Friday, December 27, 2019

ஹீப்ரு மொழியில் ஆண் குழந்தைகளின் பெயர்கள்

ஹீப்ரு மொழியில் ஆண் குழந்தைகளின் பெயர்கள் 


ஹீப்ரு மொழியும் தமிழ் மொழியும் ஏறத்தாழ ஒன்றுபோல் இருக்கும்.திருமறை ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.தற்பொழுது கிரேக்க மற்றும் லத்தீன் பெயர்களும் கலந்து கிறித்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடுகின்றனர்.தூய்மையான,ஹீப்ரு பெயர்களும் அவற்றுக்குரிய பொருளையும் இங்கே தந்துள்ளேன்.இங்கே 30 பெயர்கள் மட்டுமே கொடுக்க பட்டுள்ளன.மீதமுள்ள பெயர்களை கொள்ள இங்கே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எல்லாம் வல்ல இறைவன் விரும்பினால் பெண்குழந்தைகள் பெயர்களையும் வெளியிடுவேன்.

மொத்த பெயர்களையும் பதிவிறக்கம் செய்ய:


.
எண்
ஹீப்ரு பெயர்
ஆங்கிலத்தில் பொருள்
திருமறையில் பார்க்க
தமிழில் உச்சரிப்பு
தமிழில் பொருள்
பெயரின் விளக்கம்
1
Aharon[Aaron]
Mountain (Or) Shining

ஆரோன்
மலை அல்லது ஒளிர்தல்
பொதுவாக இப்பெயர் இதமான அமைதிஅல்லதுதொடர்ந்து நிலவும் அமைதிஆகியவற்றுடன் தொடர்பு படுத்தப்படுகிறது
2
Abba
Father

அப்பா
தந்தை
யூதர்கள் பாபிலொனில் வாழ்ந்த பொழுது இப்பெயர் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது.
3
Abraham[Avraham]
Father Of Many
Nations
ஆதி :17:5
ஆபிரகாம்,ஆப்ரகாம்
பல நாடுகளுக்கு தகப்பன்
யூதர்களுடைய மூதாதயர்கலுள் முதலாமானவன்.உலகத்திற்க்குஒரு கடவுள்கொள்கையை அறிமுகப்படுத்தியவன்.
4
Adam
Ground
ஆதி :2:7
ஆதாம்,ஆதம்
மண்
படைக்கப்பட்ட முதல் மனிதன்
5
Akiva[Akiba]
Held By The Heel

அகிவா,அகிபா
குதிகாலை பிடித்தவன்
அகிவா ஒரு புகழ் பெற்ற ரபி ஆவார்1
6
Alexander


அலெக்சாண்டர்

இஸ்ரேல் நாட்டை  அலெக்சாண்டர் எவ்வித பேரிழப்பும் ஏற்படாதவாறு கைப்பற்றியதால்(கி.மு.333-ல்) இப்பெயரை யூதர்கள் இடுகின்றனர்2
7
Alon
Oak Tree
1நாளா 4:37
ஆலன்,ஏலோன்
ஒக் மரம்
யாக்கொபின் பேரனாக இப்பெயர் திருமறையில் வருகிறது
8
Alter
Old

அல்டெர்
முதுமை
பொதுவாக ஒரு குழந்தை நோயுடன் பிறந்தால்,அக்குழந்தை முதிர் வயது வரை வாழ வேண்டும் என்பதால் இப்பெயர் இடப்படுகிறது.
9
Amos
Loaded" Or "Crowded

ஆமோசு
பாரம் ஏற்றப்பட்ட அல்லது கூட்டம் நிறைந்த
12 சிறு தீர்க்கதரிசிகளுள் ஒருவர்.அவருடையநிறைந்த அறிவின்காரனமாக இப்பெயர் இடப்பட்டு உள்ளது.
10
Amram
Mighty Nation
யாத் 6:18
அம்ராம்,அம்ரேம்
வலிமை மிக்க நாடு
இந்த  அம்ராம் மோசெயின் தகப்பன் ஆவான்.யூதர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது அவர்களுக்கு தலைவனாக இருந்தவன்.
11
Ariel
Lion Of God
ஏசா 29:1
ஏரியெல்
கடவுளின் சிங்கம்
ஏரியெல்என்பதுஎருசலெமின்மற்றொரு பெயர் ஆகும்.குறிப்பாக தேவாலயத்தின் பலிபீடம் இப்பெயரால் குறிப்பிடபடுகிறது[எசே 43:15]..அமைதியைய் தன் வேலையாகக் கொண்ட ஒரு தூதனுடைய பெயரும்ஏரியெல்ஆகும்[ஏசா 33:7]
12
Aryeh
Lion
ஆதி 49:9
ஏரியெ,ஆரியே,ஏரி,ஆரி
சிங்கம்
யூதாவின் பட்ட பெயரும் இதுதான்.
13
Asher,Osher
Blessed" Or "Fortunate
ஆதி 30:13
ஆசெர்,ஏசேர்
ஆசீர்வதிக்கப்பட்ட
யாக்கோபின் ஒரு மகன்.12 கோத்திரத்தில் ஒன்று.
14
Avi
My Father
ஆதி 17:5
அவி,அபி
என் தந்தை
யூத மக்களின் ஆதி தகப்பன் ஆவிரகாம்[ஆபிரகாம்] என்ற பெயரின் சுருக்கம்.
15
Avigdor
The Father Of The One Who Established Boundaries
1நாளா 4:4
அவிக்தார்,அபிக்தார்
எல்லைகளை உருவாக்கிய ஒருவனுடைய தந்தை
மோசேயினுடைய பெயர்களில் ஒன்று
16
Avner(Abner)
My Father Is Light
1சாமு14:50
அவ்னெர்,அப்னேர்
என் தந்தை எனக்கு ஒளி
மன்னன் சவுலின் மாமா மற்றும் படைத்தளபதி
17
Azriel
Helper Of God
எரே 36:26,1நாளா 27:19
அஸ்ரியேல்
கடவுளுக்கு வேலைக்காரன்
நப்தலி கோத்திர தலைவனுடைய தந்தை
18
Barak
Lightning.
நியா 4
பராக்
மின்னல்
பெண் தீர்க்கதரிசியாகிய தெபோராலுடைய கணவன் என்று உள்ளது
19
Baruch
Blessed
எரே 32
பாருக்
ஆசீர்வதிக்கப்பட்டவன்
எரேமியா தீர்க்கதரிசியின் உதவியாளன் என்று  உள்ளது
20
Betzalel
Shadow Of God
யாத் 31:2
பெத்சாலெயேல்
கடவுளின் நிழல்
இஸ்ரயேல் மக்கள் வனாந்திரத்தில் இருந்தபோது ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டியவன்
21
Benyamin
Son Of My Right Hand
ஆதி 35:18
பென்யமின்,பெஞ்சமின்
என் வலது கரத்தின் மகன்
யாக்கோபின் கடைசி மகன்.இஸ்ரயெலின் 12 கோத்திரத்தில் ஒன்று
22
Ben-Tzion(Benzion)
Son Of Zion (Son Of Excellence)

பென்சியோன்
சியோனின் மகன்

23
Berel(Beryl)
A Derivative Of The Word "Bear."

பெரெல்
கரடி
டொவ்(Dov) என்ற ஹீப்ரு பெயரின் பட்டப் பெயர். டொவ்(Dov)-கரடி
24
Boaz
Swiftness
ரூத் 2:1
போவாஸ்
வேகம்
தாவீதினுடைய பூட்டன்
25
Caleb( Calev)
Like A Heart
எண் 13:6
காலெவ்,காலெப்
இருதயத்தினைப் போன்று
மோசேயின் சகோதரியாகிய மிரியமின் கணவன்
26
Carmi(Karmi)
My Vineyard
ஆதி 46:9
கர்மி
என் திராட்சைத் தோட்டம்
யாக்கோப்பின் பேரன் என்பதாக திருமறையில் உள்ளது
27
Chagai(Hagai)
My Festival
ஆதி 46:16
ஆகாய்
என் பண்டிகை
12 சிறிய தீர்க்கதரிசிகளில் ஒருவர்.மேலும் யாக்கோபின் பேரன்களில் ஒருவனாகவும் இப்பெயர் உள்ளது
28
Chaim
Life

ஆயிம்
உயிர்
மேசியா இப்பெயெரால் அழைக்கப்படுவார் என்று ஒரு வழக்கம் உள்ளது
29
Chanan(Hanan)
He Was Gracious
1நாளா 8:23
ஆனான்
அவன் கனிவுள்ளவனாக இருந்தான்
பென்யமின் கோத்திரத் தலைவனாக இப்பெயெர் திருமறையில் வருகிறது
30
Chananya
God Bestows Charm
எரே 28:1
அனன்யா
கடவுள் மகிழ்ச்சியைத் தருகிறார்
எரேமியா புத்தகதில் ஒரு தீர்க்கதரிசியின் பெயராக இப்பெயர் வருகிறது


No comments:

Post a Comment

My Posts