Saturday, September 21, 2019

பெற்றோரை கணம் செய்வதைக் குறித்து எலியாவும் இயேசுவும்


பெற்றோரை கணம் செய்வதைக் குறித்து எலியாவும் இயேசுவும்

தகப்பன் மற்றும் தாய் இருவரையும் கணம் செய்ய வேண்டும் என்பது கடவுளின் முக்கியமான கட்டளை என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.மாபெரும் தீர்க்க தரிசியாகிய எலியாவும் இயேசுவும் பெற்றோரை கணம் செய்தலைக் குறித்து என்ன கூறுகிறார்கள்.

இந்த எலியா தீர்க்கதரிசி இயேசுவால் மிகவும் போற்றப்பட்டவர் என்பதை முதலில் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.இந்த இருவரும் எப்படி தாய் தகப்பனை கணம் செய்கிறார்கள் என்பதை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பார்க்க போகிறோம்.முதலில் இயேசுவின் வாழ்வில் நடந்த நிகழ்வைக் காண்போம்.
அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.[மத் 8:19-22]
இது எந்த நிகழ்ச்சி?என்ன நடக்கிறது? இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தை முடித்தபிறகு இது நடக்கிறது.ஆரிப் பின்பற்ற விரும்பிய சீடன் ஒருவன் தன்னுடைய தந்தை மற்றும் தாய் ஆகியோரை அடக்கம் செய்து வர அனுமதி கேட்கிறான்.

இந்த கேள்வியின் பொருள் என்னவென்றால், "ஐயா! நான் உங்களோடு வர விரும்புகிறேன்,ஆனால் இப்பொழுது அல்ல,என் தாய் தந்தை இறந்த பிறகு அவர்களை நல்லடக்கம் செய்து விட்டு பின்னர் வருகிறேன்" என்பதுதான்.

இக்கேள்வி மிகவும் நியாயமான ஒன்றுதான். பெற்றோரைக் கணம் செய்ய வேண்டும் என்பது நியாயப்பிரமானக் கட்டளை என்று உங்களுக்குத் தெரியும்.எனவேதான் அவன் கேட்டிருக்கின்றான்.இதற்க்கு இயேசுவின் பதில்,
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
இதை அப்படியே உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.இது போன்றொரு நிகழ்வு பழைய ஏற்பாட்டில் நடக்கிறது.அங்கு  என்ன சொல்லப்படுகிறது என்பதைக் காண்போம்.
அப்படியே அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.

அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.[1இராஜா 19:19-20]
எலியா தீர்க்கதரிசியிடம் கடவுள் சிலவற்றை செய்யுமாறு முன்னரே கூறியிருப்பார்.அதில் ஒன்றுதான் "எலிசாவை தீர்க்க தரிசியாக திருமுழுக்கு செய்வது ஆகும்".அப்படி எலிசாவைக் கண்டு,அவன் மேல் தன் சால்வையை போட்டான்.அதன் பொருள்,எலிசா இனி எலியாவின் இடத்தில் அவனுக்குப் பதிலாக தீர்க்க தரிசி ஆவான், என்பதுதான்.

இதைக் கண்டவுடன் எலிசா தன்னுடைய பெற்றோரை கண்டு அவர்களிடத்தில் அனுமதி வாங்கி அவர்களை கணம் செய்ய எலியாவினிடத்தில் அனுமதி கேட்கிறான்.எலியாவும் அனுமதி கொடுக்கிறார்.

இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்.யார் செய்தது சரி?எலியாவா அல்லது இயேசுவா?எலியா சாதாரண தீர்க்கதரிசி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.எலியா,
  • கடவுள் எலியாவுக்கு தரிசனம் ஆகியிருக்கிறார்.
  • எலியா இறந்த குழந்தைக்கு கடவுளிடம் இருந்து உயிர் வாங்கி கொடுத்திருக்கிறார்.
  • எலியா இறந்த பிறகு அவர் எலும்பு பட்டு உயிரடைந்து இருக்கிறார்கள்.
  • வானத்தில் இருந்து அக்கினியை இறக்கியிருக்கிறார்.
மேற்கூறியவைகள் எந்த விதத்திலும் சுலபமான செயல்கள் அல்ல.இவைகளை செய்த எலியா தாய் தந்தையை கணம் செய்து வர அனுமதி கொடுக்கிறார்.ஏனெனில் அது மிக முக்கியம் என்பது தெரியும்.இத்தனைக்கும்,கடவுள் கூறியதினால்தான் எலியா எலிசாவிடம் வருகிறார்.எனவே,
  • தாய் தந்தையை கணம் செய்தலை அனுமதிக்க வில்லை.
  • அது நியாய பிரமானத்திற்கும்,கடவுளுக்கும் எதிரான செயல் ஆகும்.
  • இச்செயலை செய்த இயேசு எப்படி கடவுளுடைய குமாரன் ஆவார்?
  • அவரை எப்படி நம்ப இயலும்?
இயேசு தாய் தந்தையரை கணம் செய்யாதது இது முதல் முறை அல்ல.அப்படிப்பட்ட சில வசனங்களை பார்ப்போம்.
திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.

அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.[யோ 2:3-4]

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.

அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.

தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,

தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே![மத் 12:46-49]

இயேசு கூறியதிலேயே மிக கடுமையான வார்த்தைகள் ,
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.[லூக் 14:26]
இவை அனைத்தும் நமக்கு சொல்வது இயேசு நியாயப்பிரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்டாரா  என்பதுதான்.

பெற்றோரை கணம் செய்த பிள்ளைகளைக் குறித்து கடவுள் எரேமியா தீர்க்கதரிசி மூலமாக எடுத்துக்காட்டாக ஓரிடத்தில் கூறியிருப்பார்.எரேமியா 35-ம் அதிகாரத்தை படித்து பாருங்கள்.

இயேசுவின் வாழ்வில் நடந்த இச்செயல்கள்,சில சந்தேகங்களை நமக்கு தருகிறது.எலியா தீர்க்கதரிசியின் செயல்கள் அவர் மிக கண்டிப்புள்ளவர் என்பது போன்ற தோற்றத்தை நமக்கு தருவது இயல்பு.அப்பேற்பட்ட தீர்க்கதரிசியே பெற்றோர்(கடவுளை தவிர்த்து) என வரும்பொழுது அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்.ஆனால் இயேசு அப்படி அல்ல.அவரைப் பின்பற்றுவதற்காக பெற்றோரை வெறுக்க அறிவுறுத்தியிருக்கிறார்.

முடிவுரை:

பெற்றோர் என்பவர்களை கணம் செய்தல் மிக முக்கியமான ஒரு செயல் ஆகும்.அதில் எவ்வித சமரசமும் இல்லை.ஆனால் ஏன் இயேசு தாய் தந்தையரை வெறுக்க சொல்கிறார்?கடவுள் கூறியதை மீறி ஏதாவது அவர் கூறலாமா? அவரை கிறித்தவர்கள் கடவுள் என கூறலாமா? இயேசு யாரை "கடவுளே" என்று வழிபட்டாரோ அவரைத்தானே அனைவரும் கடவுளாக வழிபட்டிருக்க வேண்டும்.

சரி,இயேசு யாரை வழிபட்டார்?ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு போன்றோர் யாரை வழிபட்டனரோ அவரைத்தான் இயேசு வழிபட்டார்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1hXBQMfo1aaYiSKhPEf9ty44ZgPE35NZT/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts