அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்(யோவேல் 2:32)
யோவேல் தீர்க்க தரிசி வாழ்ந்த காலகட்டம் எது என்று தெளிவாக கூறப்படவில்லை.மற்ற தீர்க்கதரிசிகள் அனைவரும் தாங்கள் எந்த அரசர்களின் காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.ஆனால் யோவேல் தீர்க்கதரிசி புத்தகத்தின் ஆரம்பத்தில் அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை.
இந்த யோவேல் தீர்க்கதரிசி மூலம் கடவுள் கூறிய சில வார்த்தைகள் இன்று கிறித்தவ சபைகளில்,குறிப்பாக பெந்தேகோஸ்து மற்றும் CSI சபைகளில், அடிக்கடி பயன்படுத்துகின்ற ஒன்றாக உள்ளது.அவ்வசனம் என்னவென்றால்,
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.[யோவேல் 2:28,29]
மேற்கூறிய இரண்டு வசனங்களும் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டு சபைகளில் பயன்படுகிறது. இதனடிப்படையில் தீர்க்கதரிசனம் கூறுதல் மற்றும் ஆடுதல் போன்ற செயல்கள் இன்று பெருகி விட்டன. ஆவி ஊற்றப்படுத்தல், ஆவியை இறக்குதல், அவ்வாறு இறக்கப்பட்ட ஆவியை பெற்றுக்கொண்டவர்கள் தன்னை மறந்த நிலையில் செயல்படுதல் போன்ற செயல்களுக்கு அடிப்படையே இந்த வசனங்கள்தான்.
இவ்வாறு நடக்கும் செயல்கள் சரியா தவறா என்பதை சீர்தூக்கிப்பார்க்க இக்கட்டுரை எழுதப்படவில்லை.பதிலாக தங்கள் செயல்களை நியாயப்படுத்த தகுந்த வசனங்களைக் கொடுக்கும் இச்சபையோர்கள் பின்னும் இருக்கும் வசனங்களை மறந்து விடுவதுதான் வேதனை.
"மேற்கூறிய வசனங்கள் கூறும் கருத்து என்ன,எந்த சூழ்நிலையில் அவ்வசனங்கள் தீர்க்கதரிசிக்கு தோன்றின,அவைகள் மூலம் அவர் கூறும் கருத்துக்கள் என்ன,அவைகளை முதலில் யாருக்கு கூறப்படுகின்றன,நமக்கு அது இன்று பொருந்துமா?" போன்ற கேள்விகள் எதற்கும் இவர்களிடம் விடை கிடைக்குமா என்றால் கிடைக்காது என்றே எனக்கு தோன்றுகிறது.
கடைசி வசனத்தை பார்த்தார்களா?
இந்த அதிகாரத்தின் கடைசி வசனம் ஒரு முக்கியமான கருத்தை கூறுகிறது.அதை இவர்கள் கவனித்தார்களா? அது என்ன வசனம் என்று முதலில் பார்க்கலாம்,
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.[யோவேல் 2:32]
மேற்கண்ட வசனம் என்ன கூறுகிறது? "கர்த்தருடைய போற்றுதற்குரிய பெயரை தொழுதுகொள்கிறவன் காப்பாற்றப்படுவான்",இதுதான் பொருள்.ஆனால் எப்பொழுது இது நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது என்றும் நாம் கவனிக்க வேண்டும்.இந்த வசனம் வரும் அதிகாரத்தின் அனைத்து வசனங்களையும்,குறிப்பாக முதலாம் அதிகாரத்தை நன்றாக படித்த பின்பு,கடைசியாக மேற்கூறிய வசனத்தை படிக்க வேண்டும்.
அவ்வாறு படித்தால் இந்த வார்த்தைகள் அனைத்தும் யாருக்கு கூறப்படுகின்றன,எந்த சூழ்நிலையில் கூறப்படுகின்றன என்று நமக்கு விளங்கும்.இப்பொழுது நான் கேட்கும் கேள்வி,கர்த்தருடைய பெயரை தொழுதுகொள்கிறவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள் என்றால் நீங்கள் கர்த்தருடைய போற்றுதற்குரிய பெயரை தொழுதுகொள்கிறீர்களா?
இல்லை.இன்றைய கிறித்தவர்கள் ஒருவர் கூட அவ்வாறு செய்வதாக எனக்கு தோன்ற வில்லை.ஆனால் அதற்க்கு முந்தைய வசனங்களை எடுத்து தங்கள் செயல்களுக்காக பயன்படுத்துகிறீர்கள்.
"கர்த்தருடைய நாமம்" என்றால் என்ன? அது தெரிந்தால்தானே ஒருவனால் அவருடைய நாமத்தை தொழுதுகொள்ள முடியும்."கர்த்தருடைய நாமம்" என்றால் "கர்த்தருடைய பெயர்" என்று பொருள். இக்கேள்விகளுக்கு பாஸ்டர்கள்,பங்குத்தந்தைகள்,ஆயர்கள்,இன்னும் பிற பெரும்பொறுப்பில் இருப்பவர்களிடம் பதில் உண்டா?
நாம் நம்முடைய தமிழ் திருமறையில் "கர்த்தர்" என்று படிக்கும் இடங்களில்லெல்லாம் உண்மையில் "இறைவனுடைய பெயர்தான்" உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும்.அவருடைய பெயர் போற்றப்படக்கூடிய ஒன்று என்ற காரணத்தினால் யூதர்கள்,கடவுளுடைய பெயர் வரும் இடங்களிலெல்லாம் "ஆண்டவர்" என்று பொருள் தரும் வார்த்தையை கொண்டு தங்கள் புனித எழுத்துக்களை(திருமறையை அதாவது பழைய ஏற்பாட்டை) மாற்றினர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?
ஒருவேளை பெரும்பொறுப்பில் இருப்பவர்களுக்கு இச்செயலைப் பற்றிய விபரம் தெரியும் என்றால் தங்கள் சபைகளில் ஏன் இதனை கூற வில்லை?அக்குறிப்பிட்ட வசனங்களில் வரும் " கர்த்தர்" என்ற வார்த்தை இயேசுவை குறிக்காது என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?அறிந்தாலும் எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள்?
தமிழ் திருமறையில்(பழைய ஏற்பாட்டில்) "கர்த்தர்" என்ற வார்த்தை சுமார் 7000 முறை வருகிறது.இவ்வார்த்தைக்கு பின் மறைந்திருப்பது கடவுளுடைய பெயரான יהוה[வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்] ஆகும். இப்பெயரைத்தான் தொழுதுகொள்ள தொழுதுகொள்ள வேண்டும் என்று யோவேல் தீர்க்கதரிசி கூறுகிறார்.
ஒருவருடைய பெயர் என்பது அவருக்கு மட்டுமே உரியது ஆகும்."அவரை இன்னொருவர்" என்று ஒருக்காலும் கூற இயலாது.எனவே "கர்த்தர்" என்ற வார்த்தைக்கு பின் உள்ளது பெயர் ஆகும்.அப்பெயர் יהוה ஆகும்[இப்பெயரின் உச்சரிப்பு இன்று மறைந்து விட்டது].இது ஆங்கிலத்தில் "YHWH" என்று மொழிபெயர்க்கப்படுகிறது.இன்று,இவ்வெழுத்துக்களை சேர்த்து வாசிக்க முடியும் என்று பலபேர் கூறினாலும்,அதில் ஒரு உடன்பாடு இன்றுவரை எட்டப்படவில்லை.
பெயர் தனித்தன்மை உள்ளது என்பதால்,இப்பெயருக்குரியவரை மற்றொருவர் என்று கூற முடியாது."YHWH" என்ற எழுத்துக்களைக் கொண்ட "கர்த்தர்" எப்படி இயேசுவாக முடியும்?
உதாரணமாக,திருநெல்வேலி என்ற நம் ஊரின் மேயர் சாம் என்பவர் ஆவார்.இவருடைய பெயரான "சாம்" என்று நாம் அழைப்பதற்கு பதிலாக "மேயர்" என்று அழைக்கலாம்.மேயர் என்று சொன்னால் சாம் என்று பொருள்.பதிலாக திருநெல்வேலியின் காவல் துறை கண்காணிப்பாளராக இருக்கும் திரு.அன்பு என்பவரைத்தான் "மேயர்" என்ற வார்த்தை குறிக்கும் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?ஒருவேளை தொடர்ந்து இப்பொய்யை கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்.நான் கூறுவது பொய் என்று நிரூபிக்க வேண்டுமானால்,கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படலாம்.
யோவேல் 2-ம் அதிகாரம் எந்த சூழ்நிலையை விளக்குகிறது?வட திசையிலிருந்து பெரும்படை ஒன்றை கர்த்தர் அனுப்புகிறார்.யூத மக்களின் மீறுதல் காரணமாக இச்செயல் அனுமதிக்கப்படுகிறது.கர்த்தரே இதை செய்கிறார்.அவ்வாறு அப்படைகள் யூதாவின் மீது வரும் நாட்களை உவமைகளைக் கொண்டு யோவேல் தீர்க்கதரிசி விவரிக்கிறார்.இங்கு வடதிசை படைகள் என்பது,என்னைப்பொறுத்தவரையில் பாபிலோன் படைகளைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.ஒரு வேலை அசீரிய படைகளாகக்கூட இருக்கலாம்.யோவேல் தீர்க்கதரிசி எந்த அரசர்களின் காலகட்டத்தில் வாழ்ந்தார் என்பதைப்பற்றிய தகவல்கள் இல்லாத காரணத்தினால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை.இப்படைகள் யூதாவின் மீது வரும் நாள்தான் "அந்நாள்" என்று குறிப்பிடப்படுகிறது.
12-லிருந்து 14-வரை கூர்ந்து வாசியுங்கள்.இவ்வசனங்கள் பொருள் என்னவென்றால்,"இப்படிப்பட்ட பயங்கரமான நிகழ்வு நடக்க இருப்பதால் நீங்கள் மனந்திரும்பி கர்த்தர் நோக்கி கெஞ்சுங்கள்,ஒருவேளை அவர் மனமிறங்குவார்" என்பதே.
அதை செய்யும் விதங்கள் பற்றித்தான் 15-லிருந்து 17-வரை உள்ள வசனங்கள்.அப்படி செய்தால் 18-லிருந்து 32-வரை உள்ள நிகழ்வுகள் நடக்கும்.எனவே,கடவுள் யோவேல் தீர்க்கதரிசி மூலமாக கூறியிருக்கும் செயல் என்னவென்றால்,"இப்பொழுதாவது வேற்று கடவுள்களை விட்டு மனம் திரும்புங்கள்,அப்படி நீங்கள் செய்தால் நான் உங்களை ஆசீர்வதிப்பேன்,உங்கள் குழந்தைகள் மீது என் ஆவியை ஊற்றுவேன்" என்பதே.
உண்மையில் நடந்தது என்னவென்றால், யூதாவானது "கர்த்தருடைய பெயரை" தொழுது கொள்ளவில்லை.வேற்று கடவுள் வழிபாட்டை விட்டு திரும்ப வில்லை.எனவே, பாபிலோன் படைகளால் சூறையாடப்பட்டது.1-லிருந்து 11-வரை உள்ள வசனங்கள் கூறுவது போன்று பயங்கரமான செயல்கள் நடைபெற்றன.யூதா வெற்றுக்கடவுள்களை விட்டு மனந்திரும்பாத காரணத்தினால் இது நடைபெற்றது.
எனவே 18-லிருந்து 32-வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் யூத மக்களுக்கு கிடைக்க வில்லை என்பதே எனது கருத்து.யூத மக்களுக்கு கூறப்பட்டுள்ள இந்த வசனங்களை இன்று நாம் எடுத்து பயன்படுத்துவது அறியாமை ஆகும்.
நிறைவேறாத இவ்வசனங்களை எடுத்டுகொண்டு கிறித்தவ சபைகளில் அரங்கேறும் "ஆடல்கள்,பாடல்கள் போன்ற நிகழ்வுகளை என்னவென்பது!!
முடிவு:
இப்பொழுது "கர்த்தர்" என்ற வார்த்தைக்கு பின்னால் இருப்பது கடவுளுடைய பெயர் ஆகும் என்று இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.இப்பெயர் தனித்தன்மை வாய்ந்தது, மிகவும் போற்றப்படத்தக்கது. இப்பெயரைத்தான் யோவேல் 2:32 தொழுது கொள்ள சொல்கிறது.இப்பெயருக்குரியவர் இயேசு அல்ல என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.ஹீப்ரு மொழியில் உள்ள திருமறை மூலம் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
யோவேல் 2:32 கூறுவது போன்று கர்த்தருடைய நாமத்தை இன்றைய சபைகளில் தொழுது கொள்கிறீர்களா? சபையின் அங்கத்தினர்களுக்கு கர்த்தருடைய பெயரை தொழுதுகொள்ள சொல்லிக் கொடுக்குறீர்களா? ஒரே ஒரு வசனத்தை மட்டும் தங்கள் வசதிக்காக பயன்படுத்தும் கிறித்தவர்களே இதை சிந்தனை செய்வீர்களா?
இப்பொழுது சபைகளில் யாருடைய நாமத்தை தொழுது கொள்கிறீர்கள்?இதற்க்கு பதில்,"இயேசுவின் நாமத்தை" என்பதே ஆகும்.கர்த்தரின் நாமம் அல்லது பெயர் என்பது יהוה[வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்] ஆகும்,"இயேசு" அல்ல.என்ன செய்ய போகிறீர்கள்? வழக்கம் போல் இவன் "அந்தி கிறிஸ்து" அன்று கூறி மறுக்க போகிறீர்களா அல்லது உண்மையை உணர்ந்து கர்த்தருடைய பெயரை தொழுது கொள்ள போகிறீர்களா?
கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்கிறவன் மட்டுமே காப்பாற்றப்படுவான்.
உதாரணமாக,திருநெல்வேலி என்ற நம் ஊரின் மேயர் சாம் என்பவர் ஆவார்.இவருடைய பெயரான "சாம்" என்று நாம் அழைப்பதற்கு பதிலாக "மேயர்" என்று அழைக்கலாம்.மேயர் என்று சொன்னால் சாம் என்று பொருள்.பதிலாக திருநெல்வேலியின் காவல் துறை கண்காணிப்பாளராக இருக்கும் திரு.அன்பு என்பவரைத்தான் "மேயர்" என்ற வார்த்தை குறிக்கும் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?ஒருவேளை தொடர்ந்து இப்பொய்யை கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்.நான் கூறுவது பொய் என்று நிரூபிக்க வேண்டுமானால்,கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படலாம்.
- "மேயர்" என்பது ஒரு பதவி மட்டுமே.யார் வேண்டுமானாலும் அப்பதவியை வகிக்க முடியும்.
- ஆனால் "சாம்" என்பவர் "அன்பு" என்பவராக முடியாது.
- "அன்பு" என்பவர் மேயராக முடியும்,ஆனால் "சாம்" என்பவராக முடியாது.
- தற்போதைய "மேயருக்கு" ஒரு "பெயர்" உள்ளது.அது "சாம்".இவரை "மேயர்" என்றும் அழைக்கலாம்,"சாம்" என்றும் அழைக்கலாம்.
- "மேயர்" என்று அழைத்தாலும் "சாம்" என்பவரையே குறிக்கும்.
- இது போன்றுதான் "கர்த்தர்" என்ற வார்த்தையும்."கர்த்தர்" என்ற பதவிக்கு பின்னால் இருப்பது இறைவனாகிய "YHWH" ஆவார்.இவரை "இயேசு" என்று மற்றொரு பெயரைக் கொண்டு அழைக்க முடியாது.
என்ன சூழ்நிலை:
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை[யோவேல் 2:1,2]"அந்த நாள்" என்பது "வடதிசைப்படைகள் வரும் நாள்" ஆகும்."கர்த்தருடைய நாள்" என்பதும் இந்நாள்தான்.வசனங்கள் 3-லிருந்து 11-வரை அப்படைகளின் பராக்கிரமங்கள் பற்றி பேசப்படுகிறது.
12-லிருந்து 14-வரை கூர்ந்து வாசியுங்கள்.இவ்வசனங்கள் பொருள் என்னவென்றால்,"இப்படிப்பட்ட பயங்கரமான நிகழ்வு நடக்க இருப்பதால் நீங்கள் மனந்திரும்பி கர்த்தர் நோக்கி கெஞ்சுங்கள்,ஒருவேளை அவர் மனமிறங்குவார்" என்பதே.
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார்.[12-14]
அதை செய்யும் விதங்கள் பற்றித்தான் 15-லிருந்து 17-வரை உள்ள வசனங்கள்.அப்படி செய்தால் 18-லிருந்து 32-வரை உள்ள நிகழ்வுகள் நடக்கும்.எனவே,கடவுள் யோவேல் தீர்க்கதரிசி மூலமாக கூறியிருக்கும் செயல் என்னவென்றால்,"இப்பொழுதாவது வேற்று கடவுள்களை விட்டு மனம் திரும்புங்கள்,அப்படி நீங்கள் செய்தால் நான் உங்களை ஆசீர்வதிப்பேன்,உங்கள் குழந்தைகள் மீது என் ஆவியை ஊற்றுவேன்" என்பதே.
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.அதற்க்கு பின்புதான் 28-வைத்து வசனம் வருகிறது.
கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதில் திருப்தியாவீர்கள்.
வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது.[18-20]
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.[28]இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால்,வேற்று கடவுள்களை விட்டு யூத மக்கள் விலகி கர்த்தரை தேடினால் மேற்கூறிய ஆசீர்வாதம் மற்றும் பிற ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.இல்லையென்றால் கிடைக்காது என்பதே.
உண்மையில் நடந்தது என்னவென்றால், யூதாவானது "கர்த்தருடைய பெயரை" தொழுது கொள்ளவில்லை.வேற்று கடவுள் வழிபாட்டை விட்டு திரும்ப வில்லை.எனவே, பாபிலோன் படைகளால் சூறையாடப்பட்டது.1-லிருந்து 11-வரை உள்ள வசனங்கள் கூறுவது போன்று பயங்கரமான செயல்கள் நடைபெற்றன.யூதா வெற்றுக்கடவுள்களை விட்டு மனந்திரும்பாத காரணத்தினால் இது நடைபெற்றது.
எனவே 18-லிருந்து 32-வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் யூத மக்களுக்கு கிடைக்க வில்லை என்பதே எனது கருத்து.யூத மக்களுக்கு கூறப்பட்டுள்ள இந்த வசனங்களை இன்று நாம் எடுத்து பயன்படுத்துவது அறியாமை ஆகும்.
நிறைவேறாத இவ்வசனங்களை எடுத்டுகொண்டு கிறித்தவ சபைகளில் அரங்கேறும் "ஆடல்கள்,பாடல்கள் போன்ற நிகழ்வுகளை என்னவென்பது!!
முடிவு:
யோவேல் 2:32 கூறுவது போன்று கர்த்தருடைய நாமத்தை இன்றைய சபைகளில் தொழுது கொள்கிறீர்களா? சபையின் அங்கத்தினர்களுக்கு கர்த்தருடைய பெயரை தொழுதுகொள்ள சொல்லிக் கொடுக்குறீர்களா? ஒரே ஒரு வசனத்தை மட்டும் தங்கள் வசதிக்காக பயன்படுத்தும் கிறித்தவர்களே இதை சிந்தனை செய்வீர்களா?
இப்பொழுது சபைகளில் யாருடைய நாமத்தை தொழுது கொள்கிறீர்கள்?இதற்க்கு பதில்,"இயேசுவின் நாமத்தை" என்பதே ஆகும்.கர்த்தரின் நாமம் அல்லது பெயர் என்பது יהוה[வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்] ஆகும்,"இயேசு" அல்ல.என்ன செய்ய போகிறீர்கள்? வழக்கம் போல் இவன் "அந்தி கிறிஸ்து" அன்று கூறி மறுக்க போகிறீர்களா அல்லது உண்மையை உணர்ந்து கர்த்தருடைய பெயரை தொழுது கொள்ள போகிறீர்களா?
கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்கிறவன் மட்டுமே காப்பாற்றப்படுவான்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1o4BuJCcDjiLgW7kYE307e8MQ_Hf6_1EF/view?usp=sharing
https://drive.google.com/file/d/1o4BuJCcDjiLgW7kYE307e8MQ_Hf6_1EF/view?usp=sharing
No comments:
Post a Comment