பழைய ஏற்பாட்டு "கர்த்தருக்கும்" புதிய ஏற்பாட்டுக்கு "கர்த்தருக்கும்" இடையே உள்ள வித்தியாசம்
[இக்கட்டுரையை பொறுமையுடன் படித்துப் பார்க்கவும்.]
சிலை வழிபாட்டைக் கொண்டுள்ள இந்துக்களுக்காக உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மொழி அவ்வழிபாட்டை அருவருக்கும் கிறித்தவத்திற்குள் பரவிக் கிடக்கிறது.ஏறத்தாழ 200 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழ் திருமறைகளில் "கர்த்தர்" என்ற வார்த்தை கிடையாது.
இந்த "கர்த்தர்" என்ற வார்த்தை பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இரண்டிலும் காணப்படுகிறது.அது மிகப்பெரும் தவறுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.அது என்ன தவறு?
- கடவுள் ஒருவரே என்ற அடிப்படை கருத்துக்கு எதிராக உள்ளது.
- இயேசுவை "கடவுள்" என்று தவறுதலாக வழிபடுவதற்கு ஆதரவாக உள்ளது.
- திரித்துவ கொள்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
- மேற்கூறிய மூன்றுக்கும் ஆதரவாகவே தமிழ் திருமறையானது திருத்தப் பட்டது.
- ஆரம்ப கால தமிழ் திருமுறைகளில் இல்லாத "கர்த்தர்" என்ற வார்த்தை,திரித்துவக் கொள்கைக்கு வலுசேர்க்கும் விதமாக இணைக்கப்பட்டது.
எவ்வளவு கவனமாக குற்றம் செய்பவன் இருந்தாலும் தன்னை அறியாமலே தடயங்களை விட்டு செல்வான் என்பது கருத்து.அது போன்று இயேசுவை கடவுளாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களும் தங்களை அறியாமலேயே எண்ணற்ற தவறுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
இயேசு இறந்தவுடன் அவருடைய சீடர்கள் அவரைக் கடவுள் என்று கூறியதற்கு எந்த சான்றுகளும் திருமறையில் இல்லை.ஏறத்தாழ 100 ஆண்டுகள் கழித்து அவர் பற்றிய கதைகள் கிரேக்க மக்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் பரவிய பொழுது ஏற்பட்ட மாற்றம்தான் "இயேசு கடவுள்" என்ற கருத்து.
குறிப்பாக கிரேக்கர்கள் எதையும் பற்பல கேள்விகளைக் கொண்டு ஆராய்வதில் வல்லவர்கள்.அவர்கள் இயற்கையிலேயே அப்படிப்பட்ட ஆற்றலைக் கொண்டிருந்தனர்.
எனவே கடவுளின் கனத்திற்குரிய பெயரை அனைவரும் அடிக்கடி உச்சரிப்பதை தடை செய்தனர்.ஆசாரியர்கள் மட்டும் விதிவிலக்காக்கப்பட்டனர்.தோல் சுருள்களில் எழுதப்பட்ட கடவுளின் வார்த்தைகளை படிக்கும் பொழுது கூட மேலும் அவர் பெயர் தவறாக உச்சரிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு புதிய முறையைக் கொண்டு வந்தனர்.
சுருள்களில் எழுதப்பட்டுள்ள கடவுளின் வார்த்தைகளில்,அவருடைய பெயர் வரும் இடங்களில் சிறு மாற்றம் செய்ய விரும்பினர்.கனத்திற்குரிய அப்பெயர் வரும் இடங்களிலெல்லாம் "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தையில் உள்ள ஓரிரு எழுத்துக்களைக் கொண்டு நிரப்பி விட்டனர்.இந்த "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தையின் பொருள் "ஆண்டவன்" என்பதாகும்.இச்செயலுக்கு காரணம் கடவுளின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.
ஆனால் இதுவே நாளடைவில் வேறு குழப்பத்திற்கு இட்டுச் சென்று விட்டது.காலப்போக்கில் சில நூறாண்டுகள் கழிந்த பிறகு இஸ்ரேல் மக்களுக்கு கடவுளின் பெயரை எப்படி உச்சரிப்பது என்பது மறந்து விட்டது.புதிய சந்ததிகளுக்கு கடவுளின் பெயரை எப்படி உச்சரிப்பது என்பது தெரிய வில்லை.
இப்பொழுது இஸ்ரேல் மக்களின் கையில் இருக்கும் தங்கள் திருமறையில் கடவுளின் பெயருக்கு பதிலாக "Adonai" என்ற வார்த்தைதான் இருக்கிறது.இந்த செயலைப்பற்றி இஸ்ரயேல் மக்களுக்கு தெரிகிறது,ஆனால் எப்படி அவர் பெயரை உச்சரிப்பது என்று தெரிய வில்லை.இப்படியே காலம் கடந்து விட்டது.திருமறை மற்ற இனத்தாருக்கும் பரவிவிட்டது.
திருமறையானது மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட பொது "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தைக்குரிய பொருளை தரும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.குறிப்பாக கிரேக்க மொழியில் "kurios"(Greek: κύριος) பயன்படுத்தப்பட்டது.ஆங்கிலத்தில் "Lord" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும்.
என்ன நடந்தது என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.கடவுளின் பெயருக்குரிய கனத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட ஒரு செயல் அவருடைய பெயரையே மறக்கும் படி செய்து விட்டது.நாம் பழைய ஏற்பாட்டை மட்டும் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பதை மறவாதீர்கள்.
இப்பொழுது தமிழுக்கு வருவோம்.பல முறை தமிழ் திருமறையானது மாற்றம் செய்யப்பட்டு விட்டது.இப்பொழுது வழக்கில் இருக்கும் தமிழ் திருமறையை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம்.கடவுளின் பெயர் வரும் இடங்களிலெல்லாம் தமிழ் திருமறை "கர்த்தர்" என்று கொண்டுள்ளது.பழைய ஏற்பாட்டில் இது ஏறத்தாழ 7000 முறைகள் ஆகும்.இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றால்,
எனவே பழைய ஏற்பாட்டில் எங்கெல்லாம் "கர்த்தர்" என்று வாசிக்கிறீர்களோ அங்கெல்லாம் கடவுளின் பெயர் உள்ளது என்பதை மறக்காதீர்கள்.இதில் என்ன முக்கியத்துவம் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
இப்பொழுது நாட்டின் பிரதமர் மோடி.இந்த வாக்கியத்தை கவனியுங்கள்,"இன்று பிரதமர் வெளிநாடு சென்றார்".இதில் என்ன கவனிக்க வேண்டியுள்ளது?
"பிரதமர்" என்ற பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம்.ஆனால் "மோடி" என்ற பெயர் ஒருவருக்குரியது மட்டுமே ஆகும்.ஐந்து வருடங்கள் களைத்து "பிரதமர்" பட்டம் வேறு யாருக்கு வேண்டுமானாலும் சென்று விடும்.ஆனால் "மோடி" மோடியாக மட்டுமே இருப்பார்.
எனவே "பெயர்" என்பது அடையாளம் ஆகும்.ஒருவர் யார் என்பதை அவர் பெயருக்குள்ள மரியாதை காட்டிக் கொடுத்து விடும்.எனவேதான் "பெயர்" மிக முக்கியம்.அதனால்தான் கடவுள் தன்னுடைய பெயரை வீணாக பயன் படுத்த வேண்டாம் என்கிறார்.ஒருவருடைய பெயரை கூறினால் போதும்,அவரை நாம் தெரிந்து கொள்வோம்.
ஒருவருடைய பெயர் அவர் எவ்வளவு பெரியவர் என்பதை சொல்வதாக உள்ளது.முத்திரைகள் இதனடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.முத்து என்ற ஒருவர் ஓர் சிற்றூரில் வாழ்ந்து வருகிறார்.அவர் ஏழ்மையான சூழலில் இருக்கிறார்.இப்பொழுது அவருடைய மக்களுக்கு திருமணம் நடக்க உள்ளது.அதற்க்கு சிறிது பணம் தேவை.அவ்வூரில் இளங்கோ என்ற செல்வந்தர் ஒருவர் உள்ளார்.அவரிடம் நிறைய பணம் உள்ளது.நம்பி என்ற பெரியவர் ஒருவரும் உள்ளார்.இந்த நம்பி அவ்வூரில் ஒரு மதிப்புக்குரியவர்,ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்,அனைவராலும் மதிக்கப்படுபவர்.இவருக்கென்று தனி மரியாதை உள்ளது.
ஏழையான முத்து செல்வந்தரான இளங்கோவிடம் சென்று பண உதவி கேட்கிறார்.இளங்கோ தயங்குகிறார்,காரணம் முத்துவால் அப்பணத்தை திருப்பி தர இயலுமா என்று சந்தேகிக்கிறார்.எனவே மறுத்து விட்டார்.முத்து நேராக நம்பியிடம் சென்று விவரங்களை கூறுகிறார்.நம்பி இளங்கோவை தொலைபேசியில் அழைத்து முத்துவுக்கான பொறுப்பை தான் எடுத்துக்கொள்வதாகவும் அவருக்கு தயங்காமல் கடன் கொடுக்கும்படிக்கும் கூறுகிறார்.மேலும் ஒரு கடிதம் எழுதி அதில் தன்னுடைய முத்திரையைப் பதித்து முத்துவிடம் கொடுத்து அனுப்புகிறார்.இப்பொழுது இளங்கோ முத்துவை அழைத்து,"நம்பி ஐயாவே கூறிவிட்டார்,அதனால் நான் உங்களுக்கு கடன் தருகிறேன்".
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன? இக்கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களை பற்றியும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் உங்கள் மனதில் கற்பனை செய்து இருப்பீர்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டியது "நம்பி" என்ற பெரியவரைத்தான்.அவருடைய பெயருக்கென்று தனி மரியாதை இருந்தது.திரு.நம்பியின் முத்திரையைப் பார்த்தவுடன் திரு.இளங்கோ அவரை நேரில் பார்க்காமலேயே அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு முத்துவுக்கு கடன் கொடுத்து விட்டார்.காரணம் திரு.நம்பியின் பெயருக்கென்று இருந்த மரியாதை.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது,ஒருவருடைய பெயர் அவரைப்பற்றி கூறுகிறது.எல்லாம் வல்ல இறைவனும் தன்னுடைய பெயரை கூறியிருக்கிறார்.அதை பயபக்தியுடன் கையாள வேண்டியது நமது கடமை.பூமியில் மனிதனுடைய பெயருக்கே அவ்வளவு மரியாதையை நாம் கொடுக்கிறோம் என்றால்,அனைத்தையும் படைத்த கடவுளின் பெயருக்கு நாம் எப்படி பயந்து நடுங்க வேண்டும்?இதன் காரணமாகவே ஆதிகால இஸ்ரயேல் மக்கள் கடவுளின் பெயரை உச்சரிக்க தடை செய்தனர்.ஆனால் அது வேறு குழப்பங்களுக்கு இட்டு சென்று விட்டது.
பழங்கால தீர்க்கதரிசிகள் கடவுளின் பெயரில் தீர்க்க தரிசனம் கூறுவதை நாம் படித்திருக்கக்கூடும்.அப்பெயருக்குள்ள கணத்தை ஒருவர் அறிந்திருந்தாரானால் அத்தீர்க்கதரிசியின் சொல்லுக்கு பயந்து நடுங்குவார்கள்.பயந்து நடுங்குவது தீர்க்கதரிசிக்கு அல்ல,கடவுளின் பெயரில் வரும் வார்த்தைகளுக்கு.எடுத்துக்காட்டாக கடவுளின் பெயருக்குள்ள கணத்தை புரிந்து கொள்வதற்காக,
தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
ஆதிகால சுருள்களில் நம் கடவுளின் பெயர் இருந்தது.அவருடைய பெயரை தவறாக உச்சரிக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அப்பெயருக்கு பதிலாக "ஆண்டவன்" என்ற பொருள் தரும் வார்த்தை சேர்க்கப்பட்டது.ஆங்கிலத்தில் இது "Lord" என்று ஆனது.ஆனால் தமிழில் இது "கர்த்தர்" என்று ஆனது.இவ்வார்த்தைகள் அனைத்தும் ஒருவருடைய பெயருக்குரியது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.அவர் ஈடு இணையில்லாத கடவுள்.
ஒருவருடைய பெயர் அவரது அடையாளம்.அப்பெயர் அவரை மட்டுமே குறிக்கும்.வேறு யாரையும் குறிக்காது.அப்படியென்றால்,பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்ற பெயர் எப்படி இயேசுவை குறிக்கும்? அது எப்படி சாத்தியம்?அது மிகப்பெரும் தவறு இல்லையா?
கர்த்தர் என்ற வார்த்தை ஒரு பட்டம்தானே அதை யாருக்கு பயன்படுத்தினால் என்ன? என்று கேள்வி கேட்கலாம்.தவறு இல்லைதான்.இன்று மோடியை "பிரதமர் மோடி" என்கிறோம்.ஆனால் ஐந்து வருடம் கழித்து யார் வேண்டுமானாலும் "பிரதமராக" இருக்க முடியும்.ஆனால் இரண்டாவதாக வரும் வேறு ஒரு நபரை "பிரதமர்" என்று கூறினால் அதுவும் மோடியைத்தான் குறிப்பிடுகிறது என்று கூற முடியுமா? இயேசுவுக்கும் "கர்த்தர்" என்ற வார்த்தையை பயன்படுத்தியதன் காரணமாக இயேசுதான் பழைய ஏற்பாட்டில் உள்ள "ஆபிரகாமின் கடவுள்" என்று கூற முடியுமா?
எனவே புதியஏற்பாட்டில் இயேசுவை "கர்த்தர்" என்று குறிப்பிட்டதன் காரணமாக அவர் பழைய ஏற்பாட்டு கர்த்தர் அல்ல.இதை உறுதிப்படுத்த மற்றுமொரு உதாரணத்தை பார்க்க போகிறோம்.
ஓர் ஊரில் அன்பு என்று ஒருவர் இருக்கிறார்.அவர் ஊர்தலைவராகவும் உள்ளார்.அவரை அனைவரும் "தலைவர்" என்று அழைக்கிறார்கள்.அவ்வூரில் பத்து குடும்பங்களைச் சேர்ந்த சிலர் மட்டும் கிறித்தவர்கள்.இக்கிறித்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென்று ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.அவர் பெயர் "சூசை".இவரை கிறித்தவர்கள் மட்டும் "தலைவரே" என்று அழைப்பார்கள்.ஆனாலும் அனைவரும் "ஊர்தலைவருக்கு" கட்டுப்பட்டவர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.தங்கள் வழிகாட்டுதலுக்காக அவர்கள் இதை செய்துள்ளனர்.
சிறிது நாட்கள் கழித்து "சூசை" இறந்து விட்டார்.தங்கள் தலைவர் இறந்த துக்கம் இவர்களை மிகவும் பாதித்தது.இக்கிரித்தவர்களில் ஒருவர் ஒரு நாள் பக்கத்து ஊருக்கு சென்றார்.இவருடைய துக்கத்தை பற்றி அந்த ஊர் மக்கள் இவரிடம் விசாரித்தபோது,இவர் "தன் தலைவர்" மிகவும் நல்லவர் என்றும்,"ஊர்தலைவரிடம்" நற்பெயர் பெற்றவர் என்றும் கூறினார்.இப்பொழுது ஒரு சில கேள்விகள் உங்களை கேட்கிறேன்,
கர்த்தர் என்ற வார்த்தைதான் இப்பொழுது குழப்பமுண்டாக்குகிறது என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.இவ்வார்த்தைக்கு பின்னால் இருக்கும் பெயரின் எழுத்துக்கள் யாவை?
இவ்வெழுத்துக்கள் י , ה , ו , ה ஆகும்.இவ்வெழுத்துக்களுக்குறிய ஆங்கில எழுத்துக்கள் Y(י),H(ה),W(ו),H(ה)ஆகும்.ஆனால் இயேசுவுக்கு இவ்வெழுத்துக்கள் வராது.பின் எப்படி இருவரும் ஒருவராக முடியும்?கீழே தரப்பட்டுள்ள வசனத்தை பாருங்கள்.
"கர்த்தர்" ஒருவரே கடவுள்,வேறு யாரும் அல்ல என்று கூறினால் என்ன பொருள்? "கர்த்தர்" என்ற வார்த்தைக்கு பின்னால் உள்ள "יְ הוָה" இவரே கடவுள். இதற்க்கு வலு சேர்க்கும் விதமாக திருமறையில் இருந்து ஒரு கதையை காண்போம்.அது நாகமான் கதை ஆகும்.
இஸ்ரயேல் மக்களில் ஒருவன் கர்த்தர் ஒருவரே கடவுள் என்று கூறினால் அது ஒரு பெரிய சாட்சி அல்ல.சிரியா நாட்டின் மக்களில் ஒருவன் கூறினால் அது பெரும் சாட்சி.அவன் வார்த்தைகளை கவனியுங்கள்.
எனவே கர்த்தர் என்ற வார்த்தை "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளையே" அன்றி வேறு யாரையும் குறிக்க வில்லை.மற்றுமொரு சாட்சியை கவனியுங்கள்.இது எசேக்கியா என்ற மன்னனிடம் இருந்து வருகிறது.
முடிவு:
கர்த்தர் என்ற வார்த்தை ஒரு பட்டம் மட்டுமே.அது பெயர் அல்ல.கடவுளின் பெயர் நமக்கு தரப்பட்டிருந்தும் ஏன் அது திருமறையில் இருந்து மாற்றப்பட்டது என்று இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.போற்றப்படத்தக்க அப்பெயருக்குரியவரை மட்டுமே நாம் அனைவரும் பணிந்து கொள்ள வேண்டும்.
இதனை நாம் அவர்களுடைய தத்துவ அறிஞர்களை படிப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.சாக்ரட்டீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பித்தாகோரஸ் போன்ற அறிவிற்சிறந்தவர்கள் கிரேக்கர்கள் என்பதை நினைவில் கொண்டு வாருங்கள்.
கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில் ஏன் இவ்வளவு தீமைகள்,பாடுகள்,பட்டினி,பஞ்சம்,சாவு? என்பது போன்ற கேள்விகள் கிரேக்க தத்துவ அறிஞர்களை குடைந்து கொண்டிருந்தது.திருமறையைத் தவிர்த்து தங்கள் அறிவின் மூலம் இதற்கான பதிலை தேடிக்கொண்டிருந்தனர்.
யூத இனமல்லாத இந்த கிரேக்க இனத்தவர்களிடையே இயேசு பற்றிய கதைகள் பவுல் மற்றும் மற்றவர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றபோது அதற்க்கு புது வடிவம் கிடைத்தது.படிப்படியாக புதுப்புது தத்துவங்கள் மூலம் இயேசு கடவுளாக்கப்பட்டு விட்டார்.
கி.பி.350-க்கு பிறகே திரித்துவம் பற்றிய கேள்விகள் எழுகின்றன.அப்போதைய ரோம மன்னர்கள் மூலம் இதற்கான தீர்வு எட்டப்படுகிறது.எனவே திரித்துவம் என்பது ரோம மன்னர்களால் முடிவு செய்யப்பட்டதே அன்றி கடவுளால் அல்ல.
தமிழில் கர்த்தர் என்ற வார்த்தை:
தமிழில் திருமறை முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டபோது இவ்வார்த்தை இல்லை.பின்னர்தான் சேர்க்கப்பட்டது.இவ்வார்த்தையின் பொருள் என்ன என்று எனக்கு தெரிய வில்லை.ஆனால் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இவ்வார்த்தை எவ்வாறு பயன்படுகிறது என்பதை நம்மால் காண இயலும்.
திருமறை ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.எல்லாம் வல்ல இறைவனாம் இஸ்ரயேலின் இறைவன் தன்னுடைய வார்த்தைகளை தன்னுடைய அடியார்கள் மூலமாக நமக்கு தந்திருக்கிறார்.
வேறு எந்த புனித நூல்களிலும் பார்க்க முடியாத ஒன்று திருமறையில் உள்ளது.இங்கே கடவுள் தன்னுடைய பெயரை அறிவிக்கிறார்.தான் இவ்வாறு அழைக்கப்படுவதாக அவரே கூறுகிறார்.
ஏறத்தாழ அவருடைய வார்த்தைகள் அனைத்திலும் அவருடைய பெயர் இருக்கும். மிகவும் அதிகாரத்தோடு இருக்கும். மோசேக்கு தன்னுடைய பெயரை யாத் 3:15-ல் அறிவித்திருக்கிறார். பழைய ஏற்பாடு முழுவது இப்பெயர் ஏறத்தாழ 7000 முறை வருகிறது.ஆதிகாலத்தில் இஸ்ரேலிய மக்கள் கனத்திற்குரிய இப்பெயரை உச்சரித்தனர்.
ஆனால் அவர் தன்னுடைய பெயரை மிக கவனத்துடன் கையாளும் படி அறிவுறுத்தி இருக்கிறார்.தேவை இல்லாமல் அவருடைய பெயரை பயன்படுத்துதல் கூடாது.
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.[யாத் 20:7]இஸ்ரயேல் மக்கள் அடிக்கடி அவர் பெயரை பயன் படுத்தினர்.இதன் காரணமாக கணத்திற்குரிய அப்பெயர் மிகச்சாதாரணமாக பயன்படும் பெயராக மாறியது.ஆசாரியர்களுக்கும்,இனத்தின் மூப்பர்களுக்கும் இச்செயல் நல்லதாக தோன்றவில்லை.
எனவே கடவுளின் கனத்திற்குரிய பெயரை அனைவரும் அடிக்கடி உச்சரிப்பதை தடை செய்தனர்.ஆசாரியர்கள் மட்டும் விதிவிலக்காக்கப்பட்டனர்.தோல் சுருள்களில் எழுதப்பட்ட கடவுளின் வார்த்தைகளை படிக்கும் பொழுது கூட மேலும் அவர் பெயர் தவறாக உச்சரிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு புதிய முறையைக் கொண்டு வந்தனர்.
சுருள்களில் எழுதப்பட்டுள்ள கடவுளின் வார்த்தைகளில்,அவருடைய பெயர் வரும் இடங்களில் சிறு மாற்றம் செய்ய விரும்பினர்.கனத்திற்குரிய அப்பெயர் வரும் இடங்களிலெல்லாம் "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தையில் உள்ள ஓரிரு எழுத்துக்களைக் கொண்டு நிரப்பி விட்டனர்.இந்த "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தையின் பொருள் "ஆண்டவன்" என்பதாகும்.இச்செயலுக்கு காரணம் கடவுளின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.
ஆனால் இதுவே நாளடைவில் வேறு குழப்பத்திற்கு இட்டுச் சென்று விட்டது.காலப்போக்கில் சில நூறாண்டுகள் கழிந்த பிறகு இஸ்ரேல் மக்களுக்கு கடவுளின் பெயரை எப்படி உச்சரிப்பது என்பது மறந்து விட்டது.புதிய சந்ததிகளுக்கு கடவுளின் பெயரை எப்படி உச்சரிப்பது என்பது தெரிய வில்லை.
இப்பொழுது இஸ்ரேல் மக்களின் கையில் இருக்கும் தங்கள் திருமறையில் கடவுளின் பெயருக்கு பதிலாக "Adonai" என்ற வார்த்தைதான் இருக்கிறது.இந்த செயலைப்பற்றி இஸ்ரயேல் மக்களுக்கு தெரிகிறது,ஆனால் எப்படி அவர் பெயரை உச்சரிப்பது என்று தெரிய வில்லை.இப்படியே காலம் கடந்து விட்டது.திருமறை மற்ற இனத்தாருக்கும் பரவிவிட்டது.
திருமறையானது மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட பொது "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தைக்குரிய பொருளை தரும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.குறிப்பாக கிரேக்க மொழியில் "kurios"(Greek: κύριος) பயன்படுத்தப்பட்டது.ஆங்கிலத்தில் "Lord" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும்.
என்ன நடந்தது என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.கடவுளின் பெயருக்குரிய கனத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட ஒரு செயல் அவருடைய பெயரையே மறக்கும் படி செய்து விட்டது.நாம் பழைய ஏற்பாட்டை மட்டும் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பதை மறவாதீர்கள்.
இப்பொழுது தமிழுக்கு வருவோம்.பல முறை தமிழ் திருமறையானது மாற்றம் செய்யப்பட்டு விட்டது.இப்பொழுது வழக்கில் இருக்கும் தமிழ் திருமறையை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம்.கடவுளின் பெயர் வரும் இடங்களிலெல்லாம் தமிழ் திருமறை "கர்த்தர்" என்று கொண்டுள்ளது.பழைய ஏற்பாட்டில் இது ஏறத்தாழ 7000 முறைகள் ஆகும்.இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றால்,
- "கர்த்தர்" என்ற வார்த்தை கடவுளின் பெயர் வரும் இடங்களில் அவரைக்குறிப்பதற்கு பயன்படுகிறது.
- எனவே "கர்த்தர்" என்ற வார்த்தை கடவுளின் பெயரைக்குறிப்பதற்கு பயன்பட்ட மறைமுக வார்த்தை.
- எடுத்துக்காட்டாக "உங்களின் தந்தையை நீங்கள் "அப்பா" என்று அழைக்கிறீர்கள்,ஆனால் "அப்பா" என்பது பெயர் அல்ல.அது ஒரு தலைப்பு அவ்வளவுதான்.
- அது போன்று "கர்த்தர்" என்பது பெயர் அல்ல.அது ஒரு தலைப்பு அல்லது பட்டம்.
- கடவுளின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்க்காக ஹீப்ரு மொழியில் செய்யப்பட ஒரு செயல் தமிழ் வரை வந்திருக்கிறது(தெரிந்தோ அல்லது தெரியாமலோ).
எனவே பழைய ஏற்பாட்டில் எங்கெல்லாம் "கர்த்தர்" என்று வாசிக்கிறீர்களோ அங்கெல்லாம் கடவுளின் பெயர் உள்ளது என்பதை மறக்காதீர்கள்.இதில் என்ன முக்கியத்துவம் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
இப்பொழுது நாட்டின் பிரதமர் மோடி.இந்த வாக்கியத்தை கவனியுங்கள்,"இன்று பிரதமர் வெளிநாடு சென்றார்".இதில் என்ன கவனிக்க வேண்டியுள்ளது?
"பிரதமர்" என்ற பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம்.ஆனால் "மோடி" என்ற பெயர் ஒருவருக்குரியது மட்டுமே ஆகும்.ஐந்து வருடங்கள் களைத்து "பிரதமர்" பட்டம் வேறு யாருக்கு வேண்டுமானாலும் சென்று விடும்.ஆனால் "மோடி" மோடியாக மட்டுமே இருப்பார்.
எனவே "பெயர்" என்பது அடையாளம் ஆகும்.ஒருவர் யார் என்பதை அவர் பெயருக்குள்ள மரியாதை காட்டிக் கொடுத்து விடும்.எனவேதான் "பெயர்" மிக முக்கியம்.அதனால்தான் கடவுள் தன்னுடைய பெயரை வீணாக பயன் படுத்த வேண்டாம் என்கிறார்.ஒருவருடைய பெயரை கூறினால் போதும்,அவரை நாம் தெரிந்து கொள்வோம்.
ஒருவருடைய பெயர் அவர் எவ்வளவு பெரியவர் என்பதை சொல்வதாக உள்ளது.முத்திரைகள் இதனடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.முத்து என்ற ஒருவர் ஓர் சிற்றூரில் வாழ்ந்து வருகிறார்.அவர் ஏழ்மையான சூழலில் இருக்கிறார்.இப்பொழுது அவருடைய மக்களுக்கு திருமணம் நடக்க உள்ளது.அதற்க்கு சிறிது பணம் தேவை.அவ்வூரில் இளங்கோ என்ற செல்வந்தர் ஒருவர் உள்ளார்.அவரிடம் நிறைய பணம் உள்ளது.நம்பி என்ற பெரியவர் ஒருவரும் உள்ளார்.இந்த நம்பி அவ்வூரில் ஒரு மதிப்புக்குரியவர்,ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்,அனைவராலும் மதிக்கப்படுபவர்.இவருக்கென்று தனி மரியாதை உள்ளது.
ஏழையான முத்து செல்வந்தரான இளங்கோவிடம் சென்று பண உதவி கேட்கிறார்.இளங்கோ தயங்குகிறார்,காரணம் முத்துவால் அப்பணத்தை திருப்பி தர இயலுமா என்று சந்தேகிக்கிறார்.எனவே மறுத்து விட்டார்.முத்து நேராக நம்பியிடம் சென்று விவரங்களை கூறுகிறார்.நம்பி இளங்கோவை தொலைபேசியில் அழைத்து முத்துவுக்கான பொறுப்பை தான் எடுத்துக்கொள்வதாகவும் அவருக்கு தயங்காமல் கடன் கொடுக்கும்படிக்கும் கூறுகிறார்.மேலும் ஒரு கடிதம் எழுதி அதில் தன்னுடைய முத்திரையைப் பதித்து முத்துவிடம் கொடுத்து அனுப்புகிறார்.இப்பொழுது இளங்கோ முத்துவை அழைத்து,"நம்பி ஐயாவே கூறிவிட்டார்,அதனால் நான் உங்களுக்கு கடன் தருகிறேன்".
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன? இக்கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களை பற்றியும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் உங்கள் மனதில் கற்பனை செய்து இருப்பீர்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டியது "நம்பி" என்ற பெரியவரைத்தான்.அவருடைய பெயருக்கென்று தனி மரியாதை இருந்தது.திரு.நம்பியின் முத்திரையைப் பார்த்தவுடன் திரு.இளங்கோ அவரை நேரில் பார்க்காமலேயே அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு முத்துவுக்கு கடன் கொடுத்து விட்டார்.காரணம் திரு.நம்பியின் பெயருக்கென்று இருந்த மரியாதை.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது,ஒருவருடைய பெயர் அவரைப்பற்றி கூறுகிறது.எல்லாம் வல்ல இறைவனும் தன்னுடைய பெயரை கூறியிருக்கிறார்.அதை பயபக்தியுடன் கையாள வேண்டியது நமது கடமை.பூமியில் மனிதனுடைய பெயருக்கே அவ்வளவு மரியாதையை நாம் கொடுக்கிறோம் என்றால்,அனைத்தையும் படைத்த கடவுளின் பெயருக்கு நாம் எப்படி பயந்து நடுங்க வேண்டும்?இதன் காரணமாகவே ஆதிகால இஸ்ரயேல் மக்கள் கடவுளின் பெயரை உச்சரிக்க தடை செய்தனர்.ஆனால் அது வேறு குழப்பங்களுக்கு இட்டு சென்று விட்டது.
பழங்கால தீர்க்கதரிசிகள் கடவுளின் பெயரில் தீர்க்க தரிசனம் கூறுவதை நாம் படித்திருக்கக்கூடும்.அப்பெயருக்குள்ள கணத்தை ஒருவர் அறிந்திருந்தாரானால் அத்தீர்க்கதரிசியின் சொல்லுக்கு பயந்து நடுங்குவார்கள்.பயந்து நடுங்குவது தீர்க்கதரிசிக்கு அல்ல,கடவுளின் பெயரில் வரும் வார்த்தைகளுக்கு.எடுத்துக்காட்டாக கடவுளின் பெயருக்குள்ள கணத்தை புரிந்து கொள்வதற்காக,
என் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.[லேவி 19:12]
இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,[2இராஜ 21:4]
நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.[2இராஜ 23:27]
யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது[சங் 76:1].
தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.[சங் 68:4]
அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.[சங் 66:2]
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.[யோவேல் 2:32]பெயர் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் ஒரு சில வசனங்கள்தான் மேற்கண்டவைகள்.போற்றுதற்குரிய இப்பெயரின் உச்சரிப்பைத்தான் இன்று மறந்து நிற்கிறோம்.
தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
ஆதிகால சுருள்களில் நம் கடவுளின் பெயர் இருந்தது.அவருடைய பெயரை தவறாக உச்சரிக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அப்பெயருக்கு பதிலாக "ஆண்டவன்" என்ற பொருள் தரும் வார்த்தை சேர்க்கப்பட்டது.ஆங்கிலத்தில் இது "Lord" என்று ஆனது.ஆனால் தமிழில் இது "கர்த்தர்" என்று ஆனது.இவ்வார்த்தைகள் அனைத்தும் ஒருவருடைய பெயருக்குரியது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.அவர் ஈடு இணையில்லாத கடவுள்.
ஒருவருடைய பெயர் அவரது அடையாளம்.அப்பெயர் அவரை மட்டுமே குறிக்கும்.வேறு யாரையும் குறிக்காது.அப்படியென்றால்,பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்ற பெயர் எப்படி இயேசுவை குறிக்கும்? அது எப்படி சாத்தியம்?அது மிகப்பெரும் தவறு இல்லையா?
கர்த்தர் என்ற வார்த்தை ஒரு பட்டம்தானே அதை யாருக்கு பயன்படுத்தினால் என்ன? என்று கேள்வி கேட்கலாம்.தவறு இல்லைதான்.இன்று மோடியை "பிரதமர் மோடி" என்கிறோம்.ஆனால் ஐந்து வருடம் கழித்து யார் வேண்டுமானாலும் "பிரதமராக" இருக்க முடியும்.ஆனால் இரண்டாவதாக வரும் வேறு ஒரு நபரை "பிரதமர்" என்று கூறினால் அதுவும் மோடியைத்தான் குறிப்பிடுகிறது என்று கூற முடியுமா? இயேசுவுக்கும் "கர்த்தர்" என்ற வார்த்தையை பயன்படுத்தியதன் காரணமாக இயேசுதான் பழைய ஏற்பாட்டில் உள்ள "ஆபிரகாமின் கடவுள்" என்று கூற முடியுமா?
எனவே புதியஏற்பாட்டில் இயேசுவை "கர்த்தர்" என்று குறிப்பிட்டதன் காரணமாக அவர் பழைய ஏற்பாட்டு கர்த்தர் அல்ல.இதை உறுதிப்படுத்த மற்றுமொரு உதாரணத்தை பார்க்க போகிறோம்.
ஓர் ஊரில் அன்பு என்று ஒருவர் இருக்கிறார்.அவர் ஊர்தலைவராகவும் உள்ளார்.அவரை அனைவரும் "தலைவர்" என்று அழைக்கிறார்கள்.அவ்வூரில் பத்து குடும்பங்களைச் சேர்ந்த சிலர் மட்டும் கிறித்தவர்கள்.இக்கிறித்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென்று ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.அவர் பெயர் "சூசை".இவரை கிறித்தவர்கள் மட்டும் "தலைவரே" என்று அழைப்பார்கள்.ஆனாலும் அனைவரும் "ஊர்தலைவருக்கு" கட்டுப்பட்டவர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.தங்கள் வழிகாட்டுதலுக்காக அவர்கள் இதை செய்துள்ளனர்.
சிறிது நாட்கள் கழித்து "சூசை" இறந்து விட்டார்.தங்கள் தலைவர் இறந்த துக்கம் இவர்களை மிகவும் பாதித்தது.இக்கிரித்தவர்களில் ஒருவர் ஒரு நாள் பக்கத்து ஊருக்கு சென்றார்.இவருடைய துக்கத்தை பற்றி அந்த ஊர் மக்கள் இவரிடம் விசாரித்தபோது,இவர் "தன் தலைவர்" மிகவும் நல்லவர் என்றும்,"ஊர்தலைவரிடம்" நற்பெயர் பெற்றவர் என்றும் கூறினார்.இப்பொழுது ஒரு சில கேள்விகள் உங்களை கேட்கிறேன்,
- இக்கிறித்தவர் கூறிய "தலைவர்"தான் ஊர்தலைவரா?அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
- "தலைவர்" என்ற வார்த்தை ப்யன்படுத்தப்பட்டதாலையே அன்புவும் சூசையும் ஒருவர்தான் என்று கூற முடியுமா?
- ஒரு வேளை இருவரும் ஒருவர்தான் என்று நீங்கள் கூறினால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாக இருக்கும்?
கர்த்தர் என்ற வார்த்தைதான் இப்பொழுது குழப்பமுண்டாக்குகிறது என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.இவ்வார்த்தைக்கு பின்னால் இருக்கும் பெயரின் எழுத்துக்கள் யாவை?
இவ்வெழுத்துக்கள் י , ה , ו , ה ஆகும்.இவ்வெழுத்துக்களுக்குறிய ஆங்கில எழுத்துக்கள் Y(י),H(ה),W(ו),H(ה)ஆகும்.ஆனால் இயேசுவுக்கு இவ்வெழுத்துக்கள் வராது.பின் எப்படி இருவரும் ஒருவராக முடியும்?கீழே தரப்பட்டுள்ள வசனத்தை பாருங்கள்.
וַיּ ֹאמֶ ר u·iamr and·he-is-saying ע ד oud further אֱ"הִ ים aleim Elohim אֶ ל al to ־ - מֹ שֶׁ ה mshe Moses כֹּ ה ke thus ־ - ת ֹאמַ ר thamr you-shall-say אֶ ל al to ־ - בְּ נֵי bni sons-of יִ שְׂ רָ אֵ ל ishral Israel יְ הוָה ieue Yahweh 15 אֱ"הֵ י alei Elohim-of אֲבֹ תֵ יכֶ ם abthi·km fathers-of·you(p) אֱ"הֵ י alei Elohim-of אַ בְ רָ הָ ם abrem Abraham אֱ"הֵ י alei Elohim-of יִ צְ חָ ק itzchq Isaac וֵא"הֵ י u·alei and·Elohim-of יַעֲקֹ ב ioqb Jacob שְׁ לָ חַ נִ י shlch·ni he-sent·me[And God said moreover unto Moses, Thus shalt thou say unto the children of Israel, The LORD God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me unto you: this [is] my name for ever, and this [is] my memorial unto all generations.]சிகப்பு பின்புலத்தில் கருப்பு எழுத்துக்கள்தான் கடவுளின் பெயருக்குரிய எழுத்துக்கள்.இவற்றை சேர்த்து எப்படி உச்சரிப்பது என்றுதான் இன்று மறந்து போய் விட்டது.இவ்வெழுத்துக்களுக்கு பதிலாகத்தான் "கர்த்தர்" என்ற தமிழ் வார்த்தை நம் மொழிபெயர்ப்பில் உள்ளது.
"கர்த்தர்" ஒருவரே கடவுள்,வேறு யாரும் அல்ல என்று கூறினால் என்ன பொருள்? "கர்த்தர்" என்ற வார்த்தைக்கு பின்னால் உள்ள "יְ הוָה" இவரே கடவுள். இதற்க்கு வலு சேர்க்கும் விதமாக திருமறையில் இருந்து ஒரு கதையை காண்போம்.அது நாகமான் கதை ஆகும்.
இஸ்ரயேல் மக்களில் ஒருவன் கர்த்தர் ஒருவரே கடவுள் என்று கூறினால் அது ஒரு பெரிய சாட்சி அல்ல.சிரியா நாட்டின் மக்களில் ஒருவன் கூறினால் அது பெரும் சாட்சி.அவன் வார்த்தைகளை கவனியுங்கள்.
அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.இஸ்ரயேலின் கடவுளே அல்லாமல் வேறு கடவுள் இல்லை என்று இஸ்ரயேல் இனமல்லாத வேறு ஒரு மனிதன் அறுதியிட்டு கூறுகிறான்.இவன் சாட்சி கூறிய கடவுள் இயேசுவா? அக்காலத்தில் இயேசு பிறக்கவே இல்லை.மேலும் அக்காலத்தில் "கர்த்தர்" என்றால் "י ה וָ ה" என்ற பெயருக்குரியவர். "கர்த்தர்" என்ற பட்டத்தை வேண்டுமானால் யாருக்கும் சூட்டிக்கொள்ளலாம்,ஆனால் கர்த்தர் என்ற பட்டம் எப்பெயரை குறிக்கிறதோ அவரை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியாது.எனவே நாகமான் குறிப்பிட்டவன் "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளையே" அன்றி வேறு யாரையும் அல்ல.
அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.
அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.
ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணிய வேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.[2இராஜ 5:15-18]
எனவே கர்த்தர் என்ற வார்த்தை "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளையே" அன்றி வேறு யாரையும் குறிக்க வில்லை.மற்றுமொரு சாட்சியை கவனியுங்கள்.இது எசேக்கியா என்ற மன்னனிடம் இருந்து வருகிறது.
கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.[2இராஜ 19:15]
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.[2இராஜ 19:19]கடவுள் யூதாவை அசீரியா மன்னன் சனகெரிப்பிடமிருந்து தன் வார்த்தையின்படியே காப்பாற்றினார்.எனவே தன் வார்த்தையை நிறைவேற்றிய கர்த்தர் ஒருவரே கடவுள்.வேறு யாரும் அல்ல,இயேசு முதற்கொண்டு.
முடிவு:
கர்த்தர் என்ற வார்த்தை ஒரு பட்டம் மட்டுமே.அது பெயர் அல்ல.கடவுளின் பெயர் நமக்கு தரப்பட்டிருந்தும் ஏன் அது திருமறையில் இருந்து மாற்றப்பட்டது என்று இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.போற்றப்படத்தக்க அப்பெயருக்குரியவரை மட்டுமே நாம் அனைவரும் பணிந்து கொள்ள வேண்டும்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment