திரியேகம்(Trinity) ஒரு பொய் என்று 1சாமு 28-ம் அதிகாரம் நிரூபிக்கிறது
தான் ஒருவர்தான்,தன்னைத் தவிர வேறு கடவுள் யாரும் இல்லை என்றும் பழைய ஏற்பாட்டில் எண்ணற்ற இடங்களில் கூறியுள்ளார் கடவுள்.ஆனாலும் இவைகளை எல்லாம் விட்டு கடவுள் கூறாத,"திரித்துவம்" என்ற ஒரு புது கருத்தை உருவாக்கி அதை நம்ப சொல்கின்றனர் கிறித்தவர்கள்.
திரித்துவத்துக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூறக்கூடிய ஒரு கருத்து என்னவென்றால்,திருமறையில் "Elohim" என்ற ஹீப்ரு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது,அவ்வார்த்தையானது பன்மையை குறிக்கிறது.எனவே "முக்கடவுள்" கொள்கையை "Elohim" என்ற வார்த்தை சரியென்று கூறுகிறது என்று வாதிடுவார்கள்.
திரித்துவத்துக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூறக்கூடிய ஒரு கருத்து என்னவென்றால்,திருமறையில் "Elohim" என்ற ஹீப்ரு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது,அவ்வார்த்தையானது பன்மையை குறிக்கிறது.எனவே "முக்கடவுள்" கொள்கையை "Elohim" என்ற வார்த்தை சரியென்று கூறுகிறது என்று வாதிடுவார்கள்.
இக்கருத்து தவறு என்று கூறுவதற்கு திருமறை முழுவதும் எண்ணற்ற வசனங்கள் உள்ளன.ஆனாலும் 1சாமு 28-ம் அதிகாரமும் நமக்கு பயன்படுகிறது.இந்த வசனத்தை பார்த்து விடுவோம்.
அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.
அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.
அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.[1சாமு 28:7-14]
இறந்தவர்களுடன் ஆவிகளைக் கொண்டு பேசக்கூடிய ஒரு பெண்ணிடம் சவுல் தன்னுடைய போர்க் காரியங்களை பற்றி விசாரிக்கிறான்.இறந்து விட்ட தீர்க்கதரிசியாகிய சாமுவேலைக் காண்கிறான்.இக்கதை உண்மையா பொய்யா என்பது இப்பொழுது நம் ஆராய்ச்சி அல்ல.பதிலாக இங்கு அக்கால மக்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள்தான் நமக்கு முக்கியம்.
13-ம் வசனத்தை மறுபடி ஒருமுறை படித்து பாருங்கள்.
"ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்".
இந்த வசனத்தில் வரக்கூடிய "தேவர்கள்" என்ற வார்த்தைதான் நமக்கு இப்பொழுது முக்கியம்."Elohim" என்ற வார்த்தையைத்தான் இங்கு "தேவர்கள்" என்று மொழிபெயர்த்து உள்ளனர்.தொடர்ந்து படிக்கும் முன் சில தகவல்களை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.அவையாவன,
- இங்கு சாமுவேல் என்ற ஒரு "தனி மனிதனை",ஆவிகளோடு பேசும் ஒரு பெண் எழுப்பி கொண்டு வருகிறாள்.
- இந்த சாமுவேலைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.
அக்குறிப்பிட்ட 13-ம் வசனத்தின் ஹீப்ரு மொழியாக்கத்தை இப்பொழுது கீழே தருகிறேன்.
וַיּ ֹאמֶ ר-u·iamr and·he-is-saying לָ הּ l·e to·her הַ מֶּ לֶ 7 e·mlk the·king אַ ל al must-not-be ־ - תִּ ירְ אִ י thirai you-are-fearing כִּ י ki that מָ ה me what ? רָ אִ ית raith you-see וַתּ ֹאמֶ ר u·thamr and·she-is-saying הָ אִ שָּׁ ה e·ashe the·woman אֶ ל al to ־ - שָׁ אוּל shaul Saul אֱלהִים aleim Elohim רָ אִ יתִ י raithi I-see עֹ לִ ים olim ones-coming-up מִ ן mn from ־ - הָ אָ רֶ ץ e·artz the·earth : :And the king said unto her, Be not afraid: for what sawest thou? And the woman said unto Saul, I saw gods ascending out of the earth.
கருப்பு பின்புலத்தில் மஞ்சள் நிறத்தில் உள்ள வார்த்தைதான் "Elohim(ஏலோஹிம்)" ஆகும்.உண்மையில் இது பன்மையைக் குறிக்கும் வார்த்தைதான். இந்த வார்த்தையின் பொருள் "கடவுளர்கள், தேவர்கள்" என்பதும் உண்மைதான். மொழிபெயர்ப்பும் மிக சரியானதுதான்.ஆனால்,
- 12-ம் வசனத்தில் அந்த பெண் சாமுவேலைக் காண்கிறாள் என்று உள்ளது."அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்."
- எனவே "சாமுவேல்" என்ற தனிமனிதனைத்தான் அந்த பெண் காண்கிறாள்.அடுத்த வசனத்தில் அவள் சாமுவேலை,"தேவர்கள்" என்கிறாள்.ஏன் பன்மையில் குறிப்பிடுகிறாள்?
- ஹீப்ரு மொழியில் "மரியாதைக்குரியவர்களை"யும் குறிப்பதற்க்கு இந்த "Elohim(ஏலோஹிம்)" என்ற வார்த்தை பயன்படுகிறது.இதற்க்கு திருமறையில் ஆதாரம் உள்ளது.
- எனவே சாமுவேலை,தேவர்கள் என்று அந்த பெண் குறிப்பிடுகிறாள்.
- சாமுவேல் என்ற தனிமனிதனை ஏன் பன்மையில் அந்த பெண் குறிப்பிடுகிறாள்?ஏனென்றால் தனிமனிதன் ஒருவன் மரியாதைக்குரியவனாக இருக்கும் பட்சத்தில் அவனை பன்மையில் குறிப்பிடுவது எபிரேயர்களின் வழக்கம்.
- அடுத்த வசனத்தை பாருங்கள் "அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்".
- அந்த பெண்ணோ சாமுவேலை "பன்மையில்" குறிப்பிடுகிறாள்.சவுல் பதிலுக்கு சாமுவேலை ஒருமையில் "அவருடைய" என்று குறிப்பிடுகிறான்.இரண்டு பேருமே சாமுவேலை மட்டுமே குறித்து பேசுகிறார்கள் என்பது நமக்கு தெரியும்.
- பன்மையில் குறிப்பிட்டதின் காரணமாகவே சாமுவேல் திரித்துவமாக இருக்கிறார் என்று கூற முடியுமா?அதாவது,சாமுவேல் என்ற தந்தை,சாமுவேல் என்ற மகன்,சாமுவேல் என்ற ஆவி.
- "எலோஹிம்" என்ற பன்மை வார்த்தை கடவுளுக்கு பயன்படுத்தப்பட்டதன் காரணமாக அவர் "முக்கடவுள்" அதாவது "திரியேக கடவுள்" என்று கூறிய திரித்துவவாதிகள் சாமுவேலையும் அப்படி குறிப்பிட வேண்டியதுதானே!
- மிகவும் புத்திசாலித்தனமாக மொழிபெயர்ப்பு நடந்துள்ளது.திருமறையில் எண்ணற்ற இடங்களில் "ஏலோஹிம்(Elohim)" என்ற வார்த்தை கடவுளை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.கடவுளே அவ்வார்த்தையை தன்னை குறிப்பதற்கு பயன்படுத்தி உள்ளார்.அங்கெல்லாம் இவ்வார்த்தையானது "தேவன்" என்று ஒருமையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே ஏன்? பன்மையிலே மொழிபெயர்க்க வேண்டியதுதானே?
- ஏனென்றால் நம் கடவுள் ஒருவர்தான் என்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு தெரியும். ஹீப்ரு வார்த்தை பன்மையாக இருந்தாலும் ஒருமையில் மொழிபெயர்த்துள்ளனர்.காரணம், கடவுளுக்கு பன்மையில் வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், அவர் ஒருவர்தான் எனவே ஒருமையில் மொழிபெயர்க்க வேண்டும்.
- கடவுள்தான் திரித்துவமாக இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமே,மொழிபெயர்ப்பாளர்கள் "ஏலோஹிம்(Elohim) என்ற வார்த்தையை "தேவர்கள்" என்று மொழிபெயர்க்க வேண்டியதுதானே?
- மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.காரணம்,கடவுள் ஒருவர்தான் என்றும் திரித்துவம் பிற்சேர்க்கை என்றும் அவர்களுக்கு நன்றாக தெரியும்.
திரியேகம் என்பது கிறித்தவர்களால் ஆணித்தரமாக நம்பப்படக் கூடிய ஒரு விடயம்.திரியேகம் என்பது பொய் என்று யாராவது கூறினால்,அவர்கள் பொய் கூறுகிறார்கள்,அவர்கள் அந்திகிறிஸ்துவை சார்ந்தவர்கள்,அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்,அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறி அதைப்பற்றிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.
திரியேகம் என்ற ஒரு கருத்தை பைபிள் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படாத ஒன்றை நான் ஏன் நம்புகிறேன் என்று தினந்தோறும் நான் பைபிள் திருமறையை படிப்பவர்களுக்கு ஏன் வரவில்லை?
இந்த திரியேகம் எப்படி திருமறைக்குள் நுழைந்தது என்பது ஒரு பெரும் வரலாறு.உண்மையாகவே கடவுளின் மீது பற்று கொண்டவர்கள் இந்த வரலாற்றை தேடுவார்கள்.மேலும் பழைய ஏற்பாடு மட்டுமே திருமறை.புதிய ஏற்பாடு என்பது பின்னர் சேர்க்கப்பட்ட ஒன்று என்ற கருத்தையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
இப்பொழுது இக்கருத்திற்குள் நாம் வருவோம்.திரியேகம் என்றால் என்ன?இக்கருத்து பொய் என்று 1சாமுயேல் 28-ம் அதிகாரம் எவ்வாறு நிரூபிக்கிறது?முதலில் திரியேகம் என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.உண்மை என்னவென்றால்,நீங்கள் ஏதாவதொரு கிறித்தவரிடம் போய்,"திரித்துவம்" என்றால் என்ன?" என்று கேளுங்கள்.கிட்டத்தட்ட ஒருவருக்கும் இது பற்றிய முழு விளக்கம் தெரியாது.ஆனாலும் வாதிடுவார்கள்.
இது பற்றி நிறைய விவாதிக்க முடியும்.ஆனால் முடிவுக்கு வரமுடியாது.பக்கத்தில் உள்ள படத்தை பாருங்கள்.ஓரளவுக்கு அது இக்கருத்தை விளக்குகிறது என நினைக்கிறேன். தந்தை, குமாரன், பரி.ஆவி ஆகிய மூவரும் கடவுள்தான். ஆனால் தந்தை ஆனவர் பரி.ஆவி அல்ல.பரிசுத்த ஆவி மகன் அல்ல.மகன் தந்தை அல்ல.நாம் இப்பொழுது இக்கருத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்வோம்.
Elohim(ஏலோஹிம்) என்ற வார்த்தையின் பயன்பாட்டைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிற்குள் சென்று படித்து பாருங்கள்.
Click Here:
Click Here:
முடிவாக திரித்துவம் என்பது ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்கள் வழிபட்ட கடவுளிடம் இருந்து நம்மை பிரிப்பதற்கு பயன்பட்ட ஒரு வழி ஆகும்.யூதர்கள் மீது இருந்த வெறுப்புணர்வும் இதற்க்கு ஒரு காரணம் ஆகும்.அவர்களுடைய தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை முறைகளைக் கண்டு அவர்கள் மீது வெறுப்புணர்வு கொண்டு அவர்கள் வழிபட்ட கடவுளை,அதாவது மெய்யான ஒரே கடவுளை,நம்மிடமிருந்து பிரித்தனர்.ரோம,கிரேக்க கலாச்சாரங்கள் இதற்க்கு அடித்தளமிட்டன.
கிரேக்க,ரோம அரசுகள் யூதாவை ஆட்சி செய்த பொழுது யூதர்களுடைய தனித்தன்மையான வாழ்க்கை முறை அவர்களை வெறுப்புணர்வு கொள்ள செய்தது.யாருடனும் கலவாமல் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் வாழ்ந்த அவர்களை அனைவரும் வெறுத்தனர்.இந்த வெறுப்புதான் அவர்கள் வணங்கிய கடவுள் மீதும் திரும்பியது.ஆனாலும் யூதர்களுடைய வாழ்க்கை முறை அவர்களை திரும்பி பார்க்க செய்தது.
ஒழுக்கமாக வாழும் தன்மை எங்கிருந்து வந்தது என்று ஆச்சரிய பட்டனர். நியாயப்பிரமானம்தான் இதற்க்கு அடிப்படை என்று தெரிந்து கொண்டனர்.சிறிது சிறிதாக இதிலிருந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பித்தது.கடைசியாக,"Knosis" என்ற ஒரு இயக்கம் இதனை சாத்தியப்படுத்த காட்டியது.இயேசுவின் கொள்கைகள் பலவும் இந்த "Knosis" கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும்.இந்த அடிப்படையில் கடைசியாக வந்ததுதான் "திரித்துவம்".கடவுள் இதைப்பற்றி பழைய ஏற்பாட்டில் எங்கும் கூற வில்லை.
"நானே கர்த்தர்,வேறொருவரில்லை;என்னைத்தவிர தேவன் இல்லை".[ஏசா 45:5]
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.[மத் 4:10]இயேசு கர்த்தரை பணிந்து கொள்ள கூறியிருக்கிறார்.ஆனால் கிறித்தவர்கள் இயேசுவை பணிந்து கொள்கிறார்கள்.உங்கள் மனசாட்சியை கேளுங்கள்,எது சரி என்று!
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1eTnMawFKQdtNbavHYqJ3TKnJEgFBe_jM/view?usp=sharing
https://drive.google.com/file/d/1eTnMawFKQdtNbavHYqJ3TKnJEgFBe_jM/view?usp=sharing
No comments:
Post a Comment