கேள்வி: சீனாய் மலையில் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது என்பது "போதை பொருட்களின் விளைவால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மாயத்தோற்றமே " அன்றி வேறு எதுவும் அல்ல என்று இஸ்ரேலில் உள்ள ஒரு பேராசிரியர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். இது ஒரு மிக மோசமான கருத்து என்று நினைக்கிறேன்,ஆனாலும் என்னை யோசிக்க வைக்கிறது.உண்மையில் மோசேயிடம் பேசியது கடவுள்தான் என்றும் மனதை மாற்றக் கூடிய அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு பெரிய புகைக்காடு அல்ல என்றும் எவ்வாறு நாம் தெரிந்து கொள்வது?
பதில்:நானும் அக்கட்டுரையைப் படித்தேன்.அக்கட்டுரையை அவர் எழுதும் பொழுது அவர் என்ன புகைத்துக் கொண்டிருந்தார் என்று எனக்கு சரியாக தெரிய வில்லை.
ஒரு வெளிப்படுத்துதல் என்பது கடவுளிடம் இருந்து வந்ததா இல்லை வேறு ஏதாவது மனித கற்பனைகளில் இருந்து வந்ததா என்பதைத் தெரிந்து கொள்ள வழி முறைகள் உள்ளன.முதலாவது அவ்வாறு வெளிப்படுத்திய செய்திகளில் உள்ள கருத்துக்களை ஆராய்வதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்களோ அதை கடவுள் ஒருபோதும் கூறுவது இல்லை.மனிதர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது அக்கருத்துக்கள் நமக்கு இனிப்பாகவும் வசதியாகவும் இருக்கும்.ஒருவேளை கடவுள்தான் இக்கருத்துக்களை கூறுகிறார் என்றால், அது எப்படி இருந்திருக்கும்? நாம் நம்மை எதைச் செய்ய வேண்டும் என்று ஒருபொழுது கூட கேட்டிருக்க மாட்டோமோ அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று பெரும்பாலும் அவர் கூறுவார்.
இவ்வாறு கற்பனை செய்து கொள்ளுங்கள்.மோசே மலையில் இருந்து கீழிறங்கி வந்த பின் இவ்வாறு கூறினான்,"நல்லது நண்பர்களே கடவுள் கூறுவது இதுதான்.நாம் இப்போ எப்படி இருக்கிறோமோ அதுவே நல்லது என்று கடவுள் விரும்புகிறார்.நீங்க என்னவெல்லாம் சாப்பிட பிரியப்படுறீங்களோ அதையெல்லாம் சாப்பிடுங்க. உங்களோட உறவு முறைகளில் மிகவும் தாராளமாக இருங்க.நீங்க சந்தோசமா இருக்க என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் செய்ங்க.அந்த மாதிரி ஒரு வாழ்க்கையை வாழுங்கள்.வியாபாரங்களில் உண்மையாக இருப்பது,அப்புறம் பக்கத்துக்கு வீட்டுக் காரங்களோட அன்போட இருப்பது போன்ற சின்ன காரியங்களை பத்தி கவலை படாதீங்க.உங்க இருதயத்தில் உண்மையா இருந்தீங்கனா அதுவே போதும்.நாம இந்த உலகத்தில இருப்பதே நாம நினைச்ச படி வாழ்வதற்குத்தான்.சின்ன சின்ன ஒழுக்க காரியங்கள் பத்தியெல்லாம் கவலைப் படுவதற்கு இல்ல".
இந்த செய்தியை மோசே ஒருவேளை கொண்டு வந்திருந்தால் இக்கருத்துக்களை கடவுள் கூறியிருக்க மாட்டார் என்ற நமது சந்தேகம் சரியாகவே இருந்திருக்கும்.ஆனால் நமக்கு வசதியாக இருக்கும் செய்தியை மோசே கொண்டு வரவில்லை.பதிலாக மோசே மலையில் இருந்து கீழிறிங்கி வந்து கீழ்கண்ட செய்தியைக் கூறினான்(வார்த்தைகள் உள்ளவாரே கொடுக்கப்படவில்லை).
"நல்லது நண்பர்களே ,இதுதான் உடன்படிக்கை.கடவுள் இந்த உலகத்தை முடிக்கப் படாத ஒன்றாகத்தான் படைத்திருக்கிறாராம்.மீதியுள்ள பகுதியை நாம்தான் முடிக்க வேண்டியிருக்கிறது .நாம் நமக்காக இங்கே இருக்க வில்லை.மிகவும் மேலான நோக்கத்திற்காக இங்கே நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம்.இயற்கையாகவே நாம் சுயநலம் உடையவர்களாக இருக்கிறோம்.ஆனால் சுயநலம் அற்றவர்களாக மாற வேண்டியிருக்கிறது.நாம் இரத்தமும் சதையும் உடையவர்களாக இருக்கிறோம் மேலும் நம்மை திருப்தி படுத்துவதற்காகவே நாம் வாழ்கிறோம்.நாம் இன்னும் மேலானவர்களாக மற்றவர்களுக்காக கவலைப்படக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது.ஏழ்மையில் உள்ளவர்களையும் திக்கற்றோர்களையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.நம்மை சுற்றி உள்ளோர் நம்மை வெறுத்தாலும் நாம் அவர்களை அன்பாய் நடத்த வேண்டி உள்ளது.நாம் நாள்ளது செய்யும் மனநிலைமையில் இல்லா விட்டாலும் கூட நல்லவைகளையே செய்ய வேண்டி உள்ளது.மிகப் பெரும் வேலை நம் முன்னே உள்ளது.நாம் நம்மை மாற்றுவதன் மூலம் உலகத்தை மாற்ற வேண்டி உள்ளது.அனைத்து காரியங்களும் நாம் நினைத்த படி நடக்கும் என்ற உறுதியை கடவுள் கொடுக்க வில்லை.இதுதான் நம்முடைய வேலை.எழுந்திருங்கள் ,வேலையை பார்ப்போம்".
நியாயப்பிரமாணத்தின் மூலம் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பாக்கிறாரோ அது மிகப்பெரியது.அது நம்முடைய அடித்தளத்தையே அசைக்கிறது.கடவுள் சினாய் மலையில் இறங்கிய பொழுது அங்கே அவரிடமிருந்தே,வேறு யாரிடமிருந்தோ அல்ல, மோசே நியாயப்பிரமாணத்தை வாங்கினான் என்பதற்கு இதுவே சாட்சி.நியாயப்பிரமாணம் என்பது உயர்ந்த செய்திகளை அல்லது கருத்துக்களை பெறுவது என்பது அல்ல உயர்வான வாழ்க்கையை வாழ்வது என்பது ஆகும்.
Rabbi Moss
(இந்த கட்டுரையானது "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது ஆகும்.)
No comments:
Post a Comment