திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - -பாகம் 4
ஏன்சிரா(Ancyra)-வில் நடைபெற இருந்த பிஷப்புக்களின் ஆலோசனைக் கூட்டம் தடைபட்டவுடன் மன்னன் கான்ஸ்டான்டின் அடுத்த கூட்டத்தை கூட்ட முடிவு செய்கிறான். நைசியா(Nicaea) என்ற நகரம் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுகிறது.இந்நகரம் நிகாமெடியா(Nicomedia)வுக்கு பக்கத்திலேயே இருக்கிறது. தற்போதைய துருக்கியின் இஸ்னிக்(Iznik) நகரம்தான் இந்த நைசியா.நதிக்கரை ஓரம் அமைந்திருக்கும் இந்நகரம் மிகவும் அழகான ஒன்றாகும்.தற்போதும் கூட பழைய உரோம் ஆட்சியின் கோட்டைகள் உள்ளன. நிகாமெடியா நகரம் உரோம் ஆட்சியின் கிழக்குப்பகுதி (Administrative Headquarters) தலைநகரமாக இருந்தது.ஆலோசனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் இந்நகரத்தின் அருமையான பருவநிலையை அனுபவிக்கலாம் என்று கான்ஸ்டான்டின் அறிவித்தான்.இம்முறை எதுவும் தவறாக நடந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தான்.நடக்க இருக்கும் கூட்டத்தில் தானும் பங்கெடுத்து விவாதங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்தான்.கிறித்தவத்தின் நீண்ட வரலாற்றில் இது முதல்முறையாக நடந்தது.எந்த பேரரசால் கிறித்தவர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார்களோ அப்பேரரசின் மன்னன் ஒருவன் தற்போது அவர்கள் தொடர்புடைய கூட்டத்தில் பங்கெடுப்பது என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும்.பேரரசின் ஆட்சி அதிகாரங்களில் கிறித்தவம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்பதற்கு அடையாளமே இது.மேலும் சிறிது சிறிதாக கிறித்தவம் ஆட்சி அதிகாரங்களில் தலையிட்டு பின்னர் கைவசப்படுத்தியதற்கு முதல் அடி இங்கேதான் எடுத்துவைக்கப்பட்டது.
கூட்டத்திற்கு தலைமை தங்கியதே கான்ஸ்டான்டின்தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.கிறித்தவம் பற்றிய கருத்துக்களில் கான்ஸ்டான்டினுக்கு ஆலோசகராக இருக்கும் ஸ்பானிய பிஷப் ஓசியஸ்(Hosius) அல்லது கோர்டோபாவின் ஓசியஸ்(Ossius of Cordova) ஒரு புதிய கருத்தை முன்மொழிந்தார்.கிறித்தவ நம்பிக்கையில்(Christian Creed) இது புத்தம் புதிய கருத்தாகும்.அனைவராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு கிறித்தவத்தின் "விதிமுறைகளில் ஒன்றாக(A Clause in Christian Creed)" மாற்றப்பட்டது.இவர் முன்மொழிந்த கருத்து "தந்தை எப்படி இருக்கிறாரோ அப்படியே மகனும் இருக்கிறார்".
இதை படிப்பவர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக நாம் சில வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.இவ்வார்த்தைகள் கடவுளுக்கு பொருந்தாது எனினும் புரிதலுக்காக பயன்படுத்தி உள்ளோம்.ஸ்பானிய பிஷப் ஓசியஸ்(Hosius) முன்மொழிந்த கருத்து என்னவென்றால் "தந்தை எதனால் ஆக்கப்பட்டிருக்கிறாரோ அதனாலேயே மகனும் ஆக்கப்பட்டிருக்கிறார்".ஆங்கிலத்தில்,"The Son was of One Substance with The Father" என்று கூறலாம்.இதன் பொருள்,"தந்தையும் மகனும் வெவ்வேறு ஆட்கள் அல்ல,இருவரும் சம அளவு அதிகாரங்கள் உடையவர்கள்,சம அளவு மதிக்கப்படவேண்டியவர்கள்" என்பதே ஆகும்.கிரேக்கத்தில் இதற்காக பயன்படுத்திய வார்த்தை "Homoousius" ஆகும்."Of One Substance" என்பதற்கு உரிய கிரேக்க வார்த்தை "Homoousius" ஆகும்.இருவரும்,அதாவது தந்தையும் மகனும் ஒரே விதமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆகும்.இது கிறித்தவத்திற்கு புதியது ஆகும்.கூட்டத்தின் முடிவில் "அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட" கருத்தாக இது அமைந்தது.மன்னன் கான்ஸ்டான்டின் இன்னும் ஒரு கிறித்தவனாக மாற வில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.கிறித்தவனாக இல்லாத நிலையில் கிறித்தவ கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினான்.
பேரரசின் மன்னரே கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்,அவரின் ஆலோசகர் கருத்து ஒன்றை முன் மொழிந்திருக்கிறார்,ஏற்றுக்கொள்ளாமல் யாரும் இருப்பார்களா?அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.இக்கூட்டத்தின் முடிவை இரு பிஷப்புக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பதியப்பட்டிருக்கிறது."தந்தையும் மகனும் ஒன்று" என்ற கருத்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு,மன்னனின் ஆதரவோடு கிறித்தவத்திற்குள் இக்கருத்து இப்பொழுது நுழைந்திருக்கிறது.உரோம பேரரசின் அங்கீகாரமும் கிடைத்து விட்டது.ஆனால் பழைய ஏற்பாடு அல்லது புதிய ஏற்பாடு என்று இரண்டிலும் எங்கும் இக்கருத்து இல்லை.
இக்கூட்டத்தில் மேலும் பல பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன. பிஷப்புக்கள் மற்றும் பிஷப்புக்களின் கீழ் இருக்கும் போதகர்கள் வட்டிக்கு கடன் கொடுப்பது(Money Lendin),மதம் மாறிய சிறிது காலத்திற்குள் அவசரமாக பதவி உயர்வு கொடுப்பது(Hasty Promotions in Episcopy),முரண்பட்ட கருத்துக்களால் பிரிந்து சென்றவர்களை(Schismatics) மறுபடியும் இனைத்துக் கொள்வது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டன.தானாக முன்வந்து "ஆண்மையை நீக்கிக் கொண்டவர்களை" போதகர்களாக ஆக்குவது தடை செய்யப் பட்டது.
மன்னன் கான்ஸ்டான்டின் இக்கூட்டத்திற்காக காட்டிய அக்கறை பெரும் அளவில் பங்கேற்பாளர்களை கொண்டு வந்தது.அக்கறை என்பதைவிட,தன் பேரரசின் ஒற்றுமைக்கு "சபை சண்டைகள்" இடறலாக இருப்பதை கண்டு அதை ஒழிக்க முடிவு செய்ததின் வெளிப்பாடே மன்னன் காட்டிய அக்கறை.பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர மன்னன் "தீவிரம்" காட்டினான்.மொத்தம் 318 பேர் கந்து கொண்டனர்.பேரரசின் அனைத்துப்பகுதிகளிலும் இருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர்.இதற்கு முன்னர் இவ்வளவு பேர் ஆலோசனைக்கு கூட்டத்திற்கு கூடியதில்லை.
கிறித்தவ வரலாற்றில் இது ஒரு மைல் கல் ஆகும்.இது "பொதுக் கூட்டம்"(General Council) என்று அழைக்கப்படுவதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தது.ஆனால் 1200 வருடங்களுக்கு பின் இந்த நைசியாவில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவாதிக்கப்பட்டன.அதைப்பற்றி வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.இக்கூட்டத்திற்கு பின்னர் ஏரிஸ்(Arius) பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.மன்னன் கான்ஸ்டான்டினால் மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தும் இவர் தனிமையில் இருந்தார்.கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தில் வயிற்றுப்போக்கினால் கழிவறையில் வைத்து இறந்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.
திரித்துவத்திற்கான அடிக்கல் இங்குதான் நாட்டப்பட்டது.பிரச்சினைகளும் குழப்பங்களும்,அதிகார போட்டிகளும் இக்கூட்டத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை.இதைப்பற்றி அடுத்ததாக கட்டுரையில் பார்க்கலாம்.
Ref:http://www.documentacatholicaomnia.eu/03d/0325-1965,_Concilia_Oecumenica,_Documenta_Omnia,_EN.pdf

இரா.இருதயராஜ்.
No comments:
Post a Comment