பிறவிக்குணம் - யார் காரணம்?
அனைவருக்கும் பிறவிக்குணம் என்று ஒன்று இருக்கும்.இன்னாருடைய மகன் அல்லது மகள் இவ்வகையான குணத்தைக் கொண்டிருப்பர் என்று கணிக்கும் மனிதர்களை நாம் கண்டிருப்போம். நண்பர்கள், உறவினர்கள் குழந்தைகள் என்று அனைவரின் பிறவிக் குணத்தைப் பற்றி நமக்கு சில எண்ணங்கள் இருக்கலாம்.அதை நாம் அவர்களிடம் கூறியிருக்கலாம் அல்லது கூறாமல் நமக்குள்ளேயே வைத்திருக்கலாம்.அதுபோன்றே நமக்கும் சில பிறவிக்குணங்கள் இருக்கலாம்.பிறவிக்குணங்களில் நல்லவைகளும் இருக்கலாம் கெட்டவைகளும் இருக்கலாம்.நம்முடைய நண்பர்களில் சிலபேருடைய குணங்களை கூர்ந்து கவனித்து இருப்பீர்கள்."இவன் அல்லது இவள் மிகவும் அமைதியாக இருக்கிறானே அல்லது இருக்கிறாளே,எப்படி?,இவள் மிகவும் அமைதியாக பேசுகிறாள்,கோபம் கொள்ளாமல் அமைதியாக பதில் கூறுகிறாள்,எப்படி?" என்று நாம் வியந்திருக்கலாம்.பொதுவாக பிறவிக்குணம் என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்படலாம்.
- நம்மை அறியாமலேயே நாம் ஒரு குறிப்பிட்ட விதமாக செயல்படுவது.
- நம்மை அறியாமலேயே நாம் சிலவற்றை விரும்புவது.
நம்முடைய பள்ளிக் காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் நமக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களைப் பற்றி நமக்கு பலவித எண்ணங்கள் இருந்திருக்கும்.ஒரு சிறு தவறுக்கும் கடுமையாக கோபம் கொள்ளும் ஆசிரியரையும்,பெரும் தவறு செய்திருந்தாலும் கடுமை காட்டாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் பேசும் ஆசிரியர்களையும் நாம் கண்டிருப்போம்.அவ்விரு வகையான ஆசிரியர்களைப் பற்றி நாம் வியந்திருப்போம்.அவ்விருவரும் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன?ஒரு சிறு தவறு ஒருவருக்கு பெரும் தவறு போலவும், ஒரு பெரும் தவறு மற்றவருக்கு சிறு தவறு போலவும் இருக்க காரணம் என்ன?
சிறு வயதில்,பெரும்பாலும்,நம்முடைய பெற்றோர் நம்மை நற்பண்புகளை சொல்லிக் கொடுத்தே வளர்ப்பர்.ஆனாலும் சிலருக்கு திருடும் எண்ணம் வரக் காரணம் என்ன? தேவையான அனைத்தும் கிடைத்திருந்தாலும் திருடும் பழக்கம் சிலருக்கு இருக்கும் அதற்கு காரணம் என்ன? ஆண்,பெண் உறவுகள் ஒரு குறிப்பிட்ட வரைமுறையில்தான் இருக்க வேண்டும் என்று உள்ளது,ஆனாலும் இப்பொழுது நடைமுறையில் அவ்வாறு இல்லை.காரணம் என்ன? வரைமுறை மாறி நடப்போர் கூறும் காரணம் என்னவென்றால்,"நான் என்ன செய்வேன்,நான் அவ்வாறு செய்ய விரும்பா விட்டாலும் எனக்குள் அந்த எண்ணங்கள் உள்ளனவே,எப்படி?",இதற்கு என்ன காரணம்?
பதின்ம வயதில் ஒரு குறிப்பிட்ட செயல்களை செய்திருக்க வாய்ப்புள்ளது.சில குறிப்பிட்ட சிறுவர்கள் மிகவும் அமைதியாக இருப்பதைக் கண்டிருப்போம்.அவர்களுடைய செயல்கள் பெரும்பாலும் பெண்களுடைய செயல்களை ஒத்திருக்கும்.நாம் அவர்களை பகடி செய்து விளையாடியிருக்கலாம்.பிறகு அவர்களை வெறுத்திருக்கலாம்.இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணம் என்ன என்று எப்பொழுதாவது சிந்தித்திருந்தோமானால் அவர்களை நாம் கண்ணியத்தோடு நடத்தியிருப்போம்.தொலைக்காட்சிகளில் அப்படிப்பட்ட சில ஆண்களையும் பெண்களையும் பேட்டிக்கண்டு ஒளிபரப்பியதை நான் பார்த்திருக்கிறேன்."நான் என்னுடைய செயல்களில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்ணாக உணர்ந்தேன்", என்று அவர்கள் கூறுவதை கண்டிருக்கிறேன்.
