திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 3
உரோம்(Rome) மற்றும் அர்லேஸ்(Arles) போன்ற நகரங்களில் நடைபெற்ற பிஷப்புக்களின் ஆலோசனை கூட்டமானது பெரும் வெற்றி பெற்று ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும் வேறு ஒரு வகையில் கிறித்தவத்திற்கு உதவி செய்தது.சபைகளில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கென்று ஒரு வழிமுறையை "பிஷப்புக்களின் ஆலோசனைக் கூட்டம்(Council of Bishops)" தந்தது.அடுத்து வந்த நூற்றாண்டுகளில் இம்முறை ஆழமாக வேரூன்றியது.வலிமை வாய்ந்த உரோம படைகளை வைத்திருக்கும் மன்னனிடம் இருந்து "கடவுளின் படைகளுக்கு" கிடைத்த ஒரு பெரும் சலுகையாக இது பார்க்கப்பட்டது.நாளடைவில் இது நன்றாக வேரூன்றி விட்டது.பின்வந்த காலங்களில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மன்னரை கலந்தாலோசிக்காமலேயே (Independent Authority) முடிவுகள் எடுப்பதற்கு பிஷப்புக்களுக்கு தனி அதிகாரம் இருக்கிறது என்ற பார்வைக்கு,கத்தோலிக்கர்கள் மத்தியிலும் பிற கிறித்தவ அமைப்புக்கள் மத்தியிலும்,இது வித்திட்டது.இது புது அதிகார சிக்கல்களையும் உருவாக்கியது.பின்வந்த ஆட்சியாளர்களுக்கும் பிஷப்புக்களுக்கும் இடையே அதிகார குழப்பங்களையும் இம்முறை உருவாக்கியது.
இப்பொழுது கத்தோலிக்க சபைகள் ஓசையின்றி "பேரரசினுடைய சபைகளாக" மாறியது.கத்தோலிக்க சபைகள் ஆட்சி அதிகாரங்களுக்குள் காலடி எடுத்து வைத்தது இம்முறையால்தான்.மன்னனால் வழங்கப்பட்ட சலுகைகள் கத்தோலிக்க சபைகளை அரசின் ஆட்சி அதிகாரங்களில் மெதுவாக தலையிட செய்தது.உரோமின் படைகள் எப்படி மன்னருக்கு கட்டுப்பட்டு இருந்தனவோ அவ்வாறே சபைகளும் மன்னருடன் தொடர்பில் இருந்தன.படைகளின் முன்னேற்றம் எவ்வாறு மன்னரை சார்ந்து இருந்ததோ அவ்வாறே சபைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் மன்னரை சார்ந்து இருந்தது.பேரரசுக்குள் அடங்கிய அனைத்து பகுதிகளும் உரோம் ஆட்சியை விரும்புகிறது என்று எவ்வாறு கூற இயலாதோ அது போன்று சபைகளின் இப்படிப்பட்ட தொடர்பையும் பலர் விரும்பாமலும் இருந்தனர்.ஆட்சியை யாரெல்லாம் விரும்ப வில்லையோ அவர்கள் சபைகளின் இத்தகைய தொடர்பையும் விரும்பவில்லை.
எகிப்தில் இருந்த அலெக்சாண்ட்ரியாவில் (Alexandria) சபை ஒன்று இருந்தது என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.அது ஒரு புகழ்வாய்ந்த சபையாகவும் இருந்தது.இப்பொழுது ஒரு புது குழப்பத்தை இச்சபை உருவாக்கியது.கிறிஸ்து(Christ) யார் என்பது பற்றிய குழப்பம் நீண்ட காலமாக இருந்து வந்தது.அதாவது இயேசு கிறிஸ்துவின் இயல்பு(Nature),அவருடைய முக்கியத்துவம்(Importance),கடவுளாகிய தந்தை(The Father) மற்றும் அவருடைய மகன்(The Son) என்பவைகளைப் பற்றியது.இதை ஆரம்பித்தது அலெக்சாண்ட்ரியா சபையாகும்.இது மிக நீண்ட கால விவாதமாக இருந்து வந்தது.இக்குழப்பத்தை தீர்ப்பதற்காக கான்ஸ்டான்டின் முடிவு செய்தான்.அடுத்த ஆலோசனைக்கு கூட்டத்தைக் கூட்டினான்.
மிக சுருக்கமாக நடைபெற்று ஒரு முடிவு எட்டப்பட்டது என்ற பெருமை இக்கூட்டத்திற்கும் கிடைக்கவில்லை.ஆனால் முடிவு ஒன்றை நோக்கி பயணித்த கூட்டம் என்று கூறலாம்.கிறிஸ்து பற்றிய நீண்டகால விவாதத்திற்கு ஒரு முடிவு எட்டப்பட்ட கூட்டம் என்றும் இதைக் கூறலாம்.
ஏரிஸ்(Arius) என்ற புகழ்பெற்ற மற்றும் திறமைவாய்ந்த போதகர் ஒருவர் இருந்தார்.கிறித்தவ நம்பிக்கை என்ன என்பது பற்றி மற்றவர்களுக்கு விளக்குவதற்காக ஒரு அறிவார்ந்த அறிக்கையை தயாரிக்கும் முனைப்பில் இவர் இருந்தார்.இதற்காக இவர் கடவுளைப்பற்றிய "பிளாட்டோவின் தத்துவங்களுடன்" போராட வேண்டியிருந்தது.கடவுள் என்பவர் தொடக்கமும் முடிவும் இல்லாதவர்(Eternal ),அவரை அறிந்து கொள்வது கடினம் (Unknowable) என்பது பிளாட்டோவின் தத்துவம் ஆகும்.இக்கருத்துப்படி பார்த்தோமானால் இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல,காரணம் நற்செய்தி புத்தகங்கள் மூலமாக அவருக்கு பிறப்பு, இறப்பு மற்றும் அவருடைய நடவடிக்கைகள் போன்றவற்றை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம்.இதன் பொருள் என்னவென்றால்,கடவுள் ஒருவராக மட்டும் இருப்பதால்(God is One) இயேசு கிறிஸ்து வேறு ஏதாவது ஒரு பாத்திரத்தில்தான்(கடவுள் என்ற பாத்திரம் தவிர) வரவேண்டி இருக்கிறது,அவர் கடவுள் அல்ல,தந்தை என்ற பாத்திரத்தில் இயேசு வர முடியாது.இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அவர் படைக்கப் பட்டிருந்தாலும்(Created) அல்லது பிறப்பிக்கப் பட்டிருந்தாலும்(Begotten) கூட ,அவர் "தந்தை (The Father)" என்ற பாத்திரத்தில் வர முடியாது.மேலும் ஏரிஸ் கூறுகிறார்,தந்தை என்பவர் "பிரிக்கப்பட முடியாதவர்(Indivisible) என்ற காரணத்தினால் தன்னிலிருந்து இயேசுவை அவர் படைத்திருக்க முடியாது."மகன்(The Son)" என்பவர் இந்த உலகம் மற்றும் இதிலுள்ள அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்னரே உருவாக்கப் பட்டார்(Created Before all Things) என்றால் இயேசு கிறிஸ்து என்பவர் "ஒன்றுமில்லாமையிலிருந்து" உருவாக்கப்பட்டார்(Created out of Nothing) என்றே நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது,அதாவது அவரும் உருவாக்கப்பட்டார்(Created) என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.இக்கருத்துக்காக ஏரிஸ் பின்வருமாறு கேலி செய்யப்பட்டார்."There was When he was not",அதாவது அவர் இல்லாத போது அவர் இருந்தார்.இதற்காக ஏரிஸ் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.
முடிவாக ஏரிஸ் கருத்துப்படி கிறிஸ்து என்பவர் "தந்தைக்கு கீழானவர்(Subordinate or Inferior) அல்லது அவரை விட தாழ்ந்தவர் மற்றும் வெறுமையிலிருந்து படைக்கப் பட்டவர்(Created out of Nothing)" என்பதே ஆகும்.ஓரிகன்(Origen) மற்றும் பல பழங்கால எழுத்தாளர்கள் இதையேதான் கூறுவதற்கு விழைந்தனர்.பலவகைகளில் ஓரிகன்(Origen) என்பவரின் வாரிசு என்பதாகவே ஏரிஸ்(Arius) பார்க்கப்பட வேண்டிருக்கிறார்.மேலும் அலெக்சாண்ட்ரியா நகரத்தின் தத்துவ அறிஞர்கள் பலர் எவ்வாறு பார்க்கப்பட்டனரோ அவ்வாறே இவரும் பார்க்கப்பட வேண்டியிருக்கிறார்.இந்நகரம் தத்துவ அறிஞர்களுக்கு பெயர்போனது ஆகும்.
ஏரிஸ் பற்றிய பொதுவான கருத்து என்னவாக இருந்ததென்றால்,அவர் தத்துவத்தின்(Logic) பால் மட்டும் ஈர்ப்பு கொண்டவர் அல்ல.அவர் கிறித்தவர்களுக்கு தங்களின் மீட்பரை ஒரு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்த விரும்பினார்.அதாவது இயேசு என்பவர் தங்களைப் போன்ற ஒருவர்தான்,தங்களைப் போலவே பாடுகள் பட்டார்,அப்பாடுகள் மூலம் அவர் மேன்மையை அடைந்தார் என்று மக்களுக்கு கூற விரும்பினார்.எரிஸின் கிறிஸ்து என்பவர் படைக்கப் பட்டவைகளில் ஒருவராகவே இருந்தார், கடவுளின் ரூபம்(Image of God) என்பது போன்ற கருத்துக்களை அவர் ஏற்க வில்லை.
