Monday, June 3, 2019

தமிழ் பைபிளின் மாபெரும் மொழிபெயர்ப்பு தவறு

 தமிழ் பைபிளின் மாபெரும் மொழிபெயர்ப்பு தவறு 


பைபிள் என்பது கடவுள் அருளிய வார்த்தைகள் அடங்கிய புத்தகம்.மிகவும் போற்றப்படத்தக்கது என்று நாம் நினைக்கிறோம்.அது உண்மைதான்.ஆனால் பைபிளை பல மொழிகளில் மொழிபெயர்க்கும் பொழுது தவறுகள் ஏற்பட்டு விடுகின்றன.

மொழிபெயர்ப்பு தவறுகள் இருக்கின்றன என்று நீங்கள் எந்த தீவிர கிறித்தவர்களிடமாவது கூறினால் அவர்கள் மிக கடும் கோபம் கொள்வார்கள்.அக்கருத்து உண்மைதானா என்று கூட ஆராய்வதற்கு மனதில் இடம் கொடுக்காமல் எதிர்ப்பார்கள்.

சரி,மொழிபெயர்ப்பு தவறு இருப்பதாலேயே பைபிள் தவறு என்று ஆகிவிடுமா?ஆகாது என்பது நமக்கு தெரியும்.எந்த மொழியில் பைபிள் எழுதப்பட்டது அம்மொழியில் நாம் பைபிளை படித்து பார்க்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு தவறுகள் சிறு பிழைகளை ஏற்படுத்தினால் நாம் சகித்து கொள்ளலாம்.ஆனால் கடவுளையே மாற்றினால் எப்படி சகித்து கொள்வது? உண்மையான கடவுளை வழிபடுவதிலிருந்து நம்மை திசை திருப்புவதற்கு இவ்வகையான மொழிபெயர்ப்பு தவறுகள் உதவியிருக்கின்றன.

அவ்வாறான ஒரு மிகப்பெரும் தவறை நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.நீதி:30:19,20 வசனங்களை படிப்போம்.
அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.
அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். 
இவ்வசனங்களின் பொருள்:

ஆகாயத்தில் செல்லும் ஒரு கழுகு தடத்தை விட்டு செல்லுமா?அதாவது நீல நிற வானத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.ஒரு கழுகு பறந்து சென்று கொண்டிருக்கிறது.அது சென்று கொன்றிக்கும் பாதையை உங்களால் ஒரு வரைபடமாக கூறமுடியுமா?ஜெட் விமானங்கள் பறந்து செல்வதை பார்த்திருப்பீர்கள்.ஒரு வெள்ளை நிறக்கோடு அவ்விமானம் செல்லும் இடமெல்லாம் இருப்பதை கண்டிருப்பீர்கள்.அது போல் கழுகு விட்டு செல்லுமா?இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.அதாவது அந்த கழுகு எங்கு சென்றது,எப்படி சென்றது என்பது நமக்கு தெரியாது.

பாறையின் மேல் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்திருக்கிறீர்களா?அந்த பாம்பு தான் சென்றதற்கான தடத்தை அந்த பாறையின் மேல் விட்டு செல்லுமா?செல்லாது என்பதும் நமக்கு தெரியும்.ஏனென்றால் பாறையின் மீது மண் இருக்காது.




நடுக்கடலில் செல்லும் கப்பலும் கூட தான் சென்று கொண்டிருக்கும் தடத்தை விட்டு செல்லாது.

இவைகளை கண்டு, இந்த நீதிமொழிகளை எழுதிய யாக்கேயின் குமாரன் ஆகூர் ஆச்சரியப்படுகிறான்.ஆனால் இதற்க்கு பின்னர் இவன் கூறியதுதான் மிகவும் கவனிக்க வேண்டியது.மேற்கூறிய அந்த மூன்றைப்போல் ஒரு விலைமாதுவும் தான் சென்று வந்த வழிகளை விட்டு செல்ல மாட்டாள்.தான் எங்கும் செல்ல வில்லை என்று பொய் சொல்லுவாள்.கண்டுபிடிக்க நமக்கும் வழி இருக்காது.

யாக்கேயின் குமாரன் ஆகூர் கூறும் கருத்து என்னவென்றால்,விபச்சார பெண் மிகவும் மோசமானவள்.எந்த பொய் வேண்டுமானாலும் கூறுவாள்.அவளை நம்பி செல்லாதே! இதுதான் கருத்து.

இதில் எங்கே தவறு உள்ளது? சரியாகத்தானே மொழிபெயர்த்துள்ளார்கள்.கழுகு,பாம்பு,கப்பல் இம்மூன்றுக்கும் அடுத்து ஒன்றை அவர் குறிப்பிடுகிறார்.அது,"ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே".இங்குதான் தவறு உள்ளது.

என்ன தவறு?:

மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளை நாம் முதலில் பார்த்து விடுவோம்.முதலில் NIV
the way of an eagle in the sky,    the way of a snake on a rock,the way of a ship on the high seas,    and the way of a man with a young woman.
“This is the way of an adulterous woman:    She eats and wipes her mouth     and says, ‘I’ve done nothing wrong.’
தற்போது யூத பைபிள் என்ன கூறுகிறது என்பதை பார்ப்போம்.
the way of an eagle in the sky,    the way of a snake on a rock,    the way of a ship on the open sea,    and the way of a man with a girl.

his is how an unfaithful wife behaves:    she eats, wipes her mouth, and says, “I did nothing wrong.” 

தற்போது KJV பைபிள் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை பாப்போம்.
The way of an eagle in the air; the way of a serpent upon a rock; the way of a ship in the midst of the sea; and the way of a man with a maid.
Such is the way of an adulterous woman; she eateth, and wipeth her mouth, and saith, I have done no wickedness. 
மூன்று வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் மேலே தரப்பட்டுள்ளது.கூர்ந்து கவனியுங்கள்.சிகப்பு கலரில் நான் கட்டியுள்ள வார்த்தை என்னவென்று பாருங்கள்.
  • NIV பைபிள் கூறுகிறது "a young woman- ஓர் இளம் பெண்".
  • யூத பைபிள் கூறுகிறது "a girl - ஓர் இளம் பெண்".
  • KJV பைபிள் கூறுகிறது "a maid - ஓர் இளம் பெண்.
  • தமிழ் பைபிள் கூறுகிறது "கன்னிகை".

"ஓர் இளம் பெண்" என்பதை மூன்று மொழிபெயர்ப்புகளும் ஒத்து கொள்கின்றன."ஓர் இளம் பெண்" என்பவள் மனமானவளாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.


ஆனால் ஒரு "கன்னி" அல்லது "கன்னிகை" என்பவள் உறுதியாக மணமாகாதவளாக மட்டுமே இருக்க முடியும்.ஆங்கில மொழியானது மணமாகாத பெண்ணை "virgin" என்று கூறுகிறது.தமிழ் "கன்னி" என்று கூறுகிறது.ஹீப்ரு மொழி "Betulah" என்று கூறுகிறது.

அப்படியென்றால் தமிழ் பைபிள் கூறுவது போல் "கன்னிகை" என்ற வார்த்தைக்கு பதிலாக NIV,KJV மற்றும் யூத பைபிள்களில் அதற்குரிய வார்த்தைகளாக "virgin","Betulah" என்றுதானே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.அப்படி இல்லையே.என்றால் எது தவறு? தமிழ்தான்!!!

காரணம்:

ஹீப்ரு மொழியில் நீதி:30:19 வசனமானது "Almah" என்ற வார்த்தையை கொண்டுள்ளது.இதனுடைய பொருள் "ஓர் இளம் பெண்" என்பதாகும்.ஏன் இது முக்கியமாக படுகிறது?
  • ஒரு இளம் பெண், அதாவது "Almah",  மனமானவளாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.நாம் கண்டுபிடிக்க முடியாது.
  • ஆனால் ஒரு "கன்னிகை" கண்டிப்பாக மணமுடிக்காதவளாகத்தான் இருக்க வேண்டும்.
இந்த நீதிமொழியை எழுதியவர் "ஓர் இளம் பெண்ணத்தைத்தான்" குறிப்பிடுகிறார்.ஏன்?

ஏனென்றால் ஒரு கன்னிகை என்பவள் விபச்சாரியாக இருக்க முடியாது.விபச்சாரியாக அவள் இருந்தால் அவள் கன்னிகை இல்லை.ஒரு கன்னிகை ஒரு புருசனுடன் இணையும் பொழுது அவள் தடத்தை விட்டு செல்ல வேண்டும்.முதன் முதலாக இருவரும் இணையும் பொழுது அவளுக்கு "கன்னி சவ்வு" கிழிந்து இரத்தம் வெளிப்படும்.

அவள் கன்னி என்பதற்கு அடையாளம் இதுதான்.உபா 22:13-20 வசனங்கள் இதை தெளிவாக கூறுகின்றன.

ஒரு "விலை மாது" அல்லது "உண்மையில்லாத மனைவி" தவறு செய்து விட்டு,தன் தவறுக்கான அடையாளத்தை துடைத்து மறைத்து விடுவாள்.ஏனென்றால் அவளுக்கு இரத்தம் வராது.மிக சாதாரணமாக "நான் ஒரு தவறும் செய்ய வில்லையே" என்பாள்.இதைத்தான் யாக்கேயின் மகன் ஆகூர் விவரிக்கிறான்.

எனவே தமிழ் பைபிள் கூறுவது போல் "கன்னிகை" என்று எடுத்து கொண்டால் மிகப்பெரும் தவறு ஆகும்.மேலும் மற்ற பைபிள்கள் அனைத்தும் சரியாக "ஓர் இளம் பெண்" என்று மொழி பெயர்த்திருக்கும் வேளையில் தமிழ் பைபிள் தவறாக "கன்னிகை" என்று மொழிபெயர்த்திருக்கிறது.

இது ஏன் கவனிக்கப்பட வேண்டும்?:

எழுத்துக்களில் பிழை என்றால் திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு.பொருளில் தவறு ஏற்பட்டால் பெரும் பிழை ஆகி விடும்.இங்கே பொருள் பிழைதான் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நீதி மொழியை எழுதியவர் ஆச்சரியத்திற்குரிய மூன்று செய்திகளை தருகிறார்.நமக்கும் அது ஆச்சரியமாக உள்ளது.நாம் இச்செய்திகளை கவனித்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.

கன்னிப்பெண் என்பவள் மிகவும் முக்கியமானவள்."பெண்" என்பவள் வேறு "கன்னிப்பெண்" என்பவள் வேறு.

தமிழ் மொழிபெயர்ப்பு பெரும் பொருட்பிழையை ஏற்படுத்தி விட்டது.இம்மாதிரியான பிழைகள் நிறைய உள்ளன.கடவுள் என்பவர் ஒருவரே! அவர் இஸ்ரயேலின் கடவுள் ஆவார்.இஸ்ரேல் மக்கள் "ஒரு கடவுள்" வழிபாட்டை கொண்டிருந்தனர்.ஏறத்தாழ மற்ற அனைவரும் "பல கடவுள்" வழிபாட்டைக் கொண்டிருந்தனர்.

பல கடவுள் வழிபாட்டை கொண்டிருந்த கிரேக்க,ரோம அரசுகள் இஸ்ரயேல் மக்களை அடிமை படுத்திய பொழுது அவர்களின் தாக்கம் ஏற்பட்டது.ஆனாலும் இஸ்ரயேல் மக்கள் உறுதியாக "ஒரு கடவுள்" வழிபாட்டை பின்பற்றிய பொழுது,அதை மாற்றுவதற்கு கடைபிடித்த தந்திரம்தான் "புதிய ஏற்பாடு".

மொழிபெயர்ப்பு தவறுகள் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்தான் உள்ளது. ஹீப்ரு மொழியில் இருந்து பழைய ஏற்பாட்டை பொழுது "இயேசுவை" வழிபட  செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல "வேண்டுமென்றே செய்ய பட்ட மொழிபெயர்ப்பு தவறுகள்" உள்ளன.

முடிவு:

இது போல் நிறைய மொழிபெயர்ப்பு பிழைகள் தமிழ் பைபிளில் உள்ளது.யூத பைபிளான பழைய ஏற்பாடு மட்டுமே கடவுளுடைய வார்த்தைகளை கொண்டுள்ளது.புதிய ஏற்பாடு கிரேக்க மற்றும் ரோம கதைகளுடைய கலவைகளே.அவைகள் இஸ்ரயேலின் கடவுளிடமிருந்து நம்மை பிரிப்பதற்காக எழுதப்பட்டவைகள்.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

No comments:

Post a Comment

My Posts