Saturday, September 14, 2019

சாத்தான் யார் என்று இயேசு கூறுகிறார்!

யார் சாத்தான் என்று இயேசு கூறுகிறார்!

சாத்தான் என்ற கருத்து கிரேக்க வழிபாட்டு முறைகளை சார்ந்தது ஆகும்.சாத்தான் என்று தனிப்பட்ட ஒருவன் கிடையாது என்று நான் ஏற்கனவே இந்த பக்கத்தில் மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன்.இது எப்படி கிறித்தவத்திற்குள் புகுந்தது என்பதையும் விளக்கியிருக்கிறேன்.அதை இங்கே படித்து பாருங்கள்.

சரி சாத்தான் என்று ஒருவன் இருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்வோம்.அவன் கொடூரமானவன்,கெட்டவன்,அனைத்து தீமைகளுக்கும் காரணமானவன்,கடவுளுக்கு எதிர்த்து நிற்பவன் என்று நாம் நினைக்கிறோம்.தீமைகளுக்கு காரணம் அவன்தான் என்றால் கீழ்கண்ட வசனத்தை கூறியது யார் என்று பாருங்கள்.
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.[ஏசா 45:7]
திருமறையை நன்றாக படித்து கடவுளை அறிந்து கொண்டவர்களுக்கு மேற்கண்ட வசனம் கூறுவது என்ன என்பது புரியும்.மற்றவர்கள் குழம்பி போய்  நிற்பார்கள்.உங்களால் பதில் சொல்ல முடியாது.

சரி சாத்தான் என்று ஒருவன் இருக்கிறான்.அவன் யார்? இயேசு அவனைப்பற்றி கூறுகிறாரா?மத்தேயு 4-ம் அதிகாரம் நமக்கு அதைப்பற்றி கூறுகிறது.
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
இயேசுவை பிசாசு சோதிக்கிறான்.அப்பொழுது பல செயல்கள் நடைபெறுகின்றன.ஆனால்,தன்னை வணங்கும்படி அவன் கூறியபோது இயேசு என்ன கூறினார் என்று நாம் கவனிக்க வேண்டும்.
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
அவன் முகத்தில் அறைந்தாற்போல் பதில் கூறுகிறார் இயேசு.கர்த்தர் ஒருவரை தவிர வேறு யாரையும் வணங்கினால் அவன் முகத்தில் அறைந்தாற்போல் ஒவ்வாறுதான் பதில் கூற வேண்டும். இங்கு கர்த்தர் என்று இயேசு குறிப்பிடுபவர் யார்?
  • அவர் இஸ்ரேலின் கடவுள்.
  • அவரைத்தான் இயேசு வழிபட்டார்.தேவாலயத்திற்கு சென்று வழிபட்டார்.
  • இவரை,அதாவது இஸ்ரயேலின் கடவுளை மட்டுமே பணிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

இயேசு தன்னை கடவுள் என்றோ,கடவுளின் ஒரு அங்கம் என்றோ எங்கும் கூற வில்லை.இவை அனைத்தும் பிற்சேர்க்கைகள்.தான் ஒரு கடவுளாக அவர் தன்னை நினைத்திருந்தால்,

  • தன்னையே வணங்க சொல்லியிருக்க வேண்டியதுதானே?
  • "நீ என்னையே வணங்கு,நானும் ஒரு கடவுள்தான்" என்று அவர் கூறியிருக்கலாமே!
  • அவர் அவ்வாறு கூறவில்லை.அவர் மிகத்தெளிவாக கூறுகிறார்,"உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே" என்று.
  • இயேசுவே "கடவுள் ஒருவர்தான்" என்று கூறியிருக்கும் பொழுது,இன்றைய கிறித்தவர்கள் மட்டும் ஏன் "முக் கடவுள்(திரித்துவம்)" என்று கூறுகின்றனர்?
இறுதியாக,தன்னை வணங்க கூறிய பிசாசை இயேசு எப்படி அழைத்தார் என்று பாருங்கள்.
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
கர்த்தரை விட்டு மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள்தான் சாத்தான்கள்.இதை நான் கூற வில்லை.இயேசுவே கூறியிருக்கிறார்.

அப்படியென்றால்,இஸ்ரேலின் கடவுளை விட்டு திரித்துவத்தை வணங்குகிற கிறித்தவர்கள்.........................?

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

No comments:

Post a Comment

My Posts