Friday, December 20, 2019

அப்போஸ்தலர் 2:18-தவறான மொழிபெயர்ப்பு

அப்போஸ்தலர்(திருத்தூதர் பணிகள்) 2:18-தவறான மொழிபெயர்ப்பு 

அப்போஸ்தலர் புத்தகத்தில் வருகின்ற ஒரு குறிப்பிட்ட வசனம் இன்று கிறித்தவ சபைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஒரு வசனம் ஆகும்.இவ்வசனத்தின் மூலம் இறைச்செய்தியாளர்கள் மக்களை தவறான வழியில் இட்டு செல்கிறார்கள். தங்களுடைய சொந்த பலனுக்காகவும் இவ்வசனம் பயன்படுகிறது.ஆனால் இவ்வசனம் எங்கிருக்கிறது என்று கேட்டால் அவர்கள் அனைவருக்கும் தெரியுமா  என்பது சந்தேகமே.தங்களுக்கு மிகப்பொருத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு இவ்வசனத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வசனம் என்ன என்பதை  முதலில் காண்போம்.
18 அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
தொடர்ந்து செல்வதற்கு முன் மேலே தரப்பட்ட இரண்டு மொழிபெயர்ப்புகளையும்  கூர்ந்து படியுங்கள்.முதல் வசனம் RC தமிழ் மொழிபெயர்ப்பு.இரண்டாவது வசனம் புரொட்டஸ்டண்ட் தமிழ் மொழிபெயர்ப்பு.ஆனால் இரண்டும் புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டப்பட்ட பழைய ஏற்பாட்டு வசனங்கள்.யோவேல் 2:29-ல் கூறப்பட்ட வசனமானது புதிய ஏற்பாட்டில் மேற்கோளாக தரப்பட்டுள்ளது.RC தமிழ்மொழிபெயர்ப்பானது, "உங்கள் பணியாளர்" என்று மொழிபெயர்க்கிறது.புரொட்டஸ்டன்ட்,"என்னுடைய ஊழியக்காரர்" என்று மொழிபெயர்க்கிறது."ஊழியக்காரர்" என்ற வார்த்தையும் "பணியாளர்" என்ற வார்த்தையும் ஏறத்தாழ ஒரே பொருளைத்தான் தரும் என்பது அனைவரும் அறிந்ததே.

குழப்பம் தில் வருகிறது என்றால்,"என்னுடைய பணியாளரா அல்லது உங்களுடைய பணியாளரா" என்பதில்தான்.இரண்டு மொழிபெயர்ப்புகளில் எது சரி? "என்னுடைய ஊழியக்காரர்" அல்லது "என்னுடைய பணியாளர்கள்" என்று இருந்தால் இன்றைய தேவ செய்தியாளர்கள் எனப்படுபவர்களுக்கு சரியாக இருக்கும் ஆனால் உண்மை எது என்று காணப்போகிறோம்.ஏன் இவர்களுக்கு "என்னுடைய ஊழியக்காரர்கள்" என்று இருந்தால் சரியாக இருக்கும் என்றால், தங்களை "தேவனுடைய  ஊழியக்காரர்கள்" என்று எண்ணிக்கொண்டு அல்லது கூறிக்கொண்டு இவர்கள் ஊழியம் செய்து வருகின்றனர்.இந்த குறிப்பிட்ட வசனம் அவர்களுடைய கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்பதால் அவ்வாறு இருக்க விரும்புகின்றனர்.

எது சரியான மொழிபெயர்ப்பு என்று பார்ப்பதற்கு முன்னால்,ஒரு சிறிய தகவல் நமக்கு தெரிய வேண்டும்.ஹீப்ரு மொழியில் "உங்கள்" அல்லது "உனது" அல்லது "எங்கள்" அல்லது "எனது" என்ற வார்த்தைகளை குறிக்க என்ன வார்த்தை பயன்படுகிறது என்று நமக்கு தெரிய வேண்டும்."ஏலோஹி(Elohi)" அல்லது "ஏலி(Eli)" என்ற வார்த்தை உங்களுக்கு அறிமுகமானதுதான்.இதனை ஹீப்ரு மொழியில் אֱלֹהֵי(வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்) இவ்வாறுதான் எழுதுவார்கள்.நாம் இதன் ஆங்கில வடிவத்திலிருந்தே புரிந்து கொள்வோம்,அது சுலபமாக இருக்கும்.

ஹீப்ரு மொழியில்,ஒரு வார்த்தை "ஐ(i)" என்ற ஒலியுடன் முடிவுற்றால்,அதன் பொருள் "என் அல்லது என்னுடைய(My)" என்று பொருள்படும்."Eloah" என்றால் "கடவுள்" என்று பொருள்."Eloah-i (ஏலோஹி)" என்றால் "என்னுடைய கடவுளே" அல்லது என் கடவுளே" என்று பொருள்.இது போன்றுதான் "Eli(ஏலி)" ஆகும்."El" என்றாலும் "கடவுள்" என்றுதான் பொருள்.எனவே "Eli(ஏலி)" என்ற வார்த்தையின் பொருள் "என் கடவுளே" என்பது ஆகும்.இயேசு இறக்கும் தருவாயில் கூறியது உங்களுக்கு தெரியும்.

இது போன்று "அவனுடைய", "உங்களுடைய" போன்ற சொற்களுக்கும் உள்ளன."உங்களுடைய" என்ற பன்மையைக் குறிக்கும்   வார்த்தைக்கு,ஹீப்ரு மொழியில் "km" என்ற ஒலிக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.எனவே நம்மால் இப்பொழுது யோவேல் 2:29-ன் சரியான மொழிபெயர்ப்பை கண்டுபிடிக்க முடியும்."உன் தேவன்" அல்லது "உங்களுடைய தேவன்" என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நமக்கு தெரியும்."உன்" என்றால் "ஒருவரை" குறிக்கும்."உங்களுடைய" என்றால் பன்மையை குறிக்கும்.கடவுள் மனிதர்களை பார்த்து "உங்களுடைய" என்று கூறினால், நமக்கு அவர் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்து நம்மை பன்மையில் அழைக்க வில்லை.பதிலாக,மனிதர்கள் என்ற கூட்டத்தை அவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்ளலாம்.ஆனால்,நாம் கடவுளை ஒருமையில் அழைக்க முடியாது,பன்மையில்தான் அழைக்க வேண்டும்.நம்முடைய தந்தையையோ அல்லது தாயையோ பன்மையில்தான் அழைக்கிறோம்.அதற்க்கு பொருள் அவர்கள் "பலர்" என்பது அல்ல.இந்த உண்மைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹீப்ரு மொழியில் ஒரு வார்த்தை "உங்களுடைய" என்ற பொருளைத் தர வேண்டுமானால்,அது "km" என்ற ஒலிக்குறியுடன் முடிய வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம்.எடுத்துக்காட்டாக,யோவேல் 2:28-ம் வசனத்தை பார்க்கலாம்.
28 அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.
28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். 
இரண்டு மொழிபெயர்ப்புகளும் இங்கு ஒன்றுக்கொன்று ஒத்துப்போகின்றன."உங்கள் புதல்வர்" மற்றும் உங்கள் புதல்வியர் " என்று சரியாகவே உள்ளன.இவ்வசனம் எவ்வாறு ஹீப்ரு மொழியில் இருக்கிறது என்று பார்த்தால் உண்மை விளங்கும்.
ְ הָ יָה (1:3 (28:2 u·eie and·he-becomes אַ חֲ רֵ י achri after ־ - כֵ ן kn so אֶ שְׁ פּ " ashphuk I-shall-pour-out אֶ ת ath » ־ - רוּחִ י ruch·i spirit-of·me עַ ל ol on ־ - כָּ ל kl all-of ־ - בָּ שָׂ ר bshr flesh .   וְ נִ בְּ אוּ u·nbau and·they-nprophesy בְּ נֵיכֶ ם bni·km sons-of·you(p) וּבְ נ תֵ יכֶ ם u·bnuthi·km and·daughters-of·you(p) זִ קְ נֵיכֶ ם zqni·km old-ones-of·you(p) חֲ 7מ ת chlmuth dreams יַחֲ 7מוּן ichlmu·n they-shall-dream בַּ חוּרֵ יכֶ ם bchuri·km choice-young-men-of·you(p) חֶ זְ יֹ נ ת chzinuth visions יִ רְ אוּ irau they-shall-see : 
And it shall come to pass afterward, [that] I will pour out my spirit upon all flesh; and your sons and your daughters shall prophesy, your old men shall dream dreams, your young men shall see visions: 
"כֶ ם "என்ற இந்த எழுத்துக்கள்தான்,"km" என்ற உச்சரிப்பை தருகிறது."Bni" என்றால் "புதல்வர்கள்" பொருள்,"bni-km" என்றால் உங்கள் புதல்வர்கள் என்று பொருள்.இவ்வசனம் இஸ்ரயேல் மக்களை நோக்கி பேசப்படுகிறது.எனவே "உங்கள்" என்ற வார்த்தை "இஸ்ரயேல்" மக்களைக் குறிக்கிறது.

இப்பொழுது யோவேல் 2:29-ல் "உங்களுடைய" அல்லது "என்னுடைய" என்ற இரு வார்த்தைகளில் ஒன்று இருக்க வேண்டும்.காரணம் "உங்களுடைய பணியாளர்கள்(ஊழியர்கள்)" என்ற வார்த்தை சரியானதா அல்லது "என்னுடைய பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்)" என்ற வார்த்தை சரியானதா என்று நாம் பார்க்க இருக்கிறோம். கண்டுபிடித்துவிட்டால், தற்போதைய ஊழியக்காரர்கள் யோவேல் 2:29-ஐ சரியாக பயன்படுத்துகிறார்களா  என்றும் அறிந்துகொள்ளலாம்.அதற்காக அக்குறிப்பிட்ட வசனத்தை ஹீப்ரு மொழியில் கீழே தந்துள்ளேன்.
2:29 (3:2) םַגְ ו u·gm and·moreover עַ ל ol on ־ - הָ עֲבָ דִ ים e·obdim the·male-servants וְ עַ ל u·ol and·on ־ - הַ שְּׁ פָ ח ת e·shphchuth the·maids בַּ יָּמִ ים b·imim in·the·days הָ הֵ מָּ ה e·eme the·they   אֶ שְׁ פּ " ashphuk I-shall-pour-out אֶ ת ath » ־ - רוּחִ י ruch·i spirit-of·me :
And also upon the servants and upon the handmaids in those days will I pour out my spirit 
மேலே பெரிதாக்கிக் காட்டப்பட்ட  எழுத்துக்களை கவனித்துப்பாருங்கள்,அங்கு "km" என்று முடிய வில்லை."ஆண் பணியாளர்கள்" மற்றும் "பெண் பணியாளர்கள்" என்று பொதுவாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது "ஊழியக்காரர்கள் மற்றும் ஊழியக்காரிகள்" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது."என்னுடைய" அல்லது "உங்களுடைய" என்று பொருள்தரக்கூடிய ஹீப்ரு வார்த்தைகள் அங்கு இல்லை.யாருடைய பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்) என்று குறிப்பிடும் வார்த்தைகள் இங்கே இல்லை.

எனவே "என்னுடைய ஊழியக்காரர்கள்" மற்றும் "என்னுடைய ஊழியக்காரிகள்" என்று மொழிபெயர்த்தது தவறு.முந்தைய வசனத்தை கவனித்து பார்த்தால்,இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "பணியாளர்கள்" என்ற வார்த்தை நாம் நினைப்பது போன்று கடவுளின் கோவிலில் ஊழியம் செய்பவர்களைக்கூட குறிக்காது.காரணம் அதற்க்கென்று தனி வார்த்தைகள் உள்ளன.அப்படியென்றால் இந்த வசனத்தில் உள்ள "பணியாளர்கள்" என்பவர்கள் உண்மையில் யார்?இதற்கு பதில் காண்பதற்கு இவ்வார்த்தைக்குரிய Strong எண்ணை காண வேண்டும்.இதற்குரிய எண் 5650 ஆகும்.இதற்க்கு பொருள் கீழே தரப்பட்டுள்ளது.


உச்சரிப்பு:ஏபத் ,ebed: slave, servant
Original Word: עֶבֶד
Part of Speech: Noun Masculine;பெயர்ச்சொல் மாறும் ஆண்பால்.
Transliteration: ebed
Phonetic Spelling: (eh'-bed):ஏ-பத்
Definition: slave, servant: அடிமை,வேலைக்காரன்.

எனவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள "பணியாளர்கள் அல்லது ஊழியக்காரர்கள்" என்பது நாம் அனைவரும் நினைப்பது போன்று கடவுளின் பணியாளர்கள் அல்ல.அக்காலத்தில் அடிமைகளை வாங்கி தங்களின் வேலைகளுக்காக மக்கள் பயன்படுத்திக்கொண்டனர்.இவ்வார்த்தை இவர்களைத்தான் குறிக்கிறது என்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.அக்குறிப்பிட்ட வசனத்தில் வரும் "மேலும்" என்ற வார்த்தையானது,நமக்கு ஒன்றையோ தெளிவாக கூறுகிறது.சமூகத்தில் அனைத்து நிலைகளில் உள்ளோரை வரிசைப்படுத்தி இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.புதல்வர்(குமாரர்), புதல்வியர்(குமாரத்திகள்), முதியோர்(மூப்பர்), இளைஞர்கள் இவர்களுக்கு பின்தான் இவ்வார்த்தைகள் வருகிறது.அதாவது பணியாளர்கள் (ஊழியக்கார்கள்), பணிப்பெண்கள்(ஊழியக்காரிகள்)  போன்றவைகள்.கடைசியாக வரும் இவ்வார்த்தைகளை முன்னால் "மேலும்" என்ற வார்த்தைக்குறிய ஹீப்ரு வார்த்தையான, םַגְ ו என்ற வார்த்தை வருகிறது."மேலும்" என்ற வார்த்தை வந்ததன் மூலம் நமக்கு கூற வரும் கருத்து என்னவென்றால்,இவர்கள்,அதாவது அடிமைகள்,இந்த மனிதர்கள் அடிமைகளாக இருந்தாலும்,"இவர்கள் மீதும் என் ஆவியை ஊற்றுவேன்" என்பதுதான்.குறிப்பாக இந்த அடிமைகள் புற இனத்தை சேர்ந்த அடிமைகள் அல்ல.அக்காலத்தில்,ஒருவரிடம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.இஸ்ரயேல் மக்களுக்குள்ளேயே இந்த அடிமை முறைகள் இருந்தன.பழைய ஏற்பாட்டில் இதற்கான குறிப்புகள் உள்ளன.தற்காலத்தில் சினிமாக்களில் காட்டப்படும் விலங்குகள் இடப்பட்டு கொடுமை செய்யப்படும் கறுப்பின அடிமைகள் போன்று கற்பனை செய்து விடாதீர்கள்.அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட வேண்டும் என சட்டங்களை கடவுள் மோசே மூலம் வழங்கியுள்ளார்.எனவே இஸ்ரயேல் மக்களுக்குள்ளேயே அடிமைகளாக இருப்பவர்களையே இந்த வாக்கியம் குறிப்பிடுகிறது.உபாகமம் 15:12-18 வாக்கியங்களை படித்துப்பார்த்தால் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று புரியும்.

இப்பொழுது நமக்கு தெளிவு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.யோவேல் 2:29-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் "பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்)" மற்றும் "பணிப்பெண்கள்(ஊழியக்காரிகள்)" அக்காலத்தில் இஸ்ரேல் மக்களுக்குள்ளேயே அடிமைகளாக(வேலைக்காரர்களாக) இருந்தவர்களையே குறிக்கிறது.அவர்கள் அடிமைகளாக இருந்தாலும் அவர்கள் மீதும் இரக்கம் கொண்டு தன் ஆவியை ஊற்றுவேன் என்று கடவுள் வாக்களிக்கிறார்.


இன்றைய "தேவ செய்தியாளர்கள்" என்று அழைக்கப்படும்   "ஊழியக்காரர்கள்"     யோவேல் 2:29-ல் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்) அல்ல. ஆனால் தங்களை இந்த யோவேல் 2:29 குறிக்கவில்லை என்று எத்தனை "தற்போதைய ஊழியர்களுக்கு" தெரியும்? அக்குறிப்பிட்ட     வசனம்  தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக நினைத்துக்கொண்டு தங்களை "மேலானவர்கள்" என்று எண்ணி கொண்டு, இவர்களைப்போன்றோர்  இன்று ஊழியம் செய்யும் விதம் பற்றி ஏறக்குறைய அனைவரும் அறிவர்.யோவேல் இறைவாக்கினர் வாழ்ந்த காலகட்டங்களில் இஸ்ரயேல் மக்களிடையே ஏழைகளாக இருந்து தங்கள் சகோதரர் வீடுகளில் வேலைக்காரர்களாக இருந்தவர்களை மேற்கூறப்பட்ட வாக்கியம் குறிக்கிறது என்று படத்தில் காட்டப்பட்டுள்ள எத்தனை பேருக்கு தெரியும்?படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேர் இன்னும் ஏழைகளாக இருந்து அடுத்தவர் வீடுகளில் வேலை செய்து சாப்பிடுகின்றனர்?

முடிவாக யோவேல் 2:29-ஐ மேற்கோள் காட்டியிருக்கும் பேதுருவும்(அப். 2:18) தவறாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.இவை அனைத்திற்கும் மேலாக புரொட்டஸ்டண்ட் தமிழ் திருமறையும் இவ்வாக்கியதை தவறாக மொழிபெயர்த்துள்ளது.RC தமிழ் திருமறை சரியாக மொழிபெயர்த்துள்ளது."உங்கள் பணியாளர்கள்" மற்றும் "உங்கள் பணிப்பெண்கள்" என்று மிகச்சரியாக மொழியாக்கம் செய்துள்ளது.ஆனால் புரொட்டஸ்டண்ட் தமிழ் (CSI,பெந்தேகோஸ்து...போன்ற சபைகளில்) தங்களுக்கு சாதகமாக மொழிபெயர்த்துள்ளது.புரோட்டஸ்டாண்டுகளின் விருப்ப மொழிபெயர்ப்பாகிய KJV, மற்றும் இன்னும் பல மொழிபெயர்ப்புகள் அக்குறிப்பிட்ட வசனத்தை எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

And also upon the servants and upon the handmaids in those days will I pour out my spirit.  -------------------(KJV) 
Even on my servants, both men and women,I will pour out my Spirit in those days.           -------------------(NIV)
and also on male and female slaves in those days I will pour out my Spirit.                      -------------------(CJB)
And also on My menservants and on My maidservants I will pour out My Spirit in those days. ----------------(NKJV)
I will even pour out My Spirit on the male and female slaves in those days.                      ---------------------HCSB)
and also upon the servants and upon the handmaids in those days will I pour out my Spirit. --------------------(ASV)
And also upon the avadim and upon the shefachot in those days will I pour out My Ruach   ---------------------(OJB)
Even on the male and female slaves,    in those days, I will pour out my spirit.               -------------------------(NRSVCE)(கத்தோலிக்)
and also upon the servants and upon the handmaids in those days will I pour out my spirit. --------------------(Authorised KJV )
29 அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். ------(தமிழ் RC பொது மொழிபெயர்ப்பு)
29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.------------------------------------------------------------------(புரொட்டஸ்டண்டு CSI,PENTECOST போன்றவைகள்)
கவனமுடன் படித்தால் மேற்கண்ட மொழிபெயர்ப்புகள் அனைத்திலிருமிருந்து ஒன்று தெளிவாக விளங்கும்.பிற்கால மொழிபெயர்ப்புகள் மூன்று மட்டுமே "என்னுடைய ஊழியக்காரிகாரர்கள்(பணியாளர்கள்)" என்று மொழிபெயர்த்துள்ளன.அவையாவன, NKJV, HCSB மற்றும் NIV ஆகும்.இம்மூன்றும் கிறித்தவம் சார்ந்தது.பொதுவாக "பணியாளர்கள்(ஊழியக்காரர்கள்,வேலைக்காரர்கள்)" என்று மட்டுமே எழுதப்பட்டு இருந்த ஒன்றை தங்களுக்கு சாதகமாக இருக்குமாறு மொழிபெயர்க்கப்பட்ட செயல் என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

புதிய ஏற்பாட்டில், அப் 2:18-ல் இவ்வாக்கியம் பேதுருவால் மேற்கோள் காட்டப்படுகிறது.எவ்வாறு அங்கு இவ்வசனம் எழுதப்பட்டுள்ளது என்றும் பார்ப்பது நல்லது.
18 அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர். -------------------(தமிழ் RC பொது மொழிபெயர்ப்பு).
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். -----------------(CSI,PENTECOST போன்றவை)
இந்த இரண்டு மொழிபெயர்ப்புக்களும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. கத்தோலிக்க பொது மொழிபெயர்ப்பு இங்கும் மிகச்சரியாக மொழிபெயர்த்துள்ளது.ஆனால் புரொட்டஸ்டண்டுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு செய்த தவறு அவர்களுடைய செயலாலேயே வெளிப்பட்டுவிட்டது.யோவேல் 2:29-யும் அப் 2:18-ம் சேர்த்து படித்துப்பார்த்தால் உண்மை விளங்கும்.அதை கீழே தருகிறேன்.அதற்க்கு முன்னால் அப் 2:18,யோவேல் 2:29-ன் மேற்கோள் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.வெவ்வேறு வசனங்கள் அல்ல.
29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.(யோவேல் 2:29)
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். (அப்.2:18)
முதலாவதில் வெறும் "ஊழியக்காரர்" என்று மட்டும்தான் உள்ளது.,இரண்டாவதில் "என்னுடைய"  என்ற வார்த்தையை சேர்த்தாகிவிட்டது.இப்பொழுது முடிவு இதை படிப்பவர்களுடையது.மேலும் அனைத்து புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்புகளும்(கத்தோலிக்க மொழிபெயர்ப்பை தவிர) "என்னுடைய பணியாளர்கள்" என்றே மொழியாக்கம் செய்துள்ளன.பழைய ஏற்பாட்டில் ஒருவிதமாகவும் புதிய ஏற்பாட்டில் அதே வாக்கியத்தை வேறு விதமாகவும் மொழிபெயர்க்க கரணம் என்ன?இயேசுவின் சீடர்களாகிய நாங்கள்தான் "அந்த பணியாளர்கள்(ஊழியர்கள்)",எங்களைத் தான் அது குறிக்கிறது,என்று கூறுவதற்காகவே பேதுரு அவ்வாறு கூறினாரா? இல்லை,பின்வந்த மொழிபெயர்ப்புகள் அவ்வாறு செய்து விட்டனவா?

ஊழியம் என்பது இன்று கார்போரேட் கம்பெனிகள் போன்று செயல்படுகின்றன என்பது பெரும்பாலும் உண்மை.இதற்கு வலுசேர்க்க வேண்டும் என்றால் தகுந்த ஆதாரங்கள் வேண்டும் என்ற காரணத்தினால் இவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்டன என்று கொள்ளலாமா?அப். 2:18-ன் உண்மையான வாக்கியம் யோவேல் 2:29-ல் உள்ளது,அங்கே  இஸ்ரயேல்  மக்களை அது குறிக்கிறது.ஆனால் அவர்களை முற்றிலும் மறக்கடிக்கும் விதமாக புதிய ஏற்பாட்டு வசனங்கள் உள்ளன.


முடிவாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது,வசனங்கள் தங்கள் வசதிக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது என்பதையே. இஸ்ரயேல்  மக்களை முற்றிலும் மறைத்து இன்று தங்களை குறிக்குமாறு மாக்களை திசை திருப்பிவிட்டனர். இவ்வுண்மையை புரிந்து கொண்டு திருமறையை சரியாக படிக்க முயலுவோம்.எனவே யோவேல் இறைவாக்கினர் குறிப்பிட்டது படத்தில் காட்டப்பட்டுள்ளவர்களை அல்ல.அப்போஸ்தலர்கள், தங்களை குறிக்குமாறு அவ்வசனத்தை பேதுரு மூலம் மாற்றிக்கொண்டனர்.அந்த சந்ததி இன்று வரை தொடர்கிறது.இஸ்ரயேல் மக்களில் ஏழைகளை குறித்த ஒரு வாக்கியம் இன்று பெரும் பணக்காரர்களை குறிக்கிறது.அப்.2:18 வேண்டுமென்றே செய்யப்பட ஒரு தவறு என்றே கருத வேண்டியுள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக அப்.2:18-ன் மூல வசனமாகிய யோவேல் 2:29 கூறும் கருத்து முற்றிலும் வேறான ஒன்று என்பதைப்பற்றி இக்கட்டுரைக்கு முன்னர் இரண்டு பகுதிகள் எழுதப்பட்டு உள்ளன.அவைகளையும் படித்துப்பாருங்கள்.

இரா.இருதயராஜ். 
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

Friday, December 13, 2019

யோவேல் 2-ம் அதிகாரமும் அப்போஸ்தலர்(திருத்தூதர்) 2-ம் அதிகாரமும் - ஒரு ஒப்பீடு பகுதி 2

யோவேல் 2-ம் அதிகாரமும் அப்போஸ்தலர்(திருத்தூதர்) 2-ம் அதிகாரமும் - ஒரு ஒப்பீடு பகுதி 2


அப்போஸ்தலர் (திருத்தூதர் பணிகள்) புத்தகத்தில் "Shavuot" என்ற  ஹீப்ரு வார்த்தைக்கு பதிலாக ஏன் "பெந்தேகோஸ்து" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.இப்பொழுது பேதுரு இம்மக்களிடம் என்ன பேசுகிறார் என்பதை பார்க்கலாம். அவர் பேச்சிலிருந்து சீடர்களுடைய சில புரிதல்களை நாம் தெரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.பேதுரு யோவேல் என்ற இறைவாக்கினரை மேற்கோள் காட்டி பேசுகிறார்.எனவே யோவேல் என்ன கூறியிருக்கிறார் என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.

யோவேல் புத்தகம் மூன்று அதிகாரங்கள் கொண்ட ஒரு சிறிய புத்தகம் ஆகும்.இந்த யோவேல் இறைவாக்காளர் எந்த காலகட்டங்களில் வாழ்ந்தார்,எந்த மன்னர்களின் காலத்தில் வாழ்ந்தார் என்பதை பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை.அவருடைய தந்தையார் பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

யோவேல் புத்தகத்தின் முதல் அதிகாரம் மிக பயங்கரமான ஒரு பார்வையைத்  தருகிறது.அதாவது யோவேல் அதை பார்க்கிறார்.தன்னுடைய நாடு பாழாய் போவதை அவர் காண்கிறார்.முதலாம் அதிகாரம் முழுவது இதைப்பற்றித்தான் கூறுகிறது.முதலாம் அதிகாரத்தின் முடிவில் யோவேல் கர்த்தரை நோக்கி கெஞ்சுவது போன்றும் உள்ளது.
19 ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள் தீக்கிரையாயின; வயல்வெளியிலிருந்த மரங்கள் அனைத்தையும் நெருப்பு சுட்டெரித்துவிட்டது.
20 நீரோடைகள் வற்றிப்போனதால் காட்டுவிலங்குகள்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; பாலைநிலத்திலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு விழுங்கிவிட்டது.[யோவேல் 1:19,20]
19. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜுவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.
20. வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.[யோவேல் 1:19,20] 
மேற்குறிப்பிட்ட இந்த இரு வசனங்களுக்கு முந்தைய வசனங்களை படித்துப்பாருங்கள்,கலங்கி போவீர்கள்.அவ்வளவு பயங்கரமாக இருக்கும்.இந்த அழிவு நாட்டின் மீது வரப்போவதை அவர் காண்கிறார்.தொடர்ந்து இரண்டாம் அதிகாரத்தில் அந்த கொடுமையான நாள் வந்துவிட்டதாகவும் அவர் காண்கிறார்,பதறுகிறார்.

யோவேல் தன் கண்களால் காண்பது போன்று எழுதுகிறார்.ஒரு பெரும்படையை காண்கிறார்.அப்படை எப்படி இருக்கும் என்னவெல்லாம் செய்யும் என்றும் கூட காண்கிறார்.யார் அவர்கள்? இதனை அவர் நேரடியாக கூறவில்லை.ஆனால் அவர் விவரித்த விதத்தையும்,வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் கொண்டு ஒப்பிட்டு பார்த்தால், இது பாபிலோன் படையெடுப்பைப் போன்று நமக்கு தோன்றுகிறது.ஆனால் அதில் சரியான முடிவு எட்டமுடியவில்லை.காரணம்,20-ம் வசனம்.
20 வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு விரட்டியடிப்பேன்; அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்; ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.
20. வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.
இவ்வசனத்தில் "வடதிசை படைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பாபிலோன் எருசலேமுக்கு கிழக்கே உள்ளது,வடக்கே அல்ல.உண்மையில் வடக்கே இருப்பது அசீரிய படைகள் ஆகும்.வரலாற்று நிகழ்வுகள்,யோவேல் காண்பது அசீரிய படைகள்தான் என்ற முடிவை எடுப்பதற்கு தடையாக உள்ளது.மேலும் 3-ம் அதிகாரத்தில் "கிரேக்க" நாட்டைப்பற்றியும் யோவேல் குறிப்பிடுகிறார்.இது பாபிலோனுக்கு பின் வரும் வரலாறு.எனவே சரியான ஒரு முடிவை எட்ட முடிய வில்லை.

ஆனாலும் நாம் இப்பொழுது புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ,ஒரு பேரழிவை யோவேல் காண்கிறார்.இப்பேரழிவு கர்த்தரால் கட்டளையிடப்படுகிறது.இப்பேரழிவு நடைபெறும் நாள்தான் "கர்த்தருடைய நாள்(ஆண்டவரின் நாள்)" என்று குறிப்பிடப்படுகிறது.வரலாற்றில் இஸ்ரயேலுக்கு இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தும் இருக்கிறது.அது பாபிலோனால் வந்தது என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்த சூழ்நிலையில் கர்த்தர் ஒன்றைக்கூறுகிறார்.அதைக் கவனியுங்கள்.
12 இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் ; என்கிறார் ஆண்டவர்.
12. ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார். 
அடுத்ததாக வரும் வசனங்கள் யோவேல்,இஸ்ரயேல் மக்களிடம் பேசுவது போன்று உள்ளது.ஆனால் நம்மால் உறுதியாக கூறமுடியவில்லை.அவ்வசனங்களை கர்த்தர் பேசுவது போன்று எண்ணக்கூடிய வகையிலும் உள்ளது.கூர்ந்து கவனித்தால் யோவேல்தான் தன் மக்களிடம் பேசுகிறார் என்று உணர முடியும்.
13 நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். ; அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.
13. நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
அதாவது,இஸ்ரேல் மக்களை நோக்கி யோவேல் கூறுகிறார்.தங்கள் வழிகளை விட்டு திரும்புமாறு கூறுகிறார்.கர்த்தரிடம் விண்ணப்பம் செய்யுமாறு கூறுகிறார்.கோவில் குருக்களை உன்ன நோன்பு இருக்க சொல்கிறார்.உருக்கத்துடன் விண்ணப்பம் செய்ய சொல்கிறார்.இவ்வாறெல்லாம் செய்தால் ஒருவேளை கர்த்தர் தான் செய்ய நினைத்த தீங்கை செய்யாமல் இருப்பார் என்று கூறுகிறார்.

யோவேல் கூறியவாறு விண்ணப்பம் செய்தால் கர்த்தர் பதிலளிக்கும் விதத்தினைப்பற்றி 18-ம் வசனத்திலிருந்து 30-ம் வசனம் வரையில்  நாம் தெரிந்து கொள்ளலாம்.ஆனால் மக்கள் அவ்வாறு செய்தனரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.மேலும், மக்கள் யோவேல் கூறியவாறு விண்ணப்பம் செய்தால் ஒரு அரிய செயல் ஒன்றையும் கர்த்தர் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.அது,
28 அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.
29 அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.
28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். 
[மேற்கூறப்பட்டுள்ள இரண்டு வசனங்களில்,RC தமிழ் திருமறைக்கும் ப்ரோட்டஸ்டண்ட் தமிழ் திருமறைக்கும் இடையே மொழிபெயர்ப்பு வேறுபாட்டை காண முயலுங்கள்] 

யோவேல் கூறியவாறு கர்த்தரிடம் விண்ணப்பம் செய்தால் அவர் தன்னுடைய ஆவியையும் அருளுவார் என்று வசனங்கள் கூறுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,வசனங்கள் 18-லிருந்து 30-வரை கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் அனைத்தும் நிபந்தனைகளின் அடிப்படையில் உள்ளன.நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.வரலாறு கூறுவது என்னவென்றால்,இஸ்ரேல் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டனர் என்பதே.மூன்றாவது அதிகாரம் இதை உறுதிப்படுத்துகிறது.இந்த அதிகாரத்தில் இஸ்ரேல் மக்களை சிதறடித்த நாடுகளை கர்த்தர் எவ்வாறு தண்டிக்கிறார் என்பதைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

