யோவேல் 2-ம் அதிகாரமும் அப்போஸ்தலர்(திருத்தூதர்) 2-ம் அதிகாரமும் - ஒரு ஒப்பீடு பகுதி 2
அப்போஸ்தலர் (திருத்தூதர் பணிகள்) புத்தகத்தில் "Shavuot" என்ற ஹீப்ரு வார்த்தைக்கு பதிலாக ஏன் "பெந்தேகோஸ்து" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.இப்பொழுது பேதுரு இம்மக்களிடம் என்ன பேசுகிறார் என்பதை பார்க்கலாம். அவர் பேச்சிலிருந்து சீடர்களுடைய சில புரிதல்களை நாம் தெரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.பேதுரு யோவேல் என்ற இறைவாக்கினரை மேற்கோள் காட்டி பேசுகிறார்.எனவே யோவேல் என்ன கூறியிருக்கிறார் என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.
யோவேல் புத்தகம் மூன்று அதிகாரங்கள் கொண்ட ஒரு சிறிய புத்தகம் ஆகும்.இந்த யோவேல் இறைவாக்காளர் எந்த காலகட்டங்களில் வாழ்ந்தார்,எந்த மன்னர்களின் காலத்தில் வாழ்ந்தார் என்பதை பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை.அவருடைய தந்தையார் பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
யோவேல் புத்தகத்தின் முதல் அதிகாரம் மிக பயங்கரமான ஒரு பார்வையைத் தருகிறது.அதாவது யோவேல் அதை பார்க்கிறார்.தன்னுடைய நாடு பாழாய் போவதை அவர் காண்கிறார்.முதலாம் அதிகாரம் முழுவது இதைப்பற்றித்தான் கூறுகிறது.முதலாம் அதிகாரத்தின் முடிவில் யோவேல் கர்த்தரை நோக்கி கெஞ்சுவது போன்றும் உள்ளது.
19 ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள் தீக்கிரையாயின; வயல்வெளியிலிருந்த மரங்கள் அனைத்தையும் நெருப்பு சுட்டெரித்துவிட்டது.20 நீரோடைகள் வற்றிப்போனதால் காட்டுவிலங்குகள்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; பாலைநிலத்திலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு விழுங்கிவிட்டது.[யோவேல் 1:19,20]
19. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜுவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.
20. வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.[யோவேல் 1:19,20]
மேற்குறிப்பிட்ட இந்த இரு வசனங்களுக்கு முந்தைய வசனங்களை படித்துப்பாருங்கள்,கலங்கி போவீர்கள்.அவ்வளவு பயங்கரமாக இருக்கும்.இந்த அழிவு நாட்டின் மீது வரப்போவதை அவர் காண்கிறார்.தொடர்ந்து இரண்டாம் அதிகாரத்தில் அந்த கொடுமையான நாள் வந்துவிட்டதாகவும் அவர் காண்கிறார்,பதறுகிறார்.
யோவேல் தன் கண்களால் காண்பது போன்று எழுதுகிறார்.ஒரு பெரும்படையை காண்கிறார்.அப்படை எப்படி இருக்கும் என்னவெல்லாம் செய்யும் என்றும் கூட காண்கிறார்.யார் அவர்கள்? இதனை அவர் நேரடியாக கூறவில்லை.ஆனால் அவர் விவரித்த விதத்தையும்,வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் கொண்டு ஒப்பிட்டு பார்த்தால், இது பாபிலோன் படையெடுப்பைப் போன்று நமக்கு தோன்றுகிறது.ஆனால் அதில் சரியான முடிவு எட்டமுடியவில்லை.காரணம்,20-ம் வசனம்.
20 வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு விரட்டியடிப்பேன்; அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்; ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.
20. வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
இவ்வசனத்தில் "வடதிசை படைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பாபிலோன் எருசலேமுக்கு கிழக்கே உள்ளது,வடக்கே அல்ல.உண்மையில் வடக்கே இருப்பது அசீரிய படைகள் ஆகும்.வரலாற்று நிகழ்வுகள்,யோவேல் காண்பது அசீரிய படைகள்தான் என்ற முடிவை எடுப்பதற்கு தடையாக உள்ளது.மேலும் 3-ம் அதிகாரத்தில் "கிரேக்க" நாட்டைப்பற்றியும் யோவேல் குறிப்பிடுகிறார்.இது பாபிலோனுக்கு பின் வரும் வரலாறு.எனவே சரியான ஒரு முடிவை எட்ட முடிய வில்லை.
ஆனாலும் நாம் இப்பொழுது புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ,ஒரு பேரழிவை யோவேல் காண்கிறார்.இப்பேரழிவு கர்த்தரால் கட்டளையிடப்படுகிறது.இப்பேரழிவு நடைபெறும் நாள்தான் "கர்த்தருடைய நாள்(ஆண்டவரின் நாள்)" என்று குறிப்பிடப்படுகிறது.வரலாற்றில் இஸ்ரயேலுக்கு இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தும் இருக்கிறது.அது பாபிலோனால் வந்தது என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.
இந்த சூழ்நிலையில் கர்த்தர் ஒன்றைக்கூறுகிறார்.அதைக் கவனியுங்கள்.
யோவேல் கூறியவாறு விண்ணப்பம் செய்தால் கர்த்தர் பதிலளிக்கும் விதத்தினைப்பற்றி 18-ம் வசனத்திலிருந்து 30-ம் வசனம் வரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.ஆனால் மக்கள் அவ்வாறு செய்தனரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.மேலும், மக்கள் யோவேல் கூறியவாறு விண்ணப்பம் செய்தால் ஒரு அரிய செயல் ஒன்றையும் கர்த்தர் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.அது,
யோவேல் கூறியவாறு கர்த்தரிடம் விண்ணப்பம் செய்தால் அவர் தன்னுடைய ஆவியையும் அருளுவார் என்று வசனங்கள் கூறுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,வசனங்கள் 18-லிருந்து 30-வரை கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் அனைத்தும் நிபந்தனைகளின் அடிப்படையில் உள்ளன.நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.வரலாறு கூறுவது என்னவென்றால்,இஸ்ரேல் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டனர் என்பதே.மூன்றாவது அதிகாரம் இதை உறுதிப்படுத்துகிறது.இந்த அதிகாரத்தில் இஸ்ரேல் மக்களை சிதறடித்த நாடுகளை கர்த்தர் எவ்வாறு தண்டிக்கிறார் என்பதைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இயேசு மற்றும் அவர்களுடைய சீடர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் மிக கொடிய அடக்குமுறைகளுக்குள்(ரோமர்களின் கீழ்) இஸ்ரயேல் மக்கள் இருந்தனர்.அதாவது மக்கள் இன்னும் அடிமைத்தனத்துக்குள்தான் இருக்கின்றனர்.அதன் பின்னர்தான் இந்நிகழ்வு,அதாவது பேதுரு பேசும் நிகழ்வு நடைபெறுகிறது.இப்பொழுது யோவேல் புத்தகம் கூறுவதைப்பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
நூற்றுக்கணக்கான வருடங்கள் கழித்து இயேசு வருகிறார்.அப்பொழுதும் யூத மக்கள் அடிமைத்தனத்தில்தான் இருக்கின்றனர்.அவர் இறந்த பிறகு "பெந்தேகோஸ்து" நாள் வருகிறது.அப்பொழுது பேதுரு பேசுகிறார்.
பேதுரு என்ன பேசுகிறார்:
இந்த நாள் யூதர்களுக்கு உரிய ஒரு பண்டிகை நாளாகும்.இயேசுவின் சீடர்களை பூர்வகுடி யூதர்கள் வெறுத்தனர் என்பதை முதலாம் பகுதியில் பார்த்தோம்.இந்த சீடர்களும் அடிப்படையில் யூதர்களே என்பதையும் நாம் மறக்கக் கூடாது.எனவே இவர்களும் இப்பண்டிகையை கொண்டாட வேண்டும்.இந்நிலையில் இவர்கள் கூட்டம் போடுகின்றனர்.இவர்களுடைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பூர்வகுடி யூதர்கள் அல்ல என்பதையும் நாம் முன்னரே பார்த்தோம்.
இப்பண்டிகையை மிக நுட்பமாக, எப்படி யூதர்களுடைய முறைமைகளில் இருந்து மாற்றுகிறார்கள் என்பதை பாருங்கள்.இப்பண்டிகை எப்படி கொண்டாடப்பட வேண்டும் என்பதை லேவியராகமம் புத்தகம் நமக்கு கூறுகிறது.அன்றைய நாளில் ஒரு இறைவாக்கு நிறைவேறுவது போன்று நமக்கு பேதுரு கூறுகிறார்.அது என்ன இறைவாக்கு? அதை பேதுருவின் வார்த்தையிலே கவனிப்போம்.
ஆனால் இங்கு பேதுரு அதை "இவ்வுலகத்தின் இறுதி நாள்" என்று கருதிக்கொண்டு பேசுகிறார்.ஆண்டவரின் அந்நாள் வரும்முன் சில அடையாளங்களை வானத்தில் நமக்கு காண்பிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை நாம் புரிந்து கொண்டதுதான் தவறு,பேதுரு கூறுவது போன்று அது இவ்வுலகத்தின் இறுதி நாள் என்றும் நாம் கருத்துவோமானால்,அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் இயேசுவின் பெயரை சொல்லி கூப்பிட சொல்லவில்லை.மாறாக கர்த்தரின் பெயரை சொல்லி கூப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக கர்த்தர் தன்னுடைய ஆவியை அனைவர் மேலும் ஊற்றும் பொழுது என்ன நடக்கும் என்று பேதுரு கூறுகிறார் என்று பார்த்தால் அது யோவேல் இறைவாக்காளர் உரைத்தது போன்றே உள்ளது.ஆனால் பேதுருவும் மற்ற சீடர்களும் அவ்வாறு செயல்பட்டனரா என்றால்,இல்லை.ஆவி ஊற்றப்பட்டதாக பேதுரு கூறுகிறார்.ஆவி ஊற்றப்பட்டவுடன் தீர்க்க தரிசனம் உரைக்க வேண்டும்,சொப்பனங்கள் காண வேண்டும்.இவைகள் நடந்தது போன்று கூறப்படவில்லை.பதிலாக மற்ற மொழிகளில் பேசியதை ஆவியின் விளைவுதான் என்று பேதுரு கூறியிருக்கிறார்.என்ன பேசினார்கள் என்பதை அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்தை எழுதியவர் கூறவில்லை.
இறைவாக்காளர் யோவேல் ஒரு குறிப்பிட்ட செயலுக்காக கர்த்தரின் வார்த்தைகளை எழுதியுள்ளார்.ஆனால் பேதுரு அதை தனக்கேற்றாற்போல் பயன்படுத்துகிறார்.மேலும் பேதுரு சில கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.
இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய தகவல்கள் என்னவென்றால்,யூதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட செயலுக்காக கூறப்பட்ட இறைவாக்கை பேதுரு தவறாக புரிந்து கொண்டு பேசியிருக்கிறார்.
முடிவாக தெரிவது என்னவென்றால்,யோவேல் 2-ம் அதிகாரம் அவர் வாழ்ந்த காலத்தில் இஸ்ரயேல் மக்கள் வரப்போகும் ஒரு பேரழிவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது.அவ்வாறு செய்தால் கடவுள் பதிலுக்கு என்ன செய்வார் என்று தன்னுடைய இறைவாக்கு மூலம் எழுதியுள்ளார்.ஆனால்,பேதுரு அவ்வார்த்தைகளை தானும் தன்னுடன் இருந்த சீடர்களும் பேசிய வெவ்வேறு மொழிகளை குறிப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் கர்த்தர் ஒன்றைக்கூறுகிறார்.அதைக் கவனியுங்கள்.
12 இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் ; என்கிறார் ஆண்டவர்.
12. ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.அடுத்ததாக வரும் வசனங்கள் யோவேல்,இஸ்ரயேல் மக்களிடம் பேசுவது போன்று உள்ளது.ஆனால் நம்மால் உறுதியாக கூறமுடியவில்லை.அவ்வசனங்களை கர்த்தர் பேசுவது போன்று எண்ணக்கூடிய வகையிலும் உள்ளது.கூர்ந்து கவனித்தால் யோவேல்தான் தன் மக்களிடம் பேசுகிறார் என்று உணர முடியும்.
13 நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். ; அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.
13. நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.அதாவது,இஸ்ரேல் மக்களை நோக்கி யோவேல் கூறுகிறார்.தங்கள் வழிகளை விட்டு திரும்புமாறு கூறுகிறார்.கர்த்தரிடம் விண்ணப்பம் செய்யுமாறு கூறுகிறார்.கோவில் குருக்களை உன்ன நோன்பு இருக்க சொல்கிறார்.உருக்கத்துடன் விண்ணப்பம் செய்ய சொல்கிறார்.இவ்வாறெல்லாம் செய்தால் ஒருவேளை கர்த்தர் தான் செய்ய நினைத்த தீங்கை செய்யாமல் இருப்பார் என்று கூறுகிறார்.
யோவேல் கூறியவாறு விண்ணப்பம் செய்தால் கர்த்தர் பதிலளிக்கும் விதத்தினைப்பற்றி 18-ம் வசனத்திலிருந்து 30-ம் வசனம் வரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.ஆனால் மக்கள் அவ்வாறு செய்தனரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.மேலும், மக்கள் யோவேல் கூறியவாறு விண்ணப்பம் செய்தால் ஒரு அரிய செயல் ஒன்றையும் கர்த்தர் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.அது,
28 அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.29 அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.
28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.[மேற்கூறப்பட்டுள்ள இரண்டு வசனங்களில்,RC தமிழ் திருமறைக்கும் ப்ரோட்டஸ்டண்ட் தமிழ் திருமறைக்கும் இடையே மொழிபெயர்ப்பு வேறுபாட்டை காண முயலுங்கள்]
யோவேல் கூறியவாறு கர்த்தரிடம் விண்ணப்பம் செய்தால் அவர் தன்னுடைய ஆவியையும் அருளுவார் என்று வசனங்கள் கூறுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,வசனங்கள் 18-லிருந்து 30-வரை கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் அனைத்தும் நிபந்தனைகளின் அடிப்படையில் உள்ளன.நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.வரலாறு கூறுவது என்னவென்றால்,இஸ்ரேல் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டனர் என்பதே.மூன்றாவது அதிகாரம் இதை உறுதிப்படுத்துகிறது.இந்த அதிகாரத்தில் இஸ்ரேல் மக்களை சிதறடித்த நாடுகளை கர்த்தர் எவ்வாறு தண்டிக்கிறார் என்பதைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இயேசு மற்றும் அவர்களுடைய சீடர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் மிக கொடிய அடக்குமுறைகளுக்குள்(ரோமர்களின் கீழ்) இஸ்ரயேல் மக்கள் இருந்தனர்.அதாவது மக்கள் இன்னும் அடிமைத்தனத்துக்குள்தான் இருக்கின்றனர்.அதன் பின்னர்தான் இந்நிகழ்வு,அதாவது பேதுரு பேசும் நிகழ்வு நடைபெறுகிறது.இப்பொழுது யோவேல் புத்தகம் கூறுவதைப்பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
- யூத நாட்டை நோக்கி மாபெரும் அழிவு ஒன்று வருவதை யோவேல் என்ற இறைவாக்காளர் காண்கிறார்.
- அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் மக்கள் கர்த்தரிடம் உருக்கத்துடன் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
- அவ்வாறு செய்தால் கர்த்தர் ஒருவேளை தான் செய்ய நினைக்கும் தீங்கை செய்யாமல் விடுவார்.
- யோவேல் கூறியவாறு கர்த்தரிடம் விண்ணப்பம் செய்தால் நல்ல ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்.
- அந்த ஆசீர்வாதங்களில் சில;இறைவாக்கு உரைத்தல்,கர்த்தரின் ஆவியை பெறுதல்.
- கர்த்தர் இரண்டு செயல்களை முன் வைக்கிறார்.ஒன்று அவரை நோக்கி உருக்கத்துடன் விண்ணப்பம் செய்தல்.இரண்டு,அழிவை எதிர்கொள்ளுதல்.
- மேற்கூறிய இரண்டில் எது நடந்தது என்றால்,அழிவுதான்.இவை அனைத்தும் இஸ்ரேல் மக்களுக்கு கூறப்பட்டுள்ளது என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
நூற்றுக்கணக்கான வருடங்கள் கழித்து இயேசு வருகிறார்.அப்பொழுதும் யூத மக்கள் அடிமைத்தனத்தில்தான் இருக்கின்றனர்.அவர் இறந்த பிறகு "பெந்தேகோஸ்து" நாள் வருகிறது.அப்பொழுது பேதுரு பேசுகிறார்.
பேதுரு என்ன பேசுகிறார்:
இந்த நாள் யூதர்களுக்கு உரிய ஒரு பண்டிகை நாளாகும்.இயேசுவின் சீடர்களை பூர்வகுடி யூதர்கள் வெறுத்தனர் என்பதை முதலாம் பகுதியில் பார்த்தோம்.இந்த சீடர்களும் அடிப்படையில் யூதர்களே என்பதையும் நாம் மறக்கக் கூடாது.எனவே இவர்களும் இப்பண்டிகையை கொண்டாட வேண்டும்.இந்நிலையில் இவர்கள் கூட்டம் போடுகின்றனர்.இவர்களுடைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பூர்வகுடி யூதர்கள் அல்ல என்பதையும் நாம் முன்னரே பார்த்தோம்.
இப்பண்டிகையை மிக நுட்பமாக, எப்படி யூதர்களுடைய முறைமைகளில் இருந்து மாற்றுகிறார்கள் என்பதை பாருங்கள்.இப்பண்டிகை எப்படி கொண்டாடப்பட வேண்டும் என்பதை லேவியராகமம் புத்தகம் நமக்கு கூறுகிறது.அன்றைய நாளில் ஒரு இறைவாக்கு நிறைவேறுவது போன்று நமக்கு பேதுரு கூறுகிறார்.அது என்ன இறைவாக்கு? அதை பேதுருவின் வார்த்தையிலே கவனிப்போம்.
16 நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே.17 அவர் மூலம் கடவுள் கூறியது; ‘இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர்.[தி.தூ.ப 2:16,17]
16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;[அப் 2:16,17]கடைசி நாள் அல்லது இறுதி நாள் என்பது என்ன? யோவேல் அவ்வாறு கூறியிருக்கிறாரா?இதன் பதில் இல்லை என்பதுதான்."இறுதிநாள்" என்ற ஒன்றைப்பற்றி யோவேல் கூறவே இல்லை."ஆண்டவரின் நாள்" அல்லது "கர்த்தரின் நாள்" என்றே கூறியிருக்கிறார்.அது என்ன நாள் என்றும் யோவேல் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.யூத நாட்டின் மீது ஒரு பேரழிவை கர்த்தர் கட்டளையிடுகிறார்,இப்பூமிக்கு அல்ல.அப்பேரழிவை ஒரு பெரும் படை கொண்டு நடத்த இருப்பதாக யோவேல் காண்கிறார்.அப்பேரழிவு நடக்கும் நாளைத்தான் "கர்த்தரின் நாள்" அல்லது "ஆண்டவரின் நாள்" என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இங்கு பேதுரு அதை "இவ்வுலகத்தின் இறுதி நாள்" என்று கருதிக்கொண்டு பேசுகிறார்.ஆண்டவரின் அந்நாள் வரும்முன் சில அடையாளங்களை வானத்தில் நமக்கு காண்பிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை நாம் புரிந்து கொண்டதுதான் தவறு,பேதுரு கூறுவது போன்று அது இவ்வுலகத்தின் இறுதி நாள் என்றும் நாம் கருத்துவோமானால்,அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் இயேசுவின் பெயரை சொல்லி கூப்பிட சொல்லவில்லை.மாறாக கர்த்தரின் பெயரை சொல்லி கூப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது.
21 அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர்.’
21. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.இங்கு கர்த்தருடைய பெயர் என்பது இயேசு அல்ல.அது மிகவும் புனிதமான பெயர் ஆகும்.
அடுத்ததாக கர்த்தர் தன்னுடைய ஆவியை அனைவர் மேலும் ஊற்றும் பொழுது என்ன நடக்கும் என்று பேதுரு கூறுகிறார் என்று பார்த்தால் அது யோவேல் இறைவாக்காளர் உரைத்தது போன்றே உள்ளது.ஆனால் பேதுருவும் மற்ற சீடர்களும் அவ்வாறு செயல்பட்டனரா என்றால்,இல்லை.ஆவி ஊற்றப்பட்டதாக பேதுரு கூறுகிறார்.ஆவி ஊற்றப்பட்டவுடன் தீர்க்க தரிசனம் உரைக்க வேண்டும்,சொப்பனங்கள் காண வேண்டும்.இவைகள் நடந்தது போன்று கூறப்படவில்லை.பதிலாக மற்ற மொழிகளில் பேசியதை ஆவியின் விளைவுதான் என்று பேதுரு கூறியிருக்கிறார்.என்ன பேசினார்கள் என்பதை அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்தை எழுதியவர் கூறவில்லை.
இறைவாக்காளர் யோவேல் ஒரு குறிப்பிட்ட செயலுக்காக கர்த்தரின் வார்த்தைகளை எழுதியுள்ளார்.ஆனால் பேதுரு அதை தனக்கேற்றாற்போல் பயன்படுத்துகிறார்.மேலும் பேதுரு சில கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.
22 இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே.
22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.மேற்கூறப்பட்ட வசனம் மூலம் பேதுருவும் அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதிவரும் ஒரு கருத்தை மறைமுகமாக நமக்கு தருகின்றனர்.இயேசு யார் என்பதை கடவுள் யூதர்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதே அது.ஆனால் நமக்கு அவர் யார் என்று கூறவில்லை.அதாவது மக்கள் முன் பேசுகிற பேதுரு வெளிப்படையாக "இன்னார்தான் இயேசு" என்று கூறவில்லை. "இயேசுதான் மேசியா" என்று பேதுரு கூற முற்படுகிறார் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது.அப்பொழுது இதை அவர் கூறினால் கலவரம் ஏற்படும் என்பதை உணர்ந்து அவர் வெளிப்படையாக கூறவில்லை.மற்றொரு தவறான புரிதலை கீழ்வரும் வசனம் மூலம் காணுங்கள்,
24 ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.
24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.மரணம் என்பது கடவுளால் மனிதர்களுக்கு உறுதிசெய்யப்பட்டது.இதை ஒரு வேதனை என்கிறார் பேதுரு.மனிதன் இறந்தபின் அவனால் எதுவும் உணர இயலாது.பின் எப்படி வேதனை அவனுக்கு தெரியும்? மரணித்த பின் வேதனை என்பது கிரேக்கர்களின் கொள்கை.இறுதி நாள் என்பதும் அவர்களின் கொள்கையே.வேதனையான மரணம் என்பது வேறு மரணமே வேதனை என்பது வேறு.
இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய தகவல்கள் என்னவென்றால்,யூதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட செயலுக்காக கூறப்பட்ட இறைவாக்கை பேதுரு தவறாக புரிந்து கொண்டு பேசியிருக்கிறார்.
முடிவாக தெரிவது என்னவென்றால்,யோவேல் 2-ம் அதிகாரம் அவர் வாழ்ந்த காலத்தில் இஸ்ரயேல் மக்கள் வரப்போகும் ஒரு பேரழிவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது.அவ்வாறு செய்தால் கடவுள் பதிலுக்கு என்ன செய்வார் என்று தன்னுடைய இறைவாக்கு மூலம் எழுதியுள்ளார்.ஆனால்,பேதுரு அவ்வார்த்தைகளை தானும் தன்னுடன் இருந்த சீடர்களும் பேசிய வெவ்வேறு மொழிகளை குறிப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment