ஏசா 30:15 -ஒரு சிறு மொழிபெயர்ப்பு தவறு
ஏசாயா 30-ம் அதிகாரத்தில் வரக்கூடிய 15-வது வசனம் தமிழ் பைபிளில் சிறு தவறுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.எப்படி என்று நாம் இந்த கட்டுரையில் காணலாம்.முதலில் அந்த வசனத்தை நாம் பார்ப்போம்.
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;
இந்த வசனம் ஹீப்ரு மொழியில் எப்படி இருக்கிறது என்று பார்த்து விடுவது முதலில் நல்லது.ஒவ்வொரு வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ki that כֹ ה ke thus ־ - אָ מַ ר amr he-says אֲדֹ נָי adni my-Lord יְ הוִ ה ieue Yahweh קְ דשׁ qdush holy-one-of יִ שְׂ רָ אֵ ל ishral Israel בְּ שׁוּבָ ה b·shube in·returning וָנַחַ ת u·nchth and·rest תִּ וָּשֵׁ עוּן thushou·n you(p)-shall-be-saved בְּ הַ שְׁ קֵ ט b·eshqt in·to-cbe-quiet-of וּבְ בִ טְ חָ ה u·b·btche and·in·trust תִּ הְ יֶה theie she-shall-become גְּ בוּרַ תְ כֶ ם gburth·km mastery-of·you(p) וְ ל ֹא u·la and·not אֲבִ יתֶ ם abithm you(p)-will : :[For thus saith the Lord GOD, the Holy One of Israel; In returning and rest shall ye be saved; in quietness and in confidence shall be your strength: and ye would not.]
இப்பொழுது உங்கள் கைகளில் தமிழ்,ஆங்கிலம்,ஹீப்ரு என்று மூன்று மொழிகளில் இந்த குறிப்பிட்ட வசனம் உள்ளது.முதல் தவறு என்னவென்றால்,"ADONAI" என்ற வார்த்தையை மொழிபெயர்த்த விதத்தில் உள்ளது.
ஹீப்ரு மொழியில் ஒரு வார்த்தையானது "ஐ(I)" என்ற உச்சரிப்புடன் முடிந்தால் அது "என்னுடைய(My)" என்று பொருள் தரும்.இயேசு தான் இறக்கும் பொழுது சத்தமிட்டு கூப்பிட்ட வார்த்தைகளை நினைவில் இப்பொழுது கொண்டு வாருங்கள்."ஏலி(El-i),ஏலி(El-i)...." என்று கடவுளை நோக்கி கூப்பிடுவார் அல்லவா? அதில்,"Eli" என்றால் "என் கடவுளே" என்று பொருளாகும்."என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?" என்பதை நினைவிற்கு கொண்டு வாருங்கள்.
El என்றால் "கடவுள்"என்று பொருள்."i(ஐ)" என்ற எழுத்து கடைசியில் உள்ளதால் "என் அல்லது என்னுடைய" என்ற பொருளை தருமாறு நாம் மொழிபெயர்க்க வேண்டும்.இந்த "i(ஐ)" என்று முடியும் வார்த்தைகள் "பன்மையைக்" குறிப்பதற்கும் பயன்படும்.ஆனால் இந்த இடத்தில அவ்வாறு பயன்படாது.
El என்றால் "கடவுள்"என்று பொருள்."i(ஐ)" என்ற எழுத்து கடைசியில் உள்ளதால் "என் அல்லது என்னுடைய" என்ற பொருளை தருமாறு நாம் மொழிபெயர்க்க வேண்டும்.இந்த "i(ஐ)" என்று முடியும் வார்த்தைகள் "பன்மையைக்" குறிப்பதற்கும் பயன்படும்.ஆனால் இந்த இடத்தில அவ்வாறு பயன்படாது.
"ADON" என்றால் "ஆண்டவன்" என்று பொருளாகும்.எனவே "ADONAI" என்ற வார்த்தையானது "என் ஆண்டவன்" என்றே மொழிபெயர்க்கப் பட்டிருக்க வேண்டும்.
அடுத்து வார்த்தை கடவுளுடைய வணக்கத்திற்குரிய பெயர் ஆகும்.இப்பெயர் மிகவும் போற்றப்படத்தக்க பெயர் என்பதினால் இப்பெயரை தமிழில் "கர்த்தர்" என்றும் ஆங்கிலத்தில் "LORD" என்றும் மொழிபெயர்க்கின்றனர்.சிவப்பு பின்புலத்தில் மஞ்சள் எழுத்து வார்த்தையை பாருங்கள்,அதுதான் கடவுளுடைய பெயர் ஆகும்.இப்பெயரை உச்சரிப்பது எப்படி என்று ஒரு சரியான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பதாலும் "LORD" என்று மொழிபெயர்க்கின்றனர்.இப்பெயரின் எழுத்துக்களாவன,יְ ,ה ,וִ ,ה ஆகும்.
இப்பொழுது இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்து வாசித்து பாருங்கள்,אֲ דֹ נָ י יְ ה וִ ה (வலமிருந்து இடமாக படிக்கவும்:Adonai יְ ה וִ ה),"என் ஆண்டவனாகிய கர்த்தர்" என்று பொருள் படும்.ஆனால் தமிழில் இவ்வார்த்தை எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? "கர்த்தராகிய தேவன்" என்று உள்ளது.EL அல்லது ELOHIM போன்ற வார்த்தைகள்தான் "தேவன்" என்று மொழிபெயர்க்க பட வேண்டும்."Adonai" என்பது "ஆண்டவன்" என்றே மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
இங்கு ஏசாயா தீர்க்கதரிசி கடவுளை "என் ஆண்டவன்" என்று குறிப்பிடுகிறார்.மிக சுலபமான பொருள்.
அடுத்த சிறு தவறு "בְּ שׁוּבָ ה" என்ற வார்த்தையில் உள்ளது.ஹீப்ரு மொழியில் ஒரு வார்த்தை "ב(b)" என்று ஆரம்பித்தால்,அதன் பொருள் "ல்(in )" ஆகும்.மேற்கூறிய வார்த்தையின் பொருள் "மனம் திரும்புதல்" ஆகும்.எனவே "மனம் திரும்பதிலில்" என்று பொருள் கொள்ள வேண்டும்.அதுபோன்றுதான் அடுத்த வார்த்தையான "וָנַ֙חַת֙".இதன் பொருள் "rest,ஓய்வு" போன்றவை ஆகும்.மேற்கூறிய இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே "and(மற்றும்)" என பொருள் தரக்கூடிய ஒரு வார்த்தையான "וָ" ஆகும்.இதனை "vav" என்று உச்சரிக்க வேண்டும்.
எனவே முதல் பாதியை "என் ஆண்டவனாகிய கர்த்தர் கூறுகிறார்;மனம் திரும்புதலிலும் ஓய்விலுமே நீங்கள் இரட்சிக்க படுவீர்கள்." என்று மொழிபெயர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இது போன்றுதான் அடுத்த இரு வார்த்தைகளும், בְּהַשְׁקֵט֙ மற்றும் וּבְבִטְחָ֔ה.இந்த இரண்டு வார்த்தைகளும் "ב(b)" என்று ஆரம்பித்துள்ளன.முதல் வார்த்தைக்கு பொருள் "அமைதியாயிருத்தல்" ஆகும். இரண்டாவது வார்த்தைக்கு பொருள் "நம்பிக்கையாயிருத்தல்" ஆகும்.எனவே கீழ்கண்டவாறு மொழிபெயர்க்கலாம்.
"அமைதியாய் இருத்தலிலும் நம்பிக்கையாய் இருத்தலிலும் உங்கள் பலம் விளங்கும்" என்று இந்த இரண்டாம் பகுதியை மொழிபெயர்க்கலாம்.
சிகப்பு கலர் பின் புலத்தில் உள்ள வார்த்தைகளின் பொருள் "ஆனால் நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள்" என்பது ஆகும்.
இந்த வசனத்தின் முழு மொழிபெயர்ப்பும் கீழ்கண்டவாறு இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
"இஸ்ரயேலின் பரிசுத்தராயிருக்கின்ற என் ஆண்டவாகிய கர்த்தர் கூறுகிறார்;மனம் திரும்புதலிலும் ஓய்விலும் நீங்கள் இரட்சிக்க படுவீர்கள்.அமைதியாய் இருத்தலிலும் நம்பிக்கையாய் இருத்தலிலும் உங்கள் பலம் விளங்கும்.ஆனால் நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள்"[ஏசா 30:15]
சரி மொழிபெயர்த்தாயிற்று.இந்த வசனம் கூறும் கருத்து என்ன.அது சூழ்நிலைக்கு ஒத்து போகிறதா?எந்த சூழ்நிலையில் இந்த வார்த்தைகளை ஏசாயா தீர்க்க தரிசி கூறுகிறார் என்று நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்ரயேல் மக்கள் எகிப்துக்கு தப்பி சென்று அங்கு நலமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.அங்கு ஓட எத்தனிக்கிறார்கள்.எந்த கால கட்டத்தில் இது நடக்கிறது என்று எனக்கும் தெரிய வில்லை.ஆனால் ஏசாயா இதனை தீர்க்க தரிசனமாக கூறுகிறார் என்றே நான் நினைக்கின்றேன்.காரணம்,சிதேக்கியா காலத்தில் பாபிலோனுக்கு தப்ப நினைத்து எகிப்துக்கு யூத மக்கள் செல்வார்கள்.அந்த நிகழ்வை கூறுகிறார் என்று நான் நினைக்கிறேன்.ஆனால் உறுதியாக கூற முடியவில்லை.எது எப்படி இருந்தாலும்,இஸ்ரயேல் மக்கள் எகிப்தை நம்பி அங்கு வேகமாக தப்பித்து செல்ல நினைக்கும் ஒரு நிகழ்வு இங்கு இந்த 30-ம் அதிகாரத்தில் விளக்கப்படுகிறது.
என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.[ஏசா 30:2,3]
தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.
எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன்.[30:6,7]
இந்த சூழ்நிலையில்,ஏசாயா தீர்க்க தரிசி பேசுகிறார்.கர்த்தர் அவர் மூலமாக பேசுகிறார்.மக்கள் எகிப்துக்கு போக வேண்டாம்,அமைதியாக இருக்க சொல் என்று தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் கூறுகிறார்."நீங்கள் எகிப்துக்கு போகாமல் இங்கேயே அமைதியாகவும் நம்பிக்கையாகவும் இருந்தால் காப்பாற்றப் படுவீர்கள்" என்று ஏசாயா மூலமாக கடவுள் கூறுகிறார்.
ஆனாலும் மக்கள் அவர் சொல்லை கேட்க மாட்டார்கள் என்று இந்த மக்களை பற்றி நன்றாக அறிந்த கடவுள் கூறுகிறார்.இதுதான் இந்த வசனத்தில் விளக்க படுகிறது.
ஆனாலும் மக்கள் அவர் சொல்லை கேட்க மாட்டார்கள் என்று இந்த மக்களை பற்றி நன்றாக அறிந்த கடவுள் கூறுகிறார்.இதுதான் இந்த வசனத்தில் விளக்க படுகிறது.
எனவே மொழிபெயர்ப்பு என்பது ஒரு சிக்கலான செயல்.மிக கவனமாக செய்ய வேண்டிய பெரும் செயல் அது.தமிழ் பைபிளில் இவ்வாறு எண்ணற்ற தவறுகள் உள்ளன.கடவுள் அனுமதித்தால் ஒவ்வொன்றாக அதனை நாம் காணலாம்.
இரா.இருதயராஜ்.
இந்த கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment