Saturday, October 19, 2019

படைப்பும் அறிவியலும் - பாகம் 4

படைப்பும் அறிவியலும் - பாகம் 4


இப்பொழுது வரை,அதாவது நான்காம் நாளின் முடிவில் வானம்,நிலம்,கடல்,செடிகொடிகள்,மரங்கள் சூரியன்,நிலவு,மற்றும் நட்சத்திரங்கள் போன்றவைகள் படைக்கப்பட்டுவிட்டன.படைப்பின் அடுத்த நாளுக்கு செல்வோம்.

நாள் 5:

ஐந்தாம் நாளில் உயிருள்ளவைகள் படைக்கப்படுகின்றன.
20 அப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார்.
21 இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
22 கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார்.
23 மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.[தொ.நூ 1:20-23]
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:20-23]
எனவே கடவுள் ஐந்தாம் நாளில் அனைத்து நீர்வாழ் உயிரினங்களையும் படைத்தார். கடவுள் அவைகளிடம் பேசுகிறார். பல்கி பெருக சொல்கிறார். ஐந்தாம் நாளின் முடிவில் நமக்கு கிடைத்தது நீர்வாழ்வன மற்றும் பறவைகள் போன்றவை ஆகும்.
நாள் 6:

ஆறாம் நாள் மிக முக்கியமான நாள்.அன்றுதான் அவர் மனிதனைப் படைக்கிறார்.
24 அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார்.
25 கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
26 அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.
27 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
28 கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.
29 அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.
30 எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
31 கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.[தொ.நூ 1:24-31]
பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:24-31]
கால்நடைகள் மற்றும் மற்ற விலங்குகளை கடவுள் நிலத்தில் இருந்துதான் படைக்கிறார். நிலம்தான் தோற்றுவிக்கிறது. இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று "மானிடர்" அல்லது மனிதர்கள்"என்று பன்மையில்  குறிப்பிடப்பட்டுள்ளதுதான். ஆதாம் என்ற மனிதன்தான் முதன் முதலாக படைக்கப்பட்டான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இங்கு வார்த்தைகள் அனைத்தும் பன்மையில் உள்ளன.26 மற்றும் 27-ம் வசனங்களில் இது தெளிவாகிறது.

கடவுள் அவர்களிடம் பேசும் பொழுதும் பன்மையில்தான் பேசுகிறார்.மூல மொழியான ஹீப்ருவில் நாம் இவற்றை பார்த்தோமானால் தெளிவு கிடைக்கும்.
ַיּ ֹאמֶ ר 26:1 u·iamr and·he-is-saying אֱ הִ ים aleim Elohim נַעֲשֶׂ ה noshe we-shall-make do אָ דָ ם adm human בְּ צַ לְ מֵ נוּ b·tzlm·nu in·image-of·us כִּ דְ מוּתֵ נוּ k·dmuth·nu as·likeness-of·us .  וְ יִ רְ דּוּ u·irdu and·they-shall-sway בִ דְ גַת b·dgth in·fish-of הַ יָּם e·im the·sea וּבְ ע ף u·b·ouph and·in·flyer-of הַ שָּׁ מַ יִ ם e·shmim the·heavens וּבַ בְּ הֵ מָ ה u·b·beme and·in·the·beast וּבְ כָ ל u·b·kl and·in·all-of ־ - הָ אָ רֶ ץ e·artz the·earth וּבְ כָ ל u·b·kl and·in·every-of ־ - הָ רֶ מֶ שׂ e·rmsh the·moving-animal הָ רֹ מֵ שׂ e·rmsh the·one-moving עַ ל ol on ־ - הָ אָ רֶ ץ e·artz the·land : : וַיִּ בְ רָ א 27:1 u·ibra and·he-is-creating אֱ הִ ים aleim Elohim אֶ ת ath » ־ - הָ אָ דָ ם e·adm the·human בְּ צַ לְ מ b·tzlm·u in·image-of·him בְּ צֶ לֶ ם b·tzlm in·image-of אֱ הִ ים aleim Elohim בָּ רָ א bra he-created  אֹ ת ath·u »·him זָכָ ר zkr male וּנְ קֵ בָ ה u·nqbe and·female בָּ רָ א bra he-created אֹ תָ ם ath·m »·them
எனவே கடவுள் மனிதர்களை கூட்டமாகவே படைத்தார் என்று தோன்றுகிறது.ஒருவேளை பல்கி பெருகிய பின்பு அவர்கள் ஆண்டு கொள்வதைப்பற்றி பேசுகிறாரா என்றும் தெரியவில்லை.பல்கி பெருகின பின்பு பன்மையில்தானே குறிப்பிடவேண்டும்! இது குழப்பமாகவே இன்றும் உள்ளது.தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.

ஆனால் மனிதர்களை கூட்டமாகவே படைத்தார் என்பதற்கு பின் வரும் அதிகாரங்களில் சான்று கிடைக்கிறது.காயீன் தன சகோதரனை  கொலை செய்தபின் அவன் வேறு நாட்டில் சென்று வாழ்வதாக உள்ளது.அது ஒரு ஆதாரமாக இருக்கிறது.கூட்டமாகத்தான் மனிதர்கள் படைக்கப்பட்டன என்று கொண்டால்,பல சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.ஆனாலும் தற்போதுள்ள குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

முடிவாக கடவுள் ஆறாம் நாளின் முடிவில் கால்நடைகள், விலங்குகள், மனிதர்களை படைக்கிறார்.மனிதர்களை ஆணும் பெண்ணுமாக படைத்திருக்கிறார்.

நாள்: 7

ஏழாம் நாளில் எந்த ஒரு செயலும் நடைபெற வில்லை.கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் ஆறு நாட்களுக்குள்ளே முடித்து விட்டார்.ஏழாம் நாளில் அவர் ஓய்ந்து இருக்கிறார்.இது வேறு எந்த ஒரு மத நூல்களிலும் பார்க்க முடியாத ஒன்றாகும்.

கடவுளுக்கு ஓய்வு தேவையா என்பது போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.அவருக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதை மனிதர்களாகிய நாம் எப்படி முடிவு செய்ய இயலும்?

1 விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
2 மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
3 கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் நாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.[தொ.நூ 2:1-3]
இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.[ஆதி 2:1-3]
படைப்பின் நிறைவில் :

இவ்வாறாக ஏழு நாள் படைப்பும் நிறைவுற்று நமக்கு இவ்வுலகம் கிடைத்தது.இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி இரு பிரிவினர் தீவிரமாக விவாதிக்கின்றனர்.முதல் பிரிவினர் மதச்சார்புடையோர்,அடுத்த பிரிவினர் மதசார்பற்றோர் அல்லது அறிவியலாளர்கள்.

பல்வேறு மத நூல்கள் பல கருத்துக்களை கற்றுக்கொடுக்கிறது.எது சரி எது தவறு என்பதற்கு இன்னும் முடிவு  எட்டப்படவில்லை, அவ்வாறு எட்டப்படவும் முடியாது என்பது எனது கருத்து.தான் சார்ந்துள்ள மதநூல் தனக்கு தேவையான கருத்துக்களை கொண்டுள்ளது என்று நம்பிவிட்டால் அடுத்த கருத்தை ஏற்றுக்கொள்ள தயக்கம் இருக்கும்.

ஆனால் ஏதாவதொன்று சரியா தவறா என்பதை அறிவதற்கு வாழ்க்கை முறை ஒரு வழியாக இருக்கும் என்பது எனது கருத்து.திருமறை கூறுவது என்னவென்றால்,கடவுள் ஒருவரே!அவர் ஈடு இனையற்றவர்,அவருக்கு இறப்போ,பிறப்போ கிடையாது,அவர் அனைத்தும் அறிந்தவர்,அவரால் கூடாதது ஒன்றும் இல்லை,அவருக்கு எதுவும் மறைவில்லை போன்றவைகளாகும்.

கடவுளாக ஒருவர்தான் இருக்க முடியும் என்று நம் வாழ்க்கை முறையைக்கொண்டு நாம் நிரூபிக்கலாம் என்று கூறியிருந்தேன்.அவ்வழியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு தலைவன்தான் இருக்க முடியும்.அதாவது ஒரு கணவன்தான் இருக்க முடியும்.இன்னும்தெளிவாக கூறினால்,ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்தான் இருக்க முடியும்.பல கணவன்கள் இருக்க முடியாது.ஆனால் ஒரு ஆணுக்கு,அதாவது அத்தலைவனுக்கு,பல மனைவிகள் இருக்க முடியும்.இதை வாழ்க்கை முறையில் சோதித்து பாருங்கள் ,விடைகிடைக்கும்.

பல ஆண்களை ஒரு பெண் கணவனாக கொள்ள முடியாது,ஏன்?அவ்வாறு கொண்டால் அப்பெண் உயிருடன் இருக்க முடியாது.இது பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

எனவே ஒரு கடவுள்தான் உலகிற்கு சாத்தியம்.அவர்தான் இவ்வுலகை படைத்தது.அவரே தொழுதுகொள்ளப்படத்தக்கவர்.

படைப்பின் சரித்திரம் இதுதான்.படைப்பானது தானாகவே உருவாக்கி இருக்க முடியாது எனபதை அறிவியல் நிரூபிக்கிறது.நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அறிவு கொண்ட ஒருவரால்தான் இவ்வுலகம் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்தான் கடவுள்.அவரே தொழுது கொள்ளப்படத்தக்கவர்.

தொடர்ந்து,ஒரு கடவுள் மட்டுமே சாத்தியம் என்று  அறிவியலின் படி நிரூபிப்பதற்கு அடுத்த கட்டுரையில் முயற்சி செய்துள்ளேன்.தொடர்ந்து படியுங்கள்.
இரா.இருதயராஜ்
அனைத்து பாகங்களையும் பதிவிறக்கம் செய்ய: 

No comments:

Post a Comment

My Posts