாரே ஏன்? பன்மை வார்த்தையை பயன்படுத்தி விட்டு ஒருமை வார்த்தையாகிய "நானே" என்றும் குறிப்பிடுகிறாரே அது ஏன்? காரணம்,அவர் நிகரற்றவர்,ஈடு இணையற்றவர்,அவருக்குரிய கனத்தை அவருக்கு கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.அவரே தன்னை பன்மையில் குறிப்பிடும் பொழுது நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.இந்த ஒரு இடத்தில மட்டுமே அவர் தன்னைப்பற்றி பன்மையில் குறிப்பிடுகிறார் என்று நினைக்க வேண்டாம்.பல இடங்களில் அவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்.எடுத்துக்காட்டாக,
இந்த இடத்தில மற்றொரு வசனத்தை குறிப்பிட விரும்புகிறேன்.யாத்:32:1-ஐ பாருங்கள்.
திரித்துவவாதிகள் கூறுவது போல கடவுள் மூன்று பேர்களாக இருக்கிறார் என்றால் ஏன் தமிழ் பைபிள் முழுவதும் "ELOHI" அல்லது "ELOHIM" என்ற வார்த்தை "தேவன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது?
"ELOHIM" என்ற வார்த்தையை பைபிள் எப்படி பயன்படுத்துகிறது என்பதைக்குறித்து மேலும் சில விளக்கங்களை நாம் காணலாம்.கீழ்கண்ட கூற்றுகளை படியுங்கள்.
மேற்கண்ட உரையாடலில்,உங்கள் நண்பர் கூறும் பதிலில் வரும் "நண்பன்"என்ற வார்த்தை "நண்பன்"என்ற பொதுவான பொருளை குறிக்கிறது.உங்கள் நண்பனை அல்ல.மற்றுமொரு உரையாடலை கவனியுங்கள்.
இவ்வாரே கடவுளுக்கும் மோசேக்கும் இடையே நடக்கும் உரையாடல் உள்ளது.கடவுள் முதலில் தன்னை மரியாதையை பன்மையுடன் அழைக்கிறார்.பின்னர் பொதுவாக "எரிச்சலுள்ள கடவுள்"என்று அழைக்கிறார்.
எனவே இடம் மற்றும் பொருள் அறிந்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இதற்க்கு எடுத்துக்காட்டாக கீழ்காணும் வசனங்களை பாருங்கள். ஏசா45:14,15,21,22;46:9; சங்:57:2;31:5;90:2; உபா:4:24; தானி :9:4; எசெக்:28:2. எண்:12:13,23:19,22,23,24:4 எண்ணற்ற வசனங்களில் இவைகள் மிகச்சிறிய அளவே.
சான்று 3:
"ELOHIM" என்ற வார்த்தை கடவுளை மட்டும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதில்.யாத் 21:6-ல் கூறப்பட்டுள்ள வசனத்தை காண்போம்.
முடிவுரை:
எனவே "ELOHIM" என்ற பன்மை தன்மை கொண்ட வார்த்தையைக் கொண்டு நம்முடைய எண்ணங்களுக்கு தக்கவாறு விளக்கங்கள் கொடுக்க முடியாது.திரித்துவம் என்பது ஒரு போலி என்பது இதன் மூலம் விளங்கும்."திரித்துவம்" என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் ஒரு இடத்தில கூட இல்லை.இல்லாத ஒன்றுக்கு ஆதரவாக நாம் வாதிட முடியாது.மெய்யான ஒரே கடவுளுக்கு ஈடு இணை கற்பிக்க முடியாது.திரித்துவம் அவ்வாறு கற்பிக்க முயலுகிறது.அந்த மெய்யான கடவுள் தன்னை "நான்" என்றே கூறியிருக்கிறார்.மக்கள் அவரை தொழுது கொள்வதில் இருந்து பிரிக்க திரித்துவம் முயலுகிறது.

- "ELOHIM" என்ற வார்த்தை பன்மைத்தன்மைகொண்டது.எனவே "தேவன்" என்ற வார்த்தை உண்மையில் ஒரே தேவனைக் குறிப்பது அல்ல.பதிலாக மூன்று தெய்வங்களை அது குறிக்கிறது.எனவே பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி ஆகிய மூவரை இந்த வார்த்தை குறிக்கிறது.
- இந்த மூன்று பேரும் வெவ்வேறாக,தனித்தனியாக செயல்பட்டாலும் ஒரே ஆளாக இருக்கின்றனர்.எனவே "தேவன்"என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய வசனத்தில் "தேவனாக்கினேன்" என்ற வார்த்தை ஹீப்ரு பைபிளில் எப்படி உள்ளது? என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.அங்கேயும் "ELOHIM" என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.கீழ்கண்ட கேள்விகளை பாருங்கள்.கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
- ஏன் ஒருமையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
- பன்மையில் ஏன் மொழிபெயர்க்கப்படவில்லை?
- இங்கு திரித்துவவாதிகளின் கருத்து என்னவாக இருக்கிறது?
இரண்டாவது கேள்விக்கு பதில், மோசே தனி மனிதனாகவும்,கண்ணால் காணப்படக்கூடிய ஒருவனாக இருப்பதாலும்,திரித்துவக் கருத்தை திணிக்க முடியாது.கடவுள் அப்படி அல்ல காணப்பட முடியாதவர்.எனவே தனிப்பட்ட கருத்துக்களை அவர் மீது திணிக்கலாம் என்ற எண்ணம்தான் இதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்.பன்மையை இங்கு கொண்டு வர இயலாது.
மூன்றாவது கேள்விக்கு பதில்,திரித்துவவாதிகள் இந்த வசனத்திற்கு பதிலை கூறவில்லை என்பதுதான்.
இந்த ஒரு வசனம் மட்டுமல்ல எண்ணற்ற சான்றுகள் உள்ளன.அனைத்தும் பைபிளுக்கு உள்ளேயே இருக்கின்றன.அடுத்த சான்று மிகப்பெரும் சான்றாகும்.இறைவனே இங்கு தன்னைப்பற்றி கூறுகிறார்.வேறு யாரும் அல்ல.யாத் 20:2-ல் கூறப்பட்டுள்ள வசனத்தை பாருங்கள்.
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையாகிய "உன் தேவனாகிய" என்ற வார்த்தையில்,"ELOHIM" என்ற பன்மை வார்த்தைக்கு ஈடான மற்றொரு வார்த்தையான "ELOHI" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.இவ்வார்த்தையும் பன்மைத்தன்மை கொண்டது.இந்த வசனத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான வார்த்தை "நானே" என்ற வார்த்தை ஆகும்."நானே" என்ற வார்த்தை ஒருமையில் உள்ளது என்பதை உங்களுக்கு நான் கூற வேண்டியது இல்லை.இவ்வார்த்தையை கடவுளே கூறியிருக்கிறார் என்பதுதான் மிக மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.கடவுளே தன்னை ஒருமையில் குறிப்பிடும் பொழுது,அவரை பன்மையில் குறிப்பிட யாருக்கு அதிகாரம் உள்ளது?உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
கடவுள் தன்னைப்பற்றி தாமே குறிப்பிடும் பொழுது "ELOHI" என்று பன்மையில் குறிப்பிடுகிறாரே ஏன்? பன்மை வார்த்தையை பயன்படுத்தி விட்டு ஒருமை வார்த்தையாகிய "நானே" என்றும் குறிப்பிடுகிறாரே அது ஏன்? காரணம்,அவர் நிகரற்றவர்,ஈடு இணையற்றவர்,அவருக்குரிய கனத்தை அவருக்கு கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.அவரே தன்னை பன்மையில் குறிப்பிடும் பொழுது நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.இந்த ஒரு இடத்தில மட்டுமே அவர் தன்னைப்பற்றி பன்மையில் குறிப்பிடுகிறார் என்று நினைக்க வேண்டாம்.பல இடங்களில் அவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்.எடுத்துக்காட்டாக,
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.(ஏசா:45:5)
மேற்கூறிய வசனங்களில் கடவுள் தன்னை "நான்" அல்லது "நானே" என்று குறிப்பிடுகிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள். இன்னும் பல எண்ணற்ற இடங்களில் இவ்வாறு உள்ளது.எனவே அவர் தன்னை மரியாதையின் காரணமாக பன்மையில் குறிப்பிடுவதை திரித்துவத்துக்கு ஆதரவாக எடுத்துக்கொள்ள முடியாது.பல தீர்க்கதரிசிகள் தங்களுடைய புத்தகங்களில் கடவுளை பன்மையில்தான் குறிப்பிடுகின்றனர்.அப்படியென்றால் அவர்கள் தவறாக குறிப்பிடுகின்றனரா? தன்னைக்குறித்து அவரே ஒருமையில் சாட்சி கொடுத்திருக்க திரித்துவவாதிகள் எப்படி அவரை பன்மையில் குறிப்பிடலாம்?
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.(யாத்20:5)
இந்த இடத்தில மற்றொரு வசனத்தை குறிப்பிட விரும்புகிறேன்.யாத்:32:1-ஐ பாருங்கள்.
மேற்கூறிய வசனத்தில் "தெய்வங்களை" என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஹீப்ரு வார்த்தை "ELOHIM" என்பது ஆகும்.இங்கு சரியாக பன்மையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஏன்? ஏனென்றால் இங்கே வேற்று தெய்வங்களைப்பற்றி பேசப்படுகிறது.எனவே தெய்வங்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இடம்,பொருள் அறிந்து மொழிபெயர்ப்பு நடந்துள்ளது.மெய்யான ஒரே கடவுளை மரியாதையின் காரணமாக பன்மையில் குறிப்பிடும் ஒரு சில வசனங்களை தருகிறேன். யாத்:32:16,23; எண்:16:22;சங்:64:1; ஏசா:41:10 உபா:4:2,3,21; 1இராஜா:18:39 ஏறக்குறைய உபாகமம் முழுவதுமே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும்.பைபிள் முழுவதும் இவ்வார்த்தை நிரம்பி உள்ளது.
"மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்."
திரித்துவவாதிகள் கூறுவது போல கடவுள் மூன்று பேர்களாக இருக்கிறார் என்றால் ஏன் தமிழ் பைபிள் முழுவதும் "ELOHI" அல்லது "ELOHIM" என்ற வார்த்தை "தேவன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது?
"ELOHIM" என்ற வார்த்தையை பைபிள் எப்படி பயன்படுத்துகிறது என்பதைக்குறித்து மேலும் சில விளக்கங்களை நாம் காணலாம்.கீழ்கண்ட கூற்றுகளை படியுங்கள்.
- ஒருவருக்கு அவர் கனத்துக்குரிய மரியாதையை குறிப்பிட்டு காண்பிப்பதற்கு பன்மைத்தன்மைக் கொண்ட வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது.
- இந்த "ELOHIM" என்ற வார்த்தையின் ஒருமை வடிவாகிய "EL"என்ற வார்த்தையும் பைபிள் முழுவதும் உள்ளது.
- அப்படியென்றால் இந்த இரு வார்த்தைகளையும் எவ்வாறு பயன்படுத்துவது?
- "EL" என்ற வார்த்தை கடவுளைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா?
- "EL" என்ற வார்த்தை மரியாதை குறைவான வார்த்தையா?
மேற்கூறிய இந்த வசனத்தை கூறுபவர் வேறு யாருமல்ல,கடவுளேதான் கூறுகிறார்.இந்த வசனத்தில் வரும் "எரிச்சலுள்ள தேவனாயிருந்து" என்ற வார்த்தையில் வரும் "தேவன்" என்ற வார்த்தையில் "EL" என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய வசனம் இது.முதலில் வரும் "உன் தேவனாகிய"என்கிற இடத்தில் "ELOHI" என்ற பன்மை வார்த்தை உள்ளது.நாம் கவனிக்க வேண்டியது,மோசேயிடம் கடவுள் பேசுகிறார்.மோசேயின் தேவன் என்று தன்னை கூறுகிறார்.நமக்கு தெரிய வேண்டியது என்னவென்றால்,மோசேயின் தேவன் வேறு யாருமல்ல,அவர் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு,என்பவர்களின் கடவுள்.அவர் ஒருவரே கடவுள் என்பதில் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.அவர் தன்னை குறிப்பிட்டு அடையாளப்படுத்தி இருக்கிறார்.எனவே மரியாதையை பன்மையை குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.ஆனால் அடுத்து வரும் "EL"என்ற வார்த்தை பொதுவான பொருளை கொடுக்கிறது.அதாவது,அமைதியான தெய்வம்,சிறந்த தெய்வம்,கோபமான தெய்வம்,கேட்ட தெய்வம்,போன்ற வார்த்தைகளில் வரும் "தெய்வம்"என்ற வார்த்தை பொதுவான பொருளை தருகிறது.இந்த "பொதுவான தெய்வம்" மோசேயின் கடவுளை குறிக்க வில்லை.பதிலாக,யாரையும் குறிக்காமல் "தெய்வம்" என்ற பொது தெய்வத்தை அல்லது கடவுளைக் குறிக்கிறது.எடுத்துக்காட்டாக,உங்கள் நண்பனிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.உங்களுடைய உரையாடல் கீழ்கண்டவாறு உள்ளது.நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.(யாத்:20:5)
"நீங்கள்:டேய்,ஏன்டா நீ ஏன் நண்பனா?இப்படி பண்ணிட்டியே!"உங்கள் நண்பர்:என்ன மன்னிச்சிருடா!இனிமே நான் உனக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன்.
மேற்கண்ட உரையாடலில்,உங்கள் நண்பர் கூறும் பதிலில் வரும் "நண்பன்"என்ற வார்த்தை "நண்பன்"என்ற பொதுவான பொருளை குறிக்கிறது.உங்கள் நண்பனை அல்ல.மற்றுமொரு உரையாடலை கவனியுங்கள்.
"மகன்:அப்பா! ஏம்பா இப்படி குடிக்கிறீங்க?
"தந்தை:உன் தகப்பனாராகிய நான் இனிமேல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் ஒரு நல்ல தகப்பனாக இருப்பேன்.முதலில் "தகப்பனார்" என்றும் பின்னர் "தகப்பன்" என்றும் கூறப்பட்டுள்ளது. முதலில் உள்ளது மரியாதையை பன்மை.இரண்டாவதாக உள்ளது பொதுவாக பொருள் தரக்கூடிய ஒருமை "தகப்பன்".
இவ்வாரே கடவுளுக்கும் மோசேக்கும் இடையே நடக்கும் உரையாடல் உள்ளது.கடவுள் முதலில் தன்னை மரியாதையை பன்மையுடன் அழைக்கிறார்.பின்னர் பொதுவாக "எரிச்சலுள்ள கடவுள்"என்று அழைக்கிறார்.
எனவே இடம் மற்றும் பொருள் அறிந்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இதற்க்கு எடுத்துக்காட்டாக கீழ்காணும் வசனங்களை பாருங்கள். ஏசா45:14,15,21,22;46:9; சங்:57:2;31:5;90:2; உபா:4:24; தானி :9:4; எசெக்:28:2. எண்:12:13,23:19,22,23,24:4 எண்ணற்ற வசனங்களில் இவைகள் மிகச்சிறிய அளவே.
சான்று 3:
"ELOHIM" என்ற வார்த்தை கடவுளை மட்டும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதில்.யாத் 21:6-ல் கூறப்பட்டுள்ள வசனத்தை காண்போம்.
மேற்கண்ட வசனத்தில் "நியாயாதிபதிகளினிடத்தில்" என்ற வார்த்தை உள்ளது.எந்த ஹீப்ரு வார்த்தையில் இருந்து இது வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்."ELOHIM" என்ற வார்த்தையில் இருந்துதான் "நியாயாதிபதிகள்" என்ற வார்த்தை வந்துள்ளது. ஒருவேளை,அப்படியே மொழிபெயர்தோமானால்,கீழ்கண்டவாறு அந்த வசனம் இருக்கும்.அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.
இவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால்,அவன் எஜமான் அவனை தேவர்களிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.
- நம் தேவனை கண்ணால் காண இயலாது.
- நம் தேவன் ஒருவரே.
- நாம் மரியாதையை நிமித்தமாக பன்மையில் அழைத்தாலும் அவர் ஒருவரே.
- எனவே மேற்கூறியவாறு மொழிபெயர்க்க சாத்தியம் இல்லை.
முடிவுரை:
எனவே "ELOHIM" என்ற பன்மை தன்மை கொண்ட வார்த்தையைக் கொண்டு நம்முடைய எண்ணங்களுக்கு தக்கவாறு விளக்கங்கள் கொடுக்க முடியாது.திரித்துவம் என்பது ஒரு போலி என்பது இதன் மூலம் விளங்கும்."திரித்துவம்" என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் ஒரு இடத்தில கூட இல்லை.இல்லாத ஒன்றுக்கு ஆதரவாக நாம் வாதிட முடியாது.மெய்யான ஒரே கடவுளுக்கு ஈடு இணை கற்பிக்க முடியாது.திரித்துவம் அவ்வாறு கற்பிக்க முயலுகிறது.அந்த மெய்யான கடவுள் தன்னை "நான்" என்றே கூறியிருக்கிறார்.மக்கள் அவரை தொழுது கொள்வதில் இருந்து பிரிக்க திரித்துவம் முயலுகிறது.
No comments:
Post a Comment