இப்படிப் பட்டவர்கள் திருநங்கைகள் என்று இன்று அழைக்கிறோம்.இவர்கள் இவ்வாறு இருக்க விரும்பிடுகின்றனரா?இல்லை.அவர்களுடைய பதின்ம வயதிற்கு பின்னர் அவர்களுடைய பாலின உணர்வுகள் அவர்களை அவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளுகிறது."நான் என்ன செய்வேன்,என் எண்ணங்கள் இவ்வாறுதான் உள்ளது", என்பது அவர்களுடைய பதிலாக இருக்கிறது.இவ்வகையான இயல்பிற்கு யார் காரணம்? அவர்களுக்குள் மறைந்திருந்த அந்த இயல்பை அவர்களுக்கு கொடுத்தது அவர்களை படைத்த கடவுள் என்றால் அதை எப்படி நாம் புரிந்து கொள்ள முடியும்.

பிறப்பில் நான் ஆணாக இருந்தாலும் என்னுடைய செயல்கள் பெண் போன்று உள்ளனவே,யார் காரணம்? அது தவறு என்றும் அறிந்திருந்தாலும் எனக்குள் அந்த எண்ணங்கள் தீயாய் எறிகின்றதே ஏன்? மற்றவருக்கு அது இல்லையே ஏன்? இந்த எண்ணங்களின் விளைவாக நான் தவறு செய்தால்( நான் விரும்பவில்லை ஆனாலும்) யார் பொறுப்பு? இந்த எண்ணங்கள் எனக்குள் வர யார் காரணம்?
நான் ஒரு பெண்ணாக பிறந்திருந்தாலும் என்னுடைய செயல்கள் ஆண் போலவே உள்ளனவே ஏன்?அதை நான் விரும்பாவிட்டாலும் அவ்வாறான எண்ணங்கள் எனக்குள் இருந்தது எப்படி? என்னை விட்டு அகல மாட்டேன் என்கிறதே எப்படி?எப்படி எனக்குள் வந்தது? ஒரு பெண்ணாக நான் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்க விரும்புகிறேன் அனால் முடியவில்லையே ஏன்? பெண்ணின் குணம் "அமைதி" என்றால் என்னுடைய இந்த தீவிர பேச்சுக்கு யார் காரணம்?
மேற்கூறியவைகளுக்கு யார் காரணம் என்று இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் நினைக்கிறீர்கள்?இது போன்று எண்ணற்ற குணங்கள் உள்ளன.அனைத்தையும் விவரிக்க இயலாது.நாம் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் " என்னை படைத்தது கடவுள்" என்று நீங்கள் உறுதியாக நம்புவீர்கள்,குறிப்பாக கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்.உங்களை படைத்தது உங்கள் இறைவன் என்றால் உங்களுக்குள் இருக்கும் "மேற்கூறிய எண்ணங்களுக்கும்" அவர்தான் காரணம் அல்லவா?உங்களைப் படைத்த இறைவன் "உங்களை தற்போது நீங்கள் உள்ளவாறு படைத்திருக்கிறார் அல்லவா"? நீங்கள் உங்களை உண்மையாக சுய பரிசோதனை செய்து கொண்டால் உங்களுக்குள் இருக்கும் "தீய" எண்ணங்களை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள்.அப்படியென்றால் உங்களுக்கு இருக்கும் இந்த "தீய" எண்ணங்களுக்கு காரணமும் கடவுளே!,அல்லவா? உங்களை படைத்தது அவர்தானே?
உங்களை தீய எண்ணங்கள் கொண்டவராக படைத்து விட்டு உங்களுக்கு தண்டனையும் கொடுத்தால் எப்படி நியாயமாகும்? உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட இயல்பை வைத்து விட்டு,அந்த இயல்பின் காரணமாக நீங்கள் தவறு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு தண்டனை எப்படி வழங்க இயலும்? பிறக்கும் ஒவ்வொருவரையும் கடவுளே படைக்கிறார் என்றால் அந்த ஒவ்வொருவரின் இயல்புக்கும் அவரே காரணம் அல்லவா?ஒரு பிராமண குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவர்தான் படைக்கிறார் என்றால் அக்குழந்தையை "சிலைகளை வணங்கும்படி" படைத்தது எதனால்? படைத்த தன்னையே வணக்கும் படி அவர் படைத்திருக்கலாமே?சிலைகளை அல்லது பிறவற்றை வணங்கும்படி கடவுள் அவர்களை படைத்தது விட்டு அவர்களை தண்டிப்பது எப்படி நியாயம்?அப்படிப்பட்டவர்களுக்கு சந்ததிகளை வழங்காமல் இருந்திருக்கலாமே?
எனவே தற்பொழுது "படைப்பு" பற்றிய நம் எண்ணங்களை மாற்றி கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.நம்முடைய படைப்பிற்கு கடவுள்தான் காரணம் என்றால் நம்முடைய இயல்பிற்கும் அவரே காரணம் அல்லவா? அப்படியென்றால் கடவுள் மிக மோசமான செயலை செய்கிறார் என்றே பொருளாகும்.தவறு செய்யும் பய் நமக்கு இயல்பை கொடுத்து விட்டு பின்னர் தண்டிப்பது என்பது கடவுளின் செயல் என்று நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் இவ்வுலகைப் படைத்த இறைவன் அவ்வாறு அல்ல.இறைவன் அல்லது கடவுள் என்பவர் அப்படிபட்டவராக இருக்க முடியாது.
இறைவன் இரக்கமுள்ளவராக இருக்கிறார்.இரக்கம் என்றால் எவ்வாறு என்றால் நீங்கள் அவருக்கு முன்பாக தவறு செய்தாலும் அவர் உங்களை வெறுக்காமல் பொறுமையுடன் காத்திருக்கிறார்.நீங்கள் அவரை வணங்காமல் வேறு எதை வணங்கினாலும் பொறுமையுடன் இருக்கிறார்.மேலும் மனிதர்களை அவர் படைக்கவில்லை என்பது என்னுடைய கருத்து.என் படைப்பிற்கு காரணம் என் தாய் மற்றும் தந்தையே.ஒருவருடைய தாய் தந்தை வழியாக அவர் படைக்கப்பட வேண்டும் என்பதுதான் இறைவனுடைய செயலே அன்றி இறைவன் நேரடியாக நம்மை படைக்கிறார் என்பது மேற்கண்ட முரண்பாடுகளுக்கு நம்மை இட்டு செல்லும்.என் படைப்பிற்கு என் இயல்பிற்கும் காரணம் இறைவன் அல்ல,பதிலாக என் தாய் தந்தையரே!!
அப்படியென்றால் என் இயல்பிற்கு நானும் காரணம் அல்ல இறைவனும் காரணம் அல்ல,பதிலாக பெற்றோரே காரணம்.பிறப்பு அல்லது "பல்கி பெருகுதல்" என்பது பெற்றோர் வழியாக நடக்க வேண்டும் என்பதே இறைவனின் படைப்பு.உங்களையும் என்னையும் படைத்தது பெற்றோரே அன்றி இறைவன் அல்ல,ஆனால் இறைவன் வகுத்து தந்த வழிமுறையில் நம்மை படைத்துள்ளனர்.எனவே நம் தவறுகளுக்கு காரணம் நாமே அன்றி இறைவன் அல்ல.ஆனால் உலகில் உள்ள அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.அவரின் மேற்பார்வையில் அனைத்தும் இயங்குகிறது.வழிமுறைகளை நமக்கு தந்தவரே இறைவன்.முதன் முதலில் மனிதர்களை அவர் படைத்து பின்னர் அவர்களை பல்கி பெறுக செய்திருக்க்கிறார்.பல்கி பெருகுதல் என்பது "ஆண் பெண் இணைப்பின்" வழியாக நடைபெறுகிறது.
அவ்வாறு ஒரு ஆணும் பெண்ணும் இணையும் பொழுது அவர்களுடைய இயல்புகளை பிறக்கும் சந்ததிகள் பெறுகின்றனர்.இதுவே இறைவனின் நடைமுறை.ஆண் ,பெண் இணைப்பு அவரின் வழிமுறை.இதற்கு மாறாக நடக்கும் அனைத்தும் இறைவன் விரும்பாதவைகளாக இருக்க வேண்டும்.
முடிவாக ஒவ்வொருவருடைய இயல்பிற்கும் காரணம் அவர்களுடைய பெற்றோரே.உங்களுடைய இயல்பும் உங்கள் மனைவியின் இயல்பும் பிறக்கும் குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது.இப்பொழுது உங்களுடைய இயல்பில் எது தவறானது என்று நீங்கள் அறிவீர்கள்.அதனை முளையிலேயே கிள்ளி ஏறிய முயல வேண்டும்.நற்பண்புகளை சிறு வயதிலேயே ஊட்டி வளர்க்கும் குழந்தைகள் அவர்களுடைய சந்திதிக்கு நல்ல இயல்புகளை கொடுக்க வாய்ப்புள்ளது.அப்படியென்றால் நம்முடைய கெட்ட இயல்புகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? தெரிய வில்லை.அதற்கு இறைவன் ஏதாவது வழிமுறைகளை கொடுத்துள்ளாரா என்று தெரியவில்லை.ஆனாலும் அவரை நாம் வழிபட்டு அவரிடம் வேண்டுதல் செய்யலாம்!
https://drive.google.com/file/d/167o8brJ5ri0eF6SC4hzrk_PRVr791kaA/view?usp=sharing

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:🔻https://drive.google.com/file/d/167o8brJ5ri0eF6SC4hzrk_PRVr791kaA/view?usp=sharing
No comments:
Post a Comment