கேள்வி:என்னால் பதில் சொல்ல முடியாத இறையியல் கேள்விகளை என்னுடைய குழந்தைகள் கேட்டுக் கொன்டே இருக்கின்றனர்."கடவுள் எப்படிப்பட்ட தோற்றம் கொண்டிருப்பார்?" என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக என்னுடைய ஐந்து வயது குழந்தை கூறுகிறான்.எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை...
பதில்:சில சமயங்களில் குழந்தைகளுக்கு கூற வேண்டிய சரியான பதில் எதுவென்றால்,"எனக்கு தெரிய வில்லை என்பதே".கடினமான சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக அரைகுறை பதிலைக் கூறுவதை விட,இக்கேள்விக்கு பதில் கூற தன்னால் இயலாது என்று வெளிப்படையாக இருப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நாம் நிறைய கற்றுக் கொடுக்கிறோம்.
சிலவற்றைப்பற்றி உங்களுக்குத் தெரியாத பொழுது, உங்களுக்கு தெரியும் என்று காட்டி கொள்வதற்காக ஏதாவது ஒரு அரைகுரைப் பதிலை நாங்கள் கூறும் பொழுது என்ன நடக்கிறது என்றால்,"தெரியவில்லை என்று உண்மையாக இருப்பதை விட தெரியும் என்று காட்டிக்கொள்வது மிகவும் அவசியம் என்று நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிறீர்கள்.அது மிகவும் கெட்ட செயல் ஆகும்."எனக்கு தெரிய வில்லை"என்று கூறுவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் "ஏதாவது ஒன்று தெரியாமல் இருப்பதும் சரியான செயலே என்று நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.அப்படி உண்மையாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை என்றும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கூறுகிறீர்கள்.
எனக்கு தெரிய வில்லை என்று நீங்கள் கூறுவதன் மூலம் நீங்கள் கூறும் பதில்கள் எல்லாம் உண்மையான பதில்களே என்றும் உங்கள் குழந்தைக்கு கூறுகிறீர்கள்.உங்களுக்கு தெரிந்தவைகளை மட்டும் நீங்கள் கூறுவதால் நீங்கள் கூறும் பதில்களுக்கு மற்றவர்கள் கூறும் பதில்களை விட மிகவும் முக்கியத்துவம் உண்டு.
இன்னும் கூறப்போனால்,"அருமையான கேள்வி,இப்பொழுது எனக்கு பதில் தெரிய வில்லை,ஆனால் முயற்சி செய்து கண்டுபிடித்து கூறுகிறேன்"என்று கூறுவீர்களானால்,"படிப்பது என்பது ஒருபோதும் ஓய்ந்து போவது இல்லை,யார் வேண்டுமானாலும் படிக்கலாம்,பெற்றோர்கள் கூட படிக்கலாம்",என்று உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்.உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் மிகப்பெரிய பாடம் இதுவே.நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு பதிலைக் கொடுத்திருக்க மாட்டீர்கள்,ஆனால் மேலும் கேள்விகள் கேட்பதற்கு அவனை உந்தியிருப்பீர்கள்.
நல்ல ஓய்வு நாள் அமைய வாழ்த்துக்கள்.
Rabbi Moss
பின்குறிப்பு: "கடவுள் எப்படிப்பட்ட தோற்றம் கொண்டிருப்பார்?" என்ற உங்கள் குழந்தையின் கேள்விக்கு என்னுடைய பதில், "நல்ல கேள்வி, ஆனால் எனக்கு தெரியவில்லை".
(இந்த கேள்வி பதில் "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்தது இரா.இருதயராஜ் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது ஆகும்.)
No comments:
Post a Comment