Saturday, March 9, 2019

பரிணாமக் கொள்கை vs படைப்பு கொள்கை

           கேள்வி:மனிதர்களின் தோற்றம் குறித்து நானும் என்  மகனும்  பேசிக்கொண்டிருந்தோம்.குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கொள்கை அவனை மிகவும் பாதித்திருந்தது.நாம்  அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளிடம் இருந்துதான் தோன்றினோம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.ஆனால் நானோ, டார்வினுடைய பரிணாமக் கொள்கையை நம்பினேன்.அது போதுமான அளவுக்கு மனிதர்களுடைய தோற்றம் பற்றி விளக்குகிறது என்று நம்புகிறேன்."படைப்பு கொள்கை"என்பதை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு இன்னும் சொல்லிக் கொடுப்பதை விரும்ப வில்லை."படைப்பு கொள்கை"என்பது ஒரு புராண கதையே.இந்த பிரச்னை  ஒரு வட்டம் போல சுற்றிக் கொன்டே இருக்கும்.சிறிது விளக்கம் இதில் நீங்கள் கொடுக்க இயலுமா?

பதில்: 
                           ரபி ஒருவர் இஸ்ரேலுக்கு வானூர்தியில் போய்க்கொண்டிருக்கும் பொழுது அவருக்கு பக்கத்தில் "ஆத்திகன்"என்று தன்னை சொல்லிக்கொண்ட ஒருவர் அவருக்கு பக்கத்தில் உட்க்கார்ந்து இருந்தார்.பயணம் முழுமைக்கும் இருவரும் பேசிக்கொன்டே வந்திருந்தனர்.

                              பக்கத்துக்கு வரிசையில் அமர்ந்திருந்த அவருடைய பேரக்குழந்தை  அவ்வப்போது அவரிடம் வந்து குடிப்பதற்கு எதையாவது கொண்டு வந்தது.மேலும் ஏதாவது வேண்டுமா என்றும் கேட்டுக்கொன்டே இருந்தது.பல தடவை இது நடந்ததை பார்த்த அந்த ஆத்திகன் பெருமூச்சு விட்டு, "என்னுடைய பேரக்குழந்தைகளும் இவ்வாறு மரியாதையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு "ஹலோ"சொல்வது கூட அரிது.இதனுடைய ரகசியம் என்ன?" என்று கேட்டார்.

                                    ரபி இவ்வாறு கூறினார்."கடவுள் உருவாக்கிய ஆதாம் ஏவாள் இவர்களுக்கு இரண்டு தலைமுறைகளுக்கு பக்கத்தில் நான் இருப்பதாக என்னுடைய பேரக்குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.எனவே எப்பொழுதும் அவர்கள் என்