இயேசுவின் தாய் மரியாலினுடைய கணவன் யார்?
இதற்குரிய பதில் எந்த நற்செய்தி புத்தகத்தை நாம் பார்க்க வேண்டும் என்பதை பொறுத்திருக்கிறது.மத்தேயுவின் புத்தகமா அல்லது லூக்காவின் புத்தகமா என்பதை பொறுத்தே பதில் இருக்கும்.இயேசுவின் வம்ச அட்டவணையை இருவரும் தரும் பொழுது இருவரும் வேறுபடுகின்றனர்.(பார்க்க:மத்:1:1-16 லூக்:3:23-38)
லூக்கா இவ்வாறு எழுதுகிறார்,
23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.
24. ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;............................................
31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
ஆனால் மத்தேயு கீழ்கண்டவாறு சாலொமோன் வழியாக அட்டவணையை கொண்டு செல்கிறார்.
எனவே கிறித்தவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.லூகாவை அவர்கள் தேர்ந்தெடுத்தால்,....................எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
16. யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
" மாத்தாத்தின் மகனாகிய ஏலியின் மகன் யோசேப் என்பவனே மரியலினுடைய கணவன்."பதிலாக மத்தேயுவை தேர்ந்தெடுத்தால்,
"மாத்தானின் மகனாகிய யாக்கோபினுடைய மகன் யோசேப் என்பவனே மரியலினுடைய கணவன் ".
© Gerald Sigal
இக்கட்டுரை "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment