Saturday, June 1, 2019

புதிய ஏற்பாட்டு குழப்பங்கள்

புதிய ஏற்பாட்டு குழப்பங்கள் 


புதிய ஏற்பாடு என்பது ஒரு ஏமாற்று வேலை,கிட்டத்தட்ட. கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய புத்தகமான பழைய ஏற்பாட்டுக்குள் இந்த புதிய ஏற்பாடு எப்படி வந்தது?புதிய ஏற்பாடு உண்மையில் கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகம்தான் என்றால் கீழ்க்கண்ட கேள்வி பதிலை கவனியுங்கள்.ரபி Tovia Singer என்பவருடைய "OUTREACH JUDAISM " என்ற பக்கத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

கேள்வி:ஏறத்தாழ 6000 கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகள் இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.139,000 வார்த்தைகள் மட்டுமே கொண்ட கிரேக்க புதிய ஏற்பாட்டில் ஏறத்தாழ 400,000 முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறி உள்ளீர்கள்.ஆனால்,Prof. Bruce Metzger என்பவருடைய கூற்று படி தற்போதுள்ள புதிய ஏற்பாடு உண்மையான புதிய ஏற்பாட்டு பிரதியுடன் 95 சதவீதம் ஒத்துப்போவதாக கூறியுள்ளார்.உங்கள் பதில்?

பதில்:புதிய ஏற்பாட்டின் வார்த்தைகள் பற்றி ஆராய்வதில் இந்த 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்தவர்களுள் ஒருவர் Prof.Bruce Metzger. அவருடைய படைப்புகளில் முழுவதையும் நீங்கள் படிக்காவிடில் அவருடைய கருத்துக்களை உங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

தற்போது வரை சுமார் 6000 கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகளை நாம் கண்டு பிடித்திருக்கிறோம்.அவற்றுக்கிடையே எவ்வளவு தவறுகள் உள்ளன என்று நமக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை.இருப்பினும்,அது ஏறக்குறைய 400,000 என்ற அளவில் உள்ளது.அதாவது,புதிய ஏற்பாட்டில் எவ்வளவு எழுத்துக்கள் மொத்தமாக உள்ளனவோ,அதை விடவும் அதிகமாக.

இந்த தவறுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான தவறுகள் எழுதியவர்களுடைய தவறுகளாகத்தான் உள்ளன.ஆனாலும் இந்த தவறுகளை சரி செய்ய முடியுமா?உண்மையான,முதன் முதலாக எழுதப்பட்ட பிரதி இருந்தால் நம்மால் சரி செய்ய இயலும்.ஆனால் இன்று வரை உண்மையான பிரதி கண்டு பிடிக்கபடவே இல்லை!!

தவறுகளில் பெரும்பானவைகள் ஆரம்பத்தில் எழுதியவர்களால் ஏற்பட்டிருக்கிறது.பின்னர் எழுதியவர்கள் நன்றாக எழுதி உள்ளனர்.நாம் கவனிக்க வேண்டியது,ஏறத்தாழ 90 சதவீதம் தவறுகள் சிறிய தவறுகள்தான்.அதாவது,360,000 தவறுகள் கண்டுகொள்ளப் படவேண்டியவைகள் அல்ல.ஆனால்,40,000 தவறுகள் அப்படி அல்ல.அவைகள் தீவிரமான தவறுகள்.இதையும் பாதியாக குறைத்தோமானால்,20,000 தவறுகள்.20,000 தவறுகள் என்பது சிறிய செய்தி அல்ல.

புதிய ஏற்பாட்டில் 139,000 வார்த்தைகள் மட்டுமே உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.புதிய ஏற்பாடு என்பது கடவுளால் அருளப்பட்டது என்றால் இவ்வாறு இருக்க அவர் விரும்பியிருப்பாரா? புதிய ஏற்பாடு உண்மையில் கடவுள் அருளியது என்றால்,ஏன் அவர் அதை பாதுகாக்க வில்லை?

எழுத்துக்களை எப்படி கடவுள்  பாதுகாப்பார்? என்று நீங்கள் கேட்கலாம்.புதிய ஏற்பாட்டை விட பெரிதும்,பழமையானதுமாகிய பழைய ஏற்பாட்டை கடவுள் அப்படி பாதுகாத்திருக்கிறாரே?முழு பாளை ஏற்பாடும் அப்படியே உள்ளது(Torah என்று அழைக்கப்படக்கூடிய ஐந்து ஆகமங்கள்)அனைத்து 304,805 எழுத்துக்களும் அப்படியே பாதுகாக்க பட்டுள்ளது.

சரி,5-லிருந்து 10 சதவீதம் வரையிலான புதிய ஏற்பாட்டு தவறுகள் எந்த அளவிற்கு தவறானவைகள்? சில தவறுகள் மிக தீவிரமானவைகள்.சிலவற்றை பார்ப்போம்.
  • திரித்துவக்கொள்கையானது  1 யோவான்:5:7-8 வசனங்களில் தரப்பட்டுள்ளதா? இதற்க்கு பதில் எந்த பிரதியை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.[காரணம்,பல பிரதிகளில் இந்த வசனம் கிடையாது]
  • மாற்கு எழுதிய நற்செய்தி புத்தகத்தில்,இயேசு உயிரோடு எழும்பிய பின்னர் அவருடைய சீடர்கள் யாருக்காவது காட்சியளித்தாரா? இதற்கும் பதில்,  எந்த பிரதியை நீங்கள்  என்பதே!ஆரம்ப கால பிரதிகளில் "காட்சியளித்தல்" நிகழ்வு என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.மாற்கு எழுதிய நற்செய்தி புத்தகத்தை பிரதி எடுத்த பிற்கால எழுத்தர்கள்,இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் தன்னுடைய சீடர்கள் எவருக்கும் காணப்படவில்லை என்பதை குறித்து கவலை அடைந்திருக்கலாம்.அவர்களால் பிற்சேர்க்கை செய்யப்பட்டதுதான் கடைசி 12 வசனங்கள்.[மாற்கு 16:9-20]
  • கெத்சமெனே தோட்டத்தில் வியாவை துளிகள் இரத்தமாக விழும் அளவிற்கு இயேசு வேதனை கொண்டிருந்தாரா?இதற்கும் பதில்,எந்த பிரதியை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.பிற்கால எழுத்தர்கள்,இயேசுவின் பாடுகளை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதற்காக சேர்த்திருக்கலாம்.[லூக் 22:43-44]
  • இயேசு ஒரு விபசார பெண்ணைக் கண்டு "உங்களில் பாவமில்லாதவன் இவள் மீது முதலாவது கல்லெறியட்டும்" என்று கூறினாரா? மேலும்  சாட்டினவர்கள் அனைவரும் சென்ற பின்னர்,"நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கிறதில்லை,இனி பாவம் செய்யாதே, போ" என்று கூறினாரா?இதற்க்கு பதில்,யோவான் எழுதிய புத்தகத்தின் எந்த பிரதியை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.ஆரம்ப கால பிரதிகளில் இது கிடையாது.பின்னர் இது சேர்க்க பட்டது.
  • இயேசு உயிரோடு எழுந்த பின்னர்,தன மீது விசுவாசம் கொள்ளும் அனைவரும் விஷம் அருந்தினாலும்,பாம்புகள் தீண்டினாலும் சாக மாட்டார்கள் என்று கூறினாரா?இதுவும்,மாற்கு எழுதிய புத்தகத்தின் எந்த பிரதியை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.
  • 1கொரிந்தியர் 14:34-35 வசனங்களில்,"பெண்கள் சபைகளில் அமைதியுடனும் கணவனுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் "என்று கூறப்பட்டுள்ளது.ஆரம்ப கால பிரதிகளில் இந்த வசனம் கிடையாது.பெண்களை அடக்கி அவர்களுக்குரிய இடத்தில் அவர்களை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிற்கால எழுத்தார்களால் இது சேர்க்க பட்டது.
நான் கூறியதை எந்த கிறித்துவ ஆராய்ச்சியாளரும் நம்ப போவது இல்லை.ஆராய்ச்சியாளர்களை கொண்டு உருவாக்கப்பட்ட எந்த பைபிளிலும் நீங்கள் இப்பிழைகளை காண இயலும்.முக்கியமாக Prof. Bruce Metzger அவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பைபிள்களில்.

மிக சிறிய அளவு பிழைகளை மட்டுமே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.தவறுகளின் அளவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.நேரம் கிடைத்தால்,நூற்றுக்கணக்கான தவறுகளை விளக்க காத்திருக்கிறேன்.தவறுகளையும் பொய்களையும் உருவாக்குபவரா கடவுள்?

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
  கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும்,இருதயத்தைச்             சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும்,  கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.[சங் 19:7-8]

மொழிபெயர்த்தவர்:இரா.இருதயராஜ்.
Ref :
https://outreachjudaism.org/400000-variants-in-the-nt-greek-manuscript/

இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1NowNoNa8jQ7LEk7jT3DjhF4_h0xrwfW2/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts