Friday, December 20, 2019

அப்போஸ்தலர் 2:18-தவறான மொழிபெயர்ப்பு

அப்போஸ்தலர்(திருத்தூதர் பணிகள்) 2:18-தவறான மொழிபெயர்ப்பு 

அப்போஸ்தலர் புத்தகத்தில் வருகின்ற ஒரு குறிப்பிட்ட வசனம் இன்று கிறித்தவ சபைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஒரு வசனம் ஆகும்.இவ்வசனத்தின் மூலம் இறைச்செய்தியாளர்கள் மக்களை தவறான வழியில் இட்டு செல்கிறார்கள். தங்களுடைய சொந்த பலனுக்காகவும் இவ்வசனம் பயன்படுகிறது.ஆனால் இவ்வசனம் எங்கிருக்கிறது என்று கேட்டால் அவர்கள் அனைவருக்கும் தெரியுமா  என்பது சந்தேகமே.தங்களுக்கு மிகப்பொருத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு இவ்வசனத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வசனம் என்ன என்பதை  முதலில் காண்போம்.
18 அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
தொடர்ந்து செல்வதற்கு முன் மேலே தரப்பட்ட இரண்டு மொழிபெயர்ப்புகளையும்  கூர்ந்து படியுங்கள்.முதல் வசனம் RC தமிழ் மொழிபெயர்ப்பு.இரண்டாவது வசனம் புரொட்டஸ்டண்ட் தமிழ் மொழிபெயர்ப்பு.ஆனால் இரண்டும் புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டப்பட்ட பழைய ஏற்பாட்டு வசனங்கள்.யோவேல் 2:29-ல் கூறப்பட்ட வசனமானது புதிய ஏற்பாட்டில் மேற்கோளாக தரப்பட்டுள்ளது.RC தமிழ்மொழிபெயர்ப்பானது, "உங்கள் பணியாளர்" என்று மொழிபெயர்க்கிறது.புரொட்டஸ்டன்ட்,"என்னுடைய ஊழியக்காரர்" என்று மொழிபெயர்க்கிறது."ஊழியக்காரர்" என்ற வார்த்தையும் "பணியாளர்" என்ற வார்த்தையும் ஏறத்தாழ ஒரே பொருளைத்தான் தரும் என்பது அனைவரும் அறிந்ததே.

குழப்பம் தில் வருகிறது என்றால்,"என்னுடைய பணியாளரா அல்லது உங்களுடைய பணியாளரா" என்பதில்தான்.இரண்டு மொழிபெயர்ப்புகளில் எது சரி? "என்னுடைய ஊழியக்காரர்" அல்லது "என்னுடைய பணியாளர்கள்" என்று இருந்தால் இன்றைய தேவ செய்தியாளர்கள் எனப்படுபவர்களுக்கு சரியாக இருக்கும் ஆனால் உண்மை எது என்று காணப்போகிறோம்.ஏன் இவர்களுக்கு "என்னுடைய ஊழியக்காரர்கள்" என்று இருந்தால் சரியாக இருக்கும் என்றால், தங்களை "தேவனுடைய  ஊழியக்காரர்கள்" என்று எண்ணிக்கொண்டு அல்லது கூறிக்கொண்டு இவர்கள் ஊழியம் செய்து வருகின்றனர்.இந்த குறிப்பிட்ட வசனம் அவர்களுடைய கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்பதால் அவ்வாறு இருக்க விரும்புகின்றனர்.

எது சரியான மொழிபெயர்ப்பு என்று பார்ப்பதற்கு முன்னால்,ஒரு சிறிய தகவல் நமக்கு தெரிய வேண்டும்.ஹீப்ரு மொழியில் "உங்கள்" அல்லது "உனது" அல்லது "எங்கள்" அல்லது "எனது" என்ற வார்த்தைகளை குறிக்க என்ன வார்த்தை பயன்படுகிறது என்று நமக்கு தெரிய வேண்டும்."ஏலோஹி(Elohi)" அல்லது "ஏலி(Eli)" என்ற வார்த்தை உங்களுக்கு அறிமுகமானதுதான்.இதனை ஹீப்ரு மொழியில் אֱלֹהֵי(வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்) இவ்வாறுதான் எழுதுவார்கள்.நாம் இதன் ஆங்கில வடிவத்திலிருந்தே புரிந்து கொள்வோம்,அது சுலபமாக இருக்கும்.

ஹீப்ரு மொழியில்,ஒரு வார்த்தை "ஐ(i)" என்ற ஒலியுடன் முடிவுற்றால்,அதன் பொருள் "என் அல்லது என்னுடைய(My)" என்று பொருள்படும்."Eloah" என்றால் "கடவுள்" என்று பொருள்."Eloah-i (ஏலோஹி)" என்றால் "என்னுடைய கடவுளே" அல்லது என் கடவுளே" என்று பொருள்.இது போன்றுதான் "Eli(ஏலி)" ஆகும்."El" என்றாலும் "கடவுள்" என்றுதான் பொருள்.எனவே "Eli(ஏலி)" என்ற வார்த்தையின் பொருள் "என் கடவுளே" என்பது ஆகும்.இயேசு இறக்கும் தருவாயில் கூறியது உங்களுக்கு தெரியும்.

இது போன்று "அவனுடைய", "உங்களுடைய" போன்ற சொற்களுக்கும் உள்ளன."உங்களுடைய" என்ற பன்மையைக் குறிக்கும்   வார்த்தைக்கு,ஹீப்ரு மொழியில் "km" என்ற ஒலிக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.எனவே நம்மால் இப்பொழுது யோவேல் 2:29-ன் சரியான மொழிபெயர்ப்பை கண்டுபிடிக்க முடியும்."உன் தேவன்" அல்லது "உங்களுடைய தேவன்" என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நமக்கு தெரியும்."உன்" என்றால் "ஒருவரை" குறிக்கும்."உங்களுடைய" என்றால் பன்மையை குறிக்கும்.கடவுள் மனிதர்களை பார்த்து "உங்களுடைய" என்று கூறினால், நமக்கு அவர் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்து நம்மை பன்மையில் அழைக்க வில்லை.பதிலாக,மனிதர்கள் என்ற கூட்டத்தை அவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்ளலாம்.ஆனால்,நாம் கடவுளை ஒருமையில் அழைக்க முடியாது,பன்மையில்தான் அழைக்க வேண்டும்.நம்முடைய தந்தையையோ அல்லது தாயையோ பன்மையில்தான் அழைக்கிறோம்.அதற்க்கு பொருள் அவர்கள் "பலர்" என்பது அல்ல.இந்த உண்மைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹீப்ரு மொழியில் ஒரு வார்த்தை "உங்களுடைய" என்ற பொருளைத் தர வேண்டுமானால்,அது "km" என்ற ஒலிக்குறியுடன் முடிய வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம்.எடுத்துக்காட்டாக,யோவேல் 2:28-ம் வசனத்தை பார்க்கலாம்.
28 அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.
28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். 
இரண்டு மொழிபெயர்ப்புகளும் இங்கு ஒன்றுக்கொன்று ஒத்துப்போகின்றன."உங்கள் புதல்வர்" மற்றும் உங்கள் புதல்வியர் " என்று சரியாகவே உள்ளன.இவ்வசனம் எவ்வாறு ஹீப்ரு மொழியில் இருக்கிறது என்று பார்த்தால் உண்மை விளங்கும்.
ְ הָ יָה (1:3 (28:2 u·eie and·he-becomes אַ חֲ רֵ י achri after ־ - כֵ ן kn so אֶ שְׁ פּ " ashphuk I-shall-pour-out אֶ ת ath » ־ - רוּחִ י ruch·i spirit-of·me עַ ל ol on ־ - כָּ ל kl all-of ־ - בָּ שָׂ ר bshr flesh .   וְ נִ בְּ אוּ u·nbau and·they-nprophesy בְּ נֵיכֶ ם bni·km sons-of·you(p) וּבְ נ תֵ יכֶ ם u·bnuthi·km and·daughters-of·you(p) זִ קְ נֵיכֶ ם zqni·km old-ones-of·you(p) חֲ 7מ ת chlmuth dreams יַחֲ 7מוּן ichlmu·n they-shall-dream בַּ חוּרֵ יכֶ ם bchuri·km choice-young-men-of·you(p) חֶ זְ יֹ נ ת chzinuth visions יִ רְ אוּ irau they-shall-see : 
And it shall come to pass afterward, [that] I will pour out my spirit upon all flesh; and your sons and your daughters shall prophesy, your old men shall dream dreams, your young men shall see visions: 
"כֶ ם "என்ற இந்த எழுத்துக்கள்தான்,"km" என்ற உச்சரிப்பை தருகிறது."Bni" என்றால் "புதல்வர்கள்" பொருள்,"bni-km" என்றால் உங்கள் புதல்வர்கள் என்று பொருள்.இவ்வசனம் இஸ்ரயேல் மக்களை நோக்கி பேசப்படுகிறது.எனவே "உங்கள்" என்ற வார்த்தை "இஸ்ரயேல்" மக்களைக் குறிக்கிறது.

இப்பொழுது யோவேல் 2:29-ல் "உங்களுடைய" அல்லது "என்னுடைய" என்ற இரு வார்த்தைகளில் ஒன்று இருக்க வேண்டும்.காரணம் "உங்களுடைய பணியாளர்கள்(ஊழியர்கள்)" என்ற வார்த்தை சரியானதா அல்லது "என்னுடைய பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்)" என்ற வார்த்தை சரியானதா என்று நாம் பார்க்க இருக்கிறோம். கண்டுபிடித்துவிட்டால், தற்போதைய ஊழியக்காரர்கள் யோவேல் 2:29-ஐ சரியாக பயன்படுத்துகிறார்களா  என்றும் அறிந்துகொள்ளலாம்.அதற்காக அக்குறிப்பிட்ட வசனத்தை ஹீப்ரு மொழியில் கீழே தந்துள்ளேன்.
2:29 (3:2) םַגְ ו u·gm and·moreover עַ ל ol on ־ - הָ עֲבָ דִ ים e·obdim the·male-servants וְ עַ ל u·ol and·on ־ - הַ שְּׁ פָ ח ת e·shphchuth the·maids בַּ יָּמִ ים b·imim in·the·days הָ הֵ מָּ ה e·eme the·they   אֶ שְׁ פּ " ashphuk I-shall-pour-out אֶ ת ath » ־ - רוּחִ י ruch·i spirit-of·me :
And also upon the servants and upon the handmaids in those days will I pour out my spirit 
மேலே பெரிதாக்கிக் காட்டப்பட்ட  எழுத்துக்களை கவனித்துப்பாருங்கள்,அங்கு "km" என்று முடிய வில்லை."ஆண் பணியாளர்கள்" மற்றும் "பெண் பணியாளர்கள்" என்று பொதுவாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது "ஊழியக்காரர்கள் மற்றும் ஊழியக்காரிகள்" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது."என்னுடைய" அல்லது "உங்களுடைய" என்று பொருள்தரக்கூடிய ஹீப்ரு வார்த்தைகள் அங்கு இல்லை.யாருடைய பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்) என்று குறிப்பிடும் வார்த்தைகள் இங்கே இல்லை.

எனவே "என்னுடைய ஊழியக்காரர்கள்" மற்றும் "என்னுடைய ஊழியக்காரிகள்" என்று மொழிபெயர்த்தது தவறு.முந்தைய வசனத்தை கவனித்து பார்த்தால்,இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "பணியாளர்கள்" என்ற வார்த்தை நாம் நினைப்பது போன்று கடவுளின் கோவிலில் ஊழியம் செய்பவர்களைக்கூட குறிக்காது.காரணம் அதற்க்கென்று தனி வார்த்தைகள் உள்ளன.அப்படியென்றால் இந்த வசனத்தில் உள்ள "பணியாளர்கள்" என்பவர்கள் உண்மையில் யார்?இதற்கு பதில் காண்பதற்கு இவ்வார்த்தைக்குரிய Strong எண்ணை காண வேண்டும்.இதற்குரிய எண் 5650 ஆகும்.இதற்க்கு பொருள் கீழே தரப்பட்டுள்ளது.


உச்சரிப்பு:ஏபத் ,ebed: slave, servant
Original Word: עֶבֶד
Part of Speech: Noun Masculine;பெயர்ச்சொல் மாறும் ஆண்பால்.
Transliteration: ebed
Phonetic Spelling: (eh'-bed):ஏ-பத்
Definition: slave, servant: அடிமை,வேலைக்காரன்.

எனவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள "பணியாளர்கள் அல்லது ஊழியக்காரர்கள்" என்பது நாம் அனைவரும் நினைப்பது போன்று கடவுளின் பணியாளர்கள் அல்ல.அக்காலத்தில் அடிமைகளை வாங்கி தங்களின் வேலைகளுக்காக மக்கள் பயன்படுத்திக்கொண்டனர்.இவ்வார்த்தை இவர்களைத்தான் குறிக்கிறது என்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.அக்குறிப்பிட்ட வசனத்தில் வரும் "மேலும்" என்ற வார்த்தையானது,நமக்கு ஒன்றையோ தெளிவாக கூறுகிறது.சமூகத்தில் அனைத்து நிலைகளில் உள்ளோரை வரிசைப்படுத்தி இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.புதல்வர்(குமாரர்), புதல்வியர்(குமாரத்திகள்), முதியோர்(மூப்பர்), இளைஞர்கள் இவர்களுக்கு பின்தான் இவ்வார்த்தைகள் வருகிறது.அதாவது பணியாளர்கள் (ஊழியக்கார்கள்), பணிப்பெண்கள்(ஊழியக்காரிகள்)  போன்றவைகள்.கடைசியாக வரும் இவ்வார்த்தைகளை முன்னால் "மேலும்" என்ற வார்த்தைக்குறிய ஹீப்ரு வார்த்தையான, םַגְ ו என்ற வார்த்தை வருகிறது."மேலும்" என்ற வார்த்தை வந்ததன் மூலம் நமக்கு கூற வரும் கருத்து என்னவென்றால்,இவர்கள்,அதாவது அடிமைகள்,இந்த மனிதர்கள் அடிமைகளாக இருந்தாலும்,"இவர்கள் மீதும் என் ஆவியை ஊற்றுவேன்" என்பதுதான்.குறிப்பாக இந்த அடிமைகள் புற இனத்தை சேர்ந்த அடிமைகள் அல்ல.அக்காலத்தில்,ஒருவரிடம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.இஸ்ரயேல் மக்களுக்குள்ளேயே இந்த அடிமை முறைகள் இருந்தன.பழைய ஏற்பாட்டில் இதற்கான குறிப்புகள் உள்ளன.தற்காலத்தில் சினிமாக்களில் காட்டப்படும் விலங்குகள் இடப்பட்டு கொடுமை செய்யப்படும் கறுப்பின அடிமைகள் போன்று கற்பனை செய்து விடாதீர்கள்.அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட வேண்டும் என சட்டங்களை கடவுள் மோசே மூலம் வழங்கியுள்ளார்.எனவே இஸ்ரயேல் மக்களுக்குள்ளேயே அடிமைகளாக இருப்பவர்களையே இந்த வாக்கியம் குறிப்பிடுகிறது.உபாகமம் 15:12-18 வாக்கியங்களை படித்துப்பார்த்தால் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று புரியும்.

இப்பொழுது நமக்கு தெளிவு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.யோவேல் 2:29-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் "பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்)" மற்றும் "பணிப்பெண்கள்(ஊழியக்காரிகள்)" அக்காலத்தில் இஸ்ரேல் மக்களுக்குள்ளேயே அடிமைகளாக(வேலைக்காரர்களாக) இருந்தவர்களையே குறிக்கிறது.அவர்கள் அடிமைகளாக இருந்தாலும் அவர்கள் மீதும் இரக்கம் கொண்டு தன் ஆவியை ஊற்றுவேன் என்று கடவுள் வாக்களிக்கிறார்.


இன்றைய "தேவ செய்தியாளர்கள்" என்று அழைக்கப்படும்   "ஊழியக்காரர்கள்"     யோவேல் 2:29-ல் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்) அல்ல. ஆனால் தங்களை இந்த யோவேல் 2:29 குறிக்கவில்லை என்று எத்தனை "தற்போதைய ஊழியர்களுக்கு" தெரியும்? அக்குறிப்பிட்ட     வசனம்  தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக நினைத்துக்கொண்டு தங்களை "மேலானவர்கள்" என்று எண்ணி கொண்டு, இவர்களைப்போன்றோர்  இன்று ஊழியம் செய்யும் விதம் பற்றி ஏறக்குறைய அனைவரும் அறிவர்.யோவேல் இறைவாக்கினர் வாழ்ந்த காலகட்டங்களில் இஸ்ரயேல் மக்களிடையே ஏழைகளாக இருந்து தங்கள் சகோதரர் வீடுகளில் வேலைக்காரர்களாக இருந்தவர்களை மேற்கூறப்பட்ட வாக்கியம் குறிக்கிறது என்று படத்தில் காட்டப்பட்டுள்ள எத்தனை பேருக்கு தெரியும்?படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேர் இன்னும் ஏழைகளாக இருந்து அடுத்தவர் வீடுகளில் வேலை செய்து சாப்பிடுகின்றனர்?

முடிவாக யோவேல் 2:29-ஐ மேற்கோள் காட்டியிருக்கும் பேதுருவும்(அப். 2:18) தவறாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.இவை அனைத்திற்கும் மேலாக புரொட்டஸ்டண்ட் தமிழ் திருமறையும் இவ்வாக்கியதை தவறாக மொழிபெயர்த்துள்ளது.RC தமிழ் திருமறை சரியாக மொழிபெயர்த்துள்ளது."உங்கள் பணியாளர்கள்" மற்றும் "உங்கள் பணிப்பெண்கள்" என்று மிகச்சரியாக மொழியாக்கம் செய்துள்ளது.ஆனால் புரொட்டஸ்டண்ட் தமிழ் (CSI,பெந்தேகோஸ்து...போன்ற சபைகளில்) தங்களுக்கு சாதகமாக மொழிபெயர்த்துள்ளது.புரோட்டஸ்டாண்டுகளின் விருப்ப மொழிபெயர்ப்பாகிய KJV, மற்றும் இன்னும் பல மொழிபெயர்ப்புகள் அக்குறிப்பிட்ட வசனத்தை எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

And also upon the servants and upon the handmaids in those days will I pour out my spirit.  -------------------(KJV) 
Even on my servants, both men and women,I will pour out my Spirit in those days.           -------------------(NIV)
and also on male and female slaves in those days I will pour out my Spirit.                      -------------------(CJB)
And also on My menservants and on My maidservants I will pour out My Spirit in those days. ----------------(NKJV)
I will even pour out My Spirit on the male and female slaves in those days.                      ---------------------HCSB)
and also upon the servants and upon the handmaids in those days will I pour out my Spirit. --------------------(ASV)
And also upon the avadim and upon the shefachot in those days will I pour out My Ruach   ---------------------(OJB)
Even on the male and female slaves,    in those days, I will pour out my spirit.               -------------------------(NRSVCE)(கத்தோலிக்)
and also upon the servants and upon the handmaids in those days will I pour out my spirit. --------------------(Authorised KJV )
29 அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். ------(தமிழ் RC பொது மொழிபெயர்ப்பு)
29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.------------------------------------------------------------------(புரொட்டஸ்டண்டு CSI,PENTECOST போன்றவைகள்)
கவனமுடன் படித்தால் மேற்கண்ட மொழிபெயர்ப்புகள் அனைத்திலிருமிருந்து ஒன்று தெளிவாக விளங்கும்.பிற்கால மொழிபெயர்ப்புகள் மூன்று மட்டுமே "என்னுடைய ஊழியக்காரிகாரர்கள்(பணியாளர்கள்)" என்று மொழிபெயர்த்துள்ளன.அவையாவன, NKJV, HCSB மற்றும் NIV ஆகும்.இம்மூன்றும் கிறித்தவம் சார்ந்தது.பொதுவாக "பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்,வேலைக்காரர்கள்)" என்று மட்டுமே எழுதப்பட்டு இருந்த ஒன்றை தங்களுக்கு சாதகமாக இருக்குமாறு மொழிபெயர்க்கப்பட்ட செயல் என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

புதிய ஏற்பாட்டில், அப் 2:18-ல் இவ்வாக்கியம் பேதுருவால் மேற்கோள் காட்டப்படுகிறது.எவ்வாறு அங்கு இவ்வசனம் எழுதப்பட்டுள்ளது என்றும் பார்ப்பது நல்லது.
18 அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர். -------------------(தமிழ் RC பொது மொழிபெயர்ப்பு).
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். -----------------(CSI,PENTECOST போன்றவை)
இந்த இரண்டு மொழிபெயர்ப்புக்களும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. கத்தோலிக்க பொது மொழிபெயர்ப்பு இங்கும் மிகச்சரியாக மொழிபெயர்த்துள்ளது.ஆனால் புரொட்டஸ்டண்டுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு செய்த தவறு அவர்களுடைய செயலாலேயே வெளிப்பட்டுவிட்டது.யோவேல் 2:29-யும் அப் 2:18-ம் சேர்த்து படித்துப்பார்த்தால் உண்மை விளங்கும்.அதை கீழே தருகிறேன்.அதற்க்கு முன்னால் அப் 2:18,யோவேல் 2:29-ன் மேற்கோள் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.வெவ்வேறு வசனங்கள் அல்ல.
29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.(யோவேல் 2:29)
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். (அப்.2:18)
முதலாவதில் வெறும் "ஊழியக்காரர்" என்று மட்டும்தான் உள்ளது.,இரண்டாவதில் "என்னுடைய"  என்ற வார்த்தையை சேர்த்தாகிவிட்டது.இப்பொழுது முடிவு இதை படிப்பவர்களுடையது.மேலும் அனைத்து புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்புகளும்(கத்தோலிக்க மொழிபெயர்ப்பை தவிர) "என்னுடைய பணியாளர்கள்" என்றே மொழியாக்கம் செய்துள்ளன.பழைய ஏற்பாட்டில் ஒருவிதமாகவும் புதிய ஏற்பாட்டில் அதே வாக்கியத்தை வேறு விதமாகவும் மொழிபெயர்க்க கரணம் என்ன?இயேசுவின் சீடர்களாகிய நாங்கள்தான் "அந்த பணியாளர்கள்(ஊழியர்கள்)",எங்களைத் தான் அது குறிக்கிறது,என்று கூறுவதற்காகவே பேதுரு அவ்வாறு கூறினாரா? இல்லை,பின்வந்த மொழிபெயர்ப்புகள் அவ்வாறு செய்து விட்டனவா?

ஊழியம் என்பது இன்று கார்போரேட் கம்பெனிகள் போன்று செயல்படுகின்றன என்பது பெரும்பாலும் உண்மை.இதற்கு வலுசேர்க்க வேண்டும் என்றால் தகுந்த ஆதாரங்கள் வேண்டும் என்ற காரணத்தினால் இவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்டன என்று கொள்ளலாமா?அப். 2:18-ன் உண்மையான வாக்கியம் யோவேல் 2:29-ல் உள்ளது,அங்கே  இஸ்ரயேல்  மக்களை அது குறிக்கிறது.ஆனால் அவர்களை முற்றிலும் மறக்கடிக்கும் விதமாக புதிய ஏற்பாட்டு வசனங்கள் உள்ளன.


முடிவாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது,வசனங்கள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது என்பதையே. இஸ்ரயேல்  மக்களை முற்றிலும் மறைத்து இன்று தங்களை குறிக்குமாறு மாக்களை திசை திருப்பிவிட்டனர். இவ்வுண்மையை புரிந்து கொண்டு திருமறையை சரியாக படிக்க முயலுவோம்.எனவே யோவேல் இறைவாக்கினர் குறிப்பிட்டது படத்தில் காட்டப்பட்டுள்ளவர்களை அல்ல.அப்போஸ்தலர்கள், தங்களை குறிக்குமாறு அவ்வசனத்தை பேதுரு மூலம் மாற்றிக்கொண்டனர்.அந்த சந்ததி இன்று வரை தொடர்கிறது.இஸ்ரயேல் மக்களில் ஏழைகளை குறித்த ஒரு வாக்கியம் இன்று பெரும் பணக்காரர்களை குறிக்கிறது.அப்.2:18 வேண்டுமென்றே செய்யப்பட ஒரு தவறு என்றே கருத வேண்டியுள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக அப்.2:18-ன் மூல வசனமாகிய யோவேல் 2:29 கூறும் கருத்து முற்றிலும் வேறான ஒன்று என்பதைப்பற்றி இக்கட்டுரைக்கு முன்னர் இரண்டு பகுதிகள் எழுதப்பட்டு உள்ளன.அவைகளையும் படித்துப்பாருங்கள்.

இரா.இருதயராஜ். 
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

No comments:

Post a Comment

My Posts