Saturday, March 30, 2019

மத்தேயுவின் மாபெரும் தவறு

மத்தேயுவின் மாபெரும் தவறு
                                                                                            இரா.இருதயராஜ்.
    
இயேசுவின் வம்ச அட்டவணையை மத்தேயு நமக்கு தரும் பொழுது மிகப்பெரும் பிழையை செய்து விடுகிறார்.இந்த பிழையை நாம் எவ்வாறு எடுத்து கொள்வது?அவர் தெரிந்து இப்பிழையை செய்தாரா?இல்லை தெரியாமல் செய்தாரா?உண்மையில் இது பெரும் தவறுதான் என்று உறுதியாகும் பொழுது அவர் எழுதிய புத்தகத்தை எவ்வாறு நம்ப இயலும்?இப்பொழுது அப்பிழையை நாம் பார்ப்போம்.
மத்:1:11 இவ்வாறு கூறுகிறது,
    பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
 முதல் பிழை என்னவென்றால்,இந்த "யோசியா" என்ற இராஜா பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போக வில்லை.நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது இஸ்ரேல் இரண்டு தேசங்களாக சிதறி போனது.ஒன்று இஸ்ரயேல்(சமாரியா)  என்றும் மற்றொன்று யூத தேசம் என்றும் அழைக்கப்பட்டது.இந்த யோசியா யூத தேசத்தின் இராஜாவாக இருந்தான்.இவன் சிறை பிடிக்கப் பட வில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.வசனம் 2இராஜா:22:1,
    1. யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.
யோசியா இராஜா எப்பொழுது இறந்தான் என்பதை  2இராஜா:23:29,30-ல் நாம் காணலாம்,
    அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்று போட்டான்.
    மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.
இப்பொழுது யோசியா இராஜா உயிருடன் இல்லை.அவனுடைய மகன் யோவகாஸ் அவனுக்கு பதிலாக இராஜாவாகிறான்.இந்த யோவகாஸ்  எகிப்துக்கு கொண்டுபோகப்பட்டு அங்கே மரணமடைவான்.அவனுக்கு பதிலாக யோசியாவின் மற்றொரு குமாரன் எலியாக்கீம் இராஜாவாகிறான்.வானுடைய பெயரும் மாற்றப்படுகிறது.வசனம் 2இராஜா:23:34,
34. யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான். 
 இந்த யோயாக்கீமின் காலத்தில்தான் பாபிலோன் இராஜா படையெடுத்து வருகிறான்.வசனம் 2இராஜா:24:1,
    அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்
எனவே மத்தேயுவில் கூறியுள்ளபடி யோசியா இராஜா பாபிலோனுக்கு போக வில்லை. எனவே மத்தேயு கூறியுள்ளதை நாம் நம்ப இயலாது.
அடுத்த மிகப்பெரும் தவறு மத்:1:11-ல் கூறியுள்ளபடி யோசியா எகொனியாவைப் பெற வில்லை.இந்த எகொனியா யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வசனம் 2இராஜா:24:6-ஐ பார்க்கவும்,
    யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
மேலும் அவன் பெயர் மாற்றப்பட்டது எப்படி என்று தெரிந்து கொள்ள எரே:22:24-ஐ பார்க்கவும், 
     யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மேற்கூறிய  கூற்றை நிரூபிக்கும் விதமாக 1நாளா:3:15,16,17-யும்  பாருங்கள்.எனவே யோசியா எகொனியாவை பெற வில்லை.இது மத்தேயுவின் இரண்டாம் தவறு.மூன்றாம் தவறுதான் மிகப்பெரும் தவறு.இந்த எகொனியாவை கடவுள் சபித்து இருக்கிறார்.இவன் வழியாக மேசியா வருவதற்கு வாய்ப்பு இல்லை.இதற்கு ஆதாரமாக வசனம் எரே:36:30-ஐ பாருங்கள்,
     ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.
எனவே யோயாக்கீம் வழியாக வரும் சந்ததியில் மேசியா வரமுடியாது.மேற்கூறிய வசனத்தின் சாபம் அவன் மேல் உள்ளது.பின் எப்படி மத்தேயு இப்படிப்பட்ட முடிவுக்கு வந்தார்? எரேமியாவின் இந்த தீர்க்கதரிசனம் உடனே நிறைவேறியும் உள்ளது.ஆதாரமாக வசனங்கள் 2இராஜா:24:15,16,17 மற்றும் எரே:37:1.
    பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.
எனவே  கடவுளின் சாபம் பலித்து விட்டது.எனவே மேசியா இந்த வம்சத்தில் வர முடியாது.அப்படியென்றால் மத்தேயு என்ன காரணத்திற்காக இப்படி செய்தார்?அவர் எழுதியதாக கூறப்படும் நற்செய்தி புத்தகத்தை எவ்வாறு நம்ப இயலும்?புரிவதற்கு இலகுவாக கீழ்கண்ட படத்தை பாருங்கள்,



யோசியா -------------யோயாக்கீம் -----------------யோயாக்கீன்(எகொனியா)
                           .
                           :
                           :--------------------சிதேக்கியா (எரே:37:1)

நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.உங்கள் கருத்துக்களை பகிருங்கள். ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளே உண்மையான கடவுள்.இடையில் சேர்க்கப்பட்ட அனைத்தும் அவரை தொழுது கொள்வதில் இருந்து மக்களை தடுப்பதற்காகவே.

இயேசுவின் தாய் மரியாலினுடைய கணவன் யார்?

இயேசுவின் தாய் மரியாலினுடைய கணவன் யார்?

இதற்குரிய பதில் எந்த நற்செய்தி புத்தகத்தை நாம் பார்க்க வேண்டும் என்பதை பொறுத்திருக்கிறது.மத்தேயுவின் புத்தகமா அல்லது லூக்காவின் புத்தகமா என்பதை பொறுத்தே பதில் இருக்கும்.இயேசுவின் வம்ச அட்டவணையை இருவரும் தரும் பொழுது இருவரும் வேறுபடுகின்றனர்.(பார்க்க:மத்:1:1-16  லூக்:3:23-38)
லூக்கா இவ்வாறு எழுதுகிறார்,
    23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.
    24. ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;............................................
    31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
ஆனால் மத்தேயு கீழ்கண்டவாறு சாலொமோன் வழியாக அட்டவணையை கொண்டு செல்கிறார். 
    ....................எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

    16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
எனவே கிறித்தவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.லூகாவை அவர்கள் தேர்ந்தெடுத்தால்,
மாத்தாத்தின் மகனாகிய ஏலியின் மகன் யோசேப் என்பவனே மரியலினுடைய கணவன்."
பதிலாக மத்தேயுவை தேர்ந்தெடுத்தால்,

"மாத்தானின் மகனாகிய யாக்கோபினுடைய மகன் யோசேப் என்பவனே மரியலினுடைய கணவன் ".

© Gerald Sigal
இக்கட்டுரை "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டது.

மேசியா என்பவர் சாலொமோன் வழியாகத்தான் வர வேண்டுமா?
                
          மேசியா என்பவர் இரத்த சம்பந்தமுடைய தன் தந்தையின் வழியாக வந்தவராக இருக்க வேண்டும்.அவர் தனது தந்தையின் அரியாசனத்தில் உரிமையுடன் அமருவார்.இவைகளை பைபிள் நமக்கு கூறுகிறது.கடவுள் நமக்கு உறுதியளித்துள்ள இந்த மேசியா நேரடியாக தாவீதின் சந்ததியிலிருந்து மட்டும் வரவேண்டியதாக இருக்க வில்லை,

    17.இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.
    18. தகனபலியிட்டு, போஜனபலிசெலுத்தி, நாள்தோறும் பலியிடும் புருஷன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
    19. பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
    20. குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,
    21. அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.
    22. வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.(எரேமியா:33:17-22).
சாலொமோன்-ஐ குறித்து கீழ்கண்டவரும் குறிப்பிடுகிறார்,

    12. உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
    13. அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
    14. நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
    15. உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
    16. உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.(2சாமு:7:12-16).
    இதைப்பற்றி மேலும் பார்க்க:1நாளா:17:11-14 மற்றும் 2நாளா:7:17-18
      5. கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,

      6. அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

      7. இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார்.(1நாளா:28:5-7).
மேலும் கூறுகிறார்,
பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.(1நாளா:29:1).
இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னைத் திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக்கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி, (1இராஜா:2:24).
சாலொமோன் இராஜாவாக வேண்டும்  என்ற கடவுளின் முடிவுக்கு கீழ்ப்படியும் விதமாக மக்கள் இவ்வாறு கூறுகின்றனர்,
    24. சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.(1நாளா29:24).
சவுலை விட்டு  இராஜ்யபாரத்தை விலக்கினது போன்று சாலொமோனிடமிருந்து விளக்க ஒருபோதும் விளக்கமாட்டேன் என்றும் கூட கடவுள் கூறுகிறார்,
    14. நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.

    15. உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.(2சாமு:7:14-15).
சவுலிடமிருந்து இராஜ்யபாரத்தை கடவுள் எப்படி எடுத்தார்? சவுல் இறந்த பிறகு அரசாளும் உரிமையும் அவன் குடும்பத்தை விட்டு எடுபட்டு போய் விடுகிறது.சவுலினுடைய மகன்களில் ஒருவனும் ஒருபோதும் அரசாட்சியில் உட்கார்ந்து இருந்தது இல்லை.ஆனால் சாலோமோமனுடைய வம்சத்தில் ஒரு கிளையைத் தவிர மற்ற அனைவரும் சிங்காசனத்தில் அமர்ந்தனர்.கீழ்ப்படியாமைக்கு தண்டனை மனிதர்களிடமிருந்துதான் அவர்களுக்கு வந்தது தவிர சிங்காசனம் அவர்களை விட்டு ஒருபோதும் எடுபட்டு போகவில்லை.அவர்களை விட்டு ஒருபோதும் சிங்காசனம் விலகாது என்பது கடவுள் தாவீதுக்கு கொடுத்த உறுதிமொழி ஆகும்.

இக்கட்டுரை "jewsforjudaism"என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ்    என்பவரால்  தமிழாக்கம் செய்யப்பட்டது ஆகும். 

Friday, March 29, 2019

வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்?

நீதிமொழிகள் 30:4-ல் குறிப்பிடப்படுபவர் யார்?

   வானத்துக்கு ஏறியவர் என்று நீதி:30:4-ல் ஒருவர் குறிப்பிடப்படுகிறார்.அவர் இயேசுவா? நாம் கண்டுபிடிப்போம்.

                      இயேசு தெய்வீக தன்மை கொண்டவர் என்றும் அவர் கடவுள் என்றும் கிறித்தவர்கள் கூறுகிறோம்.அதை நிரூபிப்பதற்காக மேற்கூறிய வசனத்தை காட்டுகிறார்கள்.ஆனால் அந்த வசனத்தை கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் இவ்வகையான புரிதல் தவறு என்று நிரூபித்து விடும்.
                         யாக்கேயின் மகனாகிய ஆகூர் தனக்கு அறிவு இல்லை என்று கூறி பலவிதமான கேள்விகளை எழுப்புகிறான்.அறிவித்த தேடுகிறவர்கள் கண்டிப்பாக இக்கேவிகளுக்கான பதிலைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறான்.கீழ்கண்டவாறு கேள்விகளை எழுப்புகிறான்.

"வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?"
             
           அனைத்து விதமான அறிவுக்கும் தேவையான அடிப்படை இக்கேள்விகளுக்கான பதில்களில் உள்ளன என்று அவன் நினைக்கிறான்.
                                  அவருடைய நாமம் என்ன?,என்ற கேள்விக்கான பதில் பைபிளில் உள்ள வசனங்களில் உள்ளது என்று நமக்கு நன்றாக தெரியும்.மேலும் பைபிள் நமக்கு கூறுவது என்னவென்றால்,வானங்களையும் பூமியையும் படைத்தவர் கடவுள் என்றும் இயற்கையின் அனைத்து சக்திகளும் அவருக்கு கட்டுப்பட்டே இருக்கிறது என்பதே ஆகும்.
                                      மேற்கூறிய முதல் கேள்விக்கு அடுத்த கேள்வி "அவர் குமாரனுடைய நாமம் என்ன?".முதல் கேள்விக்கான பதிலை பைபிள் வசனங்கள் மூலமாக நாம் கண்டுபிடித்தது போல,இந்த கேள்விக்கான பதிலையும் வசனங்கள் மூலமாகவே கண்டுபிடிக்கலாம்.யாத்திராகமம் 4:22 வசனம் இவ்வாறு கூறுகிறது,

"அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்."

உபா:14:1 இவ்வாறு கூறுகிறது,


"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக."
          
எனவே "இஸ்ரயேல்" என்பதே குமாரனுடைய பெயர்.அவன் அவருடைய முதல் குமாரன்.பைபிளில் அனைத்து இடங்களிலும் தாவீது மற்றும் சாலொமோன் போன்றோர் குமாரனுக்குரிய இடங்களில்தான் உள்ளனர்(சங்:89:27,28 1நாளா:22:10,28:6). வரப்போகும் மேசியா கூட இவ்வகையான உறவுமுறைகளில்தான் இருப்பார்.இஸ்ரேல் மக்கள் அனைவரையும் ஒரே ஒரு மனிதனாக பாவித்து இங்கு கூறப்பட்டுள்ளது.எனவே கடவுளுடைய குமாரன் என்பவர் "இஸ்ரேல்" என்பவரே.அவனுக்கே அந்த உரிமை உள்ளது.அவனே அவருடைய முதல் குமாரன்.
               கடவுளுடன் இஸ்ரயேலுக்கு உள்ள உறவுமுறை என்பது கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள உறவு முறையையே குறிக்கிறது என்ற கிறித்தவர்களின் வாதம் பொய்யானது.இது நிரூபிக்கப்படவும் இல்லை,யூத வேதாகமத்தில் இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.இவை அனைத்தும் தவறான நோக்கமுடைய வாதங்கள் ஆகும்.

இது "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டது.



பத்து கட்டளைகள் எவைகள்?

பத்து கட்டளைகள் எவைகள்?

மருத்துவர்.E.பிரதீப் பிரேம்குமார்.
                    
      பத்து கட்டளைகள் எவைகள் என்று கேட்டால்,நாம் என்ன பதில் சொல்லுவோம்? யாத்திராகமம் 20-ம் அதிகாரத்தில் வரும் கட்டளைகளை சொல்லுவோம்.ஆனால் இந்த அதிகாரத்தில் பத்து  கட்டளைகள் என்று எதையும் கடவுள் குறிப்பிடவில்லை.உண்மையில் நிறைய கட்டளைகள் இவற்றில் உள்ளன.இந்த 20-ம் அதிகாரம் முழுவதும் படித்துப்பார்த்தால் நமக்கு புரியும்.அப்படி என்றால்  பத்து கட்டளைகள் எவைகள்? கடவுள் இவைகளை எங்கே குறிப்பிடுகிறார்? நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றோமா? யாத்திராகமம் 34-ம் அதிகாரத்தில் பத்து கற்பனைகள் என்று குறிப்பிடும் இடம் ஒன்று வருகிறது.அதன் அடிப்படையில் பத்து கட்டளைகள் "இவைகள்தான்" என்று நான் நினைப்பவைகளை பின்வருமாறு கொடுத்துள்ளேன்.

  1. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள். 

  2. கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
  3. புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே.
  4. கர்ப்பம் திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக் கூடாது.
  5. ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம்நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
  6. கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
  7. வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.
  8. எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.
  9. உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். 
  10. வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.
        மேற்கூறிய கட்டளைகளை கூறிய பிறகு கடவுள் கூறும் வார்த்தைகளை கவனியுங்கள்.

       "பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்."

இப்பொழுது மேற்கூறிய வசனங்களை ஆராய்ந்து பாருங்கள்.உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.என்னை தொடர்பு கொள்ள: 8pradeeppremkumar8@gmail.com 

Saturday, March 23, 2019

யாத்திராகமம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி

யாத்திராகமம்  மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி 

                              கேள்வி: யூத மார்க்கத்தில் ஆர்வம் காட்டக்கூடிய ஒருவரை எனக்குத் தெரியும்.ஆனால் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் யூத மார்க்கத்தை பார்க்க விரும்புகிறார்.அவர் மிகவும் புத்தி கூர்மை உடையவர்.கணித துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்.
                 ஒருவேளை நான் யாத்திராகமம்  புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவைகளை வரலாற்றின் அடிப்படையில் நிரூபித்தால் யூத மார்க்கத்தை உண்மையிலேயே பின்பற்ற முயல்வதாக என்னிடம் சவால் விட்டிருக்கிறார்.வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையிலும் தொல்லியல் ஆய்வாளர்களின் பார்வையிலும் ,யூதர்கள் ஒருபோதும் எகிப்து நாட்டில் இருந்த பாரோக்களின் கீழ் அடிமைகளாக இருந்தது இல்லை,அதற்கான எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்கிறார்.எகிப்திலிருந்து கிடைத்த ஆய்வு பொருட்களும் இதை நிரூபிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்கிறார்.
                          ஆய்வு கட்டுரைகளின் மூலம் கிடைக்கும் தரமான சான்றுகளை என்னுடைய நண்பர் தேடுகிறார்.வெள்ளை தாடியுடன் இருக்கும் ரபி ஒருவர் அவருடைய வேதாகமத்தில் இருந்து எதையாவது எடுத்து காட்டுவதை என் நன்பர் விரும்ப வில்லை.அப்படிப்பட்ட சான்றுகள் ஏதாவது உங்களிடம் உள்ளனவா?
 மற்றொரு ரபி பதில் கூறுகிறார்: என்னுடைய தாடி வெள்ளையாக இல்லாததினால் நான் பதில் கூற தகுதி இருப்பதாக நினைக்கிறேன்.யூத உலகத்தில் 2001ல் மிகப்பெரும் விவாதம் உண்டானது.இது எப்பொழுது நடந்தது என்றால்,அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செலில் ரபி David Wolpe என்பவர் ,"எகிப்தில் இருந்து வெளியேறும் நிகழ்வு உண்மையில் நடைபெற்றிருந்தால் அது பைபிளில் விவரிக்கப்பட்ட மாதிரி நடைபெற்று இருக்காது"என்று கூறிய பிறகு இது நடைபெற்றது."Conservative Sinai Temple" என்ற இடத்தில் சுமார் 2000 பேருக்கு முன்னிலையில் இதை அவர் கூறினார்."Los Angeles Times"ன் முன்பக்கத்தில் இதை பற்றிய செய்தி வந்திருந்தது."எகிப்தில் இருந்து வெளியேறும் கதையில் சந்தேகம்"என்ற தலைப்பில் இது வந்திருந்தது.யூத மக்கள் எகிப்தில் இருந்து வெளியேறும் கதையைப்பற்றி பைபிள் கூறுவதை உறுதிப்படுத்த இயலாது என்ற கோணத்தில் அந்த செய்தி இருந்தது.                                 
                 தொல்லியல் ஆய்வுகளைப்பற்றி பொதுவாக மக்களுக்கு எதுவும் பெரிய அளவில் தெரியாது என்ற போதிலும்,பைபிளையும் தொல்லியல் ஆய்வுகளையும் இணைத்து பேசும்பொழுது நிமிர்ந்து உட்கார்ந்து விடுவர்.அது பெரும்பாலும் ஆர்வத்தை தூண்டக்கூடியதாகவும் பலவகையான கருத்துக்களை கூறக்கூடியதாகவும் இருக்கும்.பைபிளை பற்றிய தொல்லியல் பொதுவாக இரண்டு அமைப்புகளாக உள்ளது.ஒரு அமைப்பை "minimalist" என்கிறோம்.மற்றொரு அமைப்பை "maximalists" என்கிறோம்.இந்த "minimalists" என்பவர்கள் பைபிளுக்கு வரலாறுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பொதுவாக மறுத்து விடுகின்றனர்.அதிக எண்ணிக்கையில் இருக்கும் "maximalist" என்பவர்கள் பைபிளுக்கு வரலாறுக்கும் இடையே உள்ள சில அடிப்படை ஓற்றுமைகளை ஒத்துக்கொண்டு அவற்றை ஆதரிக்கின்றனர்.                        தொல்லியல் என்பதை அறிவியலின் ஒரு அங்கமாக நாம் பார்க்கும் பொழுது, எதுவெல்லாம் தொல்லியல், எதுவெல்லாம் தொல்லியல் அல்ல,என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும.
                   தொல்லியலில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று,பழங்கால பொருட்களை தோண்டுவது.இரண்டாவது,அப்பொருட்களை பற்றி அறிந்து கொள்வது.தோண்டுவது என்பது இயந்திரத்தன்மை உடைய செயல் ஆகும்.ஆனால் தோண்டிய பொருட்களைப்பற்றி அறிந்து கொள்வது என்பது "ஆழ்ந்து படிப்பது" ஆகும்.உலகப்புகழ் பெற்ற  இரண்டு தொல்லியல் ஆய்வாளர்களிடம் ஒரே பொருளை நீங்கள் கொடுக்கும் பொழுது,இரண்டு பெரும் வெவ்வேறு கருத்துக்களை உங்களுக்கு கொடுப்பார்கள்.ஒருவேளை இரண்டு பேர்களுக்கும் இடையில் அரசியல்,தன்னைப்பற்றிய பெருமை எண்ணங்கள்,மத கருத்துக்கள் போன்றவைகளில் வேறுபாடுகள் இருக்குமாயின் முடிவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.                     

                                    ஆழ்ந்து படித்து புரிந்து கொள்ளும் வகை தொல்லியல் பிரிவில் உள்ள யாராவது ,"தொல்லியல் இவ்வாறாக நிரூபிக்கிறது....... என்று கூறுவர்களாயின் , அவர்கள் ஒரு குறிப்பிட்ட பக்கமாக சாய்கிறார்கள் என்று பொருளாகும்.அவர்கள் முழுமையான ஒரு அறிக்கையை கொடுக்க வில்லை எனலாம்."பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆய்வாளர்கள் எதை அறிந்திருந்தனரோ அதைத்தான் ரபி தனக்கு முன் உள்ளவர்களிடம் கூறினார்" என்று லாஸ் ஏன்ஜெல் டைம்ஸ் கூறும் பொழுதே,அது பைபிளுக்கு எதிரான நிலைப்பாட்டை  எடுத்திருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

                       சரி இப்பொழுது நாம் நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம்.எகிப்திலிருந்து யூத மக்கள் வெளியேறும் காலகட்டத்தை குறிக்கும் சான்றுகள் அல்லது ஆவணங்கள்  இல்லை என்பது உண்மைதான்.ஏன்?
                          வரலாறு எழுதி வைக்கப்படும் பொழுது,பண்டைக்கால மக்கள் அதை எவ்வாறு பார்த்தனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.பண்டைக்கால உலகத்தில் பொரித்து வைக்கப்பட்ட எழுத்துக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை கொண்டிருந்தன.அவைகள் தங்கள் அரசனை பெருமை படுத்தும் விதமாகவும் அவனுடைய இராணுவ வலிமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் இருக்கின்றன.
                     அசீரிய இராஜாவாகிய சனகெரிப்பினுடைய அரண்மனை சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன.கி.மு.8-ம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த படையெடுப்புகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.எதிரிகள் அழித்தொழிக்கப்பட்ட காட்சிகள் அவ்வோவியங்களில் உள்ளன(தலைகள் துண்டிக்கப்படுதல், ஈட்டிகளால் குத்தப்படுதல்  போன்ற காட்சிகள் உட்பட).சனகெரிப் மிகப்பெரும் வீரனாக அதில் காட்டப்படுகிறான்.
                     ஆனால் இதில் ஏதோ ஒன்றை நாம் காணத்தவருகிறோம்.இறந்து கிடப்பவர்களில் அசீரியர்கள் ஒருவர் கூட இல்லை என்பதுதான் அது!பண்டைக்கால மக்கள் வரலாற்றை எழுதும் விதத்துடன் இது முழுவதும் ஒத்துப்போகிறது.எதிர்மறை நிகழ்வுகள்,தோல்விகள்,தவறுகள் போன்ற எதுவுமே வரையப்படுவதும் இல்லை எழுதப்படுவதும் இல்லை.ஒரு நாடானது மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் பொழுது  அதைப்பற்றிய எதுவும் இல்லாமல் மறைக்கப்படுகின்றன.
          உண்மையான வரலாற்றை அப்படியே எழுதக்கூடியவர்களில் முதன்மையானவர் கிரேக்க எழுத்தாளராகிய ஏரோடோட்டஸ் என்பவராவார்.வரலாற்று ஆசிரியர்களின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார்.காரணம்,கிரேக்கர்களுக்கும் பெர்சியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரை எவ்வித உள்நோக்கமும் இன்றி இவர் எழுதிய விதம். இந்த போரானது, எகிப்திலிருந்து இஸ்ரேல் மக்கள் வெளியேறிய பிறகு 800 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்றது ஆகும் (கி.மு.13-ம் நூற்றாண்டு காலகட்டம்).
                          ஆகவே பண்டைய கால மக்கள் எதையுமே ஆவணப்படுத்த வில்லை என்பது பொருளல்ல.அவர்களுடைய ஆவணங்கள் அனைத்துமே தங்களுடைய பெருமையை பறைசாற்றுவதாகவே இருந்தது.உண்மைத்தன்மையை உள்ளவாரே எழுதும் பழக்கம் அவர்களிடையே இல்லை.
            மேற்கூறிய கருத்துக்கள் தொல்லியல் துறையிலும், பைபிளிலும் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது.கடைசியாக எகிப்திய மக்கள் எதை ஆவணப்படுத்த முயன்றிருக்கக்கூடும்? ஒரு சிறிய அடிமை தேசத்தினுடைய கடவுளால் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதைத்தானே! தங்களுடைய விளைச்சல்கள் சேதப்படுத்தப்பட்டதையும், தங்களுடைய ஆடுமாடுகள் கொல்லப்பட்டதையும்,தங்களுடைய தலைப்பிள்ளைகள் கொல்லப்பட்டதையும்,தங்களுடைய மன்னன் பாரோ கொல்லப்பட்டதையும்,தங்களுடைய இராணுவம் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதையும்தானே! அதை அவர்கள் செய்து இருப்பார்களா?
                            மோசே பாரோவை சிறுமைப்படுத்தினதை அவர்கள் ஆவணப்படுத்தி இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?ஏத்தியர்களுக்கும், ராம்சேஸ் II என்ற பாரோ மன்னனுக்கும் இடையே கதேஷ் வனாந்தரத்தில் ,ஓரெண்ட்ஸ் என்ற ஆற்றின் அருகே பெரும் போர் ஒன்று நடைபெற்றது.பெரும் வெற்றி பெற்றதாக இரண்டு பேருமே ஆவணப்படுத்தி உள்ளனர்.
                                                                                       பண்டையகால எழுத்துக்களில் "Torah "வானது  ஒரு தனித்தன்மை உடைய புத்தகமாக உள்ளது.தங்கள் மக்களை வெற்றிகளிலும் தோல்விகளிலும் அது காட்டியுள்ளது.யூத மக்கள்-சில சமயங்களில் அவர்களுடைய தலைவர்கள்-கலகம் செய்பவர்களாகவும்,சிலை வெளிப்படை கொண்டிருப்பவர்களாகவும்,அடிமை சந்ததிகளில் இருந்து வந்தவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர்.இதுதான் "Torah -விற்கு பெரும் நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது.இஸ்ரேல் ஸ்ங்வில் என்ற எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார்."பைபிள் இஸ்ரேல் மக்களுக்கு எதிரான புத்தகம் ஆகும்.தன்னுடைய கதையில் இஸ்ரேல் ஹீரோவாக அல்லாமல் வில்லனாகவே உள்ளான்.இதிகாசங்களில் தனித்து நிற்கிறது.அது உண்மைக்காக நிற்கின்றது,தனிமனித வழிபாட்டிற்காக அல்ல.
                               தொல்லியல் என்பது வேலைப்பளு மிக்கதும் செலவு பிடிக்கும் ஒன்றாகவும் உள்ளது.பைபிளுடன் தொடர்புடைய பல இடங்களில் சிலவற்றை மட்டுமே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
                                மிகக்குறைந்த அளவே கிடைத்திருக்கும்  தொல்லியல் சான்றுகளைக் கொண்டு முடிவுகள் எடுப்பது கடினம்.அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் உண்மையைக் கூறாமல்,"இப்படி இருக்கலாம்" என்பது போன்ற ஒரு மேலோட்டமான முடிவுகளையே கொடுக்கும்.தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள் உண்மையில் முன்னொரு காலத்தில் இருந்தன என்பதை மட்டுமே தொல்லியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.அதனால் கிடைக்கப்படாத பொருட்கள் இருந்ததே கிடையாது என்று பொருள் அல்ல.சான்றுகளுடைய பற்றாக்குறை என்பது பற்றாக்குறை இருக்கிறது என்பதற்கு சான்று அல்ல.
                                  இருந்தாலும் சில தொல்லியல் ஆய்வாளர்கள் சில கனத்த முடிவுகளை எடுக்கின்றனர்.உங்களுக்கெல்லாம் நன்றாக தெரிந்த "எரிக்கோ" என்ற பகுதியில் மிகச்சிறிய ஓர் இடத்தில உலகப்புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளரான "கேன்யன் காத்லீன்"என்பவர் ஆய்வுகளை மேற்கொண்டார்.கி.மு.1272-ல் யோசுவா அந்த இடத்தை கைப்பற்றி அவ்விடத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்களை தேடினர்.அவருக்கு ஒன்றும் கிடைக்க வில்லை.எனவே பைபிள் பொய் என்று முடிவு செய்தார்.
                                        இங்கு பிரச்சினை என்னவென்றால் அவர் ஆராய்ச்சி செய்ததோ மிகச்சிறிய பகுதியில்.அதைக்கொண்டு அவர் முடிவு எடுத்திருக்கிறார்.அந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டு இருந்தாலும் , இன்று பல ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.யோசுவா-வின் காலகட்டத்தில் எரிக்கோவில் வாழ்விடங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
                              தொல்லியல் என்பது ஒரு புதிய அறிவியல் ஆகும். தற்பொழுது கிடைத்துக்கொண்டிருக்கும் ஆவணங்கள் இன்னும் முடிவடையவில்லை.இப்பொழுதுதான்தோண்டவே ஆரம்பித்திருக்கிறோம்."Talmud "எனப்படும் வேதாகம விளக்கவுரை யூதர்களிடம் உள்ளது.இதை கருத்தில் கொள்ளாமல் "Los Angeles Times" பத்திரிக்கையானது பைபிள் வசனங்களை வெளியிட்டது ஒரு தவறான நடவடிக்கை ஆகும்.
                                        எடுத்துக்காட்டாக "Times " என்ற மற்றொரு பத்திரிக்கையானது ஒரு தகவலை வெளியிட்டது.பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுபவைகளாக உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக வெளியிட்டது.கீழ்கண்டவாறு அதை வெளியிட்டது."யாத்திரைகமம் புத்தகத்தில் ஓரிடத்தில் ,பாரோவின் தேரோட்டிகலினுடைய செத்த உடல்கள் கடற்கரைகளில் கிடந்தன"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால்  அடுத்த  இடத்தில்  "அவர்கள் கடலுக்கடியில் மூழ்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது". 
          துரதிர்ஷ்ட வசமாக "Times" பத்திரிக்கையானது "Rashi" என்ற மிகப்பெரும் பைபிள் விளக்கவுரையை படிக்கவில்லை.அவ்விளக்கவுரையில்,தேரோட்டிகள் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்பட்ட பிறகு கடலானது அவர்களை கரையில் கக்கி விட்டது என்று கூறப்பட்டுள்ளது.எதற்காக இப்படி நடந்தது?கரைகளில் ஒதுங்கியுள்ள அந்த உடல்களை பார்த்து இஸ்ரேல் மக்கள் அமைதி கொள்வதற்காகவே.ஒருவேளை உடல்கள் கரையில் ஒதுங்கா விட்டால்,மக்கள் பாரோவை நினைத்து இன்னும் பயப்படுவார்கள்.எப்படியாவது பாரோ பின்தொடர்ந்து நம்மை கொள்ளுவான் என்று நினைப்பார்கள்.ஆனால் இப்பொழுதோ செத்த உடல்களை பார்த்து நிம்மதி அடைவார்கள்.இதற்காகவே அப்படி நடந்தது.வசனங்கள் அதை உறுதி செய்கின்றன(யாத்:14:30).
                             யூத மக்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.காரணம்,அவர்கள் நியாயப்பிரமாணம் கூறும் உண்மைகளை அறிந்திருக்கின்றனர்.யாத்திராகமம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவைகள் வெறும் கதைகள்தான் என்றால்,சிலுவைப்போர்களின் போது உயிரோடு கொளுத்தப்பட்ட பொழுது அதை சகித்துக்கொண்டு வாழ்ந்தனரே அது ஏன்?வெறும் கதைக்காகவா ?இவைகள் வெறும் கதைகள் என்றால்,அவர்கள் என்றோ கிருத்துவர்களாக மாறியிருப்பார்கள்.யாத்திராகாமத்தில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மைதான் என்று நம்பியதன் காரணமாக உயிரோடு கொளுத்தப்படுதலை ஏற்றுக் கொண்டனர்.இவற்றை கதை என்பது,இந்த நம்பிக்கைக்காக உயிரை விட்ட  யூதர்களை அவமானப்படுத்துவது  போன்றதாகும்.
                             ரபியோ அல்லது சாதாரண மனிதர்களோ,யார் மோசேயின் ஐந்து புத்தகங்களை மறுக்கிறார்களோ அவர்கள் அப்புத்தகங்கள் உண்மையான வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதையும் மறுக்கிறார்கள்.
                                            3000 வருடங்களுக்கும் மேலாக யூத மக்கள் தங்கள் சந்ததிகளுக்கு யாத்திராகம வரலாற்றை உண்மையாக கூறி வருகின்றனர்.உலக வரலாற்றில் இதற்கு இணை எதுவும் இல்லை.பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு,ஆசிரியர்களிடமிருந்து  மாணவர்களுக்கு,என்று இது ஒரு முடிவில்லா தொடராக உள்ளது.
                 
    இது "https://www.aish.com" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டது.
 link: https://www.aish.com/atr/Archaeology_and_the_Exodus.html?catid=908479                         


Friday, March 22, 2019

கடவுளுடைய செய்தி உண்மையில் அன்பாக அல்லவா இருக்க வேண்டும்?

கேள்வி: நான் நியாயப்பிரமாணத்தை படிக்கும் பொழுது அதனுடைய அழகைக் கண்டு வியக்கிறேன்.என்னால் முடிந்த வரையில் அதனை கடைபிடிக்க முயல்கிறேன்.ஆனால் அதில் உள்ள ஒன்று என்னை மிகவும் குழப்புகிறது.கொடுமைகளையும் சண்டைகளையும் அது ஏன் நியாயப்படுத்துகிறது?அமலேக்கியர்களையும் கானானியர்களையும் நாம் ஏன் முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும்? மரண தண்டனை ஏன் கொடுக்கப்படுகிறது? கடவுளுடைய செய்தி உண்மையில் அன்பாக அல்லவா இருக்க வேண்டும்?எனக்கு ஏதாவது புரிய வில்லையா? நீங்கள் கொடுக்க இருக்கும் விளக்கத்துக்கு முன்னதாகவே என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதில்: நீங்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் விட வில்லை.ஒருவேளை அவைகள் உங்களுக்கு சரி என்று பட்டிருந்தால்தான் எனக்கு ஆச்சரியம்.உண்மையில் மேற்கூறிய செய்திகள் உங்களை பாதிக்கிறது என்று நீங்கள் கூறியதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல ஆத்மாவைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை  அது காட்டுகிறது.நியாயப்பிரமாணம் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு இனிப்பானது அல்ல.பலரும் நினைப்பது போல் உண்மை அவ்வளவு இனிமையானது அல்ல.காண்பதற்கு மிகவும் அழகான முகங்கள் கூட நாம் பார்ப்பது போல் உண்மையில் அவ்வளவு அழகானது அல்ல.பதிலாக பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்ததோ அதே அளவு கசப்பும் அது பல நேரங்களில் கொண்டிருக்கும்.அழகு என்று நாம் நினைப்பதை நெருங்கி சென்று பார்த்தால் நரகம் போன்ற அசிங்கத்தைக் கொண்டிருக்கும்.நியாயப்பிரமாணம் என்பது மிகவும் ஆழமான உண்மையாகும்.ஒரு மனிதனுடைய ஆழ்மனதை அது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.மனிதனுடைய ஆழ் மனது என்பது மிகவும் குழம்பிப் போய்  இருக்கும் குட்டை போன்றது.முப்பது வருடங்களுக்கு மேலாக என்னை குழப்பிக் கொண்டிருந்த ஒரு செய்தியைத்தான் நீங்கள் இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.ஒரு சிறிய நிகழ்ச்சி எனக்கு ஒரு தீர்வை கொடுத்தது போன்று தோன்றியது.ஆனால் அதனுடன் நான் திருப்தி பட்டுக்கொன்டேன் என்று என்னால் உறுதியாகக் கூற இயலாது.நியாயப்பிரமணத்தைக் குறித்து திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேனா  அல்லது என்னை உருவாக்கியவரும் நியாயப்பிரமாணத்தை உருவாக்கியவரும்(இந்த உலகத்தையும் கூடத்தான்)விரும்புகிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை.நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளை நாம் ஒத்துக்கொண்டுதான் வாழ வேண்டும் என்றால் நாம் எப்படிப்பட்ட உலகத்தில் வாழ்வோம்?ஆனால் நாம் அதை ஒத்துக்கொண்டுதான் வாழ வேண்டும் என்பதை அந்த நிகழ்ச்சி எனக்கு சுட்டிக்காட்டியது.
                                 "Tai Chi" என்ற சீன சண்டைக்கலையை நான் கற்றுக்கொண்டிருந்தேன்.ஒரு அமைதியான,நல்ல மனிதரான சீன குருவினுடைய மாணவரிடமிருந்து அக்கலையை நான் கற்றுக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் நீண்ட கத்தி ஒன்றை அவர் கொண்டு வந்தார்.அக்கத்தியை  கொண்டு சுழற்ற வேண்டிய வழி  முறைகளை சொல்லிக்கொடுப்பதற்காக அவர் அதைக் கொண்டு வந்தார்.அவர் தனி ஒரு ஆளாக அதை செய்து காண்பித்தார்.அவர் செய்த விதம் மிகவும் அருமையாக இருந்தது.ஆனால் அதே அளவுக்கு கொடூரமாகவும் இருந்தது.
                                     இந்த "Tai Chi"என்ற சண்டை காலையில் இவ்வகையான கத்தி சுழற்றல்கள் அவசியமா என்று நாங்கள் அவரிடம் கேட்டோம்.மிகவும் சாதாரணமான அடிப்படை கத்தி அசைவுகள் கூட எதிராளிக்கு மிகவும் வலியை  தரக்கூடிய காயத்தை அது ஏற்படுத்தும்.இவ்வகையான அசைவுகள் அக்கலையில் இருக்க வேண்டியது அவசியமா?
                                                   மேற்கூறிய வகையான அசைவுகள் இல்லாத ஒரு அமைதியான "Tai Chi" கலையை உருவாக்க சில அமெரிக்க இளஞ்சர்கள் முயன்றதாக அவர் எங்களிடம் கூறினார்.அனல் அவருடைய குரு இதை கேட்ட பொழுது அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்.
                                      "Tai Chi" கலை என்பது "ஒருமுகப்படுத்தல்" மற்றும் "சமநிலைப்படுத்துதல்" ஆகும்.வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.உண்மையில் ஒரு மனிதனுக்கு பின் வாங்கவும் தெரிந்திருக்க வேண்டும் தாக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.அவனுக்கு,ஒரு முயலாகவும் இருக்க தெரிய வேண்டும்,ஒரு சிங்கமாகவும் சிங்கமாகவும் இருக்க தெரிந்திருக்க வேண்டும்.அப்பொழுதே வாழ்கை சமநிலை அடைந்திருக்கும் மற்றும் நன்றாகவும் இருக்கும், என்று அவர் கூறினார்.
                                    மனிதர்களிலேயே மிகவும் அறிவாளியாகிய சாலொமோனுடைய பிரசங்கியின் வார்த்தைக்கு அவருடைய வார்த்தை ஒத்துப்போனது.

1."ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு"

    2.பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;

    3. கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு;

    4. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;

    5. கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;

    6. தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு
    7.கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு;
    8. சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.

வாழ்கை என்பது ஒரு நிலையிலேயே இருக்காது.அழகிற்கும் உண்மைக்கும் இடையே உள்ள தொடர்பை போல வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும்.
               இன்றைய இஸ்ரேலில் இதை நான் இன்று பார்க்கிறேன்.இந்த சமநிலைப்படுத்தும் திறன் வேண்டும்.இப்படி இல்லாமல் வாழ  இயலாது.ஒரே நேரத்தில் புறாவாகவும்  இருக்க தெரிய வேண்டும் கழுகாகவும்  இருக்க தெரிய வேண்டும்.அமைதிக்காகவும் போருக்காகவும் இளைஜர்களை தயார் செய்கிறோம்.தீர்க்கதரிசிகள் கூறிய மேசியாவின் காலங்களில்,ஓநாயானது ஆட்டுக்குட்டியுடனே படுத்துக்கொள்ளும்.ஆனால் ஓநாய் ஓநாயாகவே இருக்கும்.அதுபோல ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டியாகவே இருக்கும்.


"https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டது.

Saturday, March 16, 2019

கடவுள் எப்படிப்பட்ட தோற்றம் கொண்டிருப்பார்?

கேள்வி:என்னால் பதில் சொல்ல முடியாத இறையியல் கேள்விகளை என்னுடைய குழந்தைகள் கேட்டுக் கொன்டே இருக்கின்றனர்."கடவுள் எப்படிப்பட்ட  தோற்றம் கொண்டிருப்பார்?" என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக என்னுடைய ஐந்து வயது குழந்தை கூறுகிறான்.எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை...
பதில்:சில சமயங்களில் குழந்தைகளுக்கு கூற வேண்டிய சரியான பதில் எதுவென்றால்,"எனக்கு தெரிய வில்லை என்பதே".கடினமான சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக அரைகுறை பதிலைக் கூறுவதை விட,இக்கேள்விக்கு பதில் கூற தன்னால் இயலாது என்று வெளிப்படையாக இருப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நாம் நிறைய கற்றுக் கொடுக்கிறோம்.
                             சிலவற்றைப்பற்றி உங்களுக்குத் தெரியாத பொழுது, உங்களுக்கு தெரியும் என்று காட்டி கொள்வதற்காக ஏதாவது ஒரு அரைகுரைப் பதிலை நாங்கள் கூறும் பொழுது என்ன நடக்கிறது என்றால்,"தெரியவில்லை என்று உண்மையாக இருப்பதை விட தெரியும் என்று காட்டிக்கொள்வது மிகவும் அவசியம் என்று நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிறீர்கள்.அது மிகவும் கெட்ட செயல்  ஆகும்."எனக்கு தெரிய வில்லை"என்று கூறுவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் "ஏதாவது ஒன்று தெரியாமல் இருப்பதும் சரியான செயலே என்று நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.அப்படி உண்மையாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை என்றும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கூறுகிறீர்கள்.
                                 எனக்கு தெரிய வில்லை என்று நீங்கள் கூறுவதன் மூலம் நீங்கள் கூறும் பதில்கள் எல்லாம் உண்மையான பதில்களே என்றும் உங்கள் குழந்தைக்கு கூறுகிறீர்கள்.உங்களுக்கு தெரிந்தவைகளை மட்டும் நீங்கள் கூறுவதால் நீங்கள் கூறும் பதில்களுக்கு மற்றவர்கள் கூறும் பதில்களை விட மிகவும் முக்கியத்துவம் உண்டு.
                                           இன்னும் கூறப்போனால்,"அருமையான கேள்வி,இப்பொழுது எனக்கு பதில் தெரிய வில்லை,ஆனால் முயற்சி செய்து கண்டுபிடித்து கூறுகிறேன்"என்று கூறுவீர்களானால்,"படிப்பது என்பது ஒருபோதும் ஓய்ந்து போவது இல்லை,யார் வேண்டுமானாலும் படிக்கலாம்,பெற்றோர்கள் கூட படிக்கலாம்",என்று உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்.உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் மிகப்பெரிய பாடம் இதுவே.நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு பதிலைக் கொடுத்திருக்க மாட்டீர்கள்,ஆனால் மேலும் கேள்விகள் கேட்பதற்கு அவனை உந்தியிருப்பீர்கள்.

நல்ல ஓய்வு நாள் அமைய வாழ்த்துக்கள்.
Rabbi Moss

பின்குறிப்பு: "கடவுள் எப்படிப்பட்ட  தோற்றம் கொண்டிருப்பார்?" என்ற உங்கள் குழந்தையின் கேள்விக்கு என்னுடைய பதில், "நல்ல கேள்வி, ஆனால் எனக்கு தெரியவில்லை".

(இந்த கேள்வி பதில் "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்தது  இரா.இருதயராஜ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது ஆகும்.)

சீனாய் மலையில் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது என்ன?

கேள்வி: சீனாய்  மலையில் கடவுளால்  வெளிப்படுத்தப்பட்டது என்பது "போதை பொருட்களின் விளைவால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மாயத்தோற்றமே " அன்றி வேறு எதுவும் அல்ல என்று இஸ்ரேலில் உள்ள ஒரு பேராசிரியர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். இது ஒரு மிக மோசமான கருத்து என்று நினைக்கிறேன்,ஆனாலும் என்னை யோசிக்க வைக்கிறது.உண்மையில் மோசேயிடம் பேசியது கடவுள்தான் என்றும் மனதை மாற்றக்   கூடிய அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட  ஒரு பெரிய புகைக்காடு அல்ல என்றும் எவ்வாறு நாம் தெரிந்து கொள்வது?

பதில்:நானும் அக்கட்டுரையைப் படித்தேன்.அக்கட்டுரையை அவர் எழுதும் பொழுது அவர் என்ன புகைத்துக் கொண்டிருந்தார் என்று எனக்கு சரியாக தெரிய வில்லை.

               ஒரு வெளிப்படுத்துதல் என்பது கடவுளிடம் இருந்து வந்ததா இல்லை வேறு ஏதாவது மனித கற்பனைகளில் இருந்து  வந்ததா  என்பதைத் தெரிந்து கொள்ள வழி முறைகள் உள்ளன.முதலாவது அவ்வாறு வெளிப்படுத்திய செய்திகளில் உள்ள கருத்துக்களை ஆராய்வதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்களோ அதை கடவுள் ஒருபோதும் கூறுவது இல்லை.மனிதர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது அக்கருத்துக்கள் நமக்கு இனிப்பாகவும் வசதியாகவும் இருக்கும்.ஒருவேளை கடவுள்தான் இக்கருத்துக்களை கூறுகிறார் என்றால், அது எப்படி இருந்திருக்கும்? நாம் நம்மை எதைச் செய்ய வேண்டும் என்று ஒருபொழுது கூட கேட்டிருக்க மாட்டோமோ அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று பெரும்பாலும் அவர் கூறுவார்.
                இவ்வாறு கற்பனை செய்து கொள்ளுங்கள்.மோசே  மலையில் இருந்து கீழிறங்கி வந்த பின் இவ்வாறு கூறினான்,"நல்லது நண்பர்களே கடவுள் கூறுவது இதுதான்.நாம் இப்போ எப்படி இருக்கிறோமோ  அதுவே  நல்லது என்று கடவுள் விரும்புகிறார்.நீங்க என்னவெல்லாம்  சாப்பிட  பிரியப்படுறீங்களோ  அதையெல்லாம் சாப்பிடுங்க. உங்களோட உறவு முறைகளில்  மிகவும் தாராளமாக இருங்க.நீங்க சந்தோசமா இருக்க என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் செய்ங்க.அந்த மாதிரி ஒரு வாழ்க்கையை வாழுங்கள்.வியாபாரங்களில் உண்மையாக இருப்பது,அப்புறம் பக்கத்துக்கு வீட்டுக் காரங்களோட அன்போட இருப்பது போன்ற சின்ன காரியங்களை பத்தி கவலை படாதீங்க.உங்க இருதயத்தில்  உண்மையா இருந்தீங்கனா அதுவே போதும்.நாம இந்த உலகத்தில இருப்பதே நாம நினைச்ச படி வாழ்வதற்குத்தான்.சின்ன சின்ன ஒழுக்க காரியங்கள் பத்தியெல்லாம் கவலைப் படுவதற்கு இல்ல".
                                   இந்த செய்தியை மோசே ஒருவேளை கொண்டு வந்திருந்தால் இக்கருத்துக்களை கடவுள் கூறியிருக்க மாட்டார் என்ற நமது சந்தேகம்  சரியாகவே இருந்திருக்கும்.ஆனால் நமக்கு வசதியாக இருக்கும் செய்தியை மோசே கொண்டு வரவில்லை.பதிலாக மோசே மலையில் இருந்து கீழிறிங்கி வந்து கீழ்கண்ட செய்தியைக் கூறினான்(வார்த்தைகள் உள்ளவாரே  கொடுக்கப்படவில்லை).
                                                 "நல்லது நண்பர்களே ,இதுதான் உடன்படிக்கை.கடவுள் இந்த உலகத்தை முடிக்கப் படாத  ஒன்றாகத்தான் படைத்திருக்கிறாராம்.மீதியுள்ள பகுதியை நாம்தான் முடிக்க வேண்டியிருக்கிறது .நாம் நமக்காக இங்கே இருக்க வில்லை.மிகவும் மேலான நோக்கத்திற்காக இங்கே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம்.இயற்கையாகவே நாம் சுயநலம் உடையவர்களாக இருக்கிறோம்.ஆனால் சுயநலம் அற்றவர்களாக மாற வேண்டியிருக்கிறது.நாம் இரத்தமும் சதையும் உடையவர்களாக இருக்கிறோம் மேலும் நம்மை திருப்தி படுத்துவதற்காகவே நாம் வாழ்கிறோம்.நாம் இன்னும் மேலானவர்களாக மற்றவர்களுக்காக கவலைப்படக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது.ஏழ்மையில் உள்ளவர்களையும் திக்கற்றோர்களையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.நம்மை சுற்றி உள்ளோர் நம்மை வெறுத்தாலும் நாம் அவர்களை அன்பாய் நடத்த வேண்டி உள்ளது.நாம் நாள்ளது செய்யும் மனநிலைமையில் இல்லா  விட்டாலும் கூட நல்லவைகளையே செய்ய வேண்டி உள்ளது.மிகப் பெரும் வேலை நம் முன்னே உள்ளது.நாம் நம்மை மாற்றுவதன் மூலம் உலகத்தை மாற்ற  வேண்டி உள்ளது.அனைத்து காரியங்களும் நாம் நினைத்த படி நடக்கும் என்ற  உறுதியை  கடவுள் கொடுக்க வில்லை.இதுதான் நம்முடைய வேலை.எழுந்திருங்கள் ,வேலையை பார்ப்போம்".
                                          நியாயப்பிரமாணத்தின் மூலம் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பாக்கிறாரோ அது மிகப்பெரியது.அது நம்முடைய அடித்தளத்தையே அசைக்கிறது.கடவுள் சினாய் மலையில் இறங்கிய பொழுது அங்கே அவரிடமிருந்தே,வேறு யாரிடமிருந்தோ அல்ல,   மோசே நியாயப்பிரமாணத்தை வாங்கினான் என்பதற்கு இதுவே சாட்சி.நியாயப்பிரமாணம் என்பது உயர்ந்த செய்திகளை அல்லது கருத்துக்களை பெறுவது என்பது அல்ல உயர்வான வாழ்க்கையை வாழ்வது என்பது ஆகும்.

Rabbi Moss
(இந்த கட்டுரையானது "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால்  மொழியாக்கம் செய்யப்பட்டது ஆகும்.)

Saturday, March 9, 2019

பரிணாமக் கொள்கை vs படைப்பு கொள்கை

           கேள்வி:மனிதர்களின் தோற்றம் குறித்து நானும் என்  மகனும்  பேசிக்கொண்டிருந்தோம்.குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கொள்கை அவனை மிகவும் பாதித்திருந்தது.நாம்  அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளிடம் இருந்துதான் தோன்றினோம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.ஆனால் நானோ, டார்வினுடைய பரிணாமக் கொள்கையை நம்பினேன்.அது போதுமான அளவுக்கு மனிதர்களுடைய தோற்றம் பற்றி விளக்குகிறது என்று நம்புகிறேன்."படைப்பு கொள்கை"என்பதை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு இன்னும் சொல்லிக் கொடுப்பதை விரும்ப வில்லை."படைப்பு கொள்கை"என்பது ஒரு புராண கதையே.இந்த பிரச்னை  ஒரு வட்டம் போல சுற்றிக் கொன்டே இருக்கும்.சிறிது விளக்கம் இதில் நீங்கள் கொடுக்க இயலுமா?

பதில்: 
                           ரபி ஒருவர் இஸ்ரேலுக்கு வானூர்தியில் போய்க்கொண்டிருக்கும் பொழுது அவருக்கு பக்கத்தில் "ஆத்திகன்"என்று தன்னை சொல்லிக்கொண்ட ஒருவர் அவருக்கு பக்கத்தில் உட்க்கார்ந்து இருந்தார்.பயணம் முழுமைக்கும் இருவரும் பேசிக்கொன்டே வந்திருந்தனர்.

                              பக்கத்துக்கு வரிசையில் அமர்ந்திருந்த அவருடைய பேரக்குழந்தை  அவ்வப்போது அவரிடம் வந்து குடிப்பதற்கு எதையாவது கொண்டு வந்தது.மேலும் ஏதாவது வேண்டுமா என்றும் கேட்டுக்கொன்டே இருந்தது.பல தடவை இது நடந்ததை பார்த்த அந்த ஆத்திகன் பெருமூச்சு விட்டு, "என்னுடைய பேரக்குழந்தைகளும் இவ்வாறு மரியாதையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு "ஹலோ"சொல்வது கூட அரிது.இதனுடைய ரகசியம் என்ன?" என்று கேட்டார்.

                                    ரபி இவ்வாறு கூறினார்."கடவுள் உருவாக்கிய ஆதாம் ஏவாள் இவர்களுக்கு இரண்டு தலைமுறைகளுக்கு பக்கத்தில் நான் இருப்பதாக என்னுடைய பேரக்குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.எனவே எப்பொழுதும் அவர்கள் என்னை அன்போடு கவனிக்கின்றனர்.ஆனால் நீங்கள் உங்கள் பேரக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் "பரிணாமக் கொள்கைப் படி குரங்குகளுக்கு இரண்டு தலைமுறை பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.எனவே உங்களை அவர்கள் ஏன் கவனிக்க வேண்டும்?என்பதை நினைத்து பாருங்கள்."

                                     நம்பிக்கைகள் விளைவுகளை கொண்டிருக்கின்றன.குழந்தைகள்  மரியாதையுடன் இருப்பது இல்லை என்றும் முதியவர்களை மரியாதையுடன் நடத்துவதில்லை என்றும் நீங்கள் ஏன் நினைக்குறீர்கள். பாரம்பரியங்கள்  மறக்கப்பட்டு விட்டது என்றும் ஏன் நினைக்குறீர்கள்? புதிய கல்விமுறைகளின் விளைவு இது இல்லையா? நம்முடைய குழந்தைகள் வேறு யாருமல்ல , அவர்கள் ஒரு முன்னேறிய விலங்கினமே என்று நாம் அவர்களுக்கு கற்று கொடுக்கும் பொழுது அதற்கேற்றவாரே அவர்கள் செயல் படுவார்கள்.தங்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேறு யாருமல்ல தங்களினும் மிகவும் கீழான பழங்கால  விலங்குகளே என்றுதான் அக்குழந்தைகள் நினைப்பார்கள்.


                         நம்முடைய நம்பிக்கைகள் எவ்விதமான தாக்கத்தை எடுத்தும் என்பதைப் பற்றிய அறிவு நமக்கிருக்க வேண்டும்.மனித உருவாக்கம் ஒரு விபத்தே அல்லது ஒரு விபத்தின் மூலம் மனித உருவாக்கம் நிகழ்ந்தது என்று நீங்கள் நம்பினால் வாழ்க்கை என்பதற்கு எந்த பொருளும் இருக்க போவது இல்லை.எப்படியோ நடந்து விட்டது என்பதில் எந்த பொருளும் இல்லை.அவ்வப்போது அங்கங்கே நடக்கும்  சிறு வெடிப்புகளிலோ அல்லது ஜீன்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களிலோ எந்த நோக்கமும்  இருப்பது இல்லை.என்னுடைய வாழ்க்கைக்கோ அல்லது உங்களுடைய வாழ்க்கைக்கோ அல்லது மனித குலா வ்ரற்றுக்கோ எந்த முக்கியத்துவமும் இருக்கப்போவது இல்லை.நான் ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்கிறேனா அல்லது கேட்ட வாழ்க்கையை வாழ்கிறானா என்பதில் எந்த பொருளோ அல்லது வித்தியாசமோ இருக்க போவது இல்லை.எப்படியாயினும் அனைத்தும் ஒரு மிகப் பெரிய விபத்தே . 

                            நாம் ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருந்தால் மட்டுமே  நமக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.ஒரு நோக்கம் கொண்டிருப்பவரால் நாம் உருவாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.நம்முடைய குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றனர் என்று நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது  மட்டுமே தாங்கள் விலங்குகளை காட்டிலும்  மேலானவர்கள் என்றும் தங்களிடமிருந்து மேலானவர்கள் எதிர்பார்க்கப் படுகிறது என்றும் அவர்கள் உணருவார்கள்.ஆதாம் ஏவாள்  கதை உண்மை என்பதினால் மட்டும் கற்றுக்கொடுக்க வேண்டியது இல்லை ஒழுக்க  வாழ்க்கைக்கு அதுதான் அடிப்படை என்பதினாலும் அதை நாம் அவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டியது உள்ளது.

                                     படைப்புக் கொள்கை மற்றும் டார்வினுடைய பரணமாக் கொள்கை இரண்டுக்குமே நம்பிக்கை தேவைப் படுகிறது.ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார் என்பதை ஒத்துக்கொள்வதற்கு  நம்பிக்கை தேவைப்படுகிறது.ஒரே ஒரு செல் ஒன்று பல ஆயிரக்கணக்கான முறை உருமாற்றம் பெற்று கடைசியாக மனிதன் வந்தான் என்று ஒத்துக்கொள்வதற்கும் நம்பிக்கை தேவைப் படுகிறது.ஆனால் இந்த இரண்டில் ஒன்று மட்டுமே ஒழுக்க வாழ்வை கட்டாய படுத்துகிறது.என்னுடைய குழந்தைகள் அதனைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் .

Rabbi Moss

(தமிழில் இது "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.)


எரேமியா :31:31-34 ல் கூறப் பட்டுள்ள வசனம் புதிய ஏற்பாட்டின் மூலம் நிறைவேறிய தீர்க்க தரிசனமா?

எரேமியா :31:31-34 ல் கூறப் பட்டுள்ள வசனம் புதிய ஏற்பாட்டின் மூலம் நிறைவேறிய தீர்க்க தரிசனமா?






                          "புதிய உடன்படிக்கை" என்று எரேமியாவில் கூறப்பட்டுள்ள வார்த்தையின் பொருள் என்ன? நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

 விடை:

                       எரேமியா  எதைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறார் என்பதின் உண்மையான பொருளை நாம் புரிந்து கொள்ள தவறினால் "புதிய உடன்படிக்கை" என்ற வார்த்தைக்கு பொருளே இல்லாமல்  போய் விடும். "பழைய உடன்படிக்கை"யின்  புதுப்பித்தலைப் பற்றி இந்கு அவர் பேசுகிறார்.அதாவது பழைய உடன்படிக்கையானது புதுப்பிக்கப் படுகிறது.புதுப்பிக்கப் பட்டு அது தன்னுடைய உண்மையான தன்மையை, தீவிரத்தை  திரும்பப் பெறுகிறது.முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, பழைய உடன்படிக்கை என்பது இடையில் மீறப் படுவதற்கோ அல்லது வேண்டாம் என்று கைவிடப்படுவதற்க்கோ அல்ல.அது எக்காலத்துக்கும் உரியது.

                                         லேவி:26:44,45.
                   
                கடவுளுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் இடையே உள்ள அந்த பழைய உடன்படிக்கை அந்த எக்காலத்துக்கும் உரியது என்றும் நிரந்தரமாக உள்ள ஒன்றாகும் என்று திருமறையில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                            ஆதி:17:7,13,19
                                                            சங்:105:8,
                                                            சங் :10:1
                                                           1 நாளா:16:13-18
                      
                    எரேமியா   கூறும்  அந்த "உடன்படிக்கையை" பற்றி யூதர்களின் வேதாகமம் கூறுவதற்கு அப்படியே எதிராக கிறித்தவர்களின் வேதாகமம் கூறுகின்றது. எபி:8:13  இவ்வாறு கூறுகிறது,


   "புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது"
                                  ஆனால் இதற்க்கு முற்றிலும் வேறுவிதமாக வேதாகமம் கீழ்கண்டவாறு கூறுகிறது.

"அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்" -(சங் :111:7-8)
  "புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது." - (ஏசா :40:8).
                           எரேமியா-வில் கூறப்பட்டுள்ள புதிய உடன்படிக்கை என்பது தற்போது நடைமுறையில் உள்ள உடன்படிக்கைக்கு பதிலாக வேறு ஒரு உடன்படிக்கை என்று பொருள் அல்ல. தற்போது உள்ள அதே உடன்படிக்கையை மேலும் தீவிரப்படுத்துதல் அல்லது இன்னும் முக்கியத்துவப்படுத்துதல் என்பது போன்ற பேச்சு வழக்கில் அவர் பேசுகிறார்.


(இந்த கட்டுரையானது "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து எடுக்க பட்டு இரா.இருதயராஜ்  மொழிபெயர்க்கப் பட்டது ஆகும்.)
                    
                                    

My Posts