நோவாவின் காலத்தில் பெருவெள்ளம் வந்தபோது வருடம் என்ன?
பெருவெள்ளம் ஒன்று நோவாவின் காலத்தில் வந்து அனைத்தையும் அழித்தது என்பதினை நாம் அறிவோம்.ஆனால் உலகம் படைக்கப் பட்ட பின்பு எத்தனை வருடங்கள் கழித்து அந்த வெள்ளம் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?தெரிய வில்லை என்றால் நாம் அதனை கண்டுபிடிக்கலாம்.
ஆதியாகமம் 5-ம் அதிகாரத்தில் இருந்து இவைகளை நாம் அறியலாம்.
- சேத் பிறக்கும் பொழுது ஆதாம் வயது 130.
- ஏனோஸ் பிறக்கும் பொழுது சேத வயது 105.
- கேனான் பிறக்கும் பொழுது ஏனோஸ் வயது 90.
- மகலாயில் பிறக்கும் பொழுது கேனான் வயது 70.
- யாரேத் பிறக்கும் பொழுது மகலாயில் வயது 65.
- ஏனோக் பிறக்கும் பொழுது யாரேத் வயது 162.
- மெத்தூசலா பிறக்கும் பொழுது ஏனோக் வயது 65.
- லாமேக் பிறக்கும் பொழுது மெத்தூசலா வயது 187.
- நோவா பிறக்கும் பொழுது லாமேக் வயது 182.
இப்பொழுது அணைத்து வருடங்களையும் கூட்டினால் நமக்கு கிடைப்பது 1056 வருடங்கள்.எனவே நோவா பிறக்கும் பொழுது வருடம் 1056.நோவாவின் 600-வது வயதில் வெள்ளம் வருகிறது.ஆதி 7:6-ஐ பார்க்கலாம்.
ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.[ஆதி 7:6]
எனவே பெருவெள்ளம் வந்தபொழுது வருடங்கள் 1056+600=1656 வருடங்கள். உலகம் படைக்கப் பட்டு 1656 வருடங்கள் கழித்து அது அழிக்கப் பட்டது.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment