கிறித்தவ திருமறையில் கர்த்தர் என்ற வார்த்தையின் பயன்பாடு
கர்த்தர் என்பவர் யார்?அந்த வார்த்தையின் பொருள் என்ன?இது போன்ற கேள்விகள் பைபிளை படிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.பழைய ஏற்பாட்டில் ஏறத்தாழ 7000 முறை இவ்வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கும்.
யாரைக் குறிக்க இந்த கர்த்தர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது? சர்வ வல்ல இறைவனாம் "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு போன்றோர் வழிபட்ட கடவுளை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.இம்மொழியில் உயிரெழுத்துக்கள் கிடையாது.எனவே உச்சரிப்பு மிக கடினமாக இருக்கும்.இக்கடினத்தை போக்க பிற்காலத்தில் உயிரெழுத்துக்களுடைய ஒலியைக் கொடுப்பதற்கு "புள்ளிகள்" பயன்படுத்தப்பட்டன.
பழைய ஏற்பாட்டில் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் நேரடியாக பேசியிருப்பார்.இந்த கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட பெயர் உள்ளது.இஸ்ரயேல் மக்கள் இப்பெயரை மிகவும் போற்றினர்.இதற்கு ஆதாரமாக யாத்திராகமம் 3:15-ஐ நாம் படிக்கலாம்.
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
தடித்த எழுத்துக்களில் "கர்த்தர்" என்ற வார்த்தை உள்ளதை கவனியுங்கள்.
கடவுள் மோசேயிடம் தன்னுடைய பெயரை அறிவிக்கிறார்.மேலும் ஒரு கட்டளையைக் கொடுக்கிறார்.
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.[யாத் 20:7]
அவருடைய பெயரை நாம் மிக கவனமாக பயன்படுத்த வேண்டும்.மிகவும் போற்ற பட வேண்டிய அவருடைய நாமத்தை உச்சரிக்க பயப்பட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருடைய பெயரை உச்சரிக்க இஸ்ரேல் மக்களை தடை செய்தனர்.
அவருடைய பெயரை உச்சரிக்காமல் எப்படி அவருடைய வார்த்தைகளை மக்களுக்கு சொல்வது?தீர்க்க தரிசிகள் மிகவும் அதிகாரத்தோடு அவருடைய பெயரை பயன்படுத்தினர்.ஆனால் சாதாரண மக்கள் அவருடைய பெயரை அப்பெயருக்குரிய மரியாதையோடு பயன்படுத்த வில்லை.எனவே உச்சரிக்க தடை செய்ய பட்டது.
ஆனால் வசனங்களை பயன்படுத்த வேண்டுமே?அவருடைய நாமத்திற்கு பதிலாக "ADONAI" என்ற வார்த்தையை பயன்படுத்தி யூத பைபிளை எழுதினர்.கடவுள் மீதுள்ள மிகுந்த மரியாதையின் நிமித்தம் இது செய்யப்பட்டது.
"ADONAI" என்ற வார்த்தையின் பொருள் "என் ஆண்டவன்[My Lord ]" என்பதாகும்."אֲדֹנָי" என்பது ஹீப்ரு மொழியில் "ADONAI".
ஆனால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது கடவுளுடைய பெயர் வரும் இடங்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
"ADONAI" என்ற வார்த்தையை ஆங்கில பைபிளில் "LORD" என்று மொழிபெயர்த்தனர்.தமிழ் மொழியில் இது "ஆண்டவனே" என்று பொருள் தரும்.
கடவுள் மீதுள்ள பயம் காரணமாகவும் மரியாதையின் காரணமாகவும் ஹீப்ரு பைபிளில் அவருடைய பெயர் மாற்றப்பட்டது.இந்த செய்தி தெரியாமல் ஆங்கில பைபிளில் அவ்வார்த்தைக்குறிய பொருளை தரும் ஆங்கில வார்த்தையான "LORD" பயன்படுத்தப்பட்டது.
ஆங்கிலேர்கள் மிகச்சாதாரணமாக "LORD" என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.மனிதர்களில் கனவான்களை குறிக்க இது பயன்படுகிறது. "My Lord" என்று சாதாரணமாக அழைப்பார்கள்.
தமிழுக்கு வரும் பொழுது இதே முறை பயன் படுத்தப்பட்டது.ஆனால் ஒருபடி மேலாக "கர்த்தர்" என்ற சற்று கணம் கொடுக்கும் வார்த்தையை பயன்படுத்தினர்.
நாம் இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டியது "கர்த்தர்" என்ற வார்த்தை ஒரு கனமுள்ள மனிதனை குறிக்க பயன்பட வில்லை.பதிலாக சர்வ வல்ல இறைவனை குறிக்க பயன்படுகிறது.
"LORD" என்ற ஆங்கில வார்த்தையின் பிரச்சினை என்னவென்றால் அதை யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.நீதிபதியை கூட "My Lord" என்கின்றனர்.
இக்குழப்பத்தின் அடிவேரை தேடி சென்றோமானால்,கடவுள் மீதுள்ள அளப்பரிய அன்பின்,மரியாதையின் விளைவாக அவருடைய பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக வேறு வார்த்தையை பயன்படுத்தினர்.
புதிய ஏற்பாடு:
இங்கு இயேசு என்ற ஒரு மனிதனை மிகவும் கணம் செய்கின்றனர் இயேசுவை பின்பற்றிய ஒரு குறிப்பிட்ட யூத மனிதர்கள் இருந்தனர்.அவர்களை பின்பற்றிய கிரேக்கர்களும் அவ்வாறே செய்கின்றனர்.கிரேக்கர்கள் ஏற்கனவே பல கடவுள் வழிபாட்டைக் கொண்டிருந்தவர்கள்.
இந்த இயேசுவின் வார்த்தைகளை அவருடைய சீடர்கள் தொகுத்து எழுதும் பொழுது "kurios[κύριος]" என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.மனிதர்களில் கனவான்களை குறிக்கவே இவ்வார்த்தை பயன்படுகிறது.இயேசுவின் மீதுள்ள பற்றின் காரணமாக அவர்கள் இவ்வார்த்தையை பயன்படுத்தினர்.இதன் விளைவு,புதிய ஏற்பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில் "Lord"-ன் பயன்பாடு.
இப்பொழுது ஆங்கில மொழிபெயர்ப்பில் சர்வ வல்ல இறைவனும் "Lord" என்று குறிப்பிடப்படுகிறார்.புதிய ஏற்பாட்டில் இயேசுவும் "Lord" என்று குறிப்பிடப்படுகிறார்.விளைவு இயேசு கடவுளாகி விட்டார்.எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!!
முடிவு:
பழைய ஏற்பாட்டில் ஏறத்தாழ 7000 முறை கடவுளுடைய பெயர் வருகிறது.தீர்க்கதரிசிகள் மிகவும் அதிகாரத்தோடு "கர்த்தர் கூறுகிறார்" என்றனர்.கர்த்தர் என்ற இடத்தில கடவுளுடைய பெயர் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
7000 முறை அவருடைய பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்றால் எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கிறது.புதிய ஏற்பாட்டில் அது இயேசுவை குறிக்கிறது.
கடவுளையும் இயேசுவையும் ஒன்றாக்குவது மடத்தனம், முட்டாள்தனம்."Lord" என்ற வார்த்தையின் பயன்பாடுதான் இதற்கு காரணம்.புதிய ஏற்பாட்டை பழைய ஏற்பாட்டோடு இணைத்து ஒரே புத்தகமாக வெளியிட்டது பெரும் தவறு.
தமிழ் மொழிபெயர்ப்பு எல்லாவற்றிலும் மேலான ஒரு தவறை செய்தது.பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாடு இரண்டிலுமே ""Lord" என்ற வார்த்தையை "கர்த்தர்" என்று மொழிபெயர்த்து விட்டனர்.
பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்பது "சர்வ வல்ல இறைவனை குறிக்கிறது.புதிய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்பது இயேசுவை குறிக்கிறது.
புதிய ஏற்பாட்டில் ஒரு சில இடங்களில் "கர்த்தர்" என்ற வார்த்தை கடவுளையே குறிக்கும்.எடுத்துக்காட்டாக ரோமர் 4:8-ஐ பாருங்கள்.
தமிழ் மொழிபெயர்ப்பு எல்லாவற்றிலும் மேலான ஒரு தவறை செய்தது.பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாடு இரண்டிலுமே ""Lord" என்ற வார்த்தையை "கர்த்தர்" என்று மொழிபெயர்த்து விட்டனர்.
பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்பது "சர்வ வல்ல இறைவனை குறிக்கிறது.புதிய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்பது இயேசுவை குறிக்கிறது.
புதிய ஏற்பாட்டில் ஒரு சில இடங்களில் "கர்த்தர்" என்ற வார்த்தை கடவுளையே குறிக்கும்.எடுத்துக்காட்டாக ரோமர் 4:8-ஐ பாருங்கள்.
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.இங்கே "கர்த்தர்" என்ற வார்த்தை தாவீது வழிபட்ட கடவுளை குறிக்கிறது.எனவே தமிழ் பைபிள் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.மற்ற இடங்களில் இயேசுவை குறிக்கிறது.
அதனால் இன்று கடவுளை இயேசுவோடு ஒன்றாகி விட்டனர்.எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே.ஆபிரகாம் யாரை வழிபட்டாரோ அவரே அந்த இறைவன்.அவரை யாருக்கும் ஈடு இணையாக்க முடியாது.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment