Friday, December 27, 2019

இயேசுவே மெய்யான தெய்வம் - ஒரு அலசல்

இயேசுவே மெய்யான தெய்வம் - ஒரு அலசல் 

இக்கூற்றை பல இடங்களில் நாம் காணலாம்.தங்கள் வண்டிகளுக்கு பின்னால் உள்ள கண்ணாடியில், வீட்டு சுவர்களில் என பல இடங்களில் இவ்வார்த்தையானது எழுதப்பட்டிருக்கும்.இன்னும் பல இடங்களில் ஒரு படி மேலே சென்று பழைய ஏற்பாட்டு வசனங்களில் கர்த்தர் என்ற வார்த்தையை நீக்கி விட்டு அல்லது அதற்கு பக்கத்திலேயே அடைப்புக்குறிகளுக்குள் "இயேசு" என்று எழுதியிருப்பார்கள்.

இயேசு உண்மையாகவே தெய்வம் என்றால் அவர்களுடைய சீடர்களான பவுலும் பர்னபாவும் ஏன் அவ்வாறு கூறவில்லை?"இயேசுவே மெய்யான கடவுள்" என்று கூறுவதற்கு அவர்கள் இருவருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு ஒன்று கிடைத்தது.அதில் அவர்கள் கூறியது என்ன?ஏன் இயேசுவை கடவுள் என்று அவர்கள் கூறவில்லை?இது எங்கே நடந்தது எப்பொழுது நடந்தது?திருத்தூதர் பணிகள்(அப்போஸ்தலர்) புத்தகத்தை படித்தால் விடை கிடைக்கும்.

பவுலும், பர்னபாவும் லீஸ்திரா என்ற பட்டணத்திற்கு செல்கின்றனர்.அங்கு கூட்டத்தினர் மத்தியில் பேசுகின்றனர்.அப்பொழுது கால் ஊனமுற்ற ஒருவனை குணமாக்குகின்றனர்.இதைக்கண்ட அங்குள்ள மக்கள் கூறியதை காண்போம்.
11 பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று குரலெழுப்பிக் கூறினர்.
12 அவர்கள் பர்னபாவைச் “சேயுசு” என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை “எர்மசு” என்றும் அழைத்தார்கள்.[திரு.தூ.ப 14:11,12]
11. பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,
12. பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். [அப் 14:11,12]
தொடர்ந்து நாம் இதைப்பற்றி பார்ப்பதற்கு முன்,RC தமிழ் திருமறையின் மொழிபெயர்ப்புவுக்கும் புரொட்டஸ்டண்ட் தமிழ் திருமறைக்கும் இடையே மொழிபெயர்ப்பு வேறுபாடுகளை பாருங்கள்.கூட்டத்தினர் கூறிய "சேயுசு,மெர்குரி,யூப்பித்தர்,ஏர்மசு" போன்றோர் யார் என்று தெரிந்து கொள்வது நல்லது.முதலில் RC தமிழ் மொழிபெயர்ப்பு கூறிய "சேயுசு,ஏர்மசு" போன்றோர் யார் என்று காணலாம்.

யார் இந்த சேயுசு(Zeus)?

சேயுசு என்ற வார்த்தை "Zeus" என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆகும்.இந்த சேயுசு ஒரு கிரேக்க கடவுள் ஆவான்.கிரேக்கர்கள் இவனை கடவுள் என்று வழிபட்டனர்."Brittaanica" தகவல் களஞ்சியம் இவனைப்பற்றி என்ன கூறுகிறது என்று காணலாம்.
Zeus, in ancient Greek religion, chief deity of the pantheon, a sky and weather god who was identical with the Roman god Jupiter. His name clearly comes from that of the sky god Dyaus of the ancient Hindu Rigveda. Zeus was regarded as the sender of thunder and lightning, rain, and winds, and his traditional weapon was the thunderbolt. He was called the father (i.e., the ruler and protector) of both gods and men.
 இதனுடைய  தமிழாக்கத்தை கீழே தருகிறேன்.
பண்டைய கிரேக்க மதங்களில்(கலாச்சாரங்களில்) "சேயுசு(Zeus)" என்பவன் பிரதான கடவுள் ஆவான்.வானத்துக்கும் காலநிலைக்கும் கடவுள் இவனே.ரோமர்களின் கடவுளான "யூப்பித்தர்(Jupiter)"-க்கு இணையானவன்.இந்துக்களின் பண்டைய "ரிக்வேதத்தில்",வானத்திற்கு கடவுளான "தியாஸ்(Dyaus)" என்ற என்ற பெயரிலிருந்து சேயுசு என்ற பெயர் வந்திருக்க வேண்டும்.இடி,மின்னல்,மழை,காற்று போன்றவற்றை அனுப்புபவன் இந்த சேயுசுவே.மின்னலே இவன் ஆயுதம்.கடவுள்கள் மற்றும் மனிதர்களின் தந்தை இவனே என்று அழைக்கப்படுகிறான்.[Brittaanica]
இவனை கிரேக்கர்கள் வழிபட்டு வந்தனர்.பவுலும் பர்னபாவும் ஊனமுற்ற ஒருவனை எழுப்பியதால் அவர்களில் பர்னபாவை "சேயுசு(Zeus) என்று அழைத்தனர் அங்கு வாழும் யூதரல்லாத மக்கள்.

யார் இந்த எர்மசு?

Hermes என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம்தான் "எர்மசு".இவனும் ஒரு கடவுள்தான்.ஆனால் சிறிய கடவுள்.இவனையும் கிரேக்கர்கள் வழிபட்டு வந்தனர்.இவனைப்பற்றி பிரிட்டானிக்கா(Brittaanica) தகவல் களஞ்சியம் என்ன கூறுகிறது என்று காணலாம்.
Hermes, Greek god, son of Zeus and the Pleiad Maia; often identified with the Roman Mercury and with Casmilus or Cadmilus, one of the Cabeiri. His name is probably derived from herma (see herm), the Greek word for a heap of stones, such as was used in the country to indicate boundaries or as a landmark. The earliest centre of his cult was probably Arcadia, where Mt. Cyllene was reputed to be his birthplace. There he was especially worshipped as the god of fertility, and his images were ithyphallic.
இதன் தமிழாக்கத்தை காணலாம். 
Pleiad என்று கிரேக்கத்தில் அழைக்கப்படும் ஏழு அழகான தேவதைகளில் "Maia(மையா)" என்ற தேவதைக்கும் கிரேக்க பிரதான கடவுளான "Zeus(சேயுசுக்கும்)" பிறந்த மகன்தான் இந்த "எர்மசு(Hermes)".பெரும்பாலான சமயங்களில் இவன் ரோமா கடவுளான "மெர்குரி(Mercury)"-யுடன் தொடர்புபடுத்தப்படுகிறான்.பழங்கால கிரேக்கத்தில் எல்லைகளை அல்லது குறிப்படையாளங்களாக பயன்படுவதற்கென குவிக்கப்பட்டிருக்கும் கற்குவியல்களை "Herm" என்று அழைத்தார்கள்.இந்த வார்த்தையிலிருந்தே இவன் பெயர் வந்தது.ஆர்காடிய(Arcadia) என்ற இடத்திலுள்ள  "சில்லீன்(Cyllene)" என்ற மலையில்  இவனை வழிபட்டு வந்தனர்.இம்மலையே இவனுடைய பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது.இனவிருத்திக்கு உரிய கடவுள் இவன்தான் என்று இவனை பண்டைய கிரேக்கர்கள் வழிபட்டு வந்தனர்.இவனுடைய உருவம் "ithyphallic" ஆகும்.[அதாவது ஆணுறுப்பு விரைத்த நிலையில் இருக்கும் சிலைகள்].
பர்னபாவையும்,பவுலையும்  இந்த இரு கடவுள்கள்தான் என்று லிஸ்தீரா நகர மக்கள் கூறுகின்றனர்.தொடர்ந்து செல்வதற்கு முன் புரொட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு எதற்காக "யூப்பித்தர்(Jupiter)" என்றும் "மெர்குரி(Mercuri)" என்றும் மொழிபெயர்த்திருக்கிறது என்று காணலாம்.

யார் இந்த யூப்பித்தர்(Jupiter)?

யூப்பித்தர் என்று பர்னபாவை பார்த்து மக்கள் கூறுகின்றனர்.இந்த யூப்பித்தர் யார் என்று பிரிட்டானிக்கா(Brittaanica) தகவல் களஞ்சியம் என்ன கூறுகிறது என்று காணலாம்.
Jupiter, also called Jove, Latin Iuppiter, Iovis, or Diespiter, the chief ancient Roman and Italian god. Like Zeus, the Greek god with whom he is etymologically identical (root diu, “bright”), Jupiter was a sky god. One of his most ancient epithets is Lucetius (“Light-Bringer”); and later literature has preserved the same idea in such phrases as sub Iove, “under the open sky.” As Jupiter Elicius he was propitiated with a peculiar ritual to send rain in time of drought; as Jupiter Fulgur he had an altar in the Campus Martius, and all places struck by lightning were made his property and were guarded from the profane by a circular wall.
இதனுடைய தமிழாக்கத்தை காணலாம். 
பண்டைய ரோமர்கள் மற்றும் இத்தாலியர்களின் பிரதான கடவுள் யூப்பித்தர்(Jupiter) ஆவான்.கிரேக்க கடவுளான "சேயுசு(Zeus)" போன்றே இவனும் வானத்திற்கு கடவுள் ஆவான்.வெளிச்சத்தை கொண்டு வருபவன் இவன்தான் என்று(Luciber) பண்டைய காலங்களில் நம்பப்பட்டது.
 யார் இந்த மெர்குரி(Mercuri)?


பவுலை பார்த்து இவ்வார்த்தை உபயோகிக்கப்படுகிறது.இந்த மெர்குரி யார் என்று பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
Mercury, Latin Mercurius, in Roman religion, god of shopkeepers and merchants, travelers and transporters of goods, and thieves and tricksters. He is commonly identified with the Greek Hermes, the fleet-footed messenger of the gods.
இதனுடைய தமிழாக்கத்தை கீழே காண்க. 
லத்தீன் மொழியில்,இந்த மெர்குரி(mercury)  "மெர்குரியஸ்(Mercurius)" என்று அழைக்கப்படுகிறது.ரோமர்களின் கலாச்சாரங்களில் இந்த மெர்குரி, கடைகள் வைத்திருப்போர், வியாபாரிகள், பயணம் செய்வோர்,  பொருட்களை கொண்டு செல்வோர்,மந்திரம் செய்வோர் மற்றும் திருடர்கள் இவர்களுக்கு கடவுள் ஆவான்.பண்டைய கிரேக்க கடவுளர்களுக்கு தூதுவனாக "எர்மசு(Hermes)"-டன் இவன் தொடர்புபடுத்தப்படுகிறான்.
இப்பொழுது கேள்வி 

RC தமிழ் திருமறை  கிரேக்க கடவுள்களை குறிப்பிடுகிறது.புரொட்டஸ்டண்ட் திருமறை ரோம கடவுள்களை குறிப்பிடுகிறது.RC தமிழ் திருமறை லத்தீன் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.அவர்கள் கிரேக்கர்களை குறை கூறுகிறார்கள்.அதாவது தங்களுடைய பழைய வழிபாட்டு முறைகளை மறைப்பதற்காக கிரேக்க கடவுள்களை சுட்டிக்காட்டுகின்றனர்.இதையேதான் புரொட்டஸ்டண்டுகள் செய்கின்றனர்.தங்களுடைய பண்டைய அந்நிய கடவுள் வழிபாட்டு முறைகளை மறைப்பதற்காக ரோம கடவுள்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.இருவரும் தங்களை "அந்நிய கடவுள்" வழிபாட்டு முறையில் இருந்து காப்பாற்றி கொள்வதற்காக ஒருவர் மீது மற்றவர் பாலி போடும் விதமாக மொழிபெயர்த்துள்ளனர் என்றே தோன்றுகிறது.அந்தோ பரிதாபம்,இருவரும் ஒரே வழிபாட்டு முறைகளையே கொண்டிருந்தனர் என்பது பிரிட்டானியா தகவல் களஞ்சியம் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது.

இயேசு மெய்யான தெய்வம் என்றால்...

இப்பொழுது இயேசு மெய்யான தெய்வம் என்ற கருத்துக்கு வருவோம்.பவுலையும் பர்னபாவையும் லீஸ்திராவில் உள்ள மக்கள் கடவுள்கள் என்று போற்றுகின்றனர்.இதைகேள்விப்பட்ட இருவரும் என்ன செய்கின்றனர்?
14 இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது;
15 “மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
14. அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்
15. மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். 


பவுலும், பர்னபாவும் தங்கள் சட்டைகளை கிழித்துக்கொண்டு ஓடுகின்றனர்.அவர்கள் இருவரும் அவ்வாறு செய்து கொண்டு என்ன கூறுகிறார்கள் என்பதே இங்கு கவனிக்கப்பட  வேண்டும்."பயனற்ற பொருட்களை விட்டு உண்மையான கடவுளிடம் வாருங்கள்" என்று இருவரும் கூறுகின்றனர்.யார் இந்த உண்மையான கடவுள்? "இயேசுவே மெய்யான தெய்வம்" என்று கூறுபவர்கள் நன்றாக கூர்ந்து கவனியுங்கள்.அவர்கள் இருவரும் அவ்வாறு கூறவில்லை."இயேசுவை கடவுள்" என்று கூறவில்லை.இயேசு கடவுள் என்றிருந்தால் அவர்கள் இருவரும் அவ்வாறுதானே கூறியிருக்க வேண்டும்.என்ன கூறுகிறார்கள் என்று கவனியுங்கள்.
16 கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டியிருந்தார்;
17 என்றாலும் அவர் தம்மைப் பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.”
16. சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்க விட்டிருந்தும்,
17. அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை என்றார்கள். 
"மழை மற்றும் பருவ காலங்களை கொடுத்த இயேசுவிடம் நீங்கள் திரும்ப வேண்டும்" என்று அவர்கள் இருவரும் கூறியிருக்கலாமல்லவா? ஏன் அவ்வாறு கூறவில்லை?இயேசுதான் கடவுள் என்று அவர்கள் இருவரும் அறியவில்லையா? அப்படியென்றால் ஏன் பவுல் எழுதிய கடிதங்கள்  திருமறையில் இணைக்கப்பட்டுள்ளன?இன்று பவுலை போற்றிக் கொண்டாடும் கிறித்தவர்கள் தங்களையே கேட்க வேண்டிய கேள்வி,இயேசுவே மெய்யான தெய்வம்" என்று அறிவிப்பதற்கு தங்களுக்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பை பவுல் ஏன் நழுவ விட்டார்?

முடிவு 

இயேசு மெய்யான தெய்வம் அல்ல என்று அவர்கள் இருவருக்கும் தெரியும்.இயேசு வணங்கிய பிதாவே மெய்யான கடவுள் என்று அறிந்திருந்தனர்.இயேசு சாதாரண ஒரு மனிதன்தான் என்று அவர்கள் இருவரும் அறிந்திருந்தனர்.ஆனால் இயேசுவை "மேசியா" என்று அறிவித்தனர்.அவர் மூலம் பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று அறிவித்தனர்.அவரை கடவுள் என்று அவர்கள் அறிவிக்க வில்லை.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1YcWxg7mulCVQq6m414G_idkCZsW4DW2o/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts