உயிர்த்தெழுதல் முரண்பாடுகள்
இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். மூன்றாம் நாளிலே அவர் உயிரோடு எழுந்தார் அல்லது எழுப்பப்பட்டார். நான்கு நற்செய்தி புத்தகங்களும் இதை குறிப்பிடுகின்றன.இதன் மூலம் இப்புத்தகங்கள் நமக்கு கூறும் கருத்து என்ன?
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது[யோ:20:31].
அதாவது இயேசு தேவனுடைய குமாரன் என்றும் கிறிஸ்து என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அவரை கடவுள் என்றும் மூன்று கடவுள்களில் அவர் ஒருவர் என்றும் நம்பிக்கொண்டு சர்வ வல்ல கடவுளாம் "ஆபிரகாமின் கடவுளை" புறந்தள்ளி இருக்கிறோம்.
இயேசு கடவுள்தான் என்பதற்கு முக்கிய தடயம் அவர் உயிரோடு எழுந்த நிகழ்வு ஆகும்.இறந்த பிறகு உயிரோடு எழும்புதல் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரும் ஆச்சரியமான நிகழ்வுதான்.நான்கு நற்செய்தி புத்தகங்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன.
இந்த நான்கு நற்செய்தி புத்தகங்களும் இயேசு இறந்த உடனே எழுதப்பட்டவைகள் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.முதல் புத்தகமான "மாற்கு எழுதின சுவிசேஷம்",இயேசு இறந்த பிறகு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இப்புத்தகங்கள் கூறும் நிகழ்வை நாம் நம்ப வேண்டும் என்றால்,அந்நிகழ்வு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லது அரசு பதிவுகள் என ஏதாவது நமக்கு வேண்டும்.ரோம அரசின் கட்டுப்பாட்டில் யூத மக்கள் இருந்தனர் என்பது நமக்கு தெரியும்.அந்த ரோம அரசு வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
ஆனால் உயிர்த்தெழுதல் நடந்ததாக ஒரு சான்று கூட நமக்கு இல்லை.எனவே நற்செய்தி ஆசிரியர்களான மாற்கு, மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் இவர்களைத்தான் நாம் இப்பொழுது நம்ப வேண்டி உள்ளது.
இவர்கள் எழுதிய புத்தகங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் பெரும் குளறுபடிகளை நம்மால் காண இயலுகிறது.உயிர்த்தெழுதல் என்ற ஒன்றைக்கொண்டுதான் "இயேசுவை" நிரூபிக்க முடியும்.எனவே நான்கு பேரும் உயிர்த்தெழுதல் நிகழ்வை விவரிக்கின்றனர்.நான்கு ஆசிரியர்களும் முற்றிலுமாக வேறுபடுகின்றனர்.
இப்பொழுது நமக்கு கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன.
- இப்புத்தகங்களை எழுதும் பொழுது தங்களை ஏன் அறிமுகப்படுத்திக்கொள்ள வில்லை? "இன்னாருடைய மகன் இன்னார் எழுதுவது" என்று ஏன் குறிப்பிட வில்லை?
- அனைத்து தீர்க்கதரிசிகளும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகே எழுத ஆரம்பிக்கின்றனர்.
- பல ஆண்டுகள் கழித்து ஏன் எழுதினர்?
- இடைப்பட்ட ஆண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தனர்?
- பல நிகழ்வுகளில் ஓரிரு செய்திகளை விட்டிருக்கலாம்,ஆனால் ஒரே நிகழ்வை முற்றிலும்[நடந்த இடம் முதற்கொண்டு]வேறாக எப்படி எழுத முடியும்?
எனவே உயிர்த்தெழுந்த நிகழ்வு சந்தேகத்திற்குள்ளாகிறது.பல கேள்விகளுக்கு விடை இல்லை."உயிர்த்தெழுதல்" என்ற ஒன்றை நிரூபிக்க முயன்றிருக்கின்றனர்."கிறிஸ்து" எனப்படும் "மேசியாவை" காண யூத மக்கள் ஆர்வத்தோடு ஏங்கி கொண்டிருந்த காலம் அது.பல பேர் "நான்தான் கிறிஸ்து" என்று அறிவிப்பு செய்து காணாமல் பொய் இருக்கின்றனர்.
இந்த பல பேர்களில் "இயேசுவும் ஒருவர்" என நான் நினைக்கின்றேன்.மேற்கூறியவாறு கிளம்பும் ஒவ்வொருவரும் தங்களுக்கென சீடர்களை, அதாவது பின்பற்றுபவர்களை, உருவாக்கிக்கொண்டனர். அதன் விளைவு இன்று நாம் இயேசுவை கடவுளாக வழிபாடும் நிலைமைக்கு வந்திருக்கின்றோம்.
நற்செய்தி புத்தகங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வசனங்களில் ஒன்று,இயேசு பாடு பட வேண்டும் என்றும்,மரிக்க வேண்டும் என்றும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்பதாகும்.ஆனால் இம்மாதிரியான வசனங்கள் எதுவும் பழைய ஏற்பாட்டில் கிடையாது.
நான்கு நற்செய்தி புத்தகங்களின் அடிப்படையில் உயிர்த்தெழுதல் நிகழ்வை அட்டவணைப்படுத்தி இருக்கின்றேன்.நீங்களே முரண்பாடுகளை பாருங்கள்.எவ்வித கொள்கையையும் சாராமல் நடுநிலைமையோடு ஆராய்ந்து பாருங்கள்.
அட்டவணையை பதிவிறக்கம் இங்கே செய்து கொள்ளுங்கள்.
பழைய ஏற்பாடு என்பது ஒரு கடவுளை பற்றி மட்டும்தான் பேசுகிறது.ஆனால் புதிய ஏற்பாடு,"அந்த கடவுள் இயேசுதான்" என்று நிரூபிக்க முயல்கிறது.தன்னை தெளிவாக வெளிப்படுத்தி காட்டி உள்ளார் கடவுள்.அவர் "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு போன்றவர்கள் வழிபட்ட கடவுள் ஆவார்.அவரையே நாமும் தொழுது கொள்வோமாக.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment