Friday, November 22, 2019

இயேசு இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் பிறந்தார் என்று மரியாளும்,யோசேப்பும் கூறினார்களா?

இயேசு இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் பிறந்தார் என்று மரியாளும்,யோசேப்பும் கூறினார்களா?

இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட பிறப்பை யோசேப்பையும், மரியாளையும்  தவிர வேறு யார் நன்றாக நினைவில் கொண்டிருக்க வேண்டும்?கன்னிப்பெண்ணாக இருக்கும் ஒருவள் தான்  கர்ப்பம் தரிக்கும் பொழுதை மறக்க மாட்டாள்,எப்பொழுதும் நினைவில் கொள்ளுவாள் என்று எவரும் எதிர்பார்ப்பார்கள்.அதுபோன்று, ஒருவன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட கன்னிப்பெண் ஒருவள், தன்னுடைய செயல் எதுவும் இன்றி இயற்க்கைக்கு அப்பாற்பட்ட முறையில் கர்ப்பம் தரிப்பதை சுலபமாக மறக்க மாட்டான்.ஆனால், இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட பிறப்பை அவருடைய பெற்றோர் மறந்து விட்டதைப்போன்று  நற்செய்தியாளர்கள் பலர் கதைகளை விவரிக்கின்றார்.

லூக்காவின் புத்தகத்தில்,கடவுளின் கோவிலில் அங்கிருந்த கற்றுத்தேர்ந்த பெரியவர்களுக்கு இயேசு கற்ப்பிப்பதாக கூறியிருப்பார்.லூக்கா 2-ம் அதிகாரம் 42 முதல் 50-ம் வசனங்கள் வரை படித்துப்பாருங்கள்.இயேசுவின் தாயார் பேசியதற்கு இயேசுவின் பதிலைப்பாருங்கள். 
48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார்.
49 அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார்.
50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.[லூக் 2:48,49,50]
48. தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச்செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.
50. தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. [லூக் 2:48,49,50]
இயேசு பேசியதை யோசேப்பும் புரிந்து கொள்ளவில்லை,மரியாளும் புரிந்து கொள்ளவில்லை.இயேசு பிறப்பதைக் குறித்து இறைத்தூதன் ஒருவன் அவர்கள் இருவரையும் சந்தித்து இருந்தானேயானால் இருவரும் பண்ணீரெண்டு ஆண்டுகளுக்குப் பின் அவற்றை மறந்து எப்படி?48-வது வசனத்தின்படி அவர்கள் இருவரும் ஆச்சரியப்பட்டது எப்படி? இந்த உலகத்தில் இதற்கு முன்னர் எந்த உயிரினமும் சந்தித்திராத,இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வகையில் இயேசுவை தான் கர்ப்பம் தரித்ததை மறந்தது எப்படி?

எலிசபெத்,மரியாவிடம் கீழ்வருமாறு கூறியதை அவள் மறந்துவிட்டால் என்பதை நம்ப முடியவில்லை.
42 அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?[லூக் 1:42,43]
42. உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது, [லூக் 1:42,43]
மேலும் மரியாளே தன்னுடைய வாயினாலே கூறுவதையும் கவனியுங்கள்.
46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்;
47 “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.[லூக் 1:46-49]
46. அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
47. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
48. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
49. வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.[லூக் 1:46-49]
இவ்வளவுக்கு பிறகும், "தான் தனது தந்தையினுடைய அலுவல்களில்  ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்" என்று இயேசு கூறியதை மரியாள் உணரவில்லை.

கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் [இவர்கள் சௌராஷ்டிரா (Zorastrian) என்னும் இனத்தில் சோதிடம், கனவுகளுக்கு பொருள் கூறுதல்,மந்திர வித்தைகள் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு பிரிவினர்] குழந்தை இயேசுவை வணங்கி,அவருக்கு பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் பரிசாக அளித்ததை மரியாளும் யோசேப்பும் மறந்துவிட்டனர்.
11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.[மத் 2:11]
11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.[மத் 2:11]
ஒரு இறைத்தூதன் யோசேப்பினிடத்தில் தோன்றி,மரியாளை இயேசுவையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்கு சென்று விடுமாறு கூறியதையும்,ஏரோது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் கொன்றதையும் கூட அவர்கள் இருவரும் மறந்துவிட்டனர்.
13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான் என்றார்.[மத் 2:13]
13. அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.[மத் 2:13]
 16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.[மத் 2:16]
எல்லாவற்றிற்கும் மேலாக "எகிப்துக்கு ஓடிச் சென்ற" நிகழ்வு தீர்க்கதரிசனம்  ஒன்று நிறைவேறிய நிகழ்வாக இருக்கிறது.அது "ஓசியா" புத்தகத்தில் உள்ளது.(தீர்க்கதரிசனம் நிறைவேறிய நிகழ்வு என்பது சாதாரண நிகழ்வு அல்ல-மொ-ர்)
1 இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்.[ஓசேயா 11:1]
1. இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.[ஓசியா 11:1]
ஏன் அவர்கள் எகிப்துக்கு ஓடிச் செல்ல வேண்டும்?:

லூக்கா புத்தகத்தின் படி,ஏரோது மன்னன் பெத்லகேமில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்லும் பொழுது ஆபத்தான பெத்லகேமுக்கு அருகில் கூட இல்லை.காரணம் அவர்கள் நாசரேத்துக்கு சென்று விட்டனர்.
39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.[லூக் 2:39]
39. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.[லூக் 2:39]
வசனம் ஒன்று நிறைவேறுகிறது என்று காட்டுவதற்காகவே, பிறந்த உடனேயே குழந்தையை அழைத்துக்கொண்டு எகிப்துக்கு சென்று விட்டதாக மத்தேயு கூறுகிறார்.உடனே அழைத்து சென்ற நிகழ்வு,"தீர்க்கதரிசனம் ஒன்று  நிறைவேறுகிறது" என்று இயேசுவின் பெற்றோர்களுக்கும் நினைவில் கொள்ளுவதற்கு சுலபமாக இருக்கும்.குறைந்தபட்சம் இந்த "எகிப்துக்கு சென்ற நிகழ்வையாவது" இயேசுவின் பெற்றோர் நினைத்துப்பார்த்திருக்க வேண்டும்.

ஆனால்,லூக்கா வேறுவிதமாக கூறுகிறார்.எப்படியென்றால், குழந்தை பிறந்தவுடன் நாற்பது நாட்கள் எருசலேமில் இருக்கும்படி செய்து விடுகிறார்.(காரணம் லேவியராகமம் 12:1-8-ன் படி விருத்தசேதனம் செய்வதற்காக).இதன்பிறகே அவர்கள் லூக் 2:39-ன் படி நாசரேத் திரும்பும்படி செய்கிறார்.
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.[லூக் 2:22]
22. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
23. முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.[லூக் 2:22-24]
(மேற்கூறியவைகளில் இருந்து புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்,லூக்காவின் எழுத்துப்படி குழந்தை பிறந்து 40 நாட்கள் அவர்கள் எருசலேமில் இருந்துவிட்டு பின்னர் நாசரேத் சென்று விட்டனர்.மத்தேயுவின் எழுத்துப்படி அவர்கள் குழந்தை பிறந்த உடனே எகிப்துக்கு சென்று விட்டனர்.இப்பொழுது இதில் உள்ள முரண்பாட்டை புறந்தள்ளிவிட்டு நாம் கவனித்தோமானால்,நமக்கு தெரிவது மத்தேயுவின் "தீர்க்கதரிசனம் நிறைவேறும் நிகழ்வு" ஆகும்.கோவிலில்,இயேசுவின் தாயார் இயேசுவைத் திட்டுவதற்கு முன்னர் இந்த குறிப்பிட்ட நிகழ்வையாவது அவர் நினைத்துப்பார்த்திருக்க வேண்டும்.ஏன்? ஏனென்றால், இயேசு தீர்க்கதரிசனம் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறார்,அதனால் அவர் தெய்வ குழந்தை,அவரை நாம் திட்டக்கூடாது என்று மரியாள் நினைத்துப்பார்த்திருக்க வேண்டும் - மொழிபெயர்ப்பாளர்)

எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் பெற்றோரிடம் மேய்ப்பர்கள்(இடையர்கள்) கூறியதை அவர்கள் மறந்தே போய்விட்டனர்.
8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
10 வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.
13 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
14 உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.
15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்;” என்று சொல்லிக்கொண்டு,
16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள்.
17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.
19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.[லூக் 2:8-19]
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.[லூக் 2:11-18]
மரியாளிடமும் யோசேப்பிடமும் இறைத்தூதர்கள் தோன்றிய  போது தாங்கள் எவ்வாறு ஆச்சரியப்பட்டோம் என்பதை பத்து மாதங்கள் கழிந்த பின்னர்  மறந்துவிட்டனர்.குழந்தை பிறந்து ஒரு மதம் ஆனபோது நடந்த சில நிகழ்வுகள் அதை நமக்கு உணர்த்துகிறது.குறிப்பாக,இயேசு இன்னும் ஒரு மாத குழந்தையாக இருக்கும் பொழுதே,சிமியோன் என்பவனும் பானுவேலின் மகளாகிய அன்னாளும் குழந்தையாகிய இயேசுவின் வருங்காலத்தைக் குறித்து பேசியதை அவர்கள் மறந்தே போய்விட்டனர்.
25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.
26 “;ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.
27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.
28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
29 “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,
31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.
33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.
34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.
35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.
36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;
37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.
38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.[லூக் 2:25-38]
25. அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
26. கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,
28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து:
29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.[லூக் 2:25-38]
மேற்கூறியவைகள் அனைத்தும் உண்மையான வரலாற்று நிகழ்வுகளாக இருக்குமாயின்,இயேசுவின் அதிசயமான பிறப்பைக்குறித்து  அவருடைய ஊழிய காலங்களிலும் அவருடைய கடைசி காலங்களிலும் ஒருவர் கூட,அவருடைய சொந்தபந்தங்களில் இருந்தும் கூட, ஏன் பேச வில்லை?
54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?
55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?[மத்  13:54,55]
54. தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?[மத் 13:54,55]
உண்மையிலேயே தான் கன்னியாக இருக்கும்பொழுதே இயேசு தன்னிடத்தில் உற்பத்தியாகி இருந்தால்,இயேசு யார் என்பதைக் குறித்து மரியாளுக்கு ஒரு சிறு கேள்வியேனும்  வந்திருக்க வேண்டும்.தன குடும்பத்தில் நெருங்கியவர்களிடமாவது இதைப்பற்றி அவள் கூறியிருக்கமாட்டாளா?ஆனாலும் இயேசுவின் உறவினர்கள் அவரைப்பிடிக்க வரும்பொழுது கூட,மரியாள் அவர்களிடம்(பிடிக்க வருபவர்களுடன் மரியாளும் பின்னர் சேர்ந்து வருகிறாள்),இயேசு அவர்கள் நினைப்பது போல் மதிமயங்கியவர் அல்ல என்று கூறவில்லை?
21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.[மாற் 3:21]
21. அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.[மாற் 3:21]
31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.[மாற் 3:31]
31. அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.[மாற் 3:31]
இயேசுவின் சகோதரர்கள் கூட அவரை நம்ப வில்லை என்று யோவானின் நற்செய்தி புத்தகம்  வெளிப்படையாக கூறுகிறது.
5 ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.[யோ 7:5]
5. அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.[யோ 7:5]
இயேசுவின் தெய்வீக தன்மையைக் குறித்து அவருடைய  சகோதரர்களிடம் கூட மரியாள்  கூறியிருக்க மாட்டாரா? இயேசுதான் "மேசியா",அவரை நீங்கள் நம்ப வேண்டும்,அவ்வாறு செய்வதன் மூலம் இரட்சிப்பை பெற வேண்டும் என்று மரியாள் அவருடைய மற்ற குழந்தைகளுக்குக் கூட  கூறியிருக்க மாட்டார் என்பது நம்பும்படியாக இருக்கிறதா?

இயேசுவைப்பற்றி மரியாளுடைய கருத்துதான் என்ன?:

நற்செய்தி புத்தகங்களில் மரியாள் பற்றி வரும் இடங்களில்,தான் கன்னியாய் இருக்கும் பொழுதே இயேசுவை கர்ப்பந்தரித்ததன் காரணமாக,அவர் ஒரு "கடவுளின் குழந்தை" என்று பொருள்படும்படி எப்பொழுதாவது கூறியிருக்கிறாரா என்றால்,அதற்கான அறிகுறியே இல்லை எனலாம்.
3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.
4 இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம்                 என்ன  செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.[யோ 2:3,4]
3. திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
4. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.[யோ 2:3,4]
31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.
33 அவர் அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,
34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.[மாற் 3:31-35]
 31. அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
34. தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
35. தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.[மாற் 3:31-35]
இயேசு ஒரு தெய்வீக தன்மை கொண்டவர் என்று பொருள் படும்படி மரியாள் ஒரு போதும் இயேசுவின் சீடர்களிடம் பேசவில்லை என்பது தெளிவாகிறது. 

உண்மையில்,இயேசு தன்னுடைய உயிர்த்தெழுதலின் மூலமாக மட்டுமே "கடவுளின் குழந்தையாக" மாறினாரே அன்றி "கன்னிப் பிறப்பின் மூலம் அவர் "கடவுளின் மகனாக" மாறினார் என்று இயேசுவின் ஆரம்ப கால சீடர்கள் கூறியிருக்கின்றனர்.

மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்ததன் மூலமே இயேசு "கடவுளின் மகனாக" மாறினார் பவுல் அறிவிக்கிறார்.
4 தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.[உரோ 1:4]
5. மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.[ரோ 1:4]
32 இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும்  நற்செய்தி. 
33 இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், “நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்” என்று எழுதப்பட்டுள்ளது.[தி.ப.13:32,33]
32. நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
33. இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.[அப் 13:32,33]
முதல் நூற்றாண்டின் மூன்றாம் பகுதிக்கு முன்னர் வரை ,"கன்னி பிறப்பு" என்ற தத்துவம்  கிறித்தவ  எழுத்துக்களில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.கிறித்தவ எழுத்துக்களின் அடிப்படையில்,இயேசுவின் குடும்பத்தினரோ, முதல் கிறித்தவர்களோ, ஏன், மரியாளோ கூட "கன்னிப்பிறப்பை அறிந்திருந்தனர் என்பது சந்தேகமே.

அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார்.

ஆம்!அவர்களுக்கு தெரியாது.தங்கள் மகனுடைய ஆச்சரியமான "கருத்தரிப்பைக்" குறித்து தாங்கள் ஒருபோதும் கேள்விப்படாத காரணத்தினால் அவர்களுக்கு தெரியவில்லை.

இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரங்கள் அனைத்தும் இறந்த பிறகே இந்த "கன்னிப் பிறப்பு" கதை புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

"Jews for Judaism.com" என்ற பக்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1aRnMF405NJzvKSb0Wh3bTjob539AjQFZ/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts