Saturday, October 19, 2019

படைப்பும் அறிவியலும் - பாகம் 3

படைப்பும் அறிவியலும் - பாகம் 3


பழங்கால மக்கள் இப்பூமியானது தட்டையான ஒன்று என நினைத்துக்கொண்டிருந்தனர்.இக்கண்ணோட்டத்தில் நாம் படைப்பினைப்பற்றி பார்க்கும் பொழுது மேலும் சில உண்மைகள் நமக்கு தெரிய வரும்.

முதல் நாளில் என்ன நிகழ்ந்தது என்பதை முதல் இரண்டு பாகங்களில் இருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள்.இரண்டாம் நாளில் என்ன நிகழ்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்னால் முதல் நாள் முடிவில் இவ்வுலகம் எப்படி இருந்திருக்கும் என்பதை பக்கத்தில் இருக்கும் படத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நாள் 2:

இரண்டாம் நாளின் நிகழ்வுகள் 6-ம் வசனத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
6 அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார்.
7 கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8 கடவுள் வானத்திற்கு “விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.[தொ.நூ:1:6-8]
பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:6-8]
இரண்டாம் நாளில் வானம் படைக்கப்படுகிறது.முழுவதும் தண்ணீர்  நிரம்பி உள்ள இவ்வுலகத்தில் "வானம்" உண்டாக்கப்படுகிறது.வானம் படைக்கப்பட்ட பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கிறது என்ற என்னுடைய கற்பனை பக்கத்தில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

நாள் 3:

நிலப்பகுதி முழுவதும் இன்னும் மறைந்தே கிடக்கிறது.வானம் படைக்கப்பட்டாயிற்று.இப்பொழுது கடவுள் அடுத்த படைப்பிற்கு வருகிறார்.
9 அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10 கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
11 அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
12 புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
13 மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.[தொ.நூ 1:9-13]
பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:9-13] 
மேற்கூறிய வசனங்களில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் "நிலம்" அல்லது "வெட்டாந்தரை" எனப்படுகிற ஒன்று படைக்கப்படுகிறது.இங்குதான் இப்படைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.வசனம் 1:10-ல் முதன்முதலாக "אֶ רֶ ץ(Ertz )" என்று வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பரந்து கிடந்த தண்ணீரை ஓரிடத்தில் குவித்து நிலப்பகுதியை முதன்முதலாக கடவுள் நமக்கு தருகிறார்.இந்நிலப்பகுதியில் செடிகள்,மரங்கள் போன்றவற்றை படைக்கிறார்.எனவே மூன்றாம் நாளின் முடிவில் நிலப்பகுதி,கடல்,செடிகொடிகள்,கனிதரும் மரங்கள் போன்றவைகள் படைக்கப்பட்டன.

நாள் 4:

நான்காம் நாளில் என்ன நிகழ்கிறது என்று இப்பொழுது காணலாம்.மூன்றாம் நாளின் முடிவில் நமக்கு கிடைத்தது, நிலப்பகுதி,மரங்கள்,செடிகொடிகள்,கடல் போன்றவகள் ஆகும்.இவைகள் வாழ்வதற்கு தேவையானவைகளை கடவுள் இப்பொழுது நமக்கு தரப்போகிறார்.

இதைப்படிப்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டிய மற்றொரு கருத்து,நான் ஏற்கனவே கூறியுள்ளபடி "இரவு-பகல்" என்பதும் ஒரு படைப்பே ஆகும்.இந்நிலப்பகுதி சூரியனை சுற்றுவதால் இரவு-பகல் ஏற்படுகிறது என்பது இன்று நாமறிந்த அறிவியல்.ஆனால் பண்டைய மக்கள் இவ்வாறு அறிந்து கொள்ளவில்லை.அவர்களைப் பொறுத்தவரையில் இந்நிலப்பகுதி ஒரு தட்டையான ஒன்றாகும்.எனவே இரவு-பகல் என்பது அதுவாகவே வந்து செல்லக்கூடிய ஒன்று என்று நினைத்துக்கொண்டிருந்தனர் என்று நாம் கொள்ளலாம்.

இந்த இரவு-பகல் என்பது தானாகவே நடக்கும்படியாக கடவுள் நமக்கு அடுத்தப்படைப்பை தரப்போகிறார்.
14 அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
15 அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
16 கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
17 கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
18 பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
19 மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.[தொ.நூ 1:14-19]
    14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

    15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

    16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

    17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

    18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:14-19]. 
இப்பொழுது வரை,அதாவது மூன்றாம் நாள் வரையில், "இரவு-பகல்" என்பது "ஒரு" நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. கடவுள் இந்த "ஒரு" நிகழ்வை இரண்டாக பிரிக்க நினைக்கிறார். இரவு வேறாகவும் பகல் வேறாகவும் பிரிக்க பிரிக்கப்பட நினைக்கிறார். அதாவது இரவும், பகலும் தாமாகவே தனித்தனியே நிகழும்படி பிரிக்க போகிறார்.இதன் விளைவுதான் சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள்.

இரவும் பகலும் மற்றொண்டால் ஆளப்படப்போகிறது.இதுவரை "இரவு-பகல்" என்று இருந்தது.இப்பொழுது "இரவு" வேறாகவும் "பகல்" வேறாகவும் பிரிகிறது. இதன் காரணமாக நமக்கு தானாகவே நிகழும் வண்ணமாக இரவு-பகல் கிடைத்து விட்டது.மேலும் மூன்றாம் நாளில் படைக்கப்பட்ட மரங்கள்,செடிகொடிகள் போன்றவைகளுக்கு தேவையான வெளிச்சமும் கிடைத்து விட்டது.

No comments:

Post a Comment

My Posts