Saturday, September 28, 2019

பதில் கூறமுடியாத கேள்விகள்

பதில் கூறமுடியாத கேள்விகள் 


கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை படித்துப் பார்த்து சிந்தியுங்கள்.நீங்கள் அக்கேள்விகளுக்கு பதில் கூற முற்படுவீர்களேயானால் மேலும் மேலும் கேள்விகளுக்கே உங்களை அது இட்டுச்செல்லும் அன்றி பதில் தராது.


  • தாயின் கருப்பையினுள் ஓர் உயிரணு நுழைந்தவுடன் அத்தாயின் கருமுட்டைக்குள்தான் நுழைய வேண்டும் என தந்தையின் உயிரணுவுக்கு கூறியது யார்?
  • அடுத்தடுத்து இந்நின்ன பாகங்கள்தான் வளர வேண்டும் என தீர்மானித்தது யார்?
  • மாதவிடாய் தானாய் நின்று விடுகிறதே அது எப்படி?
  • இதற்கெல்லாம் மரபணுக்கள்தான் காரணம் என்றால்,மரபணுக்கள் வந்தது எப்படி?
  • இயற்கையாகவே இது நடக்கிறது என்றால் வேறுவிதமாக நடக்க வேண்டியதுதானே? ஓர் உயிரை தாங்கும் விதமாக செயல்கள் இருப்பது எப்படி?
  • தந்தையின் X குரோம்சோமுடன் சேர வேண்டிய தாயின் குரோம்சோமை(X அல்லது Y) தீர்மானித்தது யார்?
  • ஒரு பெண்ணுக்கு தொப்புள்கொடி என்று இருக்க வேண்டிய அவசியம் என்ன?
  • வயிற்றினுள் வளரும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக மட்டும்தான் ஊட்டம் கொடுக்கப்பட வேண்டுமா? வேறு வழி இல்லையா?இதை தீர்மானித்தது யார்?
  • ஓரளவுக்கு வளர்ந்த குழந்தை மூச்சு விடுவது எப்படி?
  • அடுத்து ஒரு ஆண் மகனையோ அல்லது ஒரு பெண் மகளையோ பெற்று அவர்கள் மூலமாக அடுத்த சந்ததி என்று நடக்கின்ற அளவுக்கு குழந்தை தாயின் வயிற்றினுள் வளர தீர்மானித்தது யார்?
  • முழுக்குழந்தையாக வளர்ந்தவுடன் பெரும் வலியுடன் தாயானவள் அக்குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என தீர்மானித்தது யார்?
  • பத்து மாதங்கள் வயிற்றுக்குள் சுவாசித்த குழந்தை தாயின் வயிற்றை விட்டு வெளியே வந்தவுடன் காற்றை சுவாசிக்க வேண்டும் என அக்குழந்தைக்கு கூறியது யார்?
  • பத்து மாதங்கள் கழித்து தாயின் வயிற்றுக்குள் இருந்து பிறப்புறுப்பின் வழியாக வெளியே வர வேண்டும் என அக்குழந்தைக்கு எப்படி தெரியும்?
  • வெளியே வந்த குழந்தை தன்னுடைய தாயை மிகச்சரியாக அடையாளம் காண செய்தது எது?
  • தன் தாயானவள் தன்னை சுமந்தவள் என்ற காரணத்தினால் தாயை குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது என்று கொண்டால்,தந்தையை இனம் கண்டது எப்படி?[தன குழந்தையை தூக்கிய தந்தைகளுக்கு இது புரியும்]
  • இவை அனைத்திற்கும் கரணம் மரபணுக்கள்தான்[DNA] என்று நீங்கள் கூறினால் இப்படித்தான் செயல்படவேண்டும் என அம்மரபணுக்களுக்கு கூறியது யார்?

ஒரு குழந்தை உருவாகுதலிலிருந்து பிறக்கும் வரை நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மாபெரும் அதிசயம் என்றுதான் கூற வேண்டியுள்ளது.இல்லை,இது அறிவியல்,அதிசயம் இல்லை என்போர்கள் அறிவியலை சரியாக படிக்க வில்லை என்றே கூறுவேன்.


இப்படித்தான் நடக்க வேண்டும் என தீர்மானித்தவர் எவரோ அவரிடமே இதற்கான விடை உள்ளது என நான் நினைக்கிறேன்.அவர் யார்? அவர் கர்த்தர்.கர்த்தர் என்பவர் யார்,இயேசுவா? இல்லை,இல்லவே இல்லை.

கர்த்தர் என்பவர் י ה וָ ה [வலமிருந்து இடமாக படிக்கவும்].அவர் ஆபிரகாம, ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் கடவுள்.இவரே கடவுள்.எல்லாவற்றிற்கும் மேலானவர்.ஈடு இணை கற்பிக்கப்பட முடியாதவர்.

எல்லாம் அறிவியலே என்று அலட்டுபவர்களுக்கு இவர் சில கேள்விகளை வைக்கிறார்.
அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?

    இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
    நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

    அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?[யோபு 38:2-6]

மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகள் சிறிதளவு மட்டுமே.இக்கேள்விகளை ஏன் அவர் கேட்டார்? ஏனென்றால் நம்மைப் போல் ஒருவன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல் பேசியிருக்கின்றார் .ஆனால் அவன் கடவுளின் மீது மிகுந்த பக்தியுடைவனாயிருந்த காரணத்தினால் அவனை கடவுள் தண்டியாமால் மேற்கூறிய கேள்விகளை கேட்கிறார்.அவன் யோபு.

இக்கேள்விகளில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?இக்கேவிகளை கேட்டவருக்கே இதன் பதில்களை தெரியும்.இவைகளில் எதுவும் தெரியாத நாம் தெரிந்தது போன்று செயல்படக்கூடாது.

இவ்வாறே குழந்தை பெறுதலும் உள்ளது.கர்த்தர் என்று அழைக்கப்படுகிற ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளே கடவுள்.அவரே அனைத்தையும் அறிந்தவர்,தீர்மானித்தவர்.அவரே பணிந்து கொள்ளப் படத்தக்கவர்.இயேசு அல்ல.இயேசு இவரையே பணிந்து கொண்டார்.
இரா.இருதயராஜ்.

இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

Friday, September 27, 2019

பழைய ஏற்பாட்டு "கர்த்தருக்கும்" புதிய ஏற்பாட்டுக்கு "கர்த்தருக்கும்" இடையே உள்ள வித்தியாசம்

பழைய ஏற்பாட்டு "கர்த்தருக்கும்" புதிய ஏற்பாட்டுக்கு "கர்த்தருக்கும்" இடையே உள்ள வித்தியாசம் 

[இக்கட்டுரையை பொறுமையுடன் படித்துப் பார்க்கவும்.]

கர்த்தர் என்ற வார்த்தை தமிழுக்குரிய தனியான அடையாளம்.ஆனால் இதன் பொருள் என்ன என்று கேட்டால் 90 சதவீதம் கிறித்தவர்களுக்கும் மேல்  தெரியாது என்றுதான் கூறுவார்கள்.எதிர்ப்பாளர்கள்(ப்ரோட்டஸ்டண்ட்) பிரிவைச் சார்ந்த தமிழ் கிறித்தவர்கள் கையில் இன்று வைத்திருக்கும் பைபிள் ஒரு உண்மையான தமிழ் மொழிபெயர்ப்பே அல்ல.தமிழ் திருமறை முழுவதும் சமஸ்கிருத வார்த்தைகள் நிறைந்து காணப் படுகின்றன.

சிலை வழிபாட்டைக் கொண்டுள்ள இந்துக்களுக்காக உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மொழி அவ்வழிபாட்டை அருவருக்கும் கிறித்தவத்திற்குள் பரவிக் கிடக்கிறது.ஏறத்தாழ 200 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழ் திருமறைகளில் "கர்த்தர்" என்ற வார்த்தை கிடையாது.

இந்த "கர்த்தர்" என்ற வார்த்தை பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இரண்டிலும் காணப்படுகிறது.அது மிகப்பெரும் தவறுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.அது என்ன தவறு?
  • கடவுள் ஒருவரே என்ற அடிப்படை கருத்துக்கு எதிராக உள்ளது.
  • இயேசுவை "கடவுள்" என்று தவறுதலாக வழிபடுவதற்கு ஆதரவாக உள்ளது.
  • திரித்துவ கொள்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
  • மேற்கூறிய மூன்றுக்கும் ஆதரவாகவே தமிழ் திருமறையானது திருத்தப் பட்டது.
  • ஆரம்ப கால தமிழ் திருமுறைகளில் இல்லாத "கர்த்தர்" என்ற வார்த்தை,திரித்துவக் கொள்கைக்கு வலுசேர்க்கும் விதமாக இணைக்கப்பட்டது.
எவ்வளவு கவனமாக குற்றம் செய்பவன் இருந்தாலும் தன்னை அறியாமலே தடயங்களை விட்டு செல்வான் என்பது கருத்து.அது போன்று இயேசுவை கடவுளாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களும் தங்களை அறியாமலேயே எண்ணற்ற தவறுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

இயேசு இறந்தவுடன் அவருடைய சீடர்கள் அவரைக் கடவுள் என்று கூறியதற்கு எந்த சான்றுகளும் திருமறையில் இல்லை.ஏறத்தாழ 100 ஆண்டுகள் கழித்து அவர் பற்றிய கதைகள் கிரேக்க மக்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் பரவிய பொழுது ஏற்பட்ட மாற்றம்தான் "இயேசு கடவுள்" என்ற கருத்து.

குறிப்பாக கிரேக்கர்கள் எதையும் பற்பல கேள்விகளைக் கொண்டு ஆராய்வதில் வல்லவர்கள்.அவர்கள் இயற்கையிலேயே அப்படிப்பட்ட ஆற்றலைக் கொண்டிருந்தனர். 


இதனை நாம் அவர்களுடைய தத்துவ அறிஞர்களை படிப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.சாக்ரட்டீஸ்,  பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பித்தாகோரஸ் போன்ற அறிவிற்சிறந்தவர்கள் கிரேக்கர்கள் என்பதை நினைவில் கொண்டு வாருங்கள்.

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில் ஏன் இவ்வளவு தீமைகள்,பாடுகள்,பட்டினி,பஞ்சம்,சாவு? என்பது போன்ற கேள்விகள் கிரேக்க தத்துவ அறிஞர்களை குடைந்து கொண்டிருந்தது.திருமறையைத் தவிர்த்து தங்கள் அறிவின் மூலம் இதற்கான பதிலை தேடிக்கொண்டிருந்தனர்.

யூத இனமல்லாத இந்த கிரேக்க இனத்தவர்களிடையே இயேசு பற்றிய கதைகள் பவுல் மற்றும் மற்றவர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றபோது அதற்க்கு புது வடிவம் கிடைத்தது.படிப்படியாக புதுப்புது தத்துவங்கள் மூலம் இயேசு கடவுளாக்கப்பட்டு விட்டார்.

கி.பி.350-க்கு பிறகே திரித்துவம் பற்றிய கேள்விகள் எழுகின்றன.அப்போதைய ரோம மன்னர்கள் மூலம் இதற்கான தீர்வு எட்டப்படுகிறது.எனவே திரித்துவம் என்பது ரோம மன்னர்களால் முடிவு செய்யப்பட்டதே அன்றி கடவுளால் அல்ல.

தமிழில் கர்த்தர் என்ற வார்த்தை:

தமிழில் திருமறை முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டபோது இவ்வார்த்தை இல்லை.பின்னர்தான் சேர்க்கப்பட்டது.இவ்வார்த்தையின் பொருள் என்ன என்று எனக்கு தெரிய வில்லை.ஆனால் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இவ்வார்த்தை எவ்வாறு பயன்படுகிறது என்பதை நம்மால் காண இயலும்.

திருமறை ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.எல்லாம் வல்ல இறைவனாம் இஸ்ரயேலின் இறைவன் தன்னுடைய வார்த்தைகளை தன்னுடைய அடியார்கள் மூலமாக நமக்கு தந்திருக்கிறார்.

வேறு எந்த புனித நூல்களிலும் பார்க்க முடியாத ஒன்று திருமறையில் உள்ளது.இங்கே கடவுள் தன்னுடைய பெயரை அறிவிக்கிறார்.தான் இவ்வாறு அழைக்கப்படுவதாக அவரே கூறுகிறார்.

ஏறத்தாழ அவருடைய வார்த்தைகள் அனைத்திலும் அவருடைய பெயர் இருக்கும். மிகவும் அதிகாரத்தோடு இருக்கும். மோசேக்கு தன்னுடைய பெயரை யாத் 3:15-ல் அறிவித்திருக்கிறார். பழைய ஏற்பாடு முழுவது இப்பெயர் ஏறத்தாழ 7000 முறை வருகிறது.ஆதிகாலத்தில் இஸ்ரேலிய மக்கள் கனத்திற்குரிய இப்பெயரை உச்சரித்தனர்.

ஆனால் அவர் தன்னுடைய பெயரை மிக கவனத்துடன் கையாளும் படி அறிவுறுத்தி இருக்கிறார்.தேவை இல்லாமல் அவருடைய பெயரை பயன்படுத்துதல் கூடாது.
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.[யாத் 20:7]
இஸ்ரயேல்  மக்கள் அடிக்கடி அவர் பெயரை பயன் படுத்தினர்.இதன் காரணமாக கணத்திற்குரிய அப்பெயர் மிகச்சாதாரணமாக பயன்படும் பெயராக மாறியது.ஆசாரியர்களுக்கும்,இனத்தின் மூப்பர்களுக்கும் இச்செயல் நல்லதாக தோன்றவில்லை.



எனவே கடவுளின் கனத்திற்குரிய பெயரை அனைவரும் அடிக்கடி உச்சரிப்பதை தடை செய்தனர்.ஆசாரியர்கள் மட்டும் விதிவிலக்காக்கப்பட்டனர்.தோல் சுருள்களில் எழுதப்பட்ட கடவுளின் வார்த்தைகளை படிக்கும் பொழுது கூட மேலும் அவர் பெயர் தவறாக உச்சரிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு புதிய முறையைக் கொண்டு வந்தனர்.

சுருள்களில் எழுதப்பட்டுள்ள கடவுளின் வார்த்தைகளில்,அவருடைய பெயர் வரும் இடங்களில் சிறு மாற்றம் செய்ய விரும்பினர்.கனத்திற்குரிய அப்பெயர் வரும் இடங்களிலெல்லாம் "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தையில் உள்ள ஓரிரு எழுத்துக்களைக் கொண்டு நிரப்பி விட்டனர்.இந்த "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தையின் பொருள் "ஆண்டவன்" என்பதாகும்.இச்செயலுக்கு காரணம் கடவுளின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.

ஆனால் இதுவே நாளடைவில் வேறு குழப்பத்திற்கு இட்டுச் சென்று விட்டது.காலப்போக்கில் சில நூறாண்டுகள் கழிந்த பிறகு இஸ்ரேல் மக்களுக்கு கடவுளின் பெயரை எப்படி உச்சரிப்பது என்பது மறந்து விட்டது.புதிய சந்ததிகளுக்கு கடவுளின் பெயரை எப்படி உச்சரிப்பது என்பது தெரிய வில்லை.

இப்பொழுது இஸ்ரேல் மக்களின் கையில் இருக்கும் தங்கள் திருமறையில் கடவுளின் பெயருக்கு பதிலாக "Adonai" என்ற வார்த்தைதான் இருக்கிறது.இந்த செயலைப்பற்றி இஸ்ரயேல் மக்களுக்கு தெரிகிறது,ஆனால் எப்படி அவர் பெயரை உச்சரிப்பது என்று தெரிய வில்லை.இப்படியே காலம் கடந்து விட்டது.திருமறை மற்ற இனத்தாருக்கும் பரவிவிட்டது.

திருமறையானது மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட பொது "Adonai" என்ற ஹீப்ரு வார்த்தைக்குரிய பொருளை தரும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.குறிப்பாக கிரேக்க மொழியில் "kurios"(Greek: κύριος) பயன்படுத்தப்பட்டது.ஆங்கிலத்தில் "Lord" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும்.

என்ன நடந்தது என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.கடவுளின் பெயருக்குரிய கனத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட ஒரு செயல் அவருடைய பெயரையே மறக்கும் படி செய்து விட்டது.நாம் பழைய ஏற்பாட்டை மட்டும் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பதை மறவாதீர்கள்.

இப்பொழுது தமிழுக்கு வருவோம்.பல முறை தமிழ் திருமறையானது மாற்றம் செய்யப்பட்டு விட்டது.இப்பொழுது வழக்கில் இருக்கும் தமிழ் திருமறையை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம்.கடவுளின் பெயர் வரும் இடங்களிலெல்லாம் தமிழ் திருமறை "கர்த்தர்" என்று கொண்டுள்ளது.பழைய ஏற்பாட்டில் இது ஏறத்தாழ 7000 முறைகள் ஆகும்.இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றால்,

  • "கர்த்தர்" என்ற வார்த்தை கடவுளின் பெயர் வரும் இடங்களில் அவரைக்குறிப்பதற்கு பயன்படுகிறது.
  • எனவே "கர்த்தர்" என்ற வார்த்தை கடவுளின் பெயரைக்குறிப்பதற்கு பயன்பட்ட மறைமுக வார்த்தை.
  • எடுத்துக்காட்டாக "உங்களின் தந்தையை நீங்கள் "அப்பா" என்று அழைக்கிறீர்கள்,ஆனால் "அப்பா" என்பது பெயர் அல்ல.அது ஒரு தலைப்பு அவ்வளவுதான்.
  • அது போன்று "கர்த்தர்" என்பது பெயர் அல்ல.அது ஒரு தலைப்பு அல்லது பட்டம்.
  • கடவுளின் பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்க்காக ஹீப்ரு மொழியில் செய்யப்பட ஒரு செயல் தமிழ் வரை வந்திருக்கிறது(தெரிந்தோ அல்லது தெரியாமலோ).
எனவே கடவுளின் பெயர் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரியாத நிலையில் நாமும் "கர்த்தர்" என்ற தலைப்பை ஏற்றுக்கொள்வோம்.ஆனால் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் "கர்த்தர்" என்ற தலைப்புக்கு பின்னால் இருப்பது "எல்லாம் வல்ல இறைவன்" ஆவார்.

எனவே பழைய ஏற்பாட்டில் எங்கெல்லாம் "கர்த்தர்" என்று வாசிக்கிறீர்களோ அங்கெல்லாம் கடவுளின் பெயர் உள்ளது என்பதை மறக்காதீர்கள்.இதில் என்ன முக்கியத்துவம் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்.ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

இப்பொழுது நாட்டின் பிரதமர் மோடி.இந்த வாக்கியத்தை கவனியுங்கள்,"இன்று பிரதமர் வெளிநாடு சென்றார்".இதில் என்ன கவனிக்க வேண்டியுள்ளது?

"பிரதமர்" என்ற பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம்.ஆனால் "மோடி" என்ற பெயர் ஒருவருக்குரியது மட்டுமே ஆகும்.ஐந்து வருடங்கள் களைத்து "பிரதமர்" பட்டம் வேறு யாருக்கு வேண்டுமானாலும் சென்று விடும்.ஆனால் "மோடி" மோடியாக மட்டுமே இருப்பார்.

எனவே "பெயர்" என்பது அடையாளம் ஆகும்.ஒருவர் யார் என்பதை அவர் பெயருக்குள்ள மரியாதை காட்டிக் கொடுத்து விடும்.எனவேதான் "பெயர்" மிக முக்கியம்.அதனால்தான் கடவுள் தன்னுடைய பெயரை வீணாக பயன் படுத்த வேண்டாம் என்கிறார்.ஒருவருடைய பெயரை கூறினால் போதும்,அவரை நாம் தெரிந்து கொள்வோம்.

ஒருவருடைய பெயர் அவர் எவ்வளவு பெரியவர் என்பதை சொல்வதாக உள்ளது.முத்திரைகள் இதனடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.முத்து என்ற ஒருவர் ஓர் சிற்றூரில் வாழ்ந்து வருகிறார்.அவர் ஏழ்மையான சூழலில் இருக்கிறார்.இப்பொழுது அவருடைய மக்களுக்கு திருமணம் நடக்க உள்ளது.அதற்க்கு சிறிது பணம் தேவை.அவ்வூரில் இளங்கோ என்ற செல்வந்தர் ஒருவர் உள்ளார்.அவரிடம் நிறைய பணம் உள்ளது.நம்பி என்ற பெரியவர் ஒருவரும் உள்ளார்.இந்த நம்பி அவ்வூரில் ஒரு மதிப்புக்குரியவர்,ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்,அனைவராலும் மதிக்கப்படுபவர்.இவருக்கென்று தனி மரியாதை உள்ளது.

ஏழையான முத்து செல்வந்தரான இளங்கோவிடம் சென்று பண உதவி கேட்கிறார்.இளங்கோ தயங்குகிறார்,காரணம் முத்துவால் அப்பணத்தை திருப்பி தர இயலுமா என்று சந்தேகிக்கிறார்.எனவே மறுத்து விட்டார்.முத்து நேராக நம்பியிடம் சென்று விவரங்களை கூறுகிறார்.நம்பி இளங்கோவை தொலைபேசியில் அழைத்து முத்துவுக்கான பொறுப்பை தான் எடுத்துக்கொள்வதாகவும் அவருக்கு தயங்காமல் கடன் கொடுக்கும்படிக்கும் கூறுகிறார்.மேலும் ஒரு கடிதம் எழுதி அதில் தன்னுடைய முத்திரையைப் பதித்து முத்துவிடம் கொடுத்து அனுப்புகிறார்.இப்பொழுது இளங்கோ முத்துவை அழைத்து,"நம்பி ஐயாவே கூறிவிட்டார்,அதனால் நான் உங்களுக்கு கடன் தருகிறேன்".


இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன? இக்கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களை பற்றியும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும்  உங்கள் மனதில் கற்பனை செய்து இருப்பீர்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டியது "நம்பி" என்ற பெரியவரைத்தான்.அவருடைய பெயருக்கென்று தனி மரியாதை இருந்தது.திரு.நம்பியின் முத்திரையைப் பார்த்தவுடன் திரு.இளங்கோ அவரை நேரில் பார்க்காமலேயே அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு முத்துவுக்கு கடன் கொடுத்து விட்டார்.காரணம் திரு.நம்பியின் பெயருக்கென்று இருந்த மரியாதை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது,ஒருவருடைய பெயர் அவரைப்பற்றி கூறுகிறது.எல்லாம் வல்ல இறைவனும் தன்னுடைய பெயரை கூறியிருக்கிறார்.அதை பயபக்தியுடன் கையாள வேண்டியது நமது கடமை.பூமியில் மனிதனுடைய பெயருக்கே அவ்வளவு மரியாதையை நாம் கொடுக்கிறோம் என்றால்,அனைத்தையும் படைத்த கடவுளின் பெயருக்கு நாம் எப்படி பயந்து நடுங்க வேண்டும்?இதன் காரணமாகவே ஆதிகால இஸ்ரயேல் மக்கள் கடவுளின் பெயரை உச்சரிக்க தடை செய்தனர்.ஆனால் அது வேறு குழப்பங்களுக்கு இட்டு சென்று விட்டது.

பழங்கால தீர்க்கதரிசிகள் கடவுளின் பெயரில் தீர்க்க தரிசனம் கூறுவதை நாம் படித்திருக்கக்கூடும்.அப்பெயருக்குள்ள கணத்தை ஒருவர் அறிந்திருந்தாரானால் அத்தீர்க்கதரிசியின் சொல்லுக்கு பயந்து நடுங்குவார்கள்.பயந்து நடுங்குவது தீர்க்கதரிசிக்கு அல்ல,கடவுளின் பெயரில் வரும் வார்த்தைகளுக்கு.எடுத்துக்காட்டாக கடவுளின் பெயருக்குள்ள கணத்தை புரிந்து கொள்வதற்காக,
என் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.[லேவி 19:12]
இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,[2இராஜ 21:4]
நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.[2இராஜ 23:27]
யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது[சங் 76:1]. 
தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.[சங் 68:4]
அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.[சங் 66:2]
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.[யோவேல் 2:32] 
பெயர் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் ஒரு சில வசனங்கள்தான் மேற்கண்டவைகள்.போற்றுதற்குரிய இப்பெயரின் உச்சரிப்பைத்தான் இன்று மறந்து நிற்கிறோம்.

தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ஆதிகால சுருள்களில் நம் கடவுளின் பெயர் இருந்தது.அவருடைய பெயரை தவறாக உச்சரிக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அப்பெயருக்கு பதிலாக "ஆண்டவன்" என்ற பொருள் தரும் வார்த்தை சேர்க்கப்பட்டது.ஆங்கிலத்தில் இது "Lord" என்று ஆனது.ஆனால் தமிழில் இது "கர்த்தர்" என்று ஆனது.இவ்வார்த்தைகள் அனைத்தும் ஒருவருடைய பெயருக்குரியது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.அவர் ஈடு இணையில்லாத கடவுள்.

ஒருவருடைய பெயர் அவரது அடையாளம்.அப்பெயர் அவரை மட்டுமே குறிக்கும்.வேறு யாரையும் குறிக்காது.அப்படியென்றால்,பழைய ஏற்பாட்டில் "கர்த்தர்" என்ற பெயர் எப்படி இயேசுவை குறிக்கும்? அது எப்படி சாத்தியம்?அது மிகப்பெரும் தவறு இல்லையா?

கர்த்தர் என்ற வார்த்தை ஒரு பட்டம்தானே அதை யாருக்கு பயன்படுத்தினால் என்ன? என்று கேள்வி கேட்கலாம்.தவறு இல்லைதான்.இன்று மோடியை "பிரதமர் மோடி" என்கிறோம்.ஆனால் ஐந்து  வருடம் கழித்து யார் வேண்டுமானாலும் "பிரதமராக" இருக்க முடியும்.ஆனால் இரண்டாவதாக வரும் வேறு ஒரு நபரை "பிரதமர்" என்று கூறினால் அதுவும் மோடியைத்தான் குறிப்பிடுகிறது என்று கூற முடியுமா? இயேசுவுக்கும் "கர்த்தர்" என்ற வார்த்தையை பயன்படுத்தியதன் காரணமாக இயேசுதான் பழைய ஏற்பாட்டில் உள்ள "ஆபிரகாமின் கடவுள்" என்று கூற முடியுமா?

எனவே புதியஏற்பாட்டில் இயேசுவை "கர்த்தர்" என்று குறிப்பிட்டதன் காரணமாக அவர் பழைய ஏற்பாட்டு கர்த்தர் அல்ல.இதை உறுதிப்படுத்த மற்றுமொரு உதாரணத்தை பார்க்க போகிறோம்.

ஓர் ஊரில் அன்பு என்று ஒருவர் இருக்கிறார்.அவர் ஊர்தலைவராகவும் உள்ளார்.அவரை அனைவரும் "தலைவர்" என்று அழைக்கிறார்கள்.அவ்வூரில் பத்து குடும்பங்களைச் சேர்ந்த சிலர் மட்டும் கிறித்தவர்கள்.இக்கிறித்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென்று ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர்.அவர் பெயர் "சூசை".இவரை கிறித்தவர்கள் மட்டும் "தலைவரே" என்று அழைப்பார்கள்.ஆனாலும் அனைவரும் "ஊர்தலைவருக்கு" கட்டுப்பட்டவர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.தங்கள் வழிகாட்டுதலுக்காக அவர்கள் இதை செய்துள்ளனர்.

சிறிது நாட்கள் கழித்து "சூசை" இறந்து விட்டார்.தங்கள் தலைவர் இறந்த துக்கம் இவர்களை மிகவும் பாதித்தது.இக்கிரித்தவர்களில் ஒருவர் ஒரு நாள் பக்கத்து ஊருக்கு சென்றார்.இவருடைய துக்கத்தை பற்றி அந்த ஊர் மக்கள் இவரிடம் விசாரித்தபோது,இவர் "தன் தலைவர்" மிகவும் நல்லவர் என்றும்,"ஊர்தலைவரிடம்" நற்பெயர் பெற்றவர் என்றும் கூறினார்.இப்பொழுது ஒரு சில கேள்விகள் உங்களை கேட்கிறேன்,

  • இக்கிறித்தவர் கூறிய "தலைவர்"தான் ஊர்தலைவரா?அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
  • "தலைவர்" என்ற வார்த்தை ப்யன்படுத்தப்பட்டதாலையே அன்புவும் சூசையும் ஒருவர்தான் என்று கூற முடியுமா?
  • ஒரு வேளை இருவரும் ஒருவர்தான் என்று நீங்கள் கூறினால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாக இருக்கும்?
கர்த்தர் என்ற பெயருக்குரிய ஹீப்ரு எழுத்துக்கள்:

கர்த்தர் என்ற வார்த்தைதான் இப்பொழுது குழப்பமுண்டாக்குகிறது என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.இவ்வார்த்தைக்கு பின்னால் இருக்கும் பெயரின் எழுத்துக்கள் யாவை?

இவ்வெழுத்துக்கள் י , ה , ו , ה ஆகும்.இவ்வெழுத்துக்களுக்குறிய ஆங்கில எழுத்துக்கள் Y(י),H(ה),W(ו),H(ה)ஆகும்.ஆனால் இயேசுவுக்கு இவ்வெழுத்துக்கள் வராது.பின் எப்படி இருவரும் ஒருவராக முடியும்?கீழே தரப்பட்டுள்ள வசனத்தை பாருங்கள்.
 וַיּ ֹאמֶ ר u·iamr and·he-is-saying ע ד oud further אֱ"הִ ים aleim Elohim אֶ ל al to ־ - מֹ שֶׁ ה mshe Moses כֹּ ה ke thus ־ - ת ֹאמַ ר thamr you-shall-say אֶ ל al to ־ - בְּ נֵי bni sons-of יִ שְׂ רָ אֵ ל ishral Israel יְ הוָה ieue Yahweh  15 אֱ"הֵ י alei Elohim-of אֲבֹ תֵ יכֶ ם abthi·km fathers-of·you(p) אֱ"הֵ י alei Elohim-of אַ בְ רָ הָ ם abrem Abraham אֱ"הֵ י alei Elohim-of יִ צְ חָ ק itzchq Isaac וֵא"הֵ י u·alei and·Elohim-of יַעֲקֹ ב ioqb Jacob שְׁ לָ חַ נִ י shlch·ni he-sent·me[And God said moreover unto Moses, Thus shalt thou say unto the children of Israel, The LORD God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me unto you: this [is] my name for ever, and this [is] my memorial unto all generations.]
சிகப்பு பின்புலத்தில் கருப்பு எழுத்துக்கள்தான் கடவுளின் பெயருக்குரிய எழுத்துக்கள்.இவற்றை சேர்த்து எப்படி உச்சரிப்பது என்றுதான் இன்று மறந்து போய் விட்டது.இவ்வெழுத்துக்களுக்கு பதிலாகத்தான் "கர்த்தர்" என்ற தமிழ் வார்த்தை நம் மொழிபெயர்ப்பில் உள்ளது.

"கர்த்தர்" ஒருவரே கடவுள்,வேறு யாரும் அல்ல என்று கூறினால் என்ன பொருள்? "கர்த்தர்" என்ற வார்த்தைக்கு பின்னால் உள்ள "יְ הוָה" இவரே கடவுள். இதற்க்கு வலு சேர்க்கும் விதமாக திருமறையில் இருந்து ஒரு கதையை காண்போம்.அது நாகமான் கதை ஆகும்.


இஸ்ரயேல்  மக்களில் ஒருவன் கர்த்தர் ஒருவரே கடவுள் என்று கூறினால் அது ஒரு பெரிய சாட்சி அல்ல.சிரியா நாட்டின் மக்களில் ஒருவன் கூறினால் அது பெரும் சாட்சி.அவன் வார்த்தைகளை கவனியுங்கள்.
அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.

அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.

அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.

ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணிய வேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.[2இராஜ 5:15-18]
இஸ்ரயேலின் கடவுளே அல்லாமல் வேறு கடவுள் இல்லை என்று இஸ்ரயேல் இனமல்லாத வேறு ஒரு மனிதன் அறுதியிட்டு கூறுகிறான்.இவன் சாட்சி கூறிய கடவுள் இயேசுவா? அக்காலத்தில் இயேசு பிறக்கவே இல்லை.மேலும் அக்காலத்தில் "கர்த்தர்" என்றால் "י ה וָ ה" என்ற பெயருக்குரியவர். "கர்த்தர்" என்ற பட்டத்தை வேண்டுமானால் யாருக்கும் சூட்டிக்கொள்ளலாம்,ஆனால் கர்த்தர் என்ற பட்டம் எப்பெயரை  குறிக்கிறதோ அவரை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியாது.எனவே நாகமான் குறிப்பிட்டவன் "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளையே" அன்றி வேறு யாரையும் அல்ல.

எனவே கர்த்தர் என்ற வார்த்தை "ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளையே" அன்றி வேறு யாரையும் குறிக்க வில்லை.மற்றுமொரு சாட்சியை கவனியுங்கள்.இது எசேக்கியா என்ற மன்னனிடம் இருந்து வருகிறது.
கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.[2இராஜ 19:15]
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.[2இராஜ 19:19]
கடவுள் யூதாவை அசீரியா மன்னன் சனகெரிப்பிடமிருந்து தன் வார்த்தையின்படியே காப்பாற்றினார்.எனவே தன் வார்த்தையை நிறைவேற்றிய கர்த்தர் ஒருவரே கடவுள்.வேறு யாரும் அல்ல,இயேசு முதற்கொண்டு.

முடிவு:

கர்த்தர் என்ற வார்த்தை ஒரு பட்டம் மட்டுமே.அது பெயர் அல்ல.கடவுளின் பெயர் நமக்கு தரப்பட்டிருந்தும் ஏன் அது திருமறையில் இருந்து மாற்றப்பட்டது என்று இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.போற்றப்படத்தக்க அப்பெயருக்குரியவரை மட்டுமே நாம் அனைவரும் பணிந்து கொள்ள வேண்டும். 
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

Saturday, September 21, 2019

பெற்றோரை கணம் செய்வதைக் குறித்து எலியாவும் இயேசுவும்


பெற்றோரை கணம் செய்வதைக் குறித்து எலியாவும் இயேசுவும்

தகப்பன் மற்றும் தாய் இருவரையும் கணம் செய்ய வேண்டும் என்பது கடவுளின் முக்கியமான கட்டளை என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.மாபெரும் தீர்க்க தரிசியாகிய எலியாவும் இயேசுவும் பெற்றோரை கணம் செய்தலைக் குறித்து என்ன கூறுகிறார்கள்.

இந்த எலியா தீர்க்கதரிசி இயேசுவால் மிகவும் போற்றப்பட்டவர் என்பதை முதலில் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.இந்த இருவரும் எப்படி தாய் தகப்பனை கணம் செய்கிறார்கள் என்பதை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பார்க்க போகிறோம்.முதலில் இயேசுவின் வாழ்வில் நடந்த நிகழ்வைக் காண்போம்.
அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.[மத் 8:19-22]
இது எந்த நிகழ்ச்சி?என்ன நடக்கிறது? இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தை முடித்தபிறகு இது நடக்கிறது.ஆரிப் பின்பற்ற விரும்பிய சீடன் ஒருவன் தன்னுடைய தந்தை மற்றும் தாய் ஆகியோரை அடக்கம் செய்து வர அனுமதி கேட்கிறான்.

இந்த கேள்வியின் பொருள் என்னவென்றால், "ஐயா! நான் உங்களோடு வர விரும்புகிறேன்,ஆனால் இப்பொழுது அல்ல,என் தாய் தந்தை இறந்த பிறகு அவர்களை நல்லடக்கம் செய்து விட்டு பின்னர் வருகிறேன்" என்பதுதான்.

இக்கேள்வி மிகவும் நியாயமான ஒன்றுதான். பெற்றோரைக் கணம் செய்ய வேண்டும் என்பது நியாயப்பிரமானக் கட்டளை என்று உங்களுக்குத் தெரியும்.எனவேதான் அவன் கேட்டிருக்கின்றான்.இதற்க்கு இயேசுவின் பதில்,
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
இதை அப்படியே உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.இது போன்றொரு நிகழ்வு பழைய ஏற்பாட்டில் நடக்கிறது.அங்கு  என்ன சொல்லப்படுகிறது என்பதைக் காண்போம்.
அப்படியே அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.

அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.[1இராஜா 19:19-20]
எலியா தீர்க்கதரிசியிடம் கடவுள் சிலவற்றை செய்யுமாறு முன்னரே கூறியிருப்பார்.அதில் ஒன்றுதான் "எலிசாவை தீர்க்க தரிசியாக திருமுழுக்கு செய்வது ஆகும்".அப்படி எலிசாவைக் கண்டு,அவன் மேல் தன் சால்வையை போட்டான்.அதன் பொருள்,எலிசா இனி எலியாவின் இடத்தில் அவனுக்குப் பதிலாக தீர்க்க தரிசி ஆவான், என்பதுதான்.

இதைக் கண்டவுடன் எலிசா தன்னுடைய பெற்றோரை கண்டு அவர்களிடத்தில் அனுமதி வாங்கி அவர்களை கணம் செய்ய எலியாவினிடத்தில் அனுமதி கேட்கிறான்.எலியாவும் அனுமதி கொடுக்கிறார்.

இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்.யார் செய்தது சரி?எலியாவா அல்லது இயேசுவா?எலியா சாதாரண தீர்க்கதரிசி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.எலியா,
  • கடவுள் எலியாவுக்கு தரிசனம் ஆகியிருக்கிறார்.
  • எலியா இறந்த குழந்தைக்கு கடவுளிடம் இருந்து உயிர் வாங்கி கொடுத்திருக்கிறார்.
  • எலியா இறந்த பிறகு அவர் எலும்பு பட்டு உயிரடைந்து இருக்கிறார்கள்.
  • வானத்தில் இருந்து அக்கினியை இறக்கியிருக்கிறார்.
மேற்கூறியவைகள் எந்த விதத்திலும் சுலபமான செயல்கள் அல்ல.இவைகளை செய்த எலியா தாய் தந்தையை கணம் செய்து வர அனுமதி கொடுக்கிறார்.ஏனெனில் அது மிக முக்கியம் என்பது தெரியும்.இத்தனைக்கும்,கடவுள் கூறியதினால்தான் எலியா எலிசாவிடம் வருகிறார்.எனவே,
  • தாய் தந்தையை கணம் செய்தலை அனுமதிக்க வில்லை.
  • அது நியாய பிரமானத்திற்கும்,கடவுளுக்கும் எதிரான செயல் ஆகும்.
  • இச்செயலை செய்த இயேசு எப்படி கடவுளுடைய குமாரன் ஆவார்?
  • அவரை எப்படி நம்ப இயலும்?
இயேசு தாய் தந்தையரை கணம் செய்யாதது இது முதல் முறை அல்ல.அப்படிப்பட்ட சில வசனங்களை பார்ப்போம்.
திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.

அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.[யோ 2:3-4]

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.

அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.

தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,

தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே![மத் 12:46-49]

இயேசு கூறியதிலேயே மிக கடுமையான வார்த்தைகள் ,
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.[லூக் 14:26]
இவை அனைத்தும் நமக்கு சொல்வது இயேசு நியாயப்பிரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்டாரா  என்பதுதான்.

பெற்றோரை கணம் செய்த பிள்ளைகளைக் குறித்து கடவுள் எரேமியா தீர்க்கதரிசி மூலமாக எடுத்துக்காட்டாக ஓரிடத்தில் கூறியிருப்பார்.எரேமியா 35-ம் அதிகாரத்தை படித்து பாருங்கள்.

இயேசுவின் வாழ்வில் நடந்த இச்செயல்கள்,சில சந்தேகங்களை நமக்கு தருகிறது.எலியா தீர்க்கதரிசியின் செயல்கள் அவர் மிக கண்டிப்புள்ளவர் என்பது போன்ற தோற்றத்தை நமக்கு தருவது இயல்பு.அப்பேற்பட்ட தீர்க்கதரிசியே பெற்றோர்(கடவுளை தவிர்த்து) என வரும்பொழுது அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்.ஆனால் இயேசு அப்படி அல்ல.அவரைப் பின்பற்றுவதற்காக பெற்றோரை வெறுக்க அறிவுறுத்தியிருக்கிறார்.

முடிவுரை:

பெற்றோர் என்பவர்களை கணம் செய்தல் மிக முக்கியமான ஒரு செயல் ஆகும்.அதில் எவ்வித சமரசமும் இல்லை.ஆனால் ஏன் இயேசு தாய் தந்தையரை வெறுக்க சொல்கிறார்?கடவுள் கூறியதை மீறி ஏதாவது அவர் கூறலாமா? அவரை கிறித்தவர்கள் கடவுள் என கூறலாமா? இயேசு யாரை "கடவுளே" என்று வழிபட்டாரோ அவரைத்தானே அனைவரும் கடவுளாக வழிபட்டிருக்க வேண்டும்.

சரி,இயேசு யாரை வழிபட்டார்?ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு போன்றோர் யாரை வழிபட்டனரோ அவரைத்தான் இயேசு வழிபட்டார்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1hXBQMfo1aaYiSKhPEf9ty44ZgPE35NZT/view?usp=sharing

Saturday, September 14, 2019

சாத்தான் யார் என்று இயேசு கூறுகிறார்!

யார் சாத்தான் என்று இயேசு கூறுகிறார்!

சாத்தான் என்ற கருத்து கிரேக்க வழிபாட்டு முறைகளை சார்ந்தது ஆகும்.சாத்தான் என்று தனிப்பட்ட ஒருவன் கிடையாது என்று நான் ஏற்கனவே இந்த பக்கத்தில் மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன்.இது எப்படி கிறித்தவத்திற்குள் புகுந்தது என்பதையும் விளக்கியிருக்கிறேன்.அதை இங்கே படித்து பாருங்கள்.

சரி சாத்தான் என்று ஒருவன் இருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்வோம்.அவன் கொடூரமானவன்,கெட்டவன்,அனைத்து தீமைகளுக்கும் காரணமானவன்,கடவுளுக்கு எதிர்த்து நிற்பவன் என்று நாம் நினைக்கிறோம்.தீமைகளுக்கு காரணம் அவன்தான் என்றால் கீழ்கண்ட வசனத்தை கூறியது யார் என்று பாருங்கள்.
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.[ஏசா 45:7]
திருமறையை நன்றாக படித்து கடவுளை அறிந்து கொண்டவர்களுக்கு மேற்கண்ட வசனம் கூறுவது என்ன என்பது புரியும்.மற்றவர்கள் குழம்பி போய்  நிற்பார்கள்.உங்களால் பதில் சொல்ல முடியாது.

சரி சாத்தான் என்று ஒருவன் இருக்கிறான்.அவன் யார்? இயேசு அவனைப்பற்றி கூறுகிறாரா?மத்தேயு 4-ம் அதிகாரம் நமக்கு அதைப்பற்றி கூறுகிறது.
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
இயேசுவை பிசாசு சோதிக்கிறான்.அப்பொழுது பல செயல்கள் நடைபெறுகின்றன.ஆனால்,தன்னை வணங்கும்படி அவன் கூறியபோது இயேசு என்ன கூறினார் என்று நாம் கவனிக்க வேண்டும்.
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
அவன் முகத்தில் அறைந்தாற்போல் பதில் கூறுகிறார் இயேசு.கர்த்தர் ஒருவரை தவிர வேறு யாரையும் வணங்கினால் அவன் முகத்தில் அறைந்தாற்போல் ஒவ்வாறுதான் பதில் கூற வேண்டும். இங்கு கர்த்தர் என்று இயேசு குறிப்பிடுபவர் யார்?
  • அவர் இஸ்ரேலின் கடவுள்.
  • அவரைத்தான் இயேசு வழிபட்டார்.தேவாலயத்திற்கு சென்று வழிபட்டார்.
  • இவரை,அதாவது இஸ்ரயேலின் கடவுளை மட்டுமே பணிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

இயேசு தன்னை கடவுள் என்றோ,கடவுளின் ஒரு அங்கம் என்றோ எங்கும் கூற வில்லை.இவை அனைத்தும் பிற்சேர்க்கைகள்.தான் ஒரு கடவுளாக அவர் தன்னை நினைத்திருந்தால்,

  • தன்னையே வணங்க சொல்லியிருக்க வேண்டியதுதானே?
  • "நீ என்னையே வணங்கு,நானும் ஒரு கடவுள்தான்" என்று அவர் கூறியிருக்கலாமே!
  • அவர் அவ்வாறு கூறவில்லை.அவர் மிகத்தெளிவாக கூறுகிறார்,"உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே" என்று.
  • இயேசுவே "கடவுள் ஒருவர்தான்" என்று கூறியிருக்கும் பொழுது,இன்றைய கிறித்தவர்கள் மட்டும் ஏன் "முக் கடவுள்(திரித்துவம்)" என்று கூறுகின்றனர்?
இறுதியாக,தன்னை வணங்க கூறிய பிசாசை இயேசு எப்படி அழைத்தார் என்று பாருங்கள்.
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
கர்த்தரை விட்டு மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள்தான் சாத்தான்கள்.இதை நான் கூற வில்லை.இயேசுவே கூறியிருக்கிறார்.

அப்படியென்றால்,இஸ்ரேலின் கடவுளை விட்டு திரித்துவத்தை வணங்குகிற கிறித்தவர்கள்.........................?

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

Friday, September 13, 2019

திரியேகம்(Trinity) ஒரு பொய் என்று 1சாமு 28-ம் அதிகாரம் நிரூபிக்கிறது

திரியேகம்(Trinity) ஒரு பொய் என்று 1சாமு 28-ம் அதிகாரம் நிரூபிக்கிறது

தான் ஒருவர்தான்,தன்னைத் தவிர வேறு கடவுள் யாரும் இல்லை என்றும் பழைய ஏற்பாட்டில் எண்ணற்ற இடங்களில் கூறியுள்ளார் கடவுள்.ஆனாலும் இவைகளை எல்லாம் விட்டு கடவுள் கூறாத,"திரித்துவம்" என்ற  ஒரு புது கருத்தை உருவாக்கி அதை நம்ப சொல்கின்றனர்  கிறித்தவர்கள்.

திரித்துவத்துக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூறக்கூடிய ஒரு கருத்து என்னவென்றால்,திருமறையில் "Elohim" என்ற ஹீப்ரு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது,அவ்வார்த்தையானது பன்மையை குறிக்கிறது.எனவே "முக்கடவுள்" கொள்கையை "Elohim" என்ற வார்த்தை சரியென்று கூறுகிறது என்று வாதிடுவார்கள்.

இக்கருத்து தவறு என்று கூறுவதற்கு திருமறை முழுவதும் எண்ணற்ற வசனங்கள் உள்ளன.ஆனாலும் 1சாமு 28-ம் அதிகாரமும் நமக்கு பயன்படுகிறது.இந்த வசனத்தை பார்த்து விடுவோம்.
அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.

அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.

அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.

அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.

அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப் பண்ண வேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.

அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.

ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.[1சாமு 28:7-14]
இறந்தவர்களுடன் ஆவிகளைக் கொண்டு பேசக்கூடிய  ஒரு பெண்ணிடம் சவுல் தன்னுடைய போர்க் காரியங்களை பற்றி விசாரிக்கிறான்.இறந்து விட்ட தீர்க்கதரிசியாகிய சாமுவேலைக் காண்கிறான்.இக்கதை உண்மையா பொய்யா என்பது இப்பொழுது நம் ஆராய்ச்சி அல்ல.பதிலாக இங்கு அக்கால மக்கள் பயன்படுத்துகிற வார்த்தைகள்தான் நமக்கு முக்கியம்.

13-ம் வசனத்தை மறுபடி ஒருமுறை படித்து பாருங்கள்.

"ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்".

இந்த வசனத்தில் வரக்கூடிய "தேவர்கள்" என்ற வார்த்தைதான் நமக்கு இப்பொழுது முக்கியம்."Elohim" என்ற வார்த்தையைத்தான் இங்கு "தேவர்கள்" என்று மொழிபெயர்த்து உள்ளனர்.தொடர்ந்து படிக்கும் முன் சில தகவல்களை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.அவையாவன,
  • இங்கு சாமுவேல் என்ற ஒரு "தனி மனிதனை",ஆவிகளோடு பேசும் ஒரு பெண்  எழுப்பி கொண்டு வருகிறாள்.
  • இந்த சாமுவேலைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.
அக்குறிப்பிட்ட 13-ம் வசனத்தின் ஹீப்ரு மொழியாக்கத்தை இப்பொழுது கீழே தருகிறேன்.
 וַיּ ֹאמֶ ר-u·iamr and·he-is-saying לָ הּ l·e to·her הַ מֶּ לֶ 7 e·mlk the·king אַ ל al must-not-be ־ - תִּ ירְ אִ י thirai you-are-fearing כִּ י ki that מָ ה me what ? רָ אִ ית raith you-see   וַתּ ֹאמֶ ר u·thamr and·she-is-saying הָ אִ שָּׁ ה e·ashe the·woman אֶ ל al to ־ - שָׁ אוּל shaul Saul אֱלהִים aleim Elohim רָ אִ יתִ י raithi I-see עֹ לִ ים olim ones-coming-up מִ ן mn from ־ - הָ אָ רֶ ץ e·artz the·earth : :And the king said unto her, Be not afraid: for what sawest thou? And the woman said unto Saul, I saw gods ascending out of the earth.
கருப்பு பின்புலத்தில் மஞ்சள் நிறத்தில் உள்ள வார்த்தைதான் "Elohim(ஏலோஹிம்)" ஆகும்.உண்மையில் இது பன்மையைக் குறிக்கும் வார்த்தைதான். இந்த வார்த்தையின் பொருள் "கடவுளர்கள், தேவர்கள்" என்பதும் உண்மைதான். மொழிபெயர்ப்பும் மிக சரியானதுதான்.ஆனால்,
  • 12-ம் வசனத்தில் அந்த பெண் சாமுவேலைக் காண்கிறாள் என்று உள்ளது."அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்."
  • எனவே "சாமுவேல்" என்ற தனிமனிதனைத்தான் அந்த பெண் காண்கிறாள்.அடுத்த வசனத்தில் அவள் சாமுவேலை,"தேவர்கள்" என்கிறாள்.ஏன் பன்மையில் குறிப்பிடுகிறாள்?
  • ஹீப்ரு மொழியில் "மரியாதைக்குரியவர்களை"யும் குறிப்பதற்க்கு இந்த "Elohim(ஏலோஹிம்)" என்ற வார்த்தை பயன்படுகிறது.இதற்க்கு திருமறையில் ஆதாரம் உள்ளது.
  • எனவே சாமுவேலை,தேவர்கள் என்று அந்த பெண் குறிப்பிடுகிறாள்.
  • சாமுவேல் என்ற தனிமனிதனை ஏன் பன்மையில் அந்த பெண் குறிப்பிடுகிறாள்?ஏனென்றால் தனிமனிதன் ஒருவன் மரியாதைக்குரியவனாக இருக்கும் பட்சத்தில் அவனை பன்மையில் குறிப்பிடுவது எபிரேயர்களின் வழக்கம்.
  • அடுத்த வசனத்தை பாருங்கள் "அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்".
  • அந்த பெண்ணோ சாமுவேலை "பன்மையில்" குறிப்பிடுகிறாள்.சவுல் பதிலுக்கு சாமுவேலை ஒருமையில் "அவருடைய" என்று குறிப்பிடுகிறான்.இரண்டு பேருமே சாமுவேலை மட்டுமே குறித்து பேசுகிறார்கள் என்பது நமக்கு தெரியும்.
  • பன்மையில் குறிப்பிட்டதின் காரணமாகவே சாமுவேல் திரித்துவமாக இருக்கிறார் என்று கூற முடியுமா?அதாவது,சாமுவேல் என்ற தந்தை,சாமுவேல் என்ற மகன்,சாமுவேல் என்ற ஆவி.
  • "எலோஹிம்" என்ற பன்மை வார்த்தை கடவுளுக்கு பயன்படுத்தப்பட்டதன் காரணமாக அவர் "முக்கடவுள்" அதாவது "திரியேக கடவுள்" என்று கூறிய திரித்துவவாதிகள் சாமுவேலையும் அப்படி குறிப்பிட வேண்டியதுதானே!
  • மிகவும் புத்திசாலித்தனமாக மொழிபெயர்ப்பு நடந்துள்ளது.திருமறையில் எண்ணற்ற இடங்களில் "ஏலோஹிம்(Elohim)" என்ற வார்த்தை கடவுளை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.கடவுளே அவ்வார்த்தையை தன்னை குறிப்பதற்கு பயன்படுத்தி உள்ளார்.அங்கெல்லாம் இவ்வார்த்தையானது "தேவன்" என்று ஒருமையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே ஏன்? பன்மையிலே மொழிபெயர்க்க வேண்டியதுதானே?
  • ஏனென்றால் நம் கடவுள் ஒருவர்தான் என்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு தெரியும். ஹீப்ரு வார்த்தை பன்மையாக இருந்தாலும் ஒருமையில் மொழிபெயர்த்துள்ளனர்.காரணம், கடவுளுக்கு பன்மையில் வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், அவர் ஒருவர்தான் எனவே ஒருமையில் மொழிபெயர்க்க வேண்டும்.
  • கடவுள்தான் திரித்துவமாக இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமே,மொழிபெயர்ப்பாளர்கள் "ஏலோஹிம்(Elohim) என்ற வார்த்தையை "தேவர்கள்" என்று மொழிபெயர்க்க வேண்டியதுதானே?
  • மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.காரணம்,கடவுள் ஒருவர்தான் என்றும் திரித்துவம் பிற்சேர்க்கை என்றும் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

திரியேகம் என்பது கிறித்தவர்களால் ஆணித்தரமாக நம்பப்படக் கூடிய ஒரு விடயம்.திரியேகம் என்பது பொய் என்று யாராவது கூறினால்,அவர்கள் பொய் கூறுகிறார்கள்,அவர்கள் அந்திகிறிஸ்துவை சார்ந்தவர்கள்,அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்,அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறி அதைப்பற்றிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.

திரியேகம் என்ற ஒரு கருத்தை பைபிள் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படாத ஒன்றை நான் ஏன் நம்புகிறேன் என்று தினந்தோறும் நான் பைபிள் திருமறையை படிப்பவர்களுக்கு ஏன் வரவில்லை?

இந்த திரியேகம் எப்படி திருமறைக்குள் நுழைந்தது என்பது ஒரு பெரும் வரலாறு.உண்மையாகவே கடவுளின் மீது பற்று கொண்டவர்கள் இந்த வரலாற்றை தேடுவார்கள்.மேலும் பழைய ஏற்பாடு மட்டுமே திருமறை.புதிய ஏற்பாடு என்பது பின்னர் சேர்க்கப்பட்ட ஒன்று என்ற கருத்தையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இப்பொழுது இக்கருத்திற்குள் நாம் வருவோம்.திரியேகம் என்றால் என்ன?இக்கருத்து பொய் என்று 1சாமுயேல் 28-ம் அதிகாரம் எவ்வாறு நிரூபிக்கிறது?முதலில் திரியேகம் என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.உண்மை என்னவென்றால்,நீங்கள் ஏதாவதொரு கிறித்தவரிடம் போய்,"திரித்துவம்" என்றால் என்ன?" என்று கேளுங்கள்.கிட்டத்தட்ட ஒருவருக்கும் இது பற்றிய முழு விளக்கம் தெரியாது.ஆனாலும் வாதிடுவார்கள்.

இது பற்றி நிறைய விவாதிக்க முடியும்.ஆனால் முடிவுக்கு வரமுடியாது.பக்கத்தில் உள்ள படத்தை பாருங்கள்.ஓரளவுக்கு அது இக்கருத்தை விளக்குகிறது என நினைக்கிறேன். தந்தை, குமாரன், பரி.ஆவி  ஆகிய மூவரும் கடவுள்தான். ஆனால் தந்தை ஆனவர் பரி.ஆவி அல்ல.பரிசுத்த ஆவி மகன் அல்ல.மகன் தந்தை அல்ல.நாம் இப்பொழுது இக்கருத்தை மட்டும் நினைவில் வைத்து கொள்வோம்.


Elohim(ஏலோஹிம்) என்ற வார்த்தையின் பயன்பாட்டைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிற்குள் சென்று படித்து பாருங்கள்.

Click Here:

முடிவாக திரித்துவம் என்பது ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்கள் வழிபட்ட கடவுளிடம் இருந்து நம்மை பிரிப்பதற்கு பயன்பட்ட ஒரு வழி ஆகும்.யூதர்கள் மீது இருந்த வெறுப்புணர்வும் இதற்க்கு ஒரு காரணம் ஆகும்.அவர்களுடைய தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை முறைகளைக் கண்டு அவர்கள் மீது வெறுப்புணர்வு கொண்டு அவர்கள் வழிபட்ட கடவுளை,அதாவது மெய்யான ஒரே கடவுளை,நம்மிடமிருந்து பிரித்தனர்.ரோம,கிரேக்க கலாச்சாரங்கள் இதற்க்கு அடித்தளமிட்டன.

கிரேக்க,ரோம அரசுகள் யூதாவை ஆட்சி செய்த பொழுது யூதர்களுடைய தனித்தன்மையான வாழ்க்கை முறை அவர்களை வெறுப்புணர்வு கொள்ள செய்தது.யாருடனும் கலவாமல் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் வாழ்ந்த அவர்களை அனைவரும் வெறுத்தனர்.இந்த வெறுப்புதான் அவர்கள் வணங்கிய கடவுள் மீதும் திரும்பியது.ஆனாலும் யூதர்களுடைய வாழ்க்கை முறை அவர்களை திரும்பி பார்க்க செய்தது.

ஒழுக்கமாக வாழும் தன்மை எங்கிருந்து வந்தது என்று ஆச்சரிய பட்டனர். நியாயப்பிரமானம்தான் இதற்க்கு அடிப்படை என்று தெரிந்து கொண்டனர்.சிறிது சிறிதாக இதிலிருந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பித்தது.கடைசியாக,"Knosis" என்ற ஒரு இயக்கம் இதனை சாத்தியப்படுத்த காட்டியது.இயேசுவின் கொள்கைகள் பலவும் இந்த "Knosis" கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும்.இந்த அடிப்படையில் கடைசியாக வந்ததுதான் "திரித்துவம்".கடவுள் இதைப்பற்றி பழைய ஏற்பாட்டில் எங்கும் கூற வில்லை.


"நானே கர்த்தர்,வேறொருவரில்லை;என்னைத்தவிர தேவன் இல்லை".[ஏசா 45:5]

மேற்கண்ட வார்த்தைகளை கூறியவர் யாரோ அவரே கடவுள் அவரை மட்டுமே அனைவரும் பணிந்து கொள்ள வேண்டும்.இதை இயேசுவே கூறியுள்ளார்.
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.[மத் 4:10]
இயேசு கர்த்தரை பணிந்து கொள்ள கூறியிருக்கிறார்.ஆனால் கிறித்தவர்கள் இயேசுவை பணிந்து கொள்கிறார்கள்.உங்கள் மனசாட்சியை கேளுங்கள்,எது சரி என்று! 
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1eTnMawFKQdtNbavHYqJ3TKnJEgFBe_jM/view?usp=sharing

My Posts