தன்னுடைய கருத்துக்களை சிறு பாடல்களாக கற்றுக் கொடுத்தார். இப்பாடல்கள் மூலம் அலெக்சாண்ட்ரியா நகரத்தின் சாதாரண மக்களிடையே பிரபலமும் அடைந்திருந்தார். இவருடைய நோக்கம் என்னவாக இருப்பினும் கி.பி.318-ல் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார். இவருடைய பிஷப்பாகிய அலெக்சாண்டர் கூட கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.எகிப்தின் பிஷப்புக்களால்(Local Council of Bishops - Synod) ஏரிஸ் கண்டனம் செய்யப்பட்டார்.இதன் காரணமாக ஏரிஸ் தூரத்தில் இருந்த கிறித்தவ சபைகளை தொடர்பு கொண்டார்.குறிப்பாக நிகொமெடியா(Nicomedia)-வின் பிஷப் யூசிபியஸ்(Eusibius)-ன் [வரலாற்று ஆசிரியர் யூசிபியஸ்(Eusibius)-டன் இவரை குழப்பிக் கொள்ளக் கூடாது] ஆதரவைப் பெற்றார்.இந்த நிகாமெடியாவின் பிஷப் மிகவும் தந்திரம் மற்றும் அரசியல் புத்திக்கூர்மை வாய்ந்தவர்.நிகாமெடியா நகரமானது கான்ஸ்டான்டிநோபிள் என்ற பெருமைவாய்ந்த நகரம் கட்டப்படுவதற்கு முன்னர் உரோமின்(Rome) கிழக்குப்பகுதி தலைநகராக இருந்தது.எரிஸ்க்கு ஆதரவு திரட்டும் அளவுக்கு பலம் வாய்ந்த அரசியல் பின்புலத்தை நிகாமெடியாவின் பிஷப் பெற்றிருந்தார்.அவ்வாறு திரட்டவும் செய்தார்.இப்பொழுது இப்பிரச்சினை மத்தியத்தரைக்கடல் பகுதியின் கிழக்கப்பகுதி முழுவதும் தீயாய் பரவியது.
தனக்கிருந்த ஒரே எதிரியாகிய கிழக்குப்பகுதியின் மன்னன் லிஸினிஸ்-ஐ(Licinius) தீர்த்துக்கட்டிய பின் தன் அரசை நிலைநிறுத்தும் பணியில் இருந்த மன்னன் கான்ஸ்டான்டினுக்கு இப்பிரச்சினை ஒரு தலைவலியாக இருந்தது.எனவே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் கிறித்தவ அமைப்புகளை ஒன்றினைக்க கான்ஸ்டான்டின் விரும்பினான்.பிஷப்புக்களின் ஆலோசனைக்கு கூட்டத்தை கூட்ட முடிவு செய்தான்(Council of Bishops).பத்து வருடங்களுக்கு முன்னர் ஆர்லெஸ்(Arles) நகரத்தில் தான் கடைபிடித்த அதே முறையை இப்பொழுதும் கையாள விரும்பினான்.முதலாவதாக கி.பி.324-ல் ஏன்சிரா (Ancyra) என்ற நகரத்தில் முடிவு செய்த கூட்டமானது ஏரிஸ்சின் எதிர்ப்பாளர்களால் முறியடிக்கப்பட்டது.எவ்வாறு மன்னரின் கூட்டம் முறியடிக்கப்படும்?
கூட்டம் முடிவு செய்யப்பட காலத்தில் அந்தியோக்(Antioch) நகரத்தினுடைய சபையின் பிஷப் இறந்து விட்டார்.இதனை ஒரு வாய்ப்பாக ஏரிஸின் எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.அந்தியோக் சபை பிஷப்புக்கு இரங்கல் தெரிவிக்கவும்,தங்களுடைய ஆதரவாளர்களில் ஒருவரையே புதிய பிஷப்பாக தேர்ந்தெடுக்கவும்,ஏரிஸின் கருத்துக்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.மேலும் "கிறிஸ்துவைப் பற்றி" தாங்கள் கொண்டிருக்கும் கருத்தே மிக சரியானது என்று அங்கு வைத்து அறிவிப்பு வெளியிட்டனர்.பின் வரும் காலங்களில் இதே போன்ற பல அறிவிப்புக்களை வெளியிடுவதற்கு இந்த முதல் அறிவிப்பே காரணமாக இருந்தது. எனவே ஏன்சிரா(Ancyra) நகரத்தில் கூட்டுவதாக இருந்த "பிஷப்புக்களின் கூட்டம்" தடைப்பட்டது.
இவ்வாறாக நடைபெறுவதாக இருந்த "பிஷப்புக்களின் ஆலோசனைக் கூட்டம்" தடைபட்டது.இது கான்ஸ்டான்டினுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது.
No comments:
Post a Comment