அப்போஸ்தலர் 16:7(திருத்தூதர் பணிகள் 16:7)-மொழிபெயர்ப்பு குழப்பங்கள்
புதிய ஏற்பாடு என்பது ஒரே நேரத்தில் ஒருவரால் எழுதப்பட்ட நூல் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.பல பேர் எழுதி தொகுக்கப்பட்ட ஒரு தொகுதி மட்டுமே.பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது என்று கிறித்தவர்களால் நம்பப்படுகிறது.இவ்வாறு எழுதப்பட்டால் அதில் முரண்பாடுகள் இருக்கக்கூடாது என்பது நியாயமான எண்ணமே.அப்போஸ்தலர் புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட வாக்கியம் பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.மட்டுமன்றி அவ்வாக்கியத்தில் புதுமையான ஒரு கருத்தும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய கருத்து எந்த அளவுக்கு கிறித்தவர்களால் உள்வாங்கப்பட்டுள்ளது என்று அறியமுடியவில்லை.தற்போது நாம் நம்பிக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்தேதும் இருக்குமாயின்,பொதுவாக அதை நாம் விரும்ப மாட்டோம்.இப்புதிய கருத்து என்ன என்பதை பார்ப்பதற்கு கீழ்கண்ட வாக்கியங்களை பாருங்கள்.
6 பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர்.7 அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.8 எனவே அவாகள் மீசியா வழியாகச் சென்று துரொவா நகரை அடைந்தனர்.
6. அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
7. மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
8. அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
மேற்கண்ட வாக்கியங்கள் கூறுவது என்னவென்றால்,பவுலும் தீமோத்தியுவும் ஆசியாவுக்கு செல்வத்தைப்பற்றி கூறுகிறது.இறைவார்த்தையை அறிவிப்பதற்காக அவர்கள் சென்ற இடங்களைப்பற்றி கூறுகிறது.மேலே கண்ட வாக்கியங்களில் 7-வது வாக்கியத்தை கவனித்தால் இங்கு ஒரு முரண்பாட்டை காணலாம்.
7 அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.
இங்கு என்ன புதுமை உள்ளது? அப்புதுமை "இயேசுவின் ஆவி" ஆகும்.இதில் என்ன புதுமை உள்ளது என்று குழப்பம் ஏற்பட்டால், சிறிது நிதானமாக எண்ணிப்பாருங்கள்."இயேசுவின் ஆவியார்" என்று ஒரு வார்த்தை உள்ளது.யார் இந்த இயேசுவின் ஆவியார்?
- இயேசுவின் ஆவி என்பது என்ன?
- இயேசுவின் ஆவியார் என்பவர் யார்?
- இயேசுவின் ஆவி என்பது பரிசுத்த ஆவியா?
- பரிசுத்த ஆவி என்பது இயேசுவிடம் இருந்து வருகிறதா அல்லது பிதாவிடம்(தந்தை) இருந்து வருகிறதா?
- இயேசுவின் ஆவியும் பரிசுத்த ஆவியும் ஒன்றா?
- திரித்துவ தத்துவத்தின் அடிப்படையில் ,இயேசுவின் ஆவியும் இயேசுவும் வெவ்வேறு ஆட்கள் ஆனால் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர் என்று நாம் எண்ணலாமா?
- மூன்று ஆள் தத்துவத்தின் படி இவ்வாக்கியம் "இரு ஆள்" தத்துவம் என்று எண்ணப்படலாமல்லவா?
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் தற்போதைய கிறித்தவர்கள் கையில் இருக்கும் புதிய ஏற்பாட்டில் இருக்காது.இவர்கள் கையில் இருக்கும் புதிய ஏற்பாடு என்பது பல திருத்தங்களுக்கு பிறகு வந்தது ஆகும்.புதிய ஏற்பாட்டின் மூல எழுத்துக்கள் எங்கு இருக்கின்றன என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.முதன் முதலாக எழுதப்பட்ட எழுத்துக்களை பலமுறை பிரதி எடுத்து அவற்றின் பிரதிகளைத்தான் இன்று நாம் கையில் வைத்திருக்கிறோம்.அவற்றிலும் ஆயிரக்கணக்கான முரண்பாடுகள் மற்றும் தவறுகள்.
நிலைமை இவ்வாறிருக்க,இவ்வாக்கியத்தின் மற்றொரு மொழிபெயர்ப்பை நாம் காண்போம்.புரொட்டஸ்டண்டுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு எவ்வாறு உள்ளது எனக் காணலாம்.
7. மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
இங்கு "இயேசுவின் ஆவி" இல்லை.வெறும் "ஆவியானவர்" மட்டுமே இருக்கிறார்.ஏன்?இந்த இரண்டு குழுக்களும் வெவ்வேறு மூலப்பிரதிகளை கொண்டிருக்கின்றனவா? இரண்டு மூலப்பிரதிகள் இருக்க முடியுமா?அக்குறிப்பிட்ட புத்தகத்தை,அதாவது திருத்தூதர் பணிகள்(அப்போஸ்தலர்) புத்தகம்,ஒருவரால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்? அதிலிருந்து மொழிபெயர்க்கும் பொழுது ஏன் இந்த வேறுபாடு?
எது உண்மையான மொழிபெயர்ப்பு?மேற்கண்ட இரண்டு மொழிபெயர்ப்புகளில் எது உண்மை?புரொட்டஸ்டண்டுகளின் பல்வேறு மொழிபெயர்ப்புக்களிடையே பல வித்தியாசமான மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.அவைகள் அக்குறிப்பிட்ட வசனத்தை எவ்வாறு மொழிபெயர்த்திருக்கின்றன என்று பார்க்கலாம்.
When they came to the border of Mysia, they tried to enter Bithynia, but the Spirit of Jesus would not allow them to.
மேற்கொண்டது NIV மொழிபெயர்ப்பு ஆகும்.இதில் இயேசுவின் ஆவி என்று உள்ளது.
When they came to the frontier of Mysia, they tried to go into Bithynia; but the Spirit of Yeshua would not let them.
இது CJB மொழிபெயர்ப்பு ஆகும். இங்கும் "இயேசுவின் ஆவி" உள்ளது.
After they were come to Mysia, they assayed to go into Bithynia: but the Spirit suffered them not.
இது KJV மொழிபெயர்ப்பு ஆகும்.இங்கு "இயேசுவின் ஆவி" இல்லை. ஏன்?
When they came to Mysia, they tried to go into Bithynia, but the Spirit of Jesus did not allow them.
இது HCSB மொழிபெயர்ப்பு ஆகும். இங்கு "இயேசுவின் ஆவி" உள்ளது.
மேற்கண்ட பல்வேறு மொழிபெயர்ப்புகளில் ஒன்றில் மட்டுமே "இயேசுவின் ஆவி" என்று மொழிபெயர்க்கப்படவில்லை.அது KJV ஆகும்.KJV மட்டும் ஏன் இவ்வாறு மொழிபெயர்த்துள்ளது?எந்த மூலப்பிரதியைப் பார்த்து KJV இவ்வாறு செய்துள்ளது?அனைவருக்கும் ஒரு மூலப்பிரதிதானே இருக்க வேண்டும்?
இயேசுவின் ஆவி என்று மொழிபெயர்ப்பதில் பல தத்துவ சிக்கல்கள் ஏற்படும் என்று நினைத்து அவ்வார்த்தையை நீக்கிவிட்டதா என்ற கேள்வி இப்பொழுது எழுகிறது.
எப்படியாயினும் இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை.காரணம் மூலப்பிரதி என்று ஒன்று இருந்தால்தானே சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.அதுதான் இல்லையே.இயேசுவின் ஆவி தன்னிச்சையானதா? அது யாருக்கு கட்டுப்படும்?அவர் நினைத்தோர்க்கு அவரால் அதை அனுப்ப முடியும் என்றால் தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் அது வருமா?இக்கேள்விகளுக்கு எப்போது விடை கிடைக்கும்?
இரா.இருதயராஜ்.
No comments:
Post a Comment