Friday, May 3, 2019

சாத்தான் என்பவன் யார்? பாகம்-4

சாத்தான் என்பவன் யார்? பாகம்-4

மூன்று பாகங்களையும் படித்த பின்பு கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்களை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
  • சாத்தான் என்று தனியான தூதன் ஒருவன் இல்லை.
  • சாத்தான் என்பது ஒரு "பெயர்" அல்ல.
  • சாத்தான் என்ற சொல்லின் பொருள் "எதிராளி" அல்லது "பகையாளி" என்பது ஆகும்.
  • இச்சொல் "எதிர்த்தல்" அல்லது "பகைத்தல்" என்ற செயலை குறிக்கிறது.
  • "பகைத்தல்" என்ற செயலை செய்யும் எவரும் "சாத்தான்" என்று அழைக்கப் படலாம்.
  • சாத்தான் என்று அழைக்கப்பட்ட தூதன் ஒருவன் இருந்தான்.அவன் கடவுளால் கீழே தள்ளி விடப்பட்டான்.அன்றிலிருந்து அவன் கடவுளுக்கு விரோதியாக மாறி விட்டான்.இக்கருத்துக்கள் தவறு.
  • எல்லாம் வல்ல கடவுளை பகைத்து யாராலும் இருக்க முடியாது.
  • எந்த தூதனாக இருந்தாலும் அவன் கடவுளுக்கு கட்டுப்பட்டவன்.
  • கடவுளுடைய அனுமதி இன்றி அவனால் எதுவும் செய்ய இயலாது.
பின் எப்படி நாம் இவ்வாறு கற்பனை செய்து கொண்டோம்.நாம் அதை சுருக்கமாக பார்க்கலாம். மிகப்பழமையான காலங்களில் இருந்து மக்களை அழுத்தி கொண்டிருந்த ஒரு கருத்து என்னவென்றால்,இறப்பு.

இறப்பைக்  கண்டு மனிதன் பயந்தான்.கிரேக்கர்கள் மிகவும் அறிவு கூர்மை உடையவர்கள்.ஏன்,எதற்கு,எப்படி போன்ற கேள்விகளால் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டவர்கள்.அவர்கள் "இறப்பு" என்ற செயலை தங்களுடைய அறிவைக்கொண்டு ஆராய்ந்தனர்.

மிகப்பெரும் தத்துவ அறிஞறாகிய சாக்ரடீஸ்க்கு பிளாட்டோ  என்ற மாணவன் ஒருவன் இருந்தான்.இவரும் மற்ற சில அறிஞர்களும் இறப்பைப் பற்றி நிறைய எழுதி உள்ளனர்.தனித்தன்மையுடன் இருக்கும் கிரேக்கர்களுக்கு,"மனிதன் இறந்த பின்பு என்ன நடக்கும்?" என்ற கேள்விகளும் எழுந்தன.

இதை போன்ற தொடர் நினைவுகள் அவர்களை கீழ்கண்ட கருத்துக்களுக்கு இட்டு சென்றன.
  • இறப்பிற்கு பின்னர் மனிதர்கள் தங்கள் செயல்களுக்கு ஏற்ற பலனை அடைவார்கள்.
  • நற்கிரியைகளை செய்தவர்கள் நற்பலன்களையும் கேட்ட கிரியைகளை செய்தவர்கள் கேட்ட பலன்களையும் அடைவார்கள்.
  • கடவுளுக்கு எதிரான ஒன்றுதான் கெட்டவைகளுக்கு காரணம் என்று நினைத்தனர்.
  • கெட்ட செயல்களுக்கு காரணமான கடவுள் ஒருவர் உள்ளார்.அவர்தான் அணைத்து கெட்டவைகளுக்கும் காரணம்.
  • இந்த "நல்லது Vs கெட்டது" என்ற கொள்கை பரிணாம வளர்ச்சி பெற்று பைபிளுக்குள் நுழைந்து விட்டது.
பிளாட்டோவினுடைய எழுத்துக்கள் இன்றும் உள்ளன.கிரேக்கர்கள் எகிப்தை ஆண்ட பொழுது எகிப்திய தாக்கமும் சேர்ந்து கொண்டது.

கெட்டவைகளுக்கு காரணம் சாத்தான் என்ற எண்ணம் இதிலிருந்துதான் தோன்றியது.நான் மிக சுருக்கமாக இங்கு தந்துள்ளேன்.கிரேக்க,ரோம, பாபிலோனிய கடவுள் வழிபாட்டு முறைகளை பற்றி நாம் படித்தோமானால் இந்த உண்மை விளங்கும்.

எனவே பைபிளில்  குறிப்பிடப்படாத ஒன்று பைபிளுக்குள் நுழைந்து விட்டது.எப்பொழுது கிரேக்கர்களின் ஆதிக்கம் ஆரம்பித்ததோ அப்பொழுதிலிருந்து பைபிள் கறைபடிய ஆரம்பித்து விட்டது.

ஏறத்தாழ புதிய ஏற்பாடு ஒரு கிரேக்க புத்தகம்தான்.இறப்பு,பின்னர் நல்லவர்கள் உயிருடன் எழும்புதல்,கெட்டவர்கள் நரகத்தில் தள்ளப்படுதல்,எனவே ஒரு மீட்பர் தேவை,அவர்தான் இயேசு போன்ற பரிணாம வளர்ச்சிதான் புதிய ஏற்பாடு.இது என்னுடைய கருத்து.

பைபிள் என்பது பழைய ஏற்பாடு மட்டுமே.அதில் குறிப்பிட பட்டுள்ளவர் மட்டுமே உண்மையான கடவுள்.அவர் சர்வ வல்லவர்.அவரால் முடியாத காரியம் ஒன்று இல்லை.பழைய ஏற்பாடு வேறு எந்த கடவுளையும் நமக்கு காட்ட வில்லை.

புதிய ஏற்பாடு இதிலிருந்து மாறுபடுகின்றது. மெய்யான கடவுளாம் ஆபிரகாமின் கடவுளை நாம் தொழுது கொள்வதிலிருந்து அது நம்மை வலி விலக செய்கிறது.

ஆபிரகாம் வழிபட்ட கடவுளே உண்மையான கடவுள் அவரையே நாம் தொழுது கொள்வோமாக. இவரே தொழுது கொள்ளப்படாத தக்கவர். அனைவரின் முழங்கால்களும் இவருக்கு முன்பாகவே முடங்க வேண்டியதாக உள்ளது.

இரா.இருதயராஜ்.
மொத்த கட்டுரைகளையும் பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1LD7tPDqmcwP5oGLRGVrHwo6ZiqlsVWwL/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts