இயேசுவுக்கு அன்பான சீடன்
கடைசியாக எழுதப்பட்ட நற்செய்தி புத்தகம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? யோவான் எழுதிய நற்செய்தி புத்தகம்தான் கடைசியாக எழுதப்பட்ட புத்தகம்.இயேசு இறந்த பிறகு ஏறத்தாழ 70 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது.
இப்புத்தகத்தின் கடைசி அதிகாரம் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக உள்ளது.இப்புத்தகம் முழுமையுமே முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது.முதல் மூன்று புத்தகங்களுக்கும் இதற்கும் கடலளவு வேறுபாடுகள் உள்ளன.
இக்கட்டுரையின் நோக்கம் யோவான் புத்தகத்தின் கடைசி அதிகாரமான 21-ம் அதிகாரத்தைப் பற்றி பேசுவதே ஆகும்.இந்த அதிகாரம் பற்றிய என்னுடைய சில கருத்துக்களை பாருங்கள்.
- 21-ம் அதிகாரம் இயேசுவின் மூன்றாம் காட்சிஅளித்தலைப் பற்றி விவரிக்கின்றது.
- மற்ற நற்செய்தி புத்தகங்களில் இக்கதை கிடையாது.
- சீடர்கள்,குறிப்பாக சீமோன் பேதுரு, என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கூறுவதாக இக்கதை உள்ளது.
- சீமோன் பேதுருவின் மரணம் பற்றி இங்கு தகவல் தரப்பட்டுள்ளது.
இந்த அதிகாரத்தில் சீமோன் பேதுரு எப்படி மரணமடைவான் என்று "இயேசுவுக்கு அன்பான சீடன்" குறிப்பிடுவதாக உள்ளது.இதைப்பற்றித்தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.
முதலில் "இயேசுவுக்கு அன்பான சீடன்" யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.முக்கியமாக அந்த சீடனின் பெயர் மட்டும் குறிப்பிடப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.வசனம் யோ:13:23-ஐ பார்ப்போம்.
அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
இவ்வளவுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த சீடனுடைய பெயர் எங்கும் குறிப்பிடப்படவே இல்லை.ஏன்? இப்புத்தகத்தை எழுதியவர் அனைத்தையும் மிக விரிவாக எழுதியுள்ளார்.பெயர் மட்டும் வேண்டும் என்றே மறைக்கப்பட்டுள்ளது போன்று தோன்றுகிறது.மேலும் இப்புத்தகத்தை எழுதியவரும் அவர்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.[யோ:21:24].
வசனங்கள் 20 முதல் 24 வரை படித்து பாருங்கள்.யார் இப்புத்தகத்தை எழுதியது என்று தெரியும். இப்பொழுது நமது கேள்வி,
சீமானின் மரணத்தைப் பற்றி "இந்த இயேசுவுக்கு அன்பான சீடனுக்கு" எப்படி தெரியும்?
21-ம் அதிகாரம் கூறும் கதை நடந்ததாக கருதப்படும் காலகட்டம் எது? கி.பி 33-ம் ஆண்டு.ஏனென்றால் அப்பொழுதுதான் இயேசு இறந்தார்.மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்த பின்னர் சீடர்களிடம் பேசுகிறார்.
வசனம் 21:19-ஐ படித்து பாருங்கள்.
சீமோன் எப்படி மரணமடைய போகிறான் என்று இயேசுவுக்கு தெரிந்திருக்கிறது.அதைத்தான் இப்புத்தகத்தின் இந்த வசனம் குறிக்கிறது.இயேசுவுக்கு தெரிந்திருப்பது இப்புத்தகத்தின் ஆசிரியருக்கும்,அதாவது யோவானுக்கும்,தெரிந்திருக்கிறது.
என்றால்,இயேசு இறந்தபிறகும் பல வருடங்கள் வாழ்ந்த பேதுருவும் தன்னுடைய கடிதங்களில் எங்கும் இதைப்பற்றி குறிப்பிட வில்லை.பல வருடங்களுக்கு முன்னரே இத்தகவல் தீர்க்க தரிசனமாக தெரிவிக்கப்பட்டாயிற்றே,ஏன் பேதுரு இத்தகவலை எங்கும் தெரிவிக்க வில்லை? மற்ற சீடர்களும் கூட ஏன் இத்தகவலை எழுத்து மூலமாக தெரிவிக்க வில்லை? மத்தேயு,மாற்கு,லூக்கா போன்றோரும் ஏன் தெரிவிக்க வில்லை?
மரணமடைதல் என்பது வேறு. இன்ன விதமாக மரணமடைதல் என்பது வேறு.சீமோனுக்கும்,யோவானுக்கும் கூட இருந்த மற்ற சீடர்களுக்கும் இது தெரிந்திருக்கிறது என்பது 21-ம் அதிகாரம் மூலமாக நமக்கு தெரிகிறது.ஆனால் ஒருவர் கூட இதைப்பற்றி எழுத வில்லை.
சரி சீமோன் பேதுரு என்ன விதமாக மரணமடைந்தான்?பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
வசனம் 21:19-ஐ படித்து பாருங்கள்.
இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்."இன்ன விதமான மரணம்" என்றால் என்ன?:
சீமோன் எப்படி மரணமடைய போகிறான் என்று இயேசுவுக்கு தெரிந்திருக்கிறது.அதைத்தான் இப்புத்தகத்தின் இந்த வசனம் குறிக்கிறது.இயேசுவுக்கு தெரிந்திருப்பது இப்புத்தகத்தின் ஆசிரியருக்கும்,அதாவது யோவானுக்கும்,தெரிந்திருக்கிறது.
என்றால்,இயேசு இறந்தபிறகும் பல வருடங்கள் வாழ்ந்த பேதுருவும் தன்னுடைய கடிதங்களில் எங்கும் இதைப்பற்றி குறிப்பிட வில்லை.பல வருடங்களுக்கு முன்னரே இத்தகவல் தீர்க்க தரிசனமாக தெரிவிக்கப்பட்டாயிற்றே,ஏன் பேதுரு இத்தகவலை எங்கும் தெரிவிக்க வில்லை? மற்ற சீடர்களும் கூட ஏன் இத்தகவலை எழுத்து மூலமாக தெரிவிக்க வில்லை? மத்தேயு,மாற்கு,லூக்கா போன்றோரும் ஏன் தெரிவிக்க வில்லை?
மரணமடைதல் என்பது வேறு. இன்ன விதமாக மரணமடைதல் என்பது வேறு.சீமோனுக்கும்,யோவானுக்கும் கூட இருந்த மற்ற சீடர்களுக்கும் இது தெரிந்திருக்கிறது என்பது 21-ம் அதிகாரம் மூலமாக நமக்கு தெரிகிறது.ஆனால் ஒருவர் கூட இதைப்பற்றி எழுத வில்லை.
சரி சீமோன் பேதுரு என்ன விதமாக மரணமடைந்தான்?பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
"St. Peter is believed to have died as a martyr for his faith. Although his death is not described in Scripture, numerous writers of the time (or shortly thereafter) described his death as having occurred in Rome during the reign of the emperor Nero in 64 CE. According to tradition, St. Peter was crucified upside down because he felt unworthy to die in the same manner as Jesus Christ."அதாவது "நீரோ" மன்னன் கால கட்டத்தில் அவனால் தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டான்.முக்கியமான கேள்விகள் எனக்கு எழுகின்றன.
- தலை கீழாக சிலுவையில் அறையப்படுதல் என்ற தகவலைத்தான் இயேசு யோ 21:19-ல் கூறினாரா?
- "இன்ன விதம்" என்று 21-ம் அதிகாரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- எனவே "தலை கீழாக சிலுவையில் அறையப்படுதலைத்தான்" யோவான் குறிப்பிடுகிறார்.
- அப்படியென்றால் இயேசுவும் இதைத்தான் குறிப்பிட்டாரா?
- எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம் இது! யோவான் நற்செய்தி புத்தகத்தை தவிர வேறு யாரும் இதை ஏன் குறிப்பிடவில்லை?
எனவே 21-ம் அதிகாரத்தில் பேசப்பட்டவைகள் அனைத்தும் கி.பி 33-ம் ஆண்டில் நடந்தவைகளாக நாம் கருத முடியும்.ஆனால் சீமோன் பேதுரு கொல்லப்பட்ட வருடம்,ஆய்வாளர்களின் கருத்துப்படி,கி.பி 64 அல்லது கி.பி 67.
அப்படியென்றால்,பேதுரு இறந்த பிறகு எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் "இடைச்செருகலாக" ஏன் இச்செய்தி இருக்க கூடாது?யாருக்கு தெரியும்? மற்ற ஆசிரியர்கள் எவருமே குறிப்பிடாத ஒன்றைதானே யோவான் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே பேதுரு இறந்ததை பார்த்து,அந்நிகழ்வை தன்னுடைய எழுத்துக்களில் யோவான் சேர்த்திருக்கிறார்.முன்னரே இயேசு இதைப்பற்றி கூறியதாக பொய் சொல்லியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.ஏனென்றால் பேதுரு இறந்த பிறகுதானே யோவான் எழுதுகிறார்.

அதாவது இயேசு இறந்து ஏறத்தாழ 30 வருடங்கள் கழித்து சீமோன் பேதுரு மரணமடைகிறான்.இயேசு இறந்து 70 வருடங்கள் கழித்து "யோவான் நற்செய்தி" புத்தகம் எழுதப்படுகிறது.
- சீமோன் பேதுரு ஒரு முக்கியமான சீடன்.
- அவனுடைய மரணத்தைப்பற்றி இயேசு முன்னறிவிக்கிறார்.
- ஆனால் முதல் மூன்று ஆசிரியர்களுக்கும் [மாற்கு,மத்தேயு,லூக்கா போன்றோர்]எப்படி இத்தகவல் தெரியாமல் போனது?
- அவர்கள் இத்தகவலை மறைத்தனரா? அல்லது தெரிய வில்லையா?
- யோவானுக்கு[இயேசுவுக்கு அன்பான சீடன் என்று நம்பப்படுகிறவன்]மட்டும் எப்படி தெரிந்தது?
- சீமோன் பேதுருவின் மரணத்திற்கு பிறகே இப்புத்தகம் எழுதப்படுகிறது.எனவே,நடந்த ஒரு நிகழ்வை,நடக்க போகும் ஒரு நிகழ்வாக ஏன் எழுதிருக்கக்கூடாது?
இயேசுவின் வாழ்வில் நடந்தவைகளைத்தானே நற்செய்தி புத்தகங்கள் குறிப்பிடுகின்றன.அப்படியிருக்க,இந்த முக்கியமான செய்தி மட்டும் எப்படி மற்ற மூவருக்கும் தெரியாமல் போனது?
முடிவு:
புதிய ஏற்பாடு என்பது "ஒரு புனையப்பட்ட கதை தொகுப்பு" போன்று தோன்றுகிறது.இயேசுவை "கிறிஸ்து" என்றும்,தெய்வீகத்தன்மை கொண்டவர் என்றும் நிரூபிப்பதற்காக எழுதப்பட்டவைகள்தான் "புதிய ஏற்பாடு".
ஆனால் நாமோ இன்று ஒயேசுவை கடவுளாக வழிபடுகிறோம்.இதை "மெய்யான கடவுளாம்,ஆபிரகாமின் கடவுள்" எப்படி பார்ப்பார்?
ஆபிரகாமின் கடவுள் மட்டுமே கடவுள்.அவரைத்தவிர வேறு கடவுள் இல்லை.எப்படி இதை அறுதியிட்டு கூற முடியும்?
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை[ஏசா 45:5]
கர்த்தராகிய "ஆபிரகாமின் கடவுளை அனைவரும் பயபக்தியுடன் பணிவோமாக.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1Fl85PlAqpOC9dCrH-RJiUlgMBPdQ38oV/view?usp=sharing
https://drive.google.com/file/d/1Fl85PlAqpOC9dCrH-RJiUlgMBPdQ38oV/view?usp=sharing
No comments:
Post a Comment