திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 7(இறுதி)
திரித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டது.மிக சரியாக கூறுவது என்றால் முடிவுக்கு கொன்டு வரப்பட்டது.ஆனால் கேள்விகளும் குழப்பங்களும் இன்னும் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.நைசீன் முடிவுகள்(Creed of Nicene) உரோம அரசின் முடிவாக இருந்த காரணத்தினால் அரசை எதிர்த்து செயல்பட முடியாமல் அதிருப்தியாளர்கள் ஒதுங்கி விட்டனர்.உரோம அரசின் ஆதரவோடு கிறித்தவம் தன்னை மாற்றிக் கொண்டது.அரசிற்கு நெருக்கமானவர்கள் யார்,அவர்கள் மூலமாக அதிகாரத்தை மேலும் பெருக்கிக் கொள்வது எப்படி என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்தன.காலத்தின் போக்கில் தன்னை தனியான அதிகார மையமாக வளர்த்துக் கொண்டது.கிறித்தவத்தின் வளர்ச்சியில் "திரித்துவம் பற்றிய சர்ச்சை" நீண்ட கால போர் ஒன்றை போலவே பார்க்கப் படுகிறது. போரிடும் குழுக்களிடையே நிலவுகின்ற "வெற்றி பெரும் வேட்கை", உண்மையான போர்களில் இருப்பதை போன்றே இருந்ததை வரலாறுகளின் மூலம் உணர முடிகிறது.கருத்துக்களை தங்கி நிற்கும் குழுக்கள் தங்களுடைய ஆதரவாளர்களை திரட்டுவதிலும்,தங்களுக்கு எதிர்ப்பாளர்களை எப்படி கவிழ்ப்பது,அதற்காக அரசின் ஆதரவை எப்படி பெறுவது,ஆதரவைப் பெறுவதற்காக என்ன செய்வது போன்ற செயல்கள் கிறித்தவத்தின் அடிப்படை தத்துவங்களை நகைக்க செய்துவிடும் அளவிற்கு இருக்கின்றன.இந்த திரித்துவ போரை தற்பொழுது காண வேண்டும் என்றால் தற்போதைய CSI மற்றும் RC சபைகளில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறைகளை பார்த்தால் போதுமானது.
ஆதரவுகள் எப்படி திரட்டப் படுகின்றன, எதிர்ப்பாளர்கள் எவ்வாறு கையாளப் படுகின்றனர்,ஆட்சியாளர்களுடன் எப்படி தொடர்பை ஏற்படுத்து கின்றனர், ஆட்சியாளர்களுக்கு இவர்கள் தயவு ஏன் தேவைப் படுகிறது. ஆட்சியாளர்களும் இவர்களும் எப்படி ஒருங்கிணைந்து செயல் படுகின்றனர், கிறித்தவத்தின் அடிப்படை கருத்துக்கள் எப்படி காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன போன்ற செயல்கள் இன்றைய CSI மற்றும் RC சபைகளில் கண்கூடாக தெரியும் நிகழ்வுகள் ஆகும்.இது போன்றுதான் அன்றைய உரோம அரசில் "திரித்துவப் போர்" நடைபெற்றது.
திரித்துவத்தின் அடிவேர் எங்குள்ளது? ஏன் திரித்துவம் என்ற ஒன்று தோன்றியது?இக்கேள்விகளுக்கு பதில் வேண்டுமானால் அக்காலகட்டத்தில் நிலவிய சில எண்ணங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.எவ்வகையான எண்ணங்கள் திரித்துவம் பற்றிய கேள்விகளுக்கு இட்டுச் சென்றது என்று ஆராய வேண்டும்.அக்காலத்தில்,குறிப்பாக கிரேக்கர்களில் அரிஸ்ட்டாட்டில்,பிளாட்டோ போன்றோர் கொண்டிருந்த எண்ணங்கள் பற்றி நாம் அறிந்தோமானால் அன்றைய காலகட்டத்தில் கிரேக்கர்கள் மற்றும் அவர்கள் எங்கெல்லாம் வாந்தனரோ அங்கெல்லாம் இவ்வெண்ணங்கள் பரவியிருக்க வேண்டும்.மனுக்குலம் இவ்வளவு வேதனைகள் பட காரணம் என்ன,இவ்வளவு கெட்ட எண்ணங்களுக்கு காரணம் என்ன,கடவுள்தான் இவ்வுலகை படைத்தார் எனில் ஏன் இவ்வளவு அநியாயங்கள்,தவறு செய்தோர் தண்டிக்கப்பட மாட்டார்களா,போன்ற எண்ணங்களே அவைகள்.
மேற்கூறிய எண்ணங்கள் கிரேக்கர்களிடையே மட்டும் இல்லை,அனைத்து இனங்களிலும் சிந்தனை செய்வோர் இடையே இவ்வெண்ணங்கள் இருந்திருக்க வேண்டும்.கிரேக்கர்கள் மத்திய தரைக்கடல் மற்றும் ஆசியாவை வென்று அப்பகுதி முழுவதும் பரவிய பின்னர் அவர்களுடைய எண்ணங்களும் பரவின.ஆனால் இவ்வெண்ணங்களுக்கு கிரேக்கர்கள் மட்டும் காரணம் அல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.யூதர்கள் கூட இவ்வெண்ணங்களை கொண்டிருந்தனர் என்பதை பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் என்ற இரு பிரிவினர் வழியாக நாம் அறியலாம்.
பாவம் என்றால் என்ன என்று ஒவ்வொரு இனமும் வெவ்வேறு வகையான கருத்துக்களை கொண்டிருந்தன.யூதர்கள் தங்களுடைய எழுத்துக்கள் மூலமாக,அதாவது பழைய ஏற்பாடு மூலமாக, இதற்கான விளக்கத்தை கொண்டிருந்தனர்.தங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க ஒருவர் வருவார் என்று யூதர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.தங்கள் வழிபாடும் கடவுளே அவரை அனுப்பி வைப்பார் என்று அவர்களுடைய பழைய ஏற்பாடு கூறுகிறது.அவர்களில் பலபேர் "தான்தான் அவர்" என்று கூறி இறந்துபோயிருக்கின்றனர்.அதாவது அவ்வப்போது இத்தகைய மனிதர்கள் சிலர் தோன்றிக்கொண்டிருந்தனர்.கிரேக்கர்களும் யூதர்களும் சேர்ந்து வாழும் சூழ்நிலை உருவானபொழுது இரண்டு பேருடைய எழுத்துக்களும் இரண்டு பேருக்கும் தெரிய வந்தன.
மனுக்குலமானது தன்னுடைய "பாடுகளில்" இருந்து விடுபட என்ன வழி என்று கிரேக்கம் சிந்தித்தது.யூதர்கள் தங்களை "தங்களுடைய அடிமைத்தனத்தில்" இருந்து விடுவிக்க "மேசியா வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.பாவம் என்றால் என்ன என்பது பற்றி யூதர்களுடைய புத்தகம் தெளிவாக விளக்கங்களை கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.இப்புத்தகத்தை அறிந்து கொண்ட கிரேக்கர்கள் மற்றும் கிரேக்கர்களுடைய கருத்துக்களை அறிந்து கொண்ட யூதர்கள் என்று ஒரு புதிய "சிந்தனையாளர்கள் கூட்டம்" உருவாகி வளர்ந்து வர ஆரம்பித்தது.யூதர்களை விடுவிக்க வரப்போகும் "மேசியா",இப்பொழுது சிறிது மாற்றம் கொண்டு மனுக்குலத்தை விடுவிக்க வருகிறார் என்ற புதிய எண்ணங்கள் இந்த சிந்தனையாளர்கள் மத்தியில் உருவாகியது என்று நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.இந்த எண்ணத்தை யூதர்கள் அனைவருமோ அல்லது கிரேக்கர்கள் அனைவருமோ கொண்டிருக்க வில்லை இரு குழுக்களிலும் ஒரு சிறிய கூட்டம் மட்டுமே இக்கருத்தை கொண்டிருக்க வேண்டும்.இந்த இரு குழுக்களிலும் இவ்வகையான எண்ணம் கொண்டோர் மத்தியில் இயேசு வாழ்ந்திருக்க வேண்டும்.இவ்வகையான எண்ணங்கள் அப்பொழுது நிலவின என்பதற்கு எண்ணற்ற தரவுகள் உள்ளன.
கிரேக்கர்கள் தங்கள் வெற்றி கொண்ட பகுதிகளில் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.அவ்வாறு அவர்கள் ஏற்படுத்திய குடியிருப்பு பகுதி எகிப்தில் உள்ள "அலெக்சாண்டிரியா(Alexandria)" நகரம் ஆகும்.கி.மு.100-களில் இருந்து இந்நகரம் பெரும் வணிக நகரமாக நிலவியது.பல்வேறு மக்கள் இங்கு வந்து குடியேறினர்,குறிப்பாக யூதர்கள்.இந்நகரம் பெரும் நூலகம் ஒன்றைக் கொண்டிருந்தது என்றால் எவ்வகையான மக்கள் அங்கு வாழ்ந்திருந்தனர்,சிந்தனைகளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளித்தனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.இந்நகரத்தின் பக்கத்தில் குகைகள் நிறைந்த பகுதி ஒன்றும் உள்ளது."அறிவே முக்கியம்(Knowledge)" என்ற எண்ணம் கொண்ட ஒரு குழு ஒன்று இக்குகைகளில் தங்களுடைய எழுத்துக்களை(எண்ணங்களை) தோல் சுருள்களில் பதிவு செய்து அவைகளை இக்குகைகளில் பத்திரப்படுத்தி இருக்கின்றனர்.இவர்களை "Knosis" என்று அழைக்கின்றனர்."அறிவே உங்களை விடுதலையாக்கும்" என்ற கருத்து இவர்களுடையது.இவர்களுடைய எழுத்துக்களை 1947-ல் பிரெஞ்சு ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தார். இவைகள் இன்று புத்தகமாக நமக்கு கிடைக்கிறது.
எனவே பாவங்களில் இருந்து விடுவிக்க மேசியா வருகிறார் என்று புதிய கருத்து இந்த "இணைந்த குழு" உருவாக்கியது.இதைத்தான் இயேசு வலியுறுத்துகிறார்."மனதிரும்புங்கள்,பாவம் செய்யாதீர்கள்,ஒரு புதிய உலகம் வரப்போகிறது போன்ற கருத்துக்களை இயேசு போதித்தார்.இக்கருத்துக்களை அவருடைய சீடர்களும் பரப்பினர்."யூத விடுதலை" என்பதிலிருந்து "பாவ விடுதலை" என்பதாக மாறிவிட்டது.ஏறத்தாழ மனிதர்கள் அனைவரும் "நல்ல மனிதனாக இருப்பது எப்படி" என்று சிந்திப்பர்.இயற்கையாக மனிதர்களில் இருக்கும் இவ்வெண்ணங்களுக்கு இவர்களுடைய போதனைகள் கைகொடுத்தது.இப்பொழுது இயேசு மேசியா ஆகி விட்டார்.அவர் நம்மை பாவங்களில் இருந்து விடுவிப்பார் என்ற கருத்து பரப்பப் பட்டது.மனிதர்களில் எவரெல்லாம்,ஏன் உலகில் இவ்வளவு பாடுகள் என்று சிந்திக்கிறார்களோ" அவர்கள் அனைவருக்கும் "விடுவிக்கும் ஒருவர்" தேவைப்படுகிறார்.யூதர்களின் மேசியா இப்பொழுது அனைத்து மக்களின் மேசியா ஆகி விட்டார்.இதே வழியில் சிந்திப்பவர்கள் பெரும்பாலும் மேசியாவை ஆதரிக்கும் நிலைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை.ஒருவழியாக,"இவ்வுலகின் பாடுகளில் இருந்து விடுபட வழி ஒன்று கிடைத்து விட்டது",இனிமேல் இக்கருத்தை பரப்ப வேண்டியதுதான் வேலை.இதை செய்தவர்களே கிறித்தவர்கள்.
மேசியா கிடைத்தாகி விட்டது.அவர் இனிமேல் யூதர்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது,அனைத்து மக்களின் "விடுவிப்பாளர்"அவர்.யூதர்கள் அல்லாத சிந்தனையாளர்கள் மத்தியில் ஒரு புது குழப்பம் ஏற்பட்டது.இந்த "மேசியாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?",இதுவே புது குழப்பம்.அவர் யார் கடவுளின் "சொந்த மகன்" என்றால் எப்படி?இதுதான் அடுத்த சிந்தனை,திரித்துவத்தின் வேர் இங்குதான் உள்ளது."தங்களுடைய மேசியா" ஒரு சாதாரணமான ஆளாக இருப்பதில் யூதர் அல்லாத கிறித்தவர்களுக்கு விருப்பம் இல்லை.காரணம் யூதர் அல்லாத கிறித்தவர்கள் யூதர்களை வெறுத்தனர்.யூதர்களுடைய "தனிவழி" அவர்களை கோபப்படுத்தியது.தங்களை யூதர்களை விட தாழ்வானவர்களாக இவர்கள் கருதியத்தின் விளைவு அல்லது யூதர்களுடைய "தனிவழி" மீதான வெறுப்பு அல்லது யூதர்கள் கொண்டிருந்த செல்வாக்கு மீதான வெறுப்பு போன்ற காரணங்களால் "தங்களுடைய மேசியா"வை யூதர்களின் கடவுளுக்கு தாழ்வாக இருப்பதை வெறுக்க செய்தது.எப்படியாவது யூதர்களின் கடவுளுக்கு மேலாக அவரை கொண்டு செல்ல வேண்டும் அல்லது அவருக்கு இணையாக வேண்டும்,இதுவே தங்களுடன் இனைந்து வாழ மறுக்கும் யூதர்களை பழிவாங்கும் செயல்,இவ்வகையான எண்ணங்களின் அடிப்படையில் பிறந்த கருத்துதான் மேசியா யார்,கடவுளுக்கு அவருக்கும் இடையேயான தொடர்பு என்ன? என்ற கேள்விகள்.
இக்கேள்விகள் இட்டு சென்ற பாதைதான் "திரித்துவ போர்".நீண்ட நெடிய கருத்து போர்.யூதர்களின் கடவுளுக்கு ஒருவழியாக தங்களுடைய மேசியாவை இனையாக்கி விட்டாயிற்று.கடவுளின் சொந்த மகன்,இரட்சகர்,வரப்போகும் உலகம்,என்று பலவித கருத்துக்கள் உருவாகின.எகிப்தில் உள்ள கும்ரான் (Qumran) குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட "நாசிஸ்(Knosis)" எழுத்துக்களை ஒருவர் படித்தாரெனில் இவற்றை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
தற்பொழுது நைசீன் முடிவுகள் அல்லது நைசீன் நம்பிக்கைகள் (Nicene Creed) என்ன கூறுகிறது என்று தமிழில் பார்க்கலாம்.அவற்றை யூதர்களின் பழைய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டும் பார்க்கலாம்.

வ.எண்
|
நைசீன்
முடிவுகள் - ஆங்கிலம்
|
நைசீன்
முடிவுகள் - தமிழாக்கம்
|
விளக்கம்
|
1
|
We believe in one God,
the Father almighty,
maker of heaven and earth, of all things visible and invisible. |
கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத அனைத்தையும்,வானத்தையும்
மன்னுலகையும் படைத்த தந்தையாகிய ஒரே கடவுளிடத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
|
யூதர்களின் கருத்துக்களுக்கு இது முரன்படவில்லை
|
2
|
And in one Lord Jesus
Christ,
the only Son of God, begotten from the Father before all ages, God from God, Light from Light, true God from true God, begotten, not made; of the same essence as the Father. |
தந்தை எவற்றால் ஆக்கப்பட்டிருக்கிறாரோ அவற்றைக்
கொண்டே, உருவாக்கப்படாமல் பிறப்பிக்கப்பட்ட;உண்மையான கடவுளிடம் இருந்து உண்மையான
கடவுளாகவும்,ஒளியிடமிருந்து ஒளியாகவும்,கடவுளிடம் இருந்து கடவுளாகவும்,அனைத்து காலங்களுக்கும்
முன்னர் தந்தையிடம் இருந்து பிறப்பிக்கப்பட்ட கடவுளின் ஒரே மகனாகிய ஒரே ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவிடமும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
|
இது மிகவும் குழப்பம் தரக்கூடிய பகுதி.ஆனால் இயேசுவும்
கடவுள் என்று இப்பகுதி மிகத்தெளிவாக கூருகிறது.சாதாரனமாக கடவுள் அல்ல தந்தை எப்படி
உள்ளாரோ அப்படியே எள்ளலவும் குறையாமல் இவரும் கடவுள்.அதாவது தந்தையும் இவரும் இனையானவர்கள்.
|
3
|
Through him all things
were made.
|
இவரின் வழியாகவே அனைத்தும் உருவாக்கப்பட்டன
|
யூதர்களின் பழைய ஏற்பாடு இவ்வாறு கூறவில்லை
|
4
|
For us and for our
salvation
he came down from heaven; he became incarnate by the Holy Spirit and the virgin Mary, and was made human. |
எங்களுக்காகவும் எங்களுடைய விடுதலைக்காகவும் இவர்
வானத்திலிருந்து இறங்கி வந்தார்;தூய ஆவியின் வழியாகவும் கன்னியாகிய மரியாளின் வழியாகவும்
இவர் மனித வடிவம் பெற்றார்.மேலும் ஒரு மனிதனாக ஆக்கப்பட்டார்.
|
கன்னிபெண் ஒருவள் குழந்தை பெருவது என்பது யூதர்களின்
கருத்துக்கு எதிரானது.ஆனால் கிரேக்கம்,உரோம்,எகிப்து போன்ற நாடுகளில் இக்கதைகள் உள்ளன.மேலும்
கடவுள் மனித வடிவம் பெருதல் என்பது இந்துக்களின் “அவதாரம்” என்பதுடன் தொடர்புடையது.
|
5
|
He was crucified for
us under Pontius Pilate;
he suffered and was buried. |
பொந்தியுஸ் பிலாத்து என்பவரின் கீழ் இவர் எங்களுக்காக
சிலுவையில் அறையப்பட்டார்.அவர் பாடுகள் பட்டார் கடைசியில் புதைக்கப்பட்டார்.
|
பொந்தியுஸ் பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைந்து
கொன்றதை “தங்களுக்காகவே” செய்யப்பட்டது போன்று கூறப்பட்டுள்ளது.அதாவது பொந்தியுஸ்
பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைந்ததன் மூலம் நன்மையையே செய்துள்ளான் என்பதாக கூறப்பட்டுள்ளது.
|
6
|
The third day he rose
again, according to the Scriptures.
He ascended to heaven and is seated at the right hand of the Father. |
எழுதியுள்ளவற்றின்படி அவர் மூன்றாம் நாளில் உயிரோடு
எழுந்தார்.அவர் வானத்துக்கு ஏறி தந்தையின் வலது பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார்
|
மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழும்ப வேண்டும்
என்று எங்கும் எழுதப்படவில்லை.எங்கிருந்து இக்கருத்து வந்தது என்று தெரியவில்லை.
|
7
|
He will come again
with glory
to judge the living and the dead. |
உயிரோடு இருப்பவர்களையும் இறந்து போனவர்களையும்
நியாயம் செய்வதற்காக அவர் மறுபடியும் தன் மகிமையுடன் திரும்ப வருவார்.
|
இக்கருத்தும் யூதர்களின் கருத்துக்கு முரனானது
|
8
|
His kingdom will never
end.
|
அவருடைய ஆட்சி முடிவில்லாதது
|
|
9
|
And we believe in the
Holy Spirit,
the Lord, the giver of life. |
வாழ்வைக் கொடுப்பவரான ஆண்டவராகிய தூய ஆவியின்
மேலும் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்.
|
இக்கருத்தும் யூதர்களின் கருத்துக்கு முரனானது.
|
10
|
He proceeds from the
Father and the Son,
and with the Father and the Son is worshiped and glorified. |
இவர்(தூய ஆவி) தந்தை மற்றும் மகனிடம் இருந்தே
வருகிறார்.தந்தை மற்றும் மகனுடன் சேர்ந்து இவரும்(தூய ஆவி) மகிமைப்படுத்தப்பட்டு
வணங்கப்படுகிறார்.
|
இக்கருத்தும் யூதர்களின் கருத்துக்கு முரனானது.
|
11
|
He spoke through the
prophets.
We believe in one holy catholic and apostolic church. |
இவர்(தூய ஆவி) இறைவாக்கினர் மூலமாக பேசினார்.நாங்கள்
ஒரே புனித கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தல சபையின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.
|
கத்தோலிக்க சபை என்பது “அனைவருக்குமான சபை” அல்லது
Universal Church என்று பொருள்.அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு ஏற்பட்ட குழப்பத்தின்
விளைவாக பல்வேறு கிளை சபைகள் தோன்றின.அவைகளை ஒன்றினைத்து உருவாகியதுதான் கத்தோலிக்க
சபை.கத்தோலிக்(Catholic) என்றால் “Universal-அனைத்து” என்று பொருள்
|
12
|
We affirm one baptism
for the forgiveness of sins.
|
பாவங்களின் மன்னிப்பிற்காக ஒரே திருமுழுக்கை
நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
|
|
13
|
We look forward to the
resurrection of the dead, and to life in the world to come. Amen.
|
இறந்தவர்கள் உயிரோடு எழும்பி வரப்போகும் உலகில்
வாழ்வடைவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஆமென்.
|
முடிவுரை:
திரித்துவம் என்பது பழைய ஏற்பாட்டில் எங்கும் இல்லாத ஒரு கருத்தாகும்.யூதர்கள் இதனை முற்றிலும் நிராகரிக்கின்றனர்.ஒரே கடவுள் கொள்கைக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது.மனிதர்கள் ஒன்று கூடி ஒரு கருத்தை ஏற்படுத்தி அதனை பல போராட்டங்களுக்கு இடையே சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளனர்.
இந்த சுருக்கமான வரலாறு "A HISTORY OF CHRISTIANITY - DIARMAID MACCULLOCH " என்ற புத்தகத்தினை தழுவி எழுதப்பட்டது.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:https://drive.google.com/file/d/1FBvKsBfslmYFPbE47sZurrn81RyL5m3a/view?usp=sharing
No comments:
Post a Comment