Saturday, June 22, 2019

இயேசு பிரதான ஆசாரியனா?

இயேசு பிரதான ஆசாரியனா?

கேள்வி: இயேசு பிரதான ஆசாரியனாக இருந்த காரணத்தினால்தான் தன்னையே பலியாக கொடுத்தார் என்பது சரியா?

பதில்: தான் ஒரு பிரதான ஆசாரியனாக இருந்த காரணத்தினால் இயேசு தன்னையே பலியாக கொடுத்தார் என்று புதிய ஏற்பாட்டில் உள்ள எபிரேயிருக்கு எழுதின நிரூபத்தில்  கூறப்பட்டிருப்பது உண்மைதான்.
கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். [எபி :9:11-12].

புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இயேசு,அறியாமல் கூட,ஒரு கட்டளையையும் மீறமுடியாது[மத் 5:17-18].ஒரு பாவம் கூட செய்யாமல் தன்னுடைய வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்[எபி 4:15,1யோவ 3:5].

இயேசு இறக்கும் அந்த தருவாய் வரை மோசேயின் நியாயப்பிரமாணம் உயிரோடு இருந்தது என்று புதிய ஏற்பாடு கூறுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.பவுல் கீழ்கண்டவாறு எழுதுகிறார்,
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;[கொலெ 2:14]
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.[ரோம 10:4] .
இயேசு இறக்கும் அந்த தருவாய் வரை நியாயப்பிரமாணம் வழக்கத்தில்தான் இருந்தது என்றால்  அவர் ஒரு ஆசாரியனாக இருக்க முடியாது.மோசேயின் நியாயப்பிரமாணம் இருக்கும் வரை,ஆரோனின் வம்சாவழியில் இல்லாத ஒருவர் ஆசாரியானாக இருக்க முடியாது[யாத் 29:9].

நியாயப்பிரமாணத்தின் முடிவாக தான் இருக்கிறேன் என்பதை மத் 5:17-18-ல் கூறும் இடத்தைக்கொண்டு நாம் பார்த்தல் கூட,அவர் இறக்கும் அந்த நொடிக்கு முன்னர் வரை ஆரோனின் ஆசாரியப்பட்டத்தை யாராலும் முடிவுக்கு கொண்டுவர முடியாது என்பது நமக்கு புரியும்.

மேலும் மத் 1:3 மற்றும் லூக் 3:33-ன் படி இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்தவராவார்.ஆரோனின் வம்சாவழியில் அவர் இல்லாத காரணத்தினால் அவரால் ஆசாரியனாக முடியாது[நியாயப்பிரமாணத்தின் காரணமாக].

தன்னுடைய வாழ்நாள் முடியும் வரை அவர் ஆசாரியனாக முடியாது.நியாயப்பிரமானத்திற்கு கட்டுப்பட்டுதான் அவர் வாழ வேண்டும்.

இயேசு பிரதான ஆசாரியனாக இருந்தார் என்று யாராவது கூற விரும்பினால்,"நியாயப்பிரமானத்திற்கு பின்" என்று கூறப்படும் காலமாகிய இயேசு இறந்த காலத்திற்கு பிந்தைய காலத்தைத்தான் குறிப்பிட வேண்டும்.

இயேசு பிரதான ஆசாரியனாக இருந்து தன்னையே பலியாக கொடுத்தார் என்பதில் மற்றுமொரு சங்கடம் உள்ளது.எபி 9:14-ன் படி தன்னை பலியாக கொடுத்தார்.கீழ்கண்ட மற்றொரு வசனத்தை கவனியுங்கள்,
மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,
அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். [லேவி 17:8-9]
இயேசு தேவாலயத்திற்கு வெளியே தன்னை பலியாகக் கொடுத்திருக்கிறார். எனவே மோசேயின் நியாயப்பிரமானத்தின்படி   அவர்  அறுப்புண்டு போக  வேண்டும்.

இயேசுவின் காலத்தில் "ஆசரிப்பு கூடார வாசல்" என்பது "தேவாலயத்திற்குள்" என்பது ஆகும்.

மத் 5:17-ன் படி அவர் நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்க வேண்டும் என்றால்,மோசேயின் நியாப்பிரமானத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் படியும் நிறைவேறியிருக்க வேண்டும்.எனவே இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாக இல்லை.

"இயேசு பிரதான ஆசாரியனாக இருந்தாரா?" மற்றும் "அவருடைய இறப்பு நியாயப்பிரமாணத்தின் படி பலிதானா?"

நியாயப்பிரமாணம் கூறுகிறது,"நிச்சயமாக இல்லை".


https://jewsforjudaism.org என்ற பக்கத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் இரா.இருதயராஜ்.

No comments:

Post a Comment

My Posts