யாத்திராகமம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி
கேள்வி: யூத மார்க்கத்தில் ஆர்வம் காட்டக்கூடிய ஒருவரை எனக்குத் தெரியும்.ஆனால் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் யூத மார்க்கத்தை பார்க்க விரும்புகிறார்.அவர் மிகவும் புத்தி கூர்மை உடையவர்.கணித துறையில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்.
ஒருவேளை நான் யாத்திராகமம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவைகளை வரலாற்றின் அடிப்படையில் நிரூபித்தால் யூத மார்க்கத்தை உண்மையிலேயே பின்பற்ற முயல்வதாக என்னிடம் சவால் விட்டிருக்கிறார்.வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையிலும் தொல்லியல் ஆய்வாளர்களின் பார்வையிலும் ,யூதர்கள் ஒருபோதும் எகிப்து நாட்டில் இருந்த பாரோக்களின் கீழ் அடிமைகளாக இருந்தது இல்லை,அதற்கான எந்த ஒரு சான்றுகளும் இல்லை என்கிறார்.எகிப்திலிருந்து கிடைத்த ஆய்வு பொருட்களும் இதை நிரூபிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்கிறார்.
ஆய்வு கட்டுரைகளின் மூலம் கிடைக்கும் தரமான சான்றுகளை என்னுடைய நண்பர் தேடுகிறார்.வெள்ளை தாடியுடன் இருக்கும் ரபி ஒருவர் அவருடைய வேதாகமத்தில் இருந்து எதையாவது எடுத்து காட்டுவதை என் நன்பர் விரும்ப வில்லை.அப்படிப்பட்ட சான்றுகள் ஏதாவது உங்களிடம் உள்ளனவா?
மற்றொரு ரபி பதில் கூறுகிறார்: என்னுடைய தாடி வெள்ளையாக இல்லாததினால் நான் பதில் கூற தகுதி இருப்பதாக நினைக்கிறேன்.யூத உலகத்தில் 2001ல் மிகப்பெரும் விவாதம் உண்டானது.இது எப்பொழுது நடந்தது என்றால்,அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செலில் ரபி David Wolpe என்பவர் ,"எகிப்தில் இருந்து வெளியேறும் நிகழ்வு உண்மையில் நடைபெற்றிருந்தால் அது பைபிளில் விவரிக்கப்பட்ட மாதிரி நடைபெற்று இருக்காது"என்று கூறிய பிறகு இது நடைபெற்றது."Conservative Sinai Temple" என்ற இடத்தில் சுமார் 2000 பேருக்கு முன்னிலையில் இதை அவர் கூறினார்."Los Angeles Times"ன் முன்பக்கத்தில் இதை பற்றிய செய்தி வந்திருந்தது."எகிப்தில் இருந்து வெளியேறும் கதையில் சந்தேகம்"என்ற தலைப்பில் இது வந்திருந்தது.யூத மக்கள் எகிப்தில் இருந்து வெளியேறும் கதையைப்பற்றி பைபிள் கூறுவதை உறுதிப்படுத்த இயலாது என்ற கோணத்தில் அந்த செய்தி இருந்தது.
தொல்லியல் ஆய்வுகளைப்பற்றி பொதுவாக மக்களுக்கு எதுவும் பெரிய அளவில் தெரியாது என்ற போதிலும்,பைபிளையும் தொல்லியல் ஆய்வுகளையும் இணைத்து பேசும்பொழுது நிமிர்ந்து உட்கார்ந்து விடுவர்.அது பெரும்பாலும் ஆர்வத்தை தூண்டக்கூடியதாகவும் பலவகையான கருத்துக்களை கூறக்கூடியதாகவும் இருக்கும்.பைபிளை பற்றிய தொல்லியல் பொதுவாக இரண்டு அமைப்புகளாக உள்ளது.ஒரு அமைப்பை "minimalist" என்கிறோம்.மற்றொரு அமைப்பை "maximalists" என்கிறோம்.இந்த "minimalists" என்பவர்கள் பைபிளுக்கு வரலாறுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பொதுவாக மறுத்து விடுகின்றனர்.அதிக எண்ணிக்கையில் இருக்கும் "maximalist" என்பவர்கள் பைபிளுக்கு வரலாறுக்கும் இடையே உள்ள சில அடிப்படை ஓற்றுமைகளை ஒத்துக்கொண்டு அவற்றை ஆதரிக்கின்றனர். தொல்லியல் என்பதை அறிவியலின் ஒரு அங்கமாக நாம் பார்க்கும் பொழுது, எதுவெல்லாம் தொல்லியல், எதுவெல்லாம் தொல்லியல் அல்ல,என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும.
தொல்லியலில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று,பழங்கால பொருட்களை தோண்டுவது.இரண்டாவது,அப்பொருட்களை பற்றி அறிந்து கொள்வது.தோண்டுவது என்பது இயந்திரத்தன்மை உடைய செயல் ஆகும்.ஆனால் தோண்டிய பொருட்களைப்பற்றி அறிந்து கொள்வது என்பது "ஆழ்ந்து படிப்பது" ஆகும்.உலகப்புகழ் பெற்ற இரண்டு தொல்லியல் ஆய்வாளர்களிடம் ஒரே பொருளை நீங்கள் கொடுக்கும் பொழுது,இரண்டு பெரும் வெவ்வேறு கருத்துக்களை உங்களுக்கு கொடுப்பார்கள்.ஒருவேளை இரண்டு பேர்களுக்கும் இடையில் அரசியல்,தன்னைப்பற்றிய பெருமை எண்ணங்கள்,மத கருத்துக்கள் போன்றவைகளில் வேறுபாடுகள் இருக்குமாயின் முடிவுகள் இன்னும் மோசமாக இருக்கும்.

ஆழ்ந்து படித்து புரிந்து கொள்ளும் வகை தொல்லியல் பிரிவில் உள்ள யாராவது ,"தொல்லியல் இவ்வாறாக நிரூபிக்கிறது....... என்று கூறுவர்களாயின் , அவர்கள் ஒரு குறிப்பிட்ட பக்கமாக சாய்கிறார்கள் என்று பொருளாகும்.அவர்கள் முழுமையான ஒரு அறிக்கையை கொடுக்க வில்லை எனலாம்."பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆய்வாளர்கள் எதை அறிந்திருந்தனரோ அதைத்தான் ரபி தனக்கு முன் உள்ளவர்களிடம் கூறினார்" என்று லாஸ் ஏன்ஜெல் டைம்ஸ் கூறும் பொழுதே,அது பைபிளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
சரி இப்பொழுது நாம் நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம்.எகிப்திலிருந்து யூத மக்கள் வெளியேறும் காலகட்டத்தை குறிக்கும் சான்றுகள் அல்லது ஆவணங்கள் இல்லை என்பது உண்மைதான்.ஏன்?
வரலாறு எழுதி வைக்கப்படும் பொழுது,பண்டைக்கால மக்கள் அதை எவ்வாறு பார்த்தனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.பண்டைக்கால உலகத்தில் பொரித்து வைக்கப்பட்ட எழுத்துக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை கொண்டிருந்தன.அவைகள் தங்கள் அரசனை பெருமை படுத்தும் விதமாகவும் அவனுடைய இராணுவ வலிமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் இருக்கின்றன.
அசீரிய இராஜாவாகிய சனகெரிப்பினுடைய அரண்மனை சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன.கி.மு.8-ம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த படையெடுப்புகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.எதிரிகள் அழித்தொழிக்கப்பட்ட காட்சிகள் அவ்வோவியங்களில் உள்ளன(தலைகள் துண்டிக்கப்படுதல், ஈட்டிகளால் குத்தப்படுதல் போன்ற காட்சிகள் உட்பட).சனகெரிப் மிகப்பெரும் வீரனாக அதில் காட்டப்படுகிறான்.
ஆனால் இதில் ஏதோ ஒன்றை நாம் காணத்தவருகிறோம்.இறந்து கிடப்பவர்களில் அசீரியர்கள் ஒருவர் கூட இல்லை என்பதுதான் அது!பண்டைக்கால மக்கள் வரலாற்றை எழுதும் விதத்துடன் இது முழுவதும் ஒத்துப்போகிறது.எதிர்மறை நிகழ்வுகள்,தோல்விகள்,தவறுகள் போன்ற எதுவுமே வரையப்படுவதும் இல்லை எழுதப்படுவதும் இல்லை.ஒரு நாடானது மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் பொழுது அதைப்பற்றிய எதுவும் இல்லாமல் மறைக்கப்படுகின்றன.
உண்மையான வரலாற்றை அப்படியே எழுதக்கூடியவர்களில் முதன்மையானவர் கிரேக்க எழுத்தாளராகிய ஏரோடோட்டஸ் என்பவராவார்.வரலாற்று ஆசிரியர்களின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார்.காரணம்,கிரேக்கர்களுக்கும் பெர்சியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரை எவ்வித உள்நோக்கமும் இன்றி இவர் எழுதிய விதம். இந்த போரானது, எகிப்திலிருந்து இஸ்ரேல் மக்கள் வெளியேறிய பிறகு 800 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்றது ஆகும் (கி.மு.13-ம் நூற்றாண்டு காலகட்டம்).
ஆகவே பண்டைய கால மக்கள் எதையுமே ஆவணப்படுத்த வில்லை என்பது பொருளல்ல.அவர்களுடைய ஆவணங்கள் அனைத்துமே தங்களுடைய பெருமையை பறைசாற்றுவதாகவே இருந்தது.உண்மைத்தன்மையை உள்ளவாரே எழுதும் பழக்கம் அவர்களிடையே இல்லை.
மேற்கூறிய கருத்துக்கள் தொல்லியல் துறையிலும், பைபிளிலும் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது.கடைசியாக எகிப்திய மக்கள் எதை ஆவணப்படுத்த முயன்றிருக்கக்கூடும்? ஒரு சிறிய அடிமை தேசத்தினுடைய கடவுளால் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதைத்தானே! தங்களுடைய விளைச்சல்கள் சேதப்படுத்தப்பட்டதையும், தங்களுடைய ஆடுமாடுகள் கொல்லப்பட்டதையும்,தங்களுடைய தலைப்பிள்ளைகள் கொல்லப்பட்டதையும்,தங்களுடைய மன்னன் பாரோ கொல்லப்பட்டதையும்,தங்களுடைய இராணுவம் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதையும்தானே! அதை அவர்கள் செய்து இருப்பார்களா?
மோசே பாரோவை சிறுமைப்படுத்தினதை அவர்கள் ஆவணப்படுத்தி இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?ஏத்தியர்களுக்கும், ராம்சேஸ் II என்ற பாரோ மன்னனுக்கும் இடையே கதேஷ் வனாந்தரத்தில் ,ஓரெண்ட்ஸ் என்ற ஆற்றின் அருகே பெரும் போர் ஒன்று நடைபெற்றது.பெரும் வெற்றி பெற்றதாக இரண்டு பேருமே ஆவணப்படுத்தி உள்ளனர்.
பண்டையகால எழுத்துக்களில் "Torah "வானது ஒரு தனித்தன்மை உடைய புத்தகமாக உள்ளது.தங்கள் மக்களை வெற்றிகளிலும் தோல்விகளிலும் அது காட்டியுள்ளது.யூத மக்கள்-சில சமயங்களில் அவர்களுடைய தலைவர்கள்-கலகம் செய்பவர்களாகவும்,சிலை வெளிப்படை கொண்டிருப்பவர்களாகவும்,அடிமை சந்ததிகளில் இருந்து வந்தவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர்.இதுதான் "Torah -விற்கு பெரும் நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது.இஸ்ரேல் ஸ்ங்வில் என்ற எழுத்தாளர் இவ்வாறு கூறுகிறார்."பைபிள் இஸ்ரேல் மக்களுக்கு எதிரான புத்தகம் ஆகும்.தன்னுடைய கதையில் இஸ்ரேல் ஹீரோவாக அல்லாமல் வில்லனாகவே உள்ளான்.இதிகாசங்களில் தனித்து நிற்கிறது.அது உண்மைக்காக நிற்கின்றது,தனிமனித வழிபாட்டிற்காக அல்ல.
தொல்லியல் என்பது வேலைப்பளு மிக்கதும் செலவு பிடிக்கும் ஒன்றாகவும் உள்ளது.பைபிளுடன் தொடர்புடைய பல இடங்களில் சிலவற்றை மட்டுமே தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

மிகக்குறைந்த அளவே கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகளைக் கொண்டு முடிவுகள் எடுப்பது கடினம்.அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் உண்மையைக் கூறாமல்,"இப்படி இருக்கலாம்" என்பது போன்ற ஒரு மேலோட்டமான முடிவுகளையே கொடுக்கும்.தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள் உண்மையில் முன்னொரு காலத்தில் இருந்தன என்பதை மட்டுமே தொல்லியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.அதனால் கிடைக்கப்படாத பொருட்கள் இருந்ததே கிடையாது என்று பொருள் அல்ல.சான்றுகளுடைய பற்றாக்குறை என்பது பற்றாக்குறை இருக்கிறது என்பதற்கு சான்று அல்ல.
இருந்தாலும் சில தொல்லியல் ஆய்வாளர்கள் சில கனத்த முடிவுகளை எடுக்கின்றனர்.உங்களுக்கெல்லாம் நன்றாக தெரிந்த "எரிக்கோ" என்ற பகுதியில் மிகச்சிறிய ஓர் இடத்தில உலகப்புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளரான "கேன்யன் காத்லீன்"என்பவர் ஆய்வுகளை மேற்கொண்டார்.கி.மு.1272-ல் யோசுவா அந்த இடத்தை கைப்பற்றி அவ்விடத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்களை தேடினர்.அவருக்கு ஒன்றும் கிடைக்க வில்லை.எனவே பைபிள் பொய் என்று முடிவு செய்தார்.
இங்கு பிரச்சினை என்னவென்றால் அவர் ஆராய்ச்சி செய்ததோ மிகச்சிறிய பகுதியில்.அதைக்கொண்டு அவர் முடிவு எடுத்திருக்கிறார்.அந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டு இருந்தாலும் , இன்று பல ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.யோசுவா-வின் காலகட்டத்தில் எரிக்கோவில் வாழ்விடங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
தொல்லியல் என்பது ஒரு புதிய அறிவியல் ஆகும். தற்பொழுது கிடைத்துக்கொண்டிருக்கும் ஆவணங்கள் இன்னும் முடிவடையவில்லை.இப்பொழுதுதான்தோண்டவே ஆரம்பித்திருக்கிறோம்."Talmud "எனப்படும் வேதாகம விளக்கவுரை யூதர்களிடம் உள்ளது.இதை கருத்தில் கொள்ளாமல் "Los Angeles Times" பத்திரிக்கையானது பைபிள் வசனங்களை வெளியிட்டது ஒரு தவறான நடவடிக்கை ஆகும்.
எடுத்துக்காட்டாக "Times " என்ற மற்றொரு பத்திரிக்கையானது ஒரு தகவலை வெளியிட்டது.பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுபவைகளாக உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக வெளியிட்டது.கீழ்கண்டவாறு அதை வெளியிட்டது."யாத்திரைகமம் புத்தகத்தில் ஓரிடத்தில் ,பாரோவின் தேரோட்டிகலினுடைய செத்த உடல்கள் கடற்கரைகளில் கிடந்தன"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் அடுத்த இடத்தில் "அவர்கள் கடலுக்கடியில் மூழ்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது".
துரதிர்ஷ்ட வசமாக "Times" பத்திரிக்கையானது "Rashi" என்ற மிகப்பெரும் பைபிள் விளக்கவுரையை படிக்கவில்லை.அவ்விளக்கவுரையில்,தேரோட்டிகள் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்பட்ட பிறகு கடலானது அவர்களை கரையில் கக்கி விட்டது என்று கூறப்பட்டுள்ளது.எதற்காக இப்படி நடந்தது?கரைகளில் ஒதுங்கியுள்ள அந்த உடல்களை பார்த்து இஸ்ரேல் மக்கள் அமைதி கொள்வதற்காகவே.ஒருவேளை உடல்கள் கரையில் ஒதுங்கா விட்டால்,மக்கள் பாரோவை நினைத்து இன்னும் பயப்படுவார்கள்.எப்படியாவது பாரோ பின்தொடர்ந்து நம்மை கொள்ளுவான் என்று நினைப்பார்கள்.ஆனால் இப்பொழுதோ செத்த உடல்களை பார்த்து நிம்மதி அடைவார்கள்.இதற்காகவே அப்படி நடந்தது.வசனங்கள் அதை உறுதி செய்கின்றன(யாத்:14:30).
யூத மக்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.காரணம்,அவர்கள் நியாயப்பிரமாணம் கூறும் உண்மைகளை அறிந்திருக்கின்றனர்.யாத்திராகமம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவைகள் வெறும் கதைகள்தான் என்றால்,சிலுவைப்போர்களின் போது உயிரோடு கொளுத்தப்பட்ட பொழுது அதை சகித்துக்கொண்டு வாழ்ந்தனரே அது ஏன்?வெறும் கதைக்காகவா ?இவைகள் வெறும் கதைகள் என்றால்,அவர்கள் என்றோ கிருத்துவர்களாக மாறியிருப்பார்கள்.யாத்திராகாமத்தில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மைதான் என்று நம்பியதன் காரணமாக உயிரோடு கொளுத்தப்படுதலை ஏற்றுக் கொண்டனர்.இவற்றை கதை என்பது,இந்த நம்பிக்கைக்காக உயிரை விட்ட யூதர்களை அவமானப்படுத்துவது போன்றதாகும்.
ரபியோ அல்லது சாதாரண மனிதர்களோ,யார் மோசேயின் ஐந்து புத்தகங்களை மறுக்கிறார்களோ அவர்கள் அப்புத்தகங்கள் உண்மையான வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதையும் மறுக்கிறார்கள்.
3000 வருடங்களுக்கும் மேலாக யூத மக்கள் தங்கள் சந்ததிகளுக்கு யாத்திராகம வரலாற்றை உண்மையாக கூறி வருகின்றனர்.உலக வரலாற்றில் இதற்கு இணை எதுவும் இல்லை.பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு,ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கு,என்று இது ஒரு முடிவில்லா தொடராக உள்ளது.

இது "https://www.aish.com" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டது.
link: https://www.aish.com/atr/Archaeology_and_the_Exodus.html?catid=908479

No comments:
Post a Comment