திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 5
இவ்வாறு "மகனான" இயேசுவை கடவுளுக்கு இனையாக்கும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது.இதை எதிர்த்த ஏரிஸ்(Arius) ஏறத்தாழ கிறித்தவத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். இவை அனைத்தும் நைசியா(Nicaea) நகரத்தில் வைத்து தீர்க்கப்பட்டன. "தந்தையாகிய" கடவுள் எவற்றால் ஆக்கப்பட்டிருக்கிறாரோ அவற்றாலேயே மகனாகிய இயேசுவும் ஆக்கப்பட்டிருக்கிறார் என்று ஒருவழியாக முடிவெடுக்கப்பட்டாயிற்று.எனவே மகனும் தந்தையும் இனையானவர்கள்தான்.ஒருவர் மற்றவருக்கு உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் அல்ல.முடிவாக இயேசுவுக்கு கடவுள் தன்மை உண்டு என தீர்க்கப்பட்டது.
ஒரு மத ஆசிரியராக இருந்த ஏரிஸ் சுயமான,சிந்தித்து முடிவெடுக்கும் போக்கை கொண்டிருந்தார்.ஆனால் இப்பொழுதோ பிஷப்புக்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்திருந்தனர்.அவர்களை எதிர்த்து செயல் பட முடியாத சூழல் உருவாகியிருந்தது.ஒரு அரசுக்கு இனையான மற்றொரு அரசு போல் சபைகள் செயல்பட ஆரம்பித்தன.பிஷப்புக்கள் மன்னனைப் போல் செயல் பட்டனர்.அதிகாரம் அவர்களிடத்தில் குவிந்தது.
நைசியா கூட்டத்திற்கு பின் "Homoousios(ஒன்று போல்,ஒரே பொருளால் ஆனது ,...)" என்ற வார்த்தை கவனம் பெற்றது.இது கிரேக்க வார்த்தை ஆகும்.மகனும் தந்தையும் ஒருவருக்கொருவர் இனையானவர்கள் என்பதற்கும், இருவரும் பொதுவான ஒன்றையே கொண்டுள்ளனர் என்றும் பொருள் தரும்.இதைக் குறிப்பதற்குத்தான் Homoousios என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.ஏரிஸ்-ஐ எதிர்ப்பதற்காக அனைத்து பிஷப்புக்களும் இனைந்து இவ்வார்த்தை கூறும் பொருளை ஏற்றுக் கொண்டனர்.ஆனால் இவ்வார்த்தையில் ஒரு ஆபத்து மறைந்திருந்ததை பின்னர் கண்டுபிடித்தனர்.இதற்கு பின்னால் ஒரு கதையும் உள்ளது.திருமறையில்(The Bible) இவ்வார்த்தை கிடையாது என்பதையே முதலில் எவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் இவ்வார்த்தை ஆரம்ப கால கிறித்தவர்களால் வெறுக்கப்பட்ட ஒன்றாகும்.எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள,"மணிக்கேன்ஸ்(Manichaeans)" என்ற ஒரு அமைப்பை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.கி.பி.277-களில் இந்த அமைப்பு கிறித்தவத்திற்கு கடும் போட்டியாக இருந்தது.கிறித்தவம் எப்படி பரவியது அவ்வாறு இந்த அமைப்பும் பரவியது.இதை தோற்றுவித்தவர் "மணி(Mani)" என்பவர் ஆவார்.இவர் ஈரானை சேர்ந்தவர்.
கிறித்தவர்களால் பெரிதும் போற்றப்படும் அகஸ்டின்(Augustine) இந்த அமைப்பில் 10 வருடங்கள் இருந்துள்ளார் என்பது கவனிக்க வேண்டிய தகவல் ஆகும்.இயேசுவின் "இயல்பை(Nature ) பற்றி இந்த மணிக்கேன்ஸ் குறிப்பிடும் பொழுது பயன்படுத்திய வார்த்தைதான் இந்த "Homoousios".அக்கால கட்டத்தில் கிறித்தவத்திற்கும் மணிக்கேன்ஸ்க்கும் இடையே கடும் விரோதம் நிலவியது.இப்பொழுது ஏரிஸ் இதனை சுட்டிக்காட்டினார்."எந்த மணிக்கேன்ஸ்-ஐ வெறுத்தீர்களோ அந்த மணிக்கேன்ஸ்-டன் தொடர்புடைய வார்த்தையைத்தானே இப்பொழுது பயன்படுத்தி இருக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.இக்கேள்வி தீயாய் பரவியது.நைசியாவில் இவ்வார்த்தையைக் கொண்டு எடுத்த முடிவு பெரும் குழப்பத்தை விளைவித்தது.அடுத்து வந்த 50 ஆண்டுகள் சபைகளுக்கு பெரும் தலைவலியை இவ்வார்த்தை உண்டாக்கியது.முடிவாக இவ்வார்த்தையை பிஷப்புக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க ஆரம்பித்தனர்.மறுபடியும் சபைகள் சண்டையிட்டு கொள்ள ஆரம்பித்தன.
நைசியாவில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக காயம்பட்டிருந்த,எரிஸுக்கு ஆதரவாக இருந்த நிகாமிடிசின் பிஷப் யூசிபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மன்னன் கான்ஸ்டான்டினுக்கு இதைப்பற்றிய தகவல்களை கொடுக்க ஆரம்பித்தனர்.ஆரம்பத்தில் இவர் மீது வெறுப்பு கொண்டிருந்த மன்னன் பின்னர் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க ஆரம்பித்தான்.அதற்கும் காரணம் இருந்தது.அந்தியோகியா(Antioch ) சபையின் பிஷப் யூஸ்தாதிஸ்(Eustathius) என்பவருடைய ஒழுங்கீனங்களை வெளிப்படுத்தியத்தின் காரணமாக மன்னன் நிகாமெடியாவின் பிஷப்புக்கு செவிகொடுக்க ஆரம்பித்தான்.இந்த உஸ்தாதிஸ்(Eustathius) நைசியாவின் ஓட்டெடுப்பில் ஏரிஸ் தோற்க முக்கிய காரணமாக அமைந்தவர் ஆவார்.மன்னரின் தற்போதைய ஆதரவு நிலையை பயன்படுத்தி தன்னுடைய எதிரிகளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.நிறைய எதிரிகளையும் உருவாக்கிக் கொண்டார்.இதில் முக்கியமானவர் அலெக்ஸாண்ட்ரியா சபையின் பிஷப் அதனாசியஸ்(Athanasius) ஆவார்.நைசியாவில் எடுக்கப்பட்ட முடிவுகளை காப்பாற்ற இவர் தீவிரமாக இருந்தார்.ஆனால் "Homoousios" வார்த்தையை மட்டும் கவனமாக தவிர்த்தார்.ஏரிஸ்-ஐ கடைபிடித்தவர்களை "Arians" என்று முதன் முதலாக அழைத்தது இவர்தான். ஒரு கட்டத்தில் தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் "arians " என்றே அழைத்தார்.
அதனாசியஸ்-ஐ எதிர்த்தவர்கள் இப்பொழுது ஏரியன்ஸ்( Arians ) பட்டத்தை பெருமையுடன் ஏற்றுக்கொண்டனர்.இந்த ஏரியன்ஸ் ஒரு படி மேலே சென்று "இயேசுவும்(மகனும்),தந்தையும் ஒன்றுபோலானவர்கள் கிடையாது (Unlike),இருவரும் வெவ்வேறானவர்கள்" என்றனர்.இதனை கிரேக்க மொழியில் "Anomoeans" என்றும் லத்தீன் மொழியில் "Dissimilarians" என்றும் அழைத்தனர்.அதாவது தந்தையும் மகனும் "அனோமோன்ஸ் (Anomoeans)".
இந்நிலையில் சண்டையிடும் சபைகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு குழு தோன்றியது.இவர்கள் ஒரு குறிப்பிட்ட முடிவை எடுத்தனர்.இரு குழுக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர்.இவர்கள் "Homoeans (ஹோமோன்ஸ்)" என்று அழைக்கப்பட்டனர்.இவ்வாறு அழைக்கப்படுவதற்கு இவர்களின் நிலைப்பாடே காரணம்.சண்டைக்கு காரணமே "தந்தை எதனால் ஆக்கப்பட்டிருக்கிறாரோ அதனாலேயே மகனும் ஆக்கப்பட்டிருக்கிறார்,எனவே தந்தையும் மகனும் இனையானவர்கள்" என்ற கருத்துதான்.இதற்கு இடையில் இவர்கள் நின்று கொண்டார்கள்.வார்த்தைகளை சற்று மாற்றி "மகன் தந்தையை போன்றே இருக்கிறார்,அதாவது "The Son is Like The Father" என்று மட்டும் கூறினார்கள்.Homoeans என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான Homoios என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.இருவரும் ஒரே பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூற வில்லை.அதாவது இருவரும் "இனையானவர்கள்" என்று கூறுவதற்கு பதிலாக "மகன் தந்தையைப் போலானவர்" என்று மட்டும் கூறினார்கள்.
இந்த நிலைமையில் மன்னன் கான்ஸ்டாண்டின் இறந்து போன பிறகு உரோம பேரரசு மறுபடியும் உள்நாட்டு குழப்பங்களால் பிரிந்தது.மன்னன் கான்ஸ்டேடியஸ் II (Constantius II) மறுபடியும் பேரரசை ஒன்றிணைத்தான்.பேரரசின் மன்னனாக இவனே இருந்தான். Homoeans (ஹோமோன்ஸ்) இவனுடைய ஆதரவைப் பெற்றனர்.பேரரசை ஒன்றிணைத்த பிறகு சபைகளை ஒன்றினைக்க முயற்சிகள் எடுத்தான்.தன் பேரரசின் மேற்குப்பகுதி (உரோம்) மற்றும் கிழக்குப்பகுதி (கான்ஸ்டான்டிநோபிள்) பிஷப்புகளை கூட்டினான்(Council of Bishops).Homoeans (ஹோமோன்ஸ்)-ன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுமாறு "அறிவுறுத்தினான்".இது நடந்தது கி.பி.359-ல்.நடந்த இடம் "Ariminum(அறிமினும்)" ஆகும்.ஆனால் இந்த அறிமினும் கூட்ட முடிவுகளும் சபைகளை ஒன்றிணைக்க முடியவில்லை.ஏரியன்ஸின்(Arians) கருத்துக்களையே "அறிமினும் கூட்டம்" ஆதரிப்பதாக கூறி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.பிஷப்புக்கள் மன்னனுக்கு பயந்து கையெழுத்திட்டாலும் "அறிவுறுத்தப்பட்ட ஹோமோன்ஸ்(Homoeans) கருத்துக்கள்" மனதளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் மன்னன் கான்ஸ்டான்டியஸ்-II தனது நாற்பதுகளில் இறந்து விட்டான்.ஒருவேளை இம்மன்னன் இறந்து போயிருக்காவிட்டால் இன்றய கிறித்தவம் திரித்துவத்தை கடைபிடித்திருக்க வாய்ப்பில்லை.இவனுக்கு பிறகு இவனுடைய உறவினன் "ஜூலியன்(Julian)" பேரரசின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.அரசின் ஆதரவைப் பெற்றிருந்த கிறித்தவம் திடீரென ஒரு ஆபத்தை "ஜூலியன்" வடிவில் சந்தித்தது.கிறித்தவம் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.சபைகள் அதிர்ந்தன.

இரா.இருதயராஜ்
No comments:
Post a Comment