இயேசு மற்றும் அவர்களுடைய சீடர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் மிக கொடிய அடக்குமுறைகளுக்குள்(ரோமர்களின் கீழ்)  இஸ்ரயேல்  மக்கள் இருந்தனர்.அதாவது மக்கள் இன்னும் அடிமைத்தனத்துக்குள்தான் இருக்கின்றனர்.அதன் பின்னர்தான் இந்நிகழ்வு,அதாவது பேதுரு பேசும் நிகழ்வு நடைபெறுகிறது.இப்பொழுது யோவேல் புத்தகம் கூறுவதைப்பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

  • யூத நாட்டை நோக்கி மாபெரும் அழிவு ஒன்று வருவதை யோவேல் என்ற இறைவாக்காளர் காண்கிறார்.
  • அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் மக்கள் கர்த்தரிடம் உருக்கத்துடன் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
  • அவ்வாறு செய்தால் கர்த்தர் ஒருவேளை தான் செய்ய நினைக்கும் தீங்கை செய்யாமல் விடுவார்.
  • யோவேல் கூறியவாறு கர்த்தரிடம் விண்ணப்பம் செய்தால் நல்ல ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்.
  • அந்த ஆசீர்வாதங்களில் சில;இறைவாக்கு உரைத்தல்,கர்த்தரின் ஆவியை பெறுதல்.
  • கர்த்தர் இரண்டு செயல்களை முன் வைக்கிறார்.ஒன்று அவரை நோக்கி உருக்கத்துடன் விண்ணப்பம் செய்தல்.இரண்டு,அழிவை எதிர்கொள்ளுதல்.
  • மேற்கூறிய இரண்டில் எது நடந்தது என்றால்,அழிவுதான்.இவை அனைத்தும் இஸ்ரேல் மக்களுக்கு கூறப்பட்டுள்ளது என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
யோவேல் புத்தகத்தைப்பற்றி கடைசியாக இரண்டு முடிவுகள் எடுக்கலாம்.யோவேல் கூறிய ஆசீர்வாதங்கள் கிடைத்ததென்றால் தீங்கு நடக்கவில்லை,தீங்கு நடந்ததென்றால் ஆசீர்வாதங்கள் கிடைக்கவில்லை.வரலாற்றை நோக்கினால்,தீங்குதான் நடந்திருக்கிறது என்று கூறமுடியும்.மேலும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் இஸ்ரயேல்  மக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

நூற்றுக்கணக்கான வருடங்கள் கழித்து இயேசு வருகிறார்.அப்பொழுதும் யூத மக்கள் அடிமைத்தனத்தில்தான் இருக்கின்றனர்.அவர் இறந்த பிறகு "பெந்தேகோஸ்து" நாள் வருகிறது.அப்பொழுது பேதுரு பேசுகிறார்.


பேதுரு என்ன பேசுகிறார்:

இந்த நாள் யூதர்களுக்கு உரிய ஒரு பண்டிகை நாளாகும்.இயேசுவின் சீடர்களை பூர்வகுடி யூதர்கள் வெறுத்தனர் என்பதை முதலாம் பகுதியில் பார்த்தோம்.இந்த சீடர்களும் அடிப்படையில் யூதர்களே என்பதையும் நாம் மறக்கக் கூடாது.எனவே இவர்களும் இப்பண்டிகையை கொண்டாட வேண்டும்.இந்நிலையில் இவர்கள் கூட்டம் போடுகின்றனர்.இவர்களுடைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பூர்வகுடி யூதர்கள் அல்ல என்பதையும் நாம் முன்னரே பார்த்தோம்.

இப்பண்டிகையை மிக நுட்பமாக, எப்படி  யூதர்களுடைய முறைமைகளில் இருந்து  மாற்றுகிறார்கள் என்பதை பாருங்கள்.இப்பண்டிகை எப்படி கொண்டாடப்பட வேண்டும் என்பதை லேவியராகமம் புத்தகம் நமக்கு கூறுகிறது.அன்றைய நாளில் ஒரு இறைவாக்கு நிறைவேறுவது போன்று நமக்கு பேதுரு கூறுகிறார்.அது என்ன இறைவாக்கு? அதை பேதுருவின் வார்த்தையிலே கவனிப்போம்.
16 நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே.
17 அவர் மூலம் கடவுள் கூறியது; ‘இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர்.[தி.தூ.ப 2:16,17]
16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;[அப் 2:16,17]
கடைசி நாள் அல்லது இறுதி நாள் என்பது என்ன? யோவேல் அவ்வாறு கூறியிருக்கிறாரா?இதன் பதில் இல்லை என்பதுதான்."இறுதிநாள்" என்ற ஒன்றைப்பற்றி யோவேல் கூறவே இல்லை."ஆண்டவரின் நாள்" அல்லது "கர்த்தரின் நாள்" என்றே கூறியிருக்கிறார்.அது என்ன நாள் என்றும் யோவேல் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.யூத  நாட்டின் மீது ஒரு பேரழிவை கர்த்தர் கட்டளையிடுகிறார்,இப்பூமிக்கு அல்ல.அப்பேரழிவை ஒரு பெரும் படை கொண்டு நடத்த இருப்பதாக யோவேல் காண்கிறார்.அப்பேரழிவு நடக்கும் நாளைத்தான் "கர்த்தரின் நாள்" அல்லது "ஆண்டவரின் நாள்" என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இங்கு பேதுரு அதை "இவ்வுலகத்தின் இறுதி நாள்" என்று கருதிக்கொண்டு பேசுகிறார்.ஆண்டவரின் அந்நாள் வரும்முன் சில அடையாளங்களை வானத்தில் நமக்கு காண்பிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை நாம் புரிந்து கொண்டதுதான் தவறு,பேதுரு கூறுவது போன்று அது இவ்வுலகத்தின் இறுதி நாள் என்றும் நாம் கருத்துவோமானால்,அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் இயேசுவின் பெயரை சொல்லி கூப்பிட சொல்லவில்லை.மாறாக கர்த்தரின் பெயரை சொல்லி கூப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது.
21 அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர்.’
21. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். 
இங்கு கர்த்தருடைய பெயர் என்பது இயேசு அல்ல.அது மிகவும் புனிதமான பெயர் ஆகும்.

அடுத்ததாக கர்த்தர் தன்னுடைய ஆவியை அனைவர் மேலும் ஊற்றும் பொழுது என்ன நடக்கும் என்று பேதுரு கூறுகிறார் என்று பார்த்தால் அது யோவேல் இறைவாக்காளர் உரைத்தது போன்றே உள்ளது.ஆனால் பேதுருவும் மற்ற சீடர்களும் அவ்வாறு செயல்பட்டனரா என்றால்,இல்லை.ஆவி ஊற்றப்பட்டதாக பேதுரு கூறுகிறார்.ஆவி ஊற்றப்பட்டவுடன் தீர்க்க தரிசனம் உரைக்க வேண்டும்,சொப்பனங்கள் காண வேண்டும்.இவைகள் நடந்தது  போன்று கூறப்படவில்லை.பதிலாக மற்ற மொழிகளில் பேசியதை ஆவியின் விளைவுதான் என்று பேதுரு கூறியிருக்கிறார்.என்ன பேசினார்கள் என்பதை அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்தை எழுதியவர் கூறவில்லை.

இறைவாக்காளர் யோவேல் ஒரு குறிப்பிட்ட செயலுக்காக கர்த்தரின் வார்த்தைகளை எழுதியுள்ளார்.ஆனால் பேதுரு அதை தனக்கேற்றாற்போல் பயன்படுத்துகிறார்.மேலும் பேதுரு சில கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.
22 இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே.
22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். 
மேற்கூறப்பட்ட வசனம் மூலம் பேதுருவும் அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதிவரும் ஒரு கருத்தை மறைமுகமாக நமக்கு தருகின்றனர்.இயேசு யார் என்பதை கடவுள் யூதர்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதே அது.ஆனால் நமக்கு அவர் யார் என்று கூறவில்லை.அதாவது மக்கள் முன் பேசுகிற பேதுரு வெளிப்படையாக "இன்னார்தான் இயேசு" என்று கூறவில்லை. "இயேசுதான் மேசியா" என்று பேதுரு கூற முற்படுகிறார் இதை  நாம் புரிந்து கொள்ள வேண்டியது.அப்பொழுது இதை அவர் கூறினால் கலவரம் ஏற்படும் என்பதை உணர்ந்து அவர் வெளிப்படையாக கூறவில்லை.மற்றொரு தவறான புரிதலை கீழ்வரும் வசனம் மூலம் காணுங்கள்,
24 ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.
24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
மரணம் என்பது கடவுளால் மனிதர்களுக்கு உறுதிசெய்யப்பட்டது.இதை ஒரு வேதனை என்கிறார் பேதுரு.மனிதன் இறந்தபின் அவனால் எதுவும் உணர இயலாது.பின் எப்படி வேதனை அவனுக்கு தெரியும்? மரணித்த பின் வேதனை என்பது கிரேக்கர்களின் கொள்கை.இறுதி நாள் என்பதும் அவர்களின் கொள்கையே.வேதனையான மரணம் என்பது வேறு மரணமே வேதனை என்பது வேறு.

இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய தகவல்கள் என்னவென்றால்,யூதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட செயலுக்காக கூறப்பட்ட இறைவாக்கை பேதுரு தவறாக புரிந்து கொண்டு பேசியிருக்கிறார்.

முடிவாக தெரிவது என்னவென்றால்,யோவேல் 2-ம் அதிகாரம் அவர் வாழ்ந்த காலத்தில் இஸ்ரயேல் மக்கள் வரப்போகும் ஒரு பேரழிவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது.அவ்வாறு செய்தால் கடவுள் பதிலுக்கு என்ன செய்வார் என்று தன்னுடைய இறைவாக்கு மூலம் எழுதியுள்ளார்.ஆனால்,பேதுரு அவ்வார்த்தைகளை தானும் தன்னுடன் இருந்த சீடர்களும் பேசிய வெவ்வேறு மொழிகளை குறிப்பதற்கு பயன்படுத்தியுள்ளார்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

யோவேல் 2-ம் அதிகாரமும் அப்போஸ்தலர்(திருத்தூதர்) 2-ம் அதிகாரமும் - ஒரு ஒப்பீடு பகுதி 1

யோவேல் 2-ம் அதிகாரமும் அப்போஸ்தலர்(திருத்தூதர்) 2-ம் அதிகாரமும் - ஒரு ஒப்பீடு - பகுதி 1

இயேசு இறந்த பிறகு அவருடைய சீடர்கள் அனைவரும் எருசலேமில் இருக்கிறார்கள்.பெந்தேகோஸ்து என்னும் நாளில் சீடர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். தொடர்ந்து செல்வதற்கு முன்னர், "பெந்தேகோஸ்து" என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,இந்த வார்த்தை ஹீப்ரு மொழியை சேர்ந்தது அல்ல.இது கிரேக்க மொழியை சேர்ந்தது.இவ்வார்த்தையின் பொருள் "ஐம்பது" ஆகும்.இஸ்ரயேல் மக்களுக்கு கட்டளையிடப்பட்ட பண்டிகைகளில் ஒன்று "வாரப்பண்டிகை" ஆகும்.இது எப்போது கடைப்பிடிக்கப்பட வேண்டும்?
15 ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும்.
16 ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.[லேவி 23:14,15]
15. நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
16. ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.[லேவி 23:15,16]
முதல் அறுவடைக்குப்  பின்பு  50 நாட்கள் கழித்து இந்த குறிப்பிட்ட பண்டிகை வருகிறது.ஐம்பது நாட்கள் என்பதை கிரேக்க மொழியில் "பெந்தேகோஸ்து" என்று கூறிவிட்டனர்.இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால்,இஸ்ரயேல் மக்களுக்குரிய பண்டிகை கிரேக்க பெயரால் அழைக்கப்படுகிறது என்பதுதான்.இஸ்ரயேல் மக்களுக்கு ஹீப்ரு மொழிதான் தாய்மொழி என்பது அனைவரும் அறிந்தது.

இயேசு வாழ்ந்த காலகட்டங்களில் யூதர்கள் ஏறத்தாழ தங்கள் மொழியை மறந்து விட்டனர்.அவருடைய காலத்தில் எருசலேமில் வாழ்ந்த மக்கள் யூதர்கள் மட்டுமல்ல.பல புற இனத்தவர்களும் அங்கே  வாழ்ந்தனர்.அதற்கு முன்னர் யூதர்கள் கிரேக்கர்களிடம் அடிமைப்பட்டு இருந்தனர்.கிரேக்க மொழி மற்றும் கலாச்சாரம் அப்பகுதி முழுவதையும் ஊடுருவி இருந்தது.இதன் காரணமாக யூதர்களுடைய எழுத்துக்களும் கிரேக்க மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தன.

பண்டிகை யூதர்களுக்குரியது.குறைந்தபட்சம் பண்டிகையின் பெயரையாவது ஹீப்ரு மொழியில் சொல்லியிருக்கலாம்.அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்தை எழுதியவரின் மனநிலை இங்கு வெளிப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.யூதர்கள் அப்பண்டிகையை "Shavout" என்று அழைப்பர்.தங்கள் ஹீப்ரு மொழியை தாங்கள் மறந்து விட்டாலும்,குறைந்தபட்சம் பண்டிகையின் பெயரையாவது அவர்கள் உச்சரித்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.ஆனால் இப்புத்தகத்தை எழுதியவர் "பெந்தேகோஸ்து" என்னும் பண்டிகை என்று குறிப்பிடுகிறார்.

யூத மக்களுக்கு "பெந்தேகோஸ்து" என்றால் என்னவென்றே தெரியாது.இதை எழுதுபவர் யூத மக்களுக்கு எழுதி இருந்தால் இவ்வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.ஏன் "Shavout" என்ற வார்த்தைக்கு பதிலாக "பெந்தேகோஸ்து" என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்று தெரியவில்லை.யூதர்களில் பெரும்பாலோனோர் இயேசுவையும் அவர்களுடைய சீடர்களையும் வெறுத்தனர் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே சீடர்கள் யூதர்களை வெறுத்திருக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பயந்து வாழ்ந்திருக்க வேண்டும்.எருசலேமில் வாழ்ந்த மற்ற இனமக்களை அவர்கள் அணுகி அவர்களிடம் இயேசுவைப்பற்றிய செய்திகளை கூறியிருக்க வேண்டும்.அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்திலேயே அது குறிப்பிடப்பட்டுள்ளது.
5 அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர்.[தி.தூ.2:5]
5. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.[அப் 2:5]
9 பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,
10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,
11 யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! “என்றனர்.[தி.தூ.2:9-11]
9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.[அப் 2:9-11]
பல நாடுகளில் இருந்து வந்த யூதர்கள்(இவர்கள் ஏற்கனவே அங்கு சிதறடிக்கப்பட்டிருந்தனர்) எருசலேமில் அங்கு வாழ்ந்து வந்தனர்.அவர்கள் "இறைப்பற்று" மிக்கவர்களாக இருந்தனர் என்பது இப்புத்தகத்தை எழுதிவரின் கருத்து.இவர்கள் தங்கள் தாய்மொழியாகிய ஹீப்ருவை மறந்து போயிருந்தனர்.அப்போதைய வழக்கு மொழியாக(ஏறத்தாழ) கிரேக்கம் இருந்தது.காரணம் ரோமர்களுக்கு முன்னர் கிரேக்கர்கள் ஆட்சி செய்தனர்.இவர்களைத்தான் இப்புத்தகத்தை எழுதியவர் "இறைப்பற்று மிக்க யூதர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு தகவல் உள்ளது அது,யூதம்  தழுவிய மக்கள்.எனவே யூதர்களை பின்பற்றிய மக்கள் சிலரும் அங்கு இருந்தனர்.பிறப்பால் உத்தர அல்லாத ஆனால் யூத வழிமுறைகளை பின்பற்றிய மக்களும் அங்கு வாழ்ந்தனர்.பேதுரு யாரிடம் பேசுகிறார் என்று இப்புத்தகத்தை எழுதியவர் குறிப்பிடுகிறார் என்றால் இவர்களிடம்தான்,அதாவது வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கள் மொழியை மறந்த யூதர்கள்,மற்றும் யூதத்தை பின்பற்றிய புற இன மக்கள்.எருசலேமை விட்டு எங்கும் செல்லாத அங்கேயே வாழ்ந்த பூர்வகுடி யூதர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

சிதறடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்ற யூதர்களுக்கும் அங்கேயே தங்கிய யூதர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து திரும்பிய யூதர்கள் தங்கள் மொழியை மற்றும் மறக்க வில்லை,தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள் அனைத்தயும் மறந்திருந்தனர்.அங்கேயே வாழ்ந்த யூதர்கள் இவர்களை வெறுத்தனர்.எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போன்று இந்த யூதர்களையும், புற இனத்திலிருந்து யூதத்தை பின்பற்றியவர்களையும் குறிவைத்தே இயேசுவின் சீடர்கள் வாழ்ந்தனர்.

எங்கும் செல்லாமல் எருசலேமில் இருந்து வாழ்ந்து வந்த யூதர்கள் இயேசுவின் கொள்கைகளையும் போதனைகளையும் வெறுத்தனர்.அனைத்தயும் மறந்து வாழ்ந்த யூதர்கள் இவர்களை ஓரளவுக்கு ஆதரித்தனர்.எனவேதான் இவர்களிடம் சென்று இயேசுவின் சீடர்கள் பேசினர்.பேதுருவின் பேச்சை கேட்க கூடியிருந்தவர்களும் இவர்களே! உண்மையாக வாழ்ந்த யூதர்கள் அல்ல!

இந்த "சமரசம் செய்து கொண்ட யூதர்களுக்கு" பேதுருவின் பேச்சு மற்றும் மற்ற சீடர்களின் பேச்சு புதிதாக இருந்திருக்கும்.காரணம் அவர்கள் தங்களுடைய திருமறையையும்(பழைய ஏற்பாடு) மறந்திருந்தனர்.நீண்டகாலமாக வெளிநாடுகளில் வசித்த காரணத்தினால் அவர்கள் தங்களுடைய திருமறையை முற்றிலும் மறந்துபோயிருந்தனர்.

கிரேக்க மொழியின் தாக்கம் அப்பொழுது அதிகமாக இருந்தது.அதன் காரணமாகவே "வாரப்பண்டிகை", "பெந்தேகோஸ்து" என்று மாற்றப்பட்டது.நமக்கு இதை கூறியவர் அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்தை எழுதியவர்.பெந்தேகோஸ்து என்ற சொல் பூர்வகுடி யூதர்களுக்காக பயன்படுத்தப்பட்டது அல்ல.பூர்வகுடி யூதர்கள் இவர்களை வெறுத்தனர்.சவுல் எண்ணப்பட்ட பவுல் ஒரு வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு யூதன் என்பதை இங்கு நினைவில் கொள்க.

இப்பொழுது பேதுரு இவர்களிடம் என்ன பேசுகிறார் என்பதை நாம் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

இரா.இருதயராஜ்.

Saturday, December 7, 2019

நான் கடவுளால்தான் படைக்கப்பட்டேனா? - தொடர்ச்சி

நான் கடவுளால்தான் படைக்கப்பட்டேனா? - தொடர்ச்சி 

ஆண்கள்,பெண்கள் என்று இரு பாலருக்குள்ளும் இப்பிரச்சினைன் இன்று பெரும் அளவில் தலைதூக்கி உள்ளது.இது தனக்கு ஒரு பிரச்சினை என்று உணர முடியாத அளவுக்கு இன்று இத்தன்மையை ஆதரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.இதை தீர்க்கும் வலியைப்பற்றி சிந்தியாமல் இதை தீனிபோட்டு வளர்க்கும் விதமாக உலகத்தின் செயல்பாடுகள் உள்ளன.தாங்கள்  ஒரு மூன்றாம் பாலினம் என்று கூறிக்கொண்டு தங்களுடைய தன்மையை ஒத்துக்கொண்டு வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மனித            இனமானது  இவ்வாறு ஒரு குறிப்பிட்ட விதத்தில்தான் தான் பல்கி  பெருக வேண்டும் என்ற தனது எண்ணத்தை நிறைவேற்ற கடவுள் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறார். இத்திட்டம் கூறுவது என்னவென்றால், ஆண்  மற்றும் பெண்ணிற்கிடையே ஒரு ஈர்ப்பு உருவாகவேண்டும் என்றும் அவ்வீர்ப்பின் மூலமாக ஆணானவன் பெண்ணை அறிந்து அதன்மூலம் சந்ததிகளை உருவாக்குவது ஆகும்.இத்திட்டமானது ஆரம்பத்தில் சரியாக நடைபெற்றாலும் இப்பொழுது சரியாக பின்பற்றப் படவில்லை. இதன் விளைவாக இன்று நம்மிடையே பல்வேறு குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. ஆண்களிலும், பெண்களிலும் தங்களுடைய தன்மையை இழந்த(முற்றிலுமாக அல்லது பல்வேறு அளவுகளில்) இளைஞர்கள் இன்று உலகில் வாழ்கின்றனர்.இதற்கு காரணம் கடவுள் இல்லை என்பதை தீர்க்கமாக முந்தைய கட்டுரையில் பார்த்து விட்டோம்.

மேற்கூறிய திட்டத்தை கடைப்பிடிப்பதில் முன் எப்போதோ சிறு தவறு நிகழ்ந்திருக்க வேண்டும்.அதன் விளைவாக படிப்படியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும்.அது நம் முன்னோர்களிடையே பரவியிருக்க வேண்டும்.அவர்களுடைய மரபணுக்களில் அது ஊடுருவி இருக்க வேண்டும்.அதன் விளைவு சந்ததிகளில் தெரிய ஆரம்பிக்கிறது.திட்டத்தை கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட பிழையே இவை அனைத்திற்கும் காரணமாக இருக்க வேண்டும்.நாம் இப்படி பிறப்பதற்கு நாமும் காரணம் இல்லை,கடவுளும் காரணம் இல்லை,ஆனால் நாமாவது கடவுளின் திட்டத்தை பின்பற்றலாமே.இங்கு ஒரு சந்தேகம் எழலாம்.நான் இப்படி இருப்பதற்கு கடவுள் காரணம் இல்லை என்றால் திருமறையில் ஒரு வசனம் கீழ்கண்டவாறு உள்ளது.அதற்கு பதில் என்ன?
5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.[வி.ப 20:5]
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.[யாத் 20:5]
மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ள தண்டனையானது ,ஒரு ஆண்மகனின் தன்மையை குறைப்பதாக இருக்குமாயின்,அல்லது ஒரு பெண் மகளின் தன்மையை குறைப்பதாக இருக்குமாயின்,அந்த குறிப்பிட்ட ஆண்மகன் அல்லது பெண்மகள்  எப்படி தன்னுடைய செயலுக்கு பொறுப்பாளி ஆவார்?அவன் அல்லது அவள்தான் அத்தவறை செய்யும்படியே படைக்கப்பட்டு விட்டார்களே?தவறை செய்யுமாறு படைத்து விட்டு அதற்கு தண்டனையும் கொடுப்பது என்பது எப்படி சரியென்று கூற முடியும்?கடவுளின் செயல்களை விமர்சிக்க நமக்கு உரிமை கிடையாது எனினும் கீழ்கண்ட வசனத்தையும் பாருங்கள்;
20 பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும்.[எசே 18:20]
20. பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.[எசே 18:20]
கடவுள் தனது செயலை இவ்வாறு மாற்றியிருக்கிறார்.பிள்ளைகள் பெற்றோரின் குற்றங்களை "தங்களின் தன்மை குறையுமாறு" சுமந்தால்,இப்பிள்ளைகளுக்கு தண்டனை வழங்குவது எப்படி?எனவே முடிவாக கீழ்கண்ட முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
  • இன்றைய மனிதர்களாகிய நாம் கடவுளால் நேரடியாக படைக்கப்படவில்லை.
  • இனப்பெருக்கம் என்பது தானாகவே நடைபெறும்படி கடவுளால் திட்டமிடப்பட்ட ஒரு செயல்.
  • கடவுளின் செயல்திட்டத்தின் படி நடவாத யாரோ ஒரு முன்னோரின் செயலே தன்மை இழந்த இந்நிலைக்கு காரணம்.
  • அக்குறிப்பிட்ட அந்த முன்னோர் செய்த செயலின் விளைவு படிப்படியான மாற்றம்.
  • இந்த படிப்படியான மாற்றத்தின் விளைவே இன்றைய சீரழிவு.
என்னதான் தீர்வு:

இன்று நாம் இப்படி இருப்பதற்கு மனிதர்களாகிய நாமே காரணம்.உங்களில் பலபேர் இப்பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.நம் பிறப்புக்கு கடவுள் காரணம் அல்ல.அவரின் செயல்திட்டத்தை கடைபிடிக்காததின் விளைவு நாம் இப்படி இருக்கிறோம்.இதற்கு கடவுளை எப்படி குறை கூற இயலும்.அவரின் திட்டத்தின்படி நடக்காத யாரோ ஒருவரின் சந்ததியில் நாம் வந்திருக்கிறோம்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த அம்மாணவனின் எண்ணங்களை நான் பலமுறை எனக்குள் அசைபோட்டேன்.இந்த உலகத்தில் அவன் மேலும் கெட்டு போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.இவ்வாய்ப்புகளையும் கூட நாமே உருவாக்கிக்கொண்டோம்.இந்த உலகம் அம்மாணவனுக்கும் அவனைப்போன்ற ஏனையோருக்கும் கொடுக்கும் வாய்ப்புக்கள் என்ன?
  • நினைத்தால்கையில்  கிடைக்கும் ஆபாச படங்கள்.ஆபாச படங்கள் பார்ப்பதில் தவறில்லை என்ற எண்ணம்.
  • தான் ஏற்கனவே தன்னுடைய தன்மையை இழந்த நிலையில் அவன் தனிமையை தேடுகிறான்.
  • அவனை சமூகம் ஒதுக்குகிறது.மேலும் தனிமைப்படுத்தப்படுகிறான்.
  • கடவுளின் செயல் திட்டத்தில் இருக்கும் "ஈர்ப்பை" போன்று இல்லாமல் வேறுவிதமான ஈர்ப்புக்கு ஆட்படுகிறான்.
  • இது போன்று எண்ணங்களுடைய மற்றவர்களுடன் சேரும் வாய்ப்பை இந்த உலகம் அவனுக்கு அளிக்கிறது.
  • மேலும் மேலும் கெட்டு போகிறான்.ஒரு கட்டத்தில் தன்  தன்மையை முற்றிலுமாக இழக்கிறான்.
  • இப்பொழுது அவனுக்கு என்னதான் வழி  இருக்கிறது.தானாவது கடவுளின் திட்டத்தில் பங்கு பெறலாம் என்று நினைத்தால் கூட அவனுடைய எண்ணங்கள் அதற்கு ஈடுகொடுப்பதில்லை.
  • தன்  மூலம் தன்னைப்போன்ற மற்றொரு சந்ததி உருவாக அவன் விரும்புவானா?
இந்நிலையில் கடவுள் அப்படிப்பட்டவர்களை வெறுக்க வில்லை என்பதற்கு ஒரு வசனம் இருப்பதை காண்பிக்க விரும்புகிறேன்.
4 ஆண்டவர் கூறுவது இதுவே; என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,
5 என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.[எசா 56:4,5]
4. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
5. நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.[ஏசா 56:4,5]
ஒரு ஆண் தன்  தன்மையை முற்றிலுமாக இழந்த அவனை "அண்ணகன்" என்று அழைக்கிறார்கள்.அவனுக்கே மேற்குறிப்பிடப்பட்ட வசனம் பொருந்தும்.ஆனாலும்,முற்றிலுமாக தன்  தன்மையை இழக்காத,ஒரு குறிப்பிட்ட அளவில் இழந்த,அல்லது இயற்கையாகவே அவ்வாறு பிறந்த ஒருவனும் கூட கடவுளை நோக்கி கெஞ்சலாம் என்றே நான் நினைக்கிறேன்.

வேறு வழியில்லை:

தன் மன உறுதியின் மூலம்,நான் இனிமேல் வழி விலக மாட்டேன்,கடவுளின் திட்டத்தின் படியே நடப்பேன்  என்று முடிவெடுத்து அதன் படி நடக்கலாம்.ஆனால் அதில் இருக்கும் பிரச்சினையே, தன் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான். தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போனதின்  காரணமாகவே அவன் அல்லது அவள் இந்நிலையில் உள்ளான் அல்லது உள்ளாள்.தன்னைக் கட்டுப்படுத்தமுடியாத இயல்பு அவன் பிறப்பில் உள்ளது.இம்மாணவனைப் போன்றோருக்கு தன்னைக் கட்டுப்படுத்துவது என்பது கடினம்,ஆனால் வேறு சிலருக்கு இது சுலபம்.

புல்லைத் தின்பது என்பது மாட்டின் இயல்பு.அதன் பிறப்பு கடவுளின் திட்டத்தின் படியே உள்ளது.இந்த இயல்பை அம்மாடு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது எவ்வளவு கடினம்?மாட்டிற்கு அந்த இயல்பானது வழிவழியாக வந்துள்ளது.அதுபோன்று ஒரு ஆணிற்கு பெண்ணின்  மீதான ஈர்ப்பு என்பது இயல்பாக இருக்கிறது.இதில் வழி மாறினால் கடவுளுடைய திட்டத்திற்கு புறம்பாக நடக்கிறோம்.

நான் என்ன செய்வேன்,என் இயல்பே அவ்வாறுதானே உள்ளது என்போர்கள் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்,உங்கள் இயல்பு கடவுளால் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.உங்கள் இயல்பு உங்கள் மூதாதையரிடமிருந்து வந்திருந்தால்,அதற்கான பொறுப்பை கடவுளிடம் திணிக்க முடியாது.ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள்,மனித இனம் பல்கி பெருக வேண்டும் என்றால் அது உங்களின் இயல்பு மூலம் சாத்தியம் இல்லை.அப்படியென்றால் கடவுளின் திட்டம் மூலமே அது சாத்தியம்.எனவே உங்கள் இயல்பு தவறு,ஆனால் அது உங்கள் தவறு அல்ல.இதிலிருந்து விடுபட வழி ஏதும் உள்ளதா? தெரியவில்லை.ஆனால் இறைவன் அனைத்தும் வல்லவர் அல்லவா! அவரிடம் தீர்வு இருக்கலாம்.

ஒருவருடைய குணநலன்கள் அவருடைய பெற்றோரிடமிருந்து கடத்தப்படுகிறது.இது  தானாகவே நடைபெறும் ஒரு செயல்(Automatic).வளரிளம்பருவம் வரும்பொழுது ஒவ்வொருவருக்கும் பாலினம் சார்ந்த குணங்கள் வெளிப்பட ஆரம்பிக்கும்.இது ஒவ்வொருவருக்குள்ளும் பொதிந்து கிடக்கிறது.அது வெளிப்படும்பொழுது "கடவுளின் செயல்முறை திட்டத்திற்கு" அது ஒத்துப்போகிறதா என்பது தெரிந்து விடுகிறது.

பாலினம் சார்ந்த குறைபாடுகள் இருப்போர் மேலும் மேலும் கவலை கொள்ளாமல்,இந்த உலகத்திற்கு சொந்தக்காரராகிய,இவ் வுலகத்தை படைத்த இறைவனிடமே கையேந்துவது நல்லது.இந்த உலகம் எப்படி இயங்க வேண்டும் என்று தீர்மானித்து அது இயங்கிக்கொண்டிருப்பதை இப்பொழுதும் பார்த்து கொண்டிருக்கும் அந்த எல்லாம்வல்ல இறைவனிடம் கையேந்துவதை விட வேறு வழி  இல்லை என்றே தோன்றுகிறது.


என் முன்னோர்கள் செய்த தவறின் காரணமாக நான் இவ்வாறு இருக்கிறேன்  என்றால், நான் நட்டாற்றில் விடப்படவில்லை என்றே கருதுகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போன்று, இந்த உலகம் என்ற தொழிற்சாலை தன்னிச்சையாக(Automated Process) இயங்கும் படி செய்து அதனை பார்த்துக்கொண்டிருக்கும் கடவுள் ஒருவருக்கே, தவறு ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று தெரியும்.தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் பொருள் அவர் நினைத்தபடி இல்லை என்றால் அதை தூக்கி தூர எறிவதற்கு அவருக்கு முழு அதிகாரமும் உள்ளது.இந்த பிரபஞ்ச இயக்கம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடவுளுக்கு நம் மீது இரக்கம் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

ஆனால் அவரை நோக்கி கெஞ்சினால் அவர் இரக்கம் காட்டுவார் என்றே நான் நினைக்கிறேன்.இதை தவிர வேறு வழி இல்லை என்றும் நினைக்கிறேன்.கடவுளுக்கு விருப்பம் இல்லாத பாலியல் சார்ந்த செயல்களை செய்யும்படியான உந்துதல் ஒருவருடைய மரபணுக்களில் இருந்தால் அவரால் என்ன செய்ய முடியும்?இந்த உலக படைப்பிற்கு காரணமான கடவுளிடம் மட்டுமே இதற்கான தீர்வு இருக்க முடியும்.


இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

My Posts