Saturday, October 19, 2019

படைப்பும் அறிவியலும் - பாகம் 4

படைப்பும் அறிவியலும் - பாகம் 4


இப்பொழுது வரை,அதாவது நான்காம் நாளின் முடிவில் வானம்,நிலம்,கடல்,செடிகொடிகள்,மரங்கள் சூரியன்,நிலவு,மற்றும் நட்சத்திரங்கள் போன்றவைகள் படைக்கப்பட்டுவிட்டன.படைப்பின் அடுத்த நாளுக்கு செல்வோம்.

நாள் 5:

ஐந்தாம் நாளில் உயிருள்ளவைகள் படைக்கப்படுகின்றன.
20 அப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார்.
21 இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
22 கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார்.
23 மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.[தொ.நூ 1:20-23]
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:20-23]
எனவே கடவுள் ஐந்தாம் நாளில் அனைத்து நீர்வாழ் உயிரினங்களையும் படைத்தார். கடவுள் அவைகளிடம் பேசுகிறார். பல்கி பெருக சொல்கிறார். ஐந்தாம் நாளின் முடிவில் நமக்கு கிடைத்தது நீர்வாழ்வன மற்றும் பறவைகள் போன்றவை ஆகும்.
நாள் 6:

ஆறாம் நாள் மிக முக்கியமான நாள்.அன்றுதான் அவர் மனிதனைப் படைக்கிறார்.
24 அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார்.
25 கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
26 அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.
27 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
28 கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.
29 அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.
30 எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
31 கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.[தொ.நூ 1:24-31]
பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:24-31]
கால்நடைகள் மற்றும் மற்ற விலங்குகளை கடவுள் நிலத்தில் இருந்துதான் படைக்கிறார். நிலம்தான் தோற்றுவிக்கிறது. இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று "மானிடர்" அல்லது மனிதர்கள்"என்று பன்மையில்  குறிப்பிடப்பட்டுள்ளதுதான். ஆதாம் என்ற மனிதன்தான் முதன் முதலாக படைக்கப்பட்டான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இங்கு வார்த்தைகள் அனைத்தும் பன்மையில் உள்ளன.26 மற்றும் 27-ம் வசனங்களில் இது தெளிவாகிறது.

கடவுள் அவர்களிடம் பேசும் பொழுதும் பன்மையில்தான் பேசுகிறார்.மூல மொழியான ஹீப்ருவில் நாம் இவற்றை பார்த்தோமானால் தெளிவு கிடைக்கும்.
ַיּ ֹאמֶ ר 26:1 u·iamr and·he-is-saying אֱ הִ ים aleim Elohim נַעֲשֶׂ ה noshe we-shall-make do אָ דָ ם adm human בְּ צַ לְ מֵ נוּ b·tzlm·nu in·image-of·us כִּ דְ מוּתֵ נוּ k·dmuth·nu as·likeness-of·us .  וְ יִ רְ דּוּ u·irdu and·they-shall-sway בִ דְ גַת b·dgth in·fish-of הַ יָּם e·im the·sea וּבְ ע ף u·b·ouph and·in·flyer-of הַ שָּׁ מַ יִ ם e·shmim the·heavens וּבַ בְּ הֵ מָ ה u·b·beme and·in·the·beast וּבְ כָ ל u·b·kl and·in·all-of ־ - הָ אָ רֶ ץ e·artz the·earth וּבְ כָ ל u·b·kl and·in·every-of ־ - הָ רֶ מֶ שׂ e·rmsh the·moving-animal הָ רֹ מֵ שׂ e·rmsh the·one-moving עַ ל ol on ־ - הָ אָ רֶ ץ e·artz the·land : : וַיִּ בְ רָ א 27:1 u·ibra and·he-is-creating אֱ הִ ים aleim Elohim אֶ ת ath » ־ - הָ אָ דָ ם e·adm the·human בְּ צַ לְ מ b·tzlm·u in·image-of·him בְּ צֶ לֶ ם b·tzlm in·image-of אֱ הִ ים aleim Elohim בָּ רָ א bra he-created  אֹ ת ath·u »·him זָכָ ר zkr male וּנְ קֵ בָ ה u·nqbe and·female בָּ רָ א bra he-created אֹ תָ ם ath·m »·them
எனவே கடவுள் மனிதர்களை கூட்டமாகவே படைத்தார் என்று தோன்றுகிறது.ஒருவேளை பல்கி பெருகிய பின்பு அவர்கள் ஆண்டு கொள்வதைப்பற்றி பேசுகிறாரா என்றும் தெரியவில்லை.பல்கி பெருகின பின்பு பன்மையில்தானே குறிப்பிடவேண்டும்! இது குழப்பமாகவே இன்றும் உள்ளது.தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.

ஆனால் மனிதர்களை கூட்டமாகவே படைத்தார் என்பதற்கு பின் வரும் அதிகாரங்களில் சான்று கிடைக்கிறது.காயீன் தன சகோதரனை  கொலை செய்தபின் அவன் வேறு நாட்டில் சென்று வாழ்வதாக உள்ளது.அது ஒரு ஆதாரமாக இருக்கிறது.கூட்டமாகத்தான் மனிதர்கள் படைக்கப்பட்டன என்று கொண்டால்,பல சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.ஆனாலும் தற்போதுள்ள குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

முடிவாக கடவுள் ஆறாம் நாளின் முடிவில் கால்நடைகள், விலங்குகள், மனிதர்களை படைக்கிறார்.மனிதர்களை ஆணும் பெண்ணுமாக படைத்திருக்கிறார்.

நாள்: 7

ஏழாம் நாளில் எந்த ஒரு செயலும் நடைபெற வில்லை.கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் ஆறு நாட்களுக்குள்ளே முடித்து விட்டார்.ஏழாம் நாளில் அவர் ஓய்ந்து இருக்கிறார்.இது வேறு எந்த ஒரு மத நூல்களிலும் பார்க்க முடியாத ஒன்றாகும்.

கடவுளுக்கு ஓய்வு தேவையா என்பது போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.அவருக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதை மனிதர்களாகிய நாம் எப்படி முடிவு செய்ய இயலும்?

1 விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
2 மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
3 கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் நாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.[தொ.நூ 2:1-3]
இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.[ஆதி 2:1-3]
படைப்பின் நிறைவில் :

இவ்வாறாக ஏழு நாள் படைப்பும் நிறைவுற்று நமக்கு இவ்வுலகம் கிடைத்தது.இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி இரு பிரிவினர் தீவிரமாக விவாதிக்கின்றனர்.முதல் பிரிவினர் மதச்சார்புடையோர்,அடுத்த பிரிவினர் மதசார்பற்றோர் அல்லது அறிவியலாளர்கள்.

பல்வேறு மத நூல்கள் பல கருத்துக்களை கற்றுக்கொடுக்கிறது.எது சரி எது தவறு என்பதற்கு இன்னும் முடிவு  எட்டப்படவில்லை, அவ்வாறு எட்டப்படவும் முடியாது என்பது எனது கருத்து.தான் சார்ந்துள்ள மதநூல் தனக்கு தேவையான கருத்துக்களை கொண்டுள்ளது என்று நம்பிவிட்டால் அடுத்த கருத்தை ஏற்றுக்கொள்ள தயக்கம் இருக்கும்.

ஆனால் ஏதாவதொன்று சரியா தவறா என்பதை அறிவதற்கு வாழ்க்கை முறை ஒரு வழியாக இருக்கும் என்பது எனது கருத்து.திருமறை கூறுவது என்னவென்றால்,கடவுள் ஒருவரே!அவர் ஈடு இனையற்றவர்,அவருக்கு இறப்போ,பிறப்போ கிடையாது,அவர் அனைத்தும் அறிந்தவர்,அவரால் கூடாதது ஒன்றும் இல்லை,அவருக்கு எதுவும் மறைவில்லை போன்றவைகளாகும்.

கடவுளாக ஒருவர்தான் இருக்க முடியும் என்று நம் வாழ்க்கை முறையைக்கொண்டு நாம் நிரூபிக்கலாம் என்று கூறியிருந்தேன்.அவ்வழியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு தலைவன்தான் இருக்க முடியும்.அதாவது ஒரு கணவன்தான் இருக்க முடியும்.இன்னும்தெளிவாக கூறினால்,ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்தான் இருக்க முடியும்.பல கணவன்கள் இருக்க முடியாது.ஆனால் ஒரு ஆணுக்கு,அதாவது அத்தலைவனுக்கு,பல மனைவிகள் இருக்க முடியும்.இதை வாழ்க்கை முறையில் சோதித்து பாருங்கள் ,விடைகிடைக்கும்.

பல ஆண்களை ஒரு பெண் கணவனாக கொள்ள முடியாது,ஏன்?அவ்வாறு கொண்டால் அப்பெண் உயிருடன் இருக்க முடியாது.இது பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

எனவே ஒரு கடவுள்தான் உலகிற்கு சாத்தியம்.அவர்தான் இவ்வுலகை படைத்தது.அவரே தொழுதுகொள்ளப்படத்தக்கவர்.

படைப்பின் சரித்திரம் இதுதான்.படைப்பானது தானாகவே உருவாக்கி இருக்க முடியாது எனபதை அறிவியல் நிரூபிக்கிறது.நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அறிவு கொண்ட ஒருவரால்தான் இவ்வுலகம் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்தான் கடவுள்.அவரே தொழுது கொள்ளப்படத்தக்கவர்.

தொடர்ந்து,ஒரு கடவுள் மட்டுமே சாத்தியம் என்று  அறிவியலின் படி நிரூபிப்பதற்கு அடுத்த கட்டுரையில் முயற்சி செய்துள்ளேன்.தொடர்ந்து படியுங்கள்.
இரா.இருதயராஜ்
அனைத்து பாகங்களையும் பதிவிறக்கம் செய்ய: 

படைப்பும் அறிவியலும் - பாகம் 3

படைப்பும் அறிவியலும் - பாகம் 3


பழங்கால மக்கள் இப்பூமியானது தட்டையான ஒன்று என நினைத்துக்கொண்டிருந்தனர்.இக்கண்ணோட்டத்தில் நாம் படைப்பினைப்பற்றி பார்க்கும் பொழுது மேலும் சில உண்மைகள் நமக்கு தெரிய வரும்.

முதல் நாளில் என்ன நிகழ்ந்தது என்பதை முதல் இரண்டு பாகங்களில் இருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள்.இரண்டாம் நாளில் என்ன நிகழ்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்னால் முதல் நாள் முடிவில் இவ்வுலகம் எப்படி இருந்திருக்கும் என்பதை பக்கத்தில் இருக்கும் படத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நாள் 2:

இரண்டாம் நாளின் நிகழ்வுகள் 6-ம் வசனத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
6 அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார்.
7 கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8 கடவுள் வானத்திற்கு “விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.[தொ.நூ:1:6-8]
பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:6-8]
இரண்டாம் நாளில் வானம் படைக்கப்படுகிறது.முழுவதும் தண்ணீர்  நிரம்பி உள்ள இவ்வுலகத்தில் "வானம்" உண்டாக்கப்படுகிறது.வானம் படைக்கப்பட்ட பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கிறது என்ற என்னுடைய கற்பனை பக்கத்தில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

நாள் 3:

நிலப்பகுதி முழுவதும் இன்னும் மறைந்தே கிடக்கிறது.வானம் படைக்கப்பட்டாயிற்று.இப்பொழுது கடவுள் அடுத்த படைப்பிற்கு வருகிறார்.
9 அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10 கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
11 அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
12 புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
13 மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.[தொ.நூ 1:9-13]
பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:9-13] 
மேற்கூறிய வசனங்களில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் "நிலம்" அல்லது "வெட்டாந்தரை" எனப்படுகிற ஒன்று படைக்கப்படுகிறது.இங்குதான் இப்படைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.வசனம் 1:10-ல் முதன்முதலாக "אֶ רֶ ץ(Ertz )" என்று வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பரந்து கிடந்த தண்ணீரை ஓரிடத்தில் குவித்து நிலப்பகுதியை முதன்முதலாக கடவுள் நமக்கு தருகிறார்.இந்நிலப்பகுதியில் செடிகள்,மரங்கள் போன்றவற்றை படைக்கிறார்.எனவே மூன்றாம் நாளின் முடிவில் நிலப்பகுதி,கடல்,செடிகொடிகள்,கனிதரும் மரங்கள் போன்றவைகள் படைக்கப்பட்டன.

நாள் 4:

நான்காம் நாளில் என்ன நிகழ்கிறது என்று இப்பொழுது காணலாம்.மூன்றாம் நாளின் முடிவில் நமக்கு கிடைத்தது, நிலப்பகுதி,மரங்கள்,செடிகொடிகள்,கடல் போன்றவகள் ஆகும்.இவைகள் வாழ்வதற்கு தேவையானவைகளை கடவுள் இப்பொழுது நமக்கு தரப்போகிறார்.

இதைப்படிப்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டிய மற்றொரு கருத்து,நான் ஏற்கனவே கூறியுள்ளபடி "இரவு-பகல்" என்பதும் ஒரு படைப்பே ஆகும்.இந்நிலப்பகுதி சூரியனை சுற்றுவதால் இரவு-பகல் ஏற்படுகிறது என்பது இன்று நாமறிந்த அறிவியல்.ஆனால் பண்டைய மக்கள் இவ்வாறு அறிந்து கொள்ளவில்லை.அவர்களைப் பொறுத்தவரையில் இந்நிலப்பகுதி ஒரு தட்டையான ஒன்றாகும்.எனவே இரவு-பகல் என்பது அதுவாகவே வந்து செல்லக்கூடிய ஒன்று என்று நினைத்துக்கொண்டிருந்தனர் என்று நாம் கொள்ளலாம்.

இந்த இரவு-பகல் என்பது தானாகவே நடக்கும்படியாக கடவுள் நமக்கு அடுத்தப்படைப்பை தரப்போகிறார்.
14 அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
15 அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
16 கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
17 கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
18 பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
19 மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.[தொ.நூ 1:14-19]
    14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

    15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

    16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

    17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

    18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:14-19]. 
இப்பொழுது வரை,அதாவது மூன்றாம் நாள் வரையில், "இரவு-பகல்" என்பது "ஒரு" நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. கடவுள் இந்த "ஒரு" நிகழ்வை இரண்டாக பிரிக்க நினைக்கிறார். இரவு வேறாகவும் பகல் வேறாகவும் பிரிக்க பிரிக்கப்பட நினைக்கிறார். அதாவது இரவும், பகலும் தாமாகவே தனித்தனியே நிகழும்படி பிரிக்க போகிறார்.இதன் விளைவுதான் சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள்.

இரவும் பகலும் மற்றொண்டால் ஆளப்படப்போகிறது.இதுவரை "இரவு-பகல்" என்று இருந்தது.இப்பொழுது "இரவு" வேறாகவும் "பகல்" வேறாகவும் பிரிகிறது. இதன் காரணமாக நமக்கு தானாகவே நிகழும் வண்ணமாக இரவு-பகல் கிடைத்து விட்டது.மேலும் மூன்றாம் நாளில் படைக்கப்பட்ட மரங்கள்,செடிகொடிகள் போன்றவைகளுக்கு தேவையான வெளிச்சமும் கிடைத்து விட்டது.

Saturday, October 12, 2019

படைப்பும் அறிவியலும் -பாகம் 2

படைப்பும் அறிவியலும் -பாகம் 2


கடவுள் ஒவ்வொரு நாளும் என்ன செய்தார் என்று தொடக்க நூல் முதலாம் அதிகாரம் விவரிக்கிறது.ஹீப்ரு மொழி பற்றிய சிறு அடிப்படை அறிவு இருந்தால் இது உங்களுக்கு புரிவதற்கு மிக சுலபமாக இருக்கும்.அம்மொழி தெரியாதவர்களும் புரியும் வகையில்தான் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.ஓவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்று நாம் காணலாம்.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் படைப்பிற்கு முன்னால் "கடவுளைத் தவிர ஒன்றுமே இல்லை,இருந்திருக்க வில்லை" என்பதுதான்.எதுவுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து ஒன்று உருவாக்க போகிறது.ஏதாவது ஒன்று உருவாக வேண்டுமானால் "ஆற்றல்" அவசியமாகிறது. இவ்வாற்றலைக் கடவுளே கொண்டிருந்தார் என்பது எனது கருத்து.

நாள் 1:
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.[ஆதி 1:1]
மேற்கூறிய வசனத்தில் இருந்து நாம் என்ன முடிவு செய்கிறோம் என்றால்,முதல் நாளில் வானமும் பூமியும் படைக்கப்பட்டன என்று.உண்மையில் முதல் நாளில் வானமும் பூமியும் படைக்கப்பட வில்லை.ஏன் இப்படி முடிவு செய்கிறோம்?

காரணம் "உறுதிப்படுத்தும் வார்த்தையான "Ha(ה)".மேற்கண்ட வசனத்தில் இந்த வார்த்தை இருக்கிறது.இந்த "ה" என்ற வார்த்தை இல்லாமல் வானத்தையும் பூமியையும் குறிப்பிட்ட வேறு ஒரு வசனம் வருகிறது.அது மூன்றாம் நாள் படைப்பில் வருகிறது.இப்பொழுது முதல் வசனத்தைப் ஹீப்ரு மொழியில் பாருங்கள்.
בְּ רֵ אשִׁ ית 1:1: b·rashith in·beginning בָּ רָ א bra he-created אֱ הִ ים aleim Elohim אֵ ת ath » הַ שָּׁ מַ יִ ם e·shmim the·heavens וְ אֵ ת u·ath and·» הָ אָ רֶ ץ e·artz the·earth : :
முதல் வசனத்திலேயே "The Earth" மற்றும் "The Heavens" என்று இருப்பதை மேற்கண்ட ஆங்கில,ஹீப்ரு மொழியில் தரப்பட்ட வசனத்தில் காண இயலும்.இதன் மூலம் என்ன புரிந்து கொள்கிறோம்?"இந்த வானமும்,இந்த பூமியும்" என்றுதான் மொழி பெயர்த்திருக்க வேண்டும்.அதாவது 
"ஆதியிலே தேவன் இந்த வானத்தையும் இந்த பூமியையும் சிருஷ்டித்தார்."
ஆங்கில மொழிபெயர்ப்பை பாருங்கள்.அங்கும் "The Earth" மற்றும் "The Heavens" என்று உள்ளது. 
In the beginning God created the heavens and the earth.[NIV] 
இந்த அதிகாரத்தின் 6மற்றும் 9-வது வசனங்கள் இதற்கு ஒரு தெளிவை தருகிறது.அவ்வசனத்தை பார்க்கலாம்.
וַיּ ֹאמֶ ר : u·iamr and·he-is-saying אֱ הִ ים aleim Elohim יְ הִ י iei he-shall-become רָ קִ יעַ rqio atmosphere בְּ ת b·thuk in·midst-of הַ מָּ יִ ם e·mim the·waters וִ יהִ י u·iei and·he-shall-become . And God said, Let there be a firmament in the midst of the waters, and let it divide the waters from the waters. 6 מַ בְ דִּ יל mbdil cseparating בֵּ ין bin between מַ יִ ם mim waters לָ מָ יִ ם l·mim to·waters : [1:6]
וַיִּ קְ רָ א  u·iqra and·he-is-calling אֱ הִ ים aleim Elohim לַ יַּבָּ שָׁ ה l·ibshe to·the·dry אֶ רֶ ץ artz land וּלְ מִ קְ וֵה u·l·mque and·to·confluence-of הַ מַּ יִ ם e·mim the·waters קָ רָ א qra he-called יַמִּ ים imim seas And God called the dry [land] Earth; and the gathering together of the waters called he Seas: and God saw that [it was] good. 10 וַיַּרְ א u·ira and·he-is-seeing אֱ הִ ים aleim Elohim כִּ י ki that ־ - ט ב tub good : [1:10]
இச்செயல்கள் நடப்பது முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளில்.எனவே இந்நாட்களில்தான் பூமியும் வானமும் படைக்கப்படுகின்றன.காரணம் இங்குதான் "Ha(ה)" என்ற உறுதிப்படுத்தும் வார்த்தை இல்லை.முதல் அறிமுகம் இங்குதான்,அதாவது இரண்டாவது நாளிலும் மூன்றாவது நாளிலும்தான் நடக்கிறது.எனவே இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில்தான்  வானமும் நிலமும்(பூமி) படைக்கப்படுகின்றன.

அப்படியென்றால் முதல் நாளில் என்ன படைக்கப்பட்டது? முதல் வசனம் ஏன் அவ்வாறு உள்ளது.

இதற்கு பதில்,முதல் வசனமும் இரண்டாவது வசனமும் ஒரு "முன்னுரை" போன்று உள்ளது.அதாவது அறிமுக வசனம்.அதன் காரணமாகத்தான் அங்கு "உறுதிப்படுத்தும் வார்த்தையான "Ha(ה)" இருக்கிறது.கத்தோலிக்க தமிழ் திருமறை இதனை சரியாக செய்துள்ளது.
1தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,

2மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.[தொ.நூ 1:1-2]


இப்பொழுது முதல்நாளில் என்ன படைக்கப்பட்டது என்று காணலாம். மூன்றாவது வசனத்தில் இருந்துதான் முதல் படைப்பு ஆரம்பமாகிறது. முதலில் இருள்தான் எங்கும் நிறைந்து இருந்திருக்கிறது.
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:3-5]
 இரவு-பகல் ஒரு படைப்பா?:

மேற்கூறியவைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,

  • முதலில் எங்கும் இருளே நிறைந்து இருந்திருக்கிறது.
  • பின்னர் ஒளி படைக்கப்பட்டது.
  • இருளும் வெளிச்சமும் பிரிக்கப்பட்டது.
  • இருளுக்கு, இரவு என்றும் வெளிச்சத்திற்கு, பகல் என்றும் கடவுள் பெயரிட்டார்.
  • எனவே "இரவு-பகல்" என்பதும் ஒரு படைப்பே அன்றி அது சூரியனால் இன்னும் வர வில்லை.
  • கடவுளால் படைக்கப்பட்ட ஒரு படைப்பு "இரவு-பகல்" ஆகும்.
சூரியன் இன்னும் படைக்கப்பட வில்லை.இரவு-பகல் என்பது சூரியனை பூமி சுற்றுவதால் ஏற்படும் ஒரு நிகழ்வு என்பது நாம் இன்று புரிந்து கொண்டிருப்பது ஆகும்.சூரியன் நான்காம் நாளில்தான் படைக்கப்படுகிறது.பின் எப்படி முதலாம் நாளில் இருந்து "சாயங்காலமும்-விடியற்காலையும்" வந்தது? அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்பது நமக்கு புரிகிறது.ஆனால் வசனங்கள்,"சாயங்காலமும்-விடியற்காலையும்" வருவதாக கூறுகிறது.

இரவும்-பகலும் ஒரு படைப்பு என்று புரிந்து கொண்டாலொழிய இக்குழப்பத்திற்கு தீர்வு இல்லை.முதல் நாளிலேயே கடவுள் "இரவு-பகலை" படைத்து விட்டார்.எனவே அது தொடர் நிகழ்வாக உருவாகி விட்டது."இரவும்-பகலும்"ஒரு படைப்பே என்பது இதன் மூலம் தெளிவு.முதல் நாளின் முடிவில் நமக்கு படைக்கப்பட்டது "இரவு-பகல்" ஆகும்.

மற்றொரு தகவலும் இங்கே கவனிக்கப்பட வேண்டியுள்ளது.திருமறையைப் பொறுத்த வரையில், "ஒரு நாள்" என்பது "சாயங்காலம்" ஆரம்பித்து மறுநாள் "சாயங்காலம்" வரையில் ஆகும்.அதாவது "நாள்" என்பது இரவு வரும் பொழுது ஆரம்பிக்கிறது.இதையும் திருமறையின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.

முதலில் இருளே பரவியிருந்தது என்பது நமக்கு தெரியும்.பின்னர்தான் வெளிச்சம் படைக்கப்பட்டது.இருளுக்கு பின்னர்தான் வெளிச்சம்.இதன் அடிப்படையில் "ஒரு நாள்" என்பது இரவில் ஆரம்பித்து இரவில் முடிகிறது என்பது எனது கருத்து.

தண்ணீரைப் பற்றி:

ஆச்சரியமான விதமாக, தண்ணீர் எப்பொழுது படைக்கப்பட்டது என்பதைப்பற்றி எதுவும் இல்லை.இரண்டாவது வசனத்திலேயே தண்ணீர் பற்றி கூறப்பட்டு விடுகிறது.அதில் "Ha(ה)" என்ற வார்த்தை உள்ளது,மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ளது.இதன் காரணமாக "தண்ணீர்" அறிமுகப்படுத்தப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.

படைப்பின் பொழுதே தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி உள்ளது.தண்ணீர் என்பதற்கு ஹீப்ரு வார்த்தை "מָיִם" ஆகும்.முதலாம் அதிகாரத்தில் அனைத்து இடங்களிலும் இவ்வார்த்தை "הַ מָּ יִ ם"(The Waters) என்றே வருகிறது.
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.[ஆதி 1:2]
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.[தொ.நூ 1:2]
எனவே தண்ணீர் முன்னரே இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு கடைசியாக வர வேண்டியதாக உள்ளது.இந்த இரண்டாவது வசனம் வரை "முன்னுரை" என்று நாம் கொள்ளலாம்.

படைப்பும்,அறிவியலும் - பாகம் 1

படைப்பும்,அறிவியலும் - பாகம் 1


படைப்பினைப்பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.இந்த உலகம் படைக்கப்பட்டது எப்படி என்று அறிஞ்சர்கள் மற்றும் அறிவியலாளர்கள் பற்பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அறிவியல் அறிவு இல்லாவிட்டாலும் கூட கற்பனைவளம் மிக்கவர்கள் இக்கேள்வியை தங்களுக்குள் கேட்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.இந்த உலகம் படைக்கப்பட்டது எப்படி என்ற இக்கேள்வி பதில் கிடைக்காத ஒரு கேள்வியாகவே இன்னும் இருக்கிறது என்பது அறிவியலாளர்களின் கருத்து.பற்பல பதில்கள் பல்வேறு தரப்பினரிடம் வந்தாலும் ஒரு உறுதியான முடிவு இன்னும் எட்டப்படாமலேயே உள்ளது.

இக்கட்டுரையின் பின்புலம்:

இக்கேள்வி என்னையும் குடைந்து கொண்டுதான் இருக்கிறது.பெரும் அறிவியல் அறிவு இல்லாவிட்டாலும் கூட, இருக்கிற சிறிதளவு அறிவு என்னுள் இக்கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறது.இளைஞனாக இருந்த பொழுது இது தொடர்பான பல புத்தகங்களை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் வாங்கி படித்திருக்கின்றேன்.

நாம் இருக்கின்ற இந்த பூமியானது தனியாக இல்லை,பிரபஞ்சம் என்ற ஒரு பெரும், கற்பனைக்கும் அடங்காத அமைப்பிற்குள் இருக்கும் ஒரு மிகச்சிறு புள்ளிதான் என்று புத்தகங்கள் மூலம் தெரிந்து கொண்டபோது பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. என்னையொத்த பெரும்பாலான இளைஞர்களுக்கு இத்தகவல் தெரியாது,குறிப்பாக என் நண்பர்களுக்கு.எனக்கு தெரிந்திருக்கிறது என்ற மமதையும் என்னுள் ஏறிக்கொண்டது.இது தொடர்பாக மேலும் புத்தகங்கள் வாங்கி படிப்பது எனது பழக்கமாக மாறிவிட்டது.

பின் பொறியியலில் பட்டம் பெற்றேன்.பட்டம் பெற்ற சில வருடங்களுக்கு பின் கூடுதல் அறிவு கிடைத்தது.மின்னியல் தொடர்பான பாடங்களை நான் படித்திருந்தேன்.இந்த சூழ்நிலையில் பிரபஞ்சம் பற்றிய அறிவு கூடுதலாக விரிவடைந்தது.பின்னர் பல கேள்விகள் என்னுள் எழுந்தன.
  • கற்பனைக்கு எட்டாத இந்த அமைப்பு எப்படி தானாக உருவாக முடியும்?
  • இந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட முறையில் தானாகவே இயங்கும் படி உள்ளதே அது எப்படி?
  • சிறிதும் பிசகாமல் சூரியன் உதிக்கிறது,மறைகிறது காலங்கள் மாறுகின்றனவே அது எப்படி?
  • தானாக அனைத்தும் இயங்கும் என்பது அடிமுட்டாள்தம் என்பது எனக்கு தெரியும்.காரணம் ஆற்றல் அழிவின்மை விதி.
  • இப்பிரபஞ்சத்தின் அமைப்பைப்பற்றி ஓரளவுக்கு கற்பனை செய்ய முடிபவர்களுக்கு,இதற்க்கு தேவைப்படும் ஆற்றலைப்பற்றி கற்பனை செய்ய முடியும்.
  • ஆனால் அதன் அழவைப்பற்றி கற்பனை செய்ய இயலாது.அது அவ்வளவு பெரியது.
  • கற்பனைக்கு எட்டாத இந்த ஆற்றலை கொடுத்தது யார்?"ஆற்றல் அழிவின்மை விதிப்படி" ஆற்றலானது படைப்பின் பொழுது அங்கேயே இருந்திருக்க வேண்டும்."எப்பொழுதுமே இருக்கின்ற ஆற்றல்" - எப்படி இது சாத்தியம்?
  • இருக்கின்ற ஆற்றல்தான் பற்பல வகைகளாக மாறுகின்றன.கற்பனைக்கு எட்டாத காலகட்டத்திற்கு முன்னாள் இருந்த,இருக்கின்ற,இன்னும் இருக்கப்போகின்ற இந்த ஆற்றல் என்பது யார்? அல்லது எது?

மேற்கூறிய கேள்விகள் என்னை துளைத்து எடுத்தன."ஆற்றல்(Energy)" பற்றிய அடிப்படைத் தகவல்களை திரட்டினேன்.நான் பொறியியலில் படித்தது அனைத்தும் "ஆற்றல்"பற்றயதுதான் என்று அறிந்து கொண்டேன்.நான் மட்டுமல்ல பொறியியல் படிக்கும் அனைவரும் ஆற்றல் பற்றித்தான் படிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.ஒரு குறிப்பிட்ட மின்சுற்று அல்லது இயந்திரம் என்று அவர்கள் படிக்கும் அனைத்தும் "ஆற்றலைத்தான்" பயன்படுத்துகின்றன.


ஆற்றல் பற்றிய அறிவு என்னுள் வந்தவுடன் எனக்குள் தீயாய் எறிந்த கேள்வி "ஆற்றல் என்பதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்றால் இந்த ஆற்றல் எப்பொழுதுமே இருந்திருக்க வேண்டும்,அனைத்தும் பிறந்து மறுக்கிறது ஆனால் ஆற்றல் மட்டும் நிலைக்கிறது என்றால் இந்த ஆற்றல் யார்? எதுவும் தோன்றுவதற்கு முன்னால் ஆற்றல் மட்டுமே இருந்திருக்க வேண்டும்,யார் இந்த ஆற்றல்? அல்லது எது இந்த ஆற்றல்?

இக்கேள்வி என்னை கிறித்தவத்திற்குள் தள்ளியது.அதுவரை நான் ஒரு தீவிர இந்து.பகவத் கீதையை நான் படித்திருக்கின்றேன்.இக்கேள்விகளுக்கு அங்கு விடையில்லை.அது ஒரு குழப்பங்கள் நிறைந்த புத்தகமாக எனக்கு தோன்றியது.கிறித்தவத்திற்கு நான் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு திருமறையை படித்தேன்.முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை.ஆனால் என்னுடைய கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும் என்று தோன்றியது.
"ஈடு இணை இல்லாத, கற்பனைக்கு எட்டாத, எதற்க்குள்ளும் அடக்க முடியாத,எல்லைகள் வகுக்க முடியாத ஒருவர் இருக்கிறார் அவர்தான் கடவுள்.அவர் ஒருவர் மட்டுமே.அவருக்கு துணைகளோ,உதவிகளோ தேவை இல்லை,யாரை நம்பியும் அவர் இல்லை,அவர் குலுக்கு உயிருள்ளவை உயிரற்றவை என அனைத்தும்  கட்டப்படுகின்றன,என்று படித்தேன்.இவர்தான் கடவுளாக இருக்க முடியும் என்று எனக்கு தோன்றியது.காரணம் நான் படித்த தெரிந்து கொண்ட "ஆற்றலும்" இவ்வாறுதான்.அதுதான் அனைத்தையும் இயக்குகிறது.அதற்க்கு எதுவும் தேவை இல்லை.இந்த கடவுள் மட்டுமே கடவுள்.இவருக்கு இணை எதுவும் இல்லை" என்று  நான் படித்த பொழுது கிறித்தவத்திற்குள் முழுகினேன்."
இக்கட்டுரையை எழுதுவதற்கும் ஒரு காரணம் உள்ளது.சில வாரங்களுக்கு முன்னர் "ஆதியாகமத்தை",அதாவது "தொடக்க நூலை" படிக்கலாம் என நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.இதற்க்கு முன்னர் பல முறை அதை படித்திருக்கிறேன்.ஆனாலும் பல கேள்விகளுக்கு இன்னும் எனக்கு விடையில்லை. இந்நிலையில் "ஆற்றல்" பற்றிய அறிவு என்னை இக்கடவுளை மட்டுமே தொழுது கொள்ள செய்தது."ஒரு கடவுள்" மட்டுமே சாத்தியம் "பல கடவுள்" சாத்தியம் அல்ல என்ற எனது கருத்திற்கு அடிப்படையே "ஆற்றல்" பற்றிய அறிவுதான்.

தொடர்ந்து ஆதியாகமம் படிக்க ஆரம்பித்தேன்.முதல் அதிகாரத்தை படிக்க ஆரம்பித்தேன்.ஆரம்பிக்கும் பொழுதே பல கேள்விகள் என்னுள் இருந்தன.அதில் சில மற்றவர்கள் என்னை  கேட்டது.அவையாவன,
  • படைப்பானது வரிசைக்கிரமமாக இல்லையே ஏன்?இஸ்லாம் சகோதரர்கள் இக்கேள்வியை கேட்டனர்.குறிப்பாக டாக்டர்.சாகிர் நாயக் இக்கேள்வியை கேட்டிருந்ததை அவருடைய காணொளிகளில் நான் பார்த்திருக்கிறேன்.
  • மேலும் செடிகொடிகள் படைக்கப்பட்ட பிறகுதான் சூரியன் படைக்கப்படுகிறது,இது எப்படி சாத்தியம் என்று கேட்டிருந்தார்.

இக்கேள்விக்கு எனக்கு பதிலில்லை.எனக்கும் இதைக்குறித்து சற்று கவலையாகத்தான் இருந்தது.இம்முறை கடவுள் இதற்க்கு பதில் தருவார் என்ற  எண்ணம் எனக்குள் ஏனோ ஏற்பட்டது.அம்மாதிரியே பதிலும் கிடைத்தது.


பதில் கிடைத்தவுடன்  மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது. அதிலிருந்து பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.கடவுளுக்கு நன்றி சொல்லி அன்றையதின வாசிப்பை முடித்தவுடன் "தி இந்து" ஆங்கில செய்தி தாளை புரட்டினேன்.அங்கு ஒரு செய்தி. "இயற்பியலுக்கான நோபல் பரிசு" அறிவிக்கப்பட்டிருந்த செய்தியை பார்த்தேன். ஆதியாகமத்தில் கிடைத்த விடைகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அச்செய்தி இருந்தது."பெரு வெடிப்பு கொள்கை(Big Bang Theory)" பற்றி அடிப்படை அறிவு எனக்கு ஏற்கனவே இருந்தது.இப்பொழுதுதான் படித்தேன் அதற்குள் கடவுள் எனக்கு மேலும் ஒரு தெளிவை கொடுத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

படைப்பைப் பற்றிய பல சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது.ஆச்சரியமான தகவல்கள் எனக்கு கிடைத்தன.கடவுள் பற்றிய நம்பிக்கை மேலும் எனக்குள் பெருகியது.இவரே கடவுள் என்பதற்கு திருமறையை  விட்டு வெளியே கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.

இவைகளைத்தான் இக்கட்டுரையில் விரிவாக எழுத இருக்கிறேன்.தொடக்க நூலில் விவரிக்கப்பட்டுள்ள படைப்பு மிக தெளிவாகவும் சரியாகவும் இருக்கிறது.இக்கட்டுரையை கொஞ்சம் விரிவாகவே எழுத நினைக்கிறேன்.எனவே பொறுமையுடன் படித்து பாருங்கள்.

படைப்பின் சுருக்கத்தை முதலில் நாம் இங்கே பார்த்து விடுவோம் பின்னர் விரிவாக பார்க்கலாம்.

நாள்:1
வெளிச்சம் படைக்கப்படுகிறது, தண்ணீர் படைக்கப்படுகிறது, குறிப்பாக "இரவு-பகல்"(வெளிச்சம்-இருள் ) படைக்கப்படுகிறது.
நாள்:2
"ஒரு விரிவு" படைக்கப்படுகிறது.இதுதான் வானங்கள் அல்லது வானம்.
நாள்:3
கடலும், தரையும்(இத்தரைத்தான் "நிலம்" என்று அழைக்கப்படுகிறது) உருவாக்கப்படுகிறது.புல், பூண்டுகள், விதைகள், கனிகள் உருவாக்கப்படுகின்றன.
நாள்:4
முதல் நாள் உருவாக்கப்பட்ட "இரவு-பகல்"-ஐ  ஆண்டுகொள்ள சூரியன், நிலவு மற்றும் நட்சத்திரங்கள் படைக்கப்படுகின்றன. இதன் மூலம் நாட்கள், வருடங்கள்,காலங்கள்,அடையாளங்கள் போன்றவைகள் தோன்றுகின்றன.அதாவது சூரியன் நிலா போன்றவைகள் இயங்க ஆரம்பிக்கின்றன.
நாள்:5
தண்ணீரில் வாழ்பவன,பறப்பன போன்றவைகள் உண்டாக்கப்படுகின்றன. 
நாள்:6
விலங்குகள் மற்றும் மனிதர்கள் படைக்கப்படுகின்றனர். 
நாள்:7
ஓய்வு நாள் ஆசீர்வதிக்கப்படுகிறது. 
"பூமி" என்ற வார்த்தையின் விளக்கம்:


இந்த வார்த்தையை கேட்டவுடன் நமது மனக்கண்ணில் தோன்றுவது பூமி உருண்டைதான். உண்மையில் "பூமி" என்ற வார்த்தை தமிழ் வார்த்தைதானா என்று எனக்கு தெரிய வில்லை.ஆனால் அவ்வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பது எனது கருத்து.ஒரு மொழிபெயர்ப்பில் நாம் பயன்படுத்தும் வார்த்தை மூல மொழி என்ன கருத்தைக் கூறுகிறதோ அதை சிதைக்கும் வண்ணமாக இருக்கக்கூடாது.

ஏனென்றால் "பூமி" என்று நாம் தமிழ் திருமறையில் படிக்கும் பொழுது அது மூல மொழியாகிய எபிரேய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.இந்த வார்த்தைக்குறிய எபிரேய வார்த்தை "Haretz(אֶרֶץ)" என்பது ஆகும்.இதன் பொருள் "ஒரு பரந்த நிலப்பரப்பு" என்பது ஆகும்.

எனவே பூமி என்று மொழிபெயர்த்ததற்கு பதிலாக "நிலப்பரப்பு" அல்லது "நிலம்" என்பதே சரியான மொழிபெயர்ப்பாக இருக்க முடியும்.தமிழ் வார்த்தை பயன்படுத்தாதன் விளைவே இதற்கு காரணம்.இந்த "Haretz(אֶרֶץ)" என்ற வார்த்தை இடத்திற்கு தக்கவாறு பொருள் கொள்ளப்பட வேண்டும்."தேசம்" அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டினைக் குறிக்கவும் இந்த சொல்தான் பயன் படுகிறது.

கத்தோலிக்க திருமறை இதனை சரியாக மொழிபெயர்த்துள்ளது.
அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

10கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார்[தொ.நூ 1:9,10]
"மண்ணுலகு" என்ற வார்த்தை நமக்கு சரியான பொருளைத் தருகிறது.

இந்த அடிப்படைக்கு கருத்துக்களை மனதில் கொண்டு தொடர்ந்து நாம் படிக்கலாம்.இது போன்று நாம் கொண்டுள்ள ஒரு தவறான புரிதல் என்னவென்றால்,வானமும்,பூமியும் முதல் நாளே படைக்கப்பட்டது என்று நினைப்பதுதான்.இது தவறு.தொடர்ந்து படியுங்கள் உண்மை விளங்கும்.

ஹீப்ரு அடிப்படைகள்:

ஹீப்ரு மொழி மற்றும் தமிழ்,ஆங்கிலம் போன்ற மொழிகளில் "உறுதி படுத்தும் சொல்" என்று ஒன்று உள்ளது.ஆங்கிலத்தில் இது "The" என்ற வார்த்தை ஆகும்.தமிழில் "இந்த", "அந்த" போன்ற வார்த்தைகளாக.இவ்வார்த்தைகள் ஒரு சொற்றொடரில் பொதிந்திருக்கும் கருத்தை மிகத்தெளிவாக,எவ்வித சந்தேகமும் இன்றி தெரிவிக்கப் பயன்படுகிறது.

உதாரணமாக "தோட்டத்தில் ஒரு மாடு மேய்ந்தது" என்று கூறுவதற்கும் "தோட்டத்தில் இந்த மாடுதான் மேய்ந்தது" என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.இரண்டாவது கூற்றில் "இந்த" என்ற வார்த்தை "எந்த மாடு" மேய்ந்தது என்பதை உறுதிப்படுத்தி விட்டது.

இவ்வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் மேலும் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது  என்பதையும்  முதலில் நாம் காண வேண்டும்.

ஏதாவது ஒன்றைப்பற்றி நாம் விளக்கி கட்டுரை ஒன்றை எழுதும் பொழுது,ஒருவரைப்பற்றியோ அல்லது ஒரு பொருளைப்பற்றியோ நாம் முதல் முறையாக கூற முற்படும் பொழுது இந்த "உறுதிப்படுத்தும் வார்த்தையை" பயன்படுத்த மாட்டோம்.ஒருமுறை பயன்படுத்திய பிறகு அடுத்தடுத்த முறைகளில் "இந்த அல்லது அந்த" என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.உதாரணமாக,

நான் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக,என் வீட்டிலிருந்து புறப்பட்டு பேரூந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன்.ஒரு மாடு ஒன்று எனக்கு எதிரே வந்து கொண்டிருந்தகத்து."அந்த" மாடு என்னை முட்டி விடக்கூடாது என்பதற்காக நான் எச்சரிக்கையாக விலகி சென்றேன்.


மேற்கண்ட உதாரணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.ஹீப்ரு மொழியிலும் இது போன்று ஒரு சொல் உள்ளது.அது "Ha(ה)" ஆகும்.இது ஒரு முக்கியமான சொல்.பெரும்பாலும் இவார்த்தையை நாம் கவனிப்பதில்லை.ஆதியாகமம்[தொடக்க நூல்] படிக்கும் பொழுது இவ்வார்த்தை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.

இவ்வார்த்தை பல தவறான கருத்துக்களை மாற்றியிருக்கிறது.இங்கும் அவ்வாறான ஒரு கருத்தை மாற்றப்போகிறது.

Friday, October 11, 2019

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்(யோவேல் 2:32)

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்(யோவேல் 2:32)


யோவேல் தீர்க்க தரிசி வாழ்ந்த காலகட்டம் எது என்று தெளிவாக கூறப்படவில்லை.மற்ற தீர்க்கதரிசிகள் அனைவரும் தாங்கள் எந்த அரசர்களின் காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.ஆனால் யோவேல் தீர்க்கதரிசி புத்தகத்தின் ஆரம்பத்தில் அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை.

இந்த யோவேல் தீர்க்கதரிசி மூலம் கடவுள் கூறிய சில வார்த்தைகள் இன்று கிறித்தவ சபைகளில்,குறிப்பாக பெந்தேகோஸ்து மற்றும் CSI சபைகளில், அடிக்கடி பயன்படுத்துகின்ற ஒன்றாக உள்ளது.அவ்வசனம் என்னவென்றால்,
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.

ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.[யோவேல் 2:28,29]

மேற்கூறிய இரண்டு வசனங்களும் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டு சபைகளில் பயன்படுகிறது. இதனடிப்படையில் தீர்க்கதரிசனம் கூறுதல் மற்றும் ஆடுதல் போன்ற செயல்கள் இன்று பெருகி விட்டன. ஆவி ஊற்றப்படுத்தல், ஆவியை இறக்குதல், அவ்வாறு இறக்கப்பட்ட ஆவியை பெற்றுக்கொண்டவர்கள் தன்னை மறந்த நிலையில் செயல்படுதல் போன்ற செயல்களுக்கு அடிப்படையே இந்த வசனங்கள்தான்.

இவ்வாறு நடக்கும் செயல்கள் சரியா தவறா என்பதை சீர்தூக்கிப்பார்க்க இக்கட்டுரை எழுதப்படவில்லை.பதிலாக தங்கள் செயல்களை நியாயப்படுத்த தகுந்த வசனங்களைக் கொடுக்கும் இச்சபையோர்கள்  பின்னும் இருக்கும் வசனங்களை மறந்து விடுவதுதான் வேதனை.

"மேற்கூறிய வசனங்கள் கூறும் கருத்து என்ன,எந்த சூழ்நிலையில் அவ்வசனங்கள் தீர்க்கதரிசிக்கு தோன்றின,அவைகள் மூலம் அவர் கூறும் கருத்துக்கள் என்ன,அவைகளை முதலில் யாருக்கு கூறப்படுகின்றன,நமக்கு அது இன்று பொருந்துமா?" போன்ற கேள்விகள் எதற்கும் இவர்களிடம் விடை கிடைக்குமா என்றால் கிடைக்காது என்றே எனக்கு தோன்றுகிறது.

கடைசி வசனத்தை பார்த்தார்களா?

இந்த அதிகாரத்தின் கடைசி வசனம் ஒரு முக்கியமான கருத்தை கூறுகிறது.அதை இவர்கள் கவனித்தார்களா? அது என்ன வசனம் என்று முதலில் பார்க்கலாம்,
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.[யோவேல் 2:32]
மேற்கண்ட வசனம் என்ன கூறுகிறது? "கர்த்தருடைய போற்றுதற்குரிய பெயரை  தொழுதுகொள்கிறவன் காப்பாற்றப்படுவான்",இதுதான் பொருள்.ஆனால் எப்பொழுது இது நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்றும் நாம் கவனிக்க வேண்டும்.இந்த வசனம் வரும் அதிகாரத்தின் அனைத்து வசனங்களையும்,குறிப்பாக முதலாம் அதிகாரத்தை நன்றாக படித்த பின்பு,கடைசியாக மேற்கூறிய வசனத்தை படிக்க வேண்டும்.

அவ்வாறு படித்தால் இந்த வார்த்தைகள் அனைத்தும் யாருக்கு கூறப்படுகின்றன,எந்த சூழ்நிலையில் கூறப்படுகின்றன என்று நமக்கு விளங்கும்.இப்பொழுது நான் கேட்கும் கேள்வி,கர்த்தருடைய பெயரை தொழுதுகொள்கிறவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள் என்றால் நீங்கள் கர்த்தருடைய போற்றுதற்குரிய பெயரை தொழுதுகொள்கிறீர்களா?

இல்லை.இன்றைய கிறித்தவர்கள் ஒருவர் கூட அவ்வாறு செய்வதாக எனக்கு தோன்ற வில்லை.ஆனால் அதற்க்கு முந்தைய வசனங்களை எடுத்து தங்கள் செயல்களுக்காக பயன்படுத்துகிறீர்கள்.

"கர்த்தருடைய நாமம்" என்றால் என்ன? அது தெரிந்தால்தானே ஒருவனால் அவருடைய நாமத்தை தொழுதுகொள்ள முடியும்."கர்த்தருடைய நாமம்" என்றால் "கர்த்தருடைய பெயர்" என்று பொருள். இக்கேள்விகளுக்கு பாஸ்டர்கள்,பங்குத்தந்தைகள்,ஆயர்கள்,இன்னும் பிற பெரும்பொறுப்பில் இருப்பவர்களிடம் பதில் உண்டா?

நாம் நம்முடைய தமிழ் திருமறையில் "கர்த்தர்" என்று படிக்கும் இடங்களில்லெல்லாம் உண்மையில் "இறைவனுடைய பெயர்தான்" உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும்.அவருடைய பெயர் போற்றப்படக்கூடிய ஒன்று என்ற காரணத்தினால் யூதர்கள்,கடவுளுடைய பெயர் வரும் இடங்களிலெல்லாம் "ஆண்டவர்" என்று பொருள் தரும் வார்த்தையை கொண்டு தங்கள் புனித எழுத்துக்களை(திருமறையை அதாவது பழைய ஏற்பாட்டை) மாற்றினர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஒருவேளை பெரும்பொறுப்பில் இருப்பவர்களுக்கு இச்செயலைப் பற்றிய விபரம் தெரியும் என்றால் தங்கள் சபைகளில் ஏன் இதனை கூற வில்லை?அக்குறிப்பிட்ட வசனங்களில் வரும் " கர்த்தர்" என்ற வார்த்தை இயேசுவை குறிக்காது என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?அறிந்தாலும் எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள்?

தமிழ் திருமறையில்(பழைய ஏற்பாட்டில்) "கர்த்தர்" என்ற வார்த்தை சுமார் 7000 முறை வருகிறது.இவ்வார்த்தைக்கு பின் மறைந்திருப்பது கடவுளுடைய பெயரான יהוה[வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்] ஆகும். இப்பெயரைத்தான்  தொழுதுகொள்ள  தொழுதுகொள்ள வேண்டும் என்று யோவேல் தீர்க்கதரிசி கூறுகிறார்.

ஒருவருடைய பெயர் என்பது அவருக்கு மட்டுமே உரியது ஆகும்."அவரை இன்னொருவர்" என்று ஒருக்காலும் கூற இயலாது.எனவே "கர்த்தர்" என்ற வார்த்தைக்கு பின் உள்ளது பெயர் ஆகும்.அப்பெயர் יהוה ஆகும்[இப்பெயரின் உச்சரிப்பு இன்று மறைந்து விட்டது].இது ஆங்கிலத்தில் "YHWH" என்று மொழிபெயர்க்கப்படுகிறது.இன்று,இவ்வெழுத்துக்களை சேர்த்து வாசிக்க முடியும் என்று பலபேர் கூறினாலும்,அதில் ஒரு உடன்பாடு இன்றுவரை எட்டப்படவில்லை.

பெயர் தனித்தன்மை உள்ளது என்பதால்,இப்பெயருக்குரியவரை மற்றொருவர் என்று கூற முடியாது."YHWH" என்ற எழுத்துக்களைக் கொண்ட "கர்த்தர்" எப்படி இயேசுவாக முடியும்?

உதாரணமாக,திருநெல்வேலி என்ற நம் ஊரின் மேயர் சாம் என்பவர் ஆவார்.இவருடைய பெயரான "சாம்" என்று நாம் அழைப்பதற்கு பதிலாக "மேயர்" என்று அழைக்கலாம்.மேயர் என்று சொன்னால் சாம் என்று பொருள்.பதிலாக திருநெல்வேலியின் காவல் துறை கண்காணிப்பாளராக இருக்கும் திரு.அன்பு என்பவரைத்தான் "மேயர்" என்ற வார்த்தை குறிக்கும் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?ஒருவேளை தொடர்ந்து இப்பொய்யை கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்.நான் கூறுவது பொய் என்று நிரூபிக்க வேண்டுமானால்,கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படலாம்.

  • "மேயர்" என்பது ஒரு பதவி மட்டுமே.யார் வேண்டுமானாலும் அப்பதவியை வகிக்க முடியும்.
  • ஆனால் "சாம்" என்பவர் "அன்பு" என்பவராக முடியாது.
  • "அன்பு" என்பவர் மேயராக முடியும்,ஆனால் "சாம்" என்பவராக முடியாது.
  • தற்போதைய "மேயருக்கு" ஒரு "பெயர்" உள்ளது.அது "சாம்".இவரை "மேயர்" என்றும் அழைக்கலாம்,"சாம்" என்றும் அழைக்கலாம்.
  • "மேயர்" என்று அழைத்தாலும் "சாம்" என்பவரையே குறிக்கும்.
  • இது போன்றுதான் "கர்த்தர்" என்ற வார்த்தையும்."கர்த்தர்" என்ற பதவிக்கு பின்னால் இருப்பது இறைவனாகிய "YHWH" ஆவார்.இவரை "இயேசு" என்று மற்றொரு பெயரைக் கொண்டு அழைக்க முடியாது.

என்ன சூழ்நிலை:


யோவேல் 2-ம் அதிகாரம் எந்த சூழ்நிலையை விளக்குகிறது?வட திசையிலிருந்து  பெரும்படை ஒன்றை கர்த்தர் அனுப்புகிறார்.யூத மக்களின் மீறுதல் காரணமாக இச்செயல் அனுமதிக்கப்படுகிறது.கர்த்தரே இதை செய்கிறார்.அவ்வாறு அப்படைகள் யூதாவின் மீது வரும் நாட்களை உவமைகளைக் கொண்டு யோவேல் தீர்க்கதரிசி விவரிக்கிறார்.இங்கு வடதிசை படைகள் என்பது,என்னைப்பொறுத்தவரையில் பாபிலோன் படைகளைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.ஒரு வேலை அசீரிய படைகளாகக்கூட இருக்கலாம்.யோவேல் தீர்க்கதரிசி எந்த அரசர்களின் காலகட்டத்தில் வாழ்ந்தார் என்பதைப்பற்றிய தகவல்கள் இல்லாத காரணத்தினால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை.இப்படைகள் யூதாவின் மீது வரும் நாள்தான் "அந்நாள்" என்று குறிப்பிடப்படுகிறது.
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை[யோவேல் 2:1,2]
"அந்த  நாள்" என்பது "வடதிசைப்படைகள் வரும் நாள்" ஆகும்."கர்த்தருடைய நாள்" என்பதும் இந்நாள்தான்.வசனங்கள் 3-லிருந்து 11-வரை அப்படைகளின் பராக்கிரமங்கள் பற்றி பேசப்படுகிறது.

12-லிருந்து 14-வரை கூர்ந்து வாசியுங்கள்.இவ்வசனங்கள் பொருள் என்னவென்றால்,"இப்படிப்பட்ட பயங்கரமான நிகழ்வு நடக்க இருப்பதால் நீங்கள் மனந்திரும்பி கர்த்தர் நோக்கி கெஞ்சுங்கள்,ஒருவேளை அவர் மனமிறங்குவார்" என்பதே.
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.

ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.[12-14]

அதை செய்யும் விதங்கள் பற்றித்தான் 15-லிருந்து 17-வரை உள்ள வசனங்கள்.அப்படி செய்தால் 18-லிருந்து 32-வரை உள்ள நிகழ்வுகள் நடக்கும்.எனவே,கடவுள் யோவேல் தீர்க்கதரிசி மூலமாக கூறியிருக்கும் செயல் என்னவென்றால்,"இப்பொழுதாவது வேற்று கடவுள்களை விட்டு மனம் திரும்புங்கள்,அப்படி நீங்கள் செய்தால் நான் உங்களை ஆசீர்வதிப்பேன்,உங்கள் குழந்தைகள் மீது என் ஆவியை ஊற்றுவேன்" என்பதே.
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதில் திருப்தியாவீர்கள்.

வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.[18-20]
அதற்க்கு பின்புதான் 28-வைத்து வசனம் வருகிறது. 
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.[28]
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால்,வேற்று கடவுள்களை விட்டு யூத மக்கள் விலகி கர்த்தரை தேடினால் மேற்கூறிய ஆசீர்வாதம் மற்றும் பிற ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.இல்லையென்றால் கிடைக்காது என்பதே.

உண்மையில் நடந்தது என்னவென்றால், யூதாவானது  "கர்த்தருடைய பெயரை" தொழுது கொள்ளவில்லை.வேற்று கடவுள் வழிபாட்டை விட்டு திரும்ப வில்லை.எனவே, பாபிலோன் படைகளால் சூறையாடப்பட்டது.1-லிருந்து 11-வரை உள்ள வசனங்கள் கூறுவது போன்று பயங்கரமான செயல்கள்  நடைபெற்றன.யூதா வெற்றுக்கடவுள்களை விட்டு மனந்திரும்பாத காரணத்தினால் இது நடைபெற்றது.

எனவே 18-லிருந்து 32-வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் யூத மக்களுக்கு கிடைக்க வில்லை என்பதே எனது கருத்து.யூத மக்களுக்கு கூறப்பட்டுள்ள இந்த வசனங்களை இன்று நாம் எடுத்து பயன்படுத்துவது அறியாமை ஆகும்.

நிறைவேறாத இவ்வசனங்களை எடுத்டுகொண்டு கிறித்தவ சபைகளில் அரங்கேறும்  "ஆடல்கள்,பாடல்கள் போன்ற நிகழ்வுகளை என்னவென்பது!! 

முடிவு:


இப்பொழுது "கர்த்தர்" என்ற வார்த்தைக்கு பின்னால் இருப்பது கடவுளுடைய பெயர் ஆகும் என்று இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.இப்பெயர் தனித்தன்மை வாய்ந்தது, மிகவும் போற்றப்படத்தக்கது. இப்பெயரைத்தான் யோவேல் 2:32 தொழுது கொள்ள சொல்கிறது.இப்பெயருக்குரியவர் இயேசு அல்ல என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.ஹீப்ரு மொழியில் உள்ள திருமறை மூலம் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

யோவேல் 2:32 கூறுவது போன்று கர்த்தருடைய நாமத்தை இன்றைய சபைகளில் தொழுது கொள்கிறீர்களா? சபையின் அங்கத்தினர்களுக்கு கர்த்தருடைய பெயரை தொழுதுகொள்ள சொல்லிக் கொடுக்குறீர்களா? ஒரே ஒரு வசனத்தை மட்டும் தங்கள் வசதிக்காக பயன்படுத்தும் கிறித்தவர்களே இதை சிந்தனை செய்வீர்களா?

இப்பொழுது சபைகளில் யாருடைய நாமத்தை தொழுது கொள்கிறீர்கள்?இதற்க்கு பதில்,"இயேசுவின் நாமத்தை" என்பதே ஆகும்.கர்த்தரின் நாமம் அல்லது பெயர் என்பது יהוה[வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்] ஆகும்,"இயேசு" அல்ல.என்ன செய்ய போகிறீர்கள்? வழக்கம் போல் இவன் "அந்தி கிறிஸ்து" அன்று கூறி மறுக்க போகிறீர்களா அல்லது உண்மையை உணர்ந்து கர்த்தருடைய பெயரை தொழுது கொள்ள போகிறீர்களா?

கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்கிறவன் மட்டுமே காப்பாற்றப்படுவான்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1o4BuJCcDjiLgW7kYE307e8MQ_Hf6_1EF/view?usp=sharing

My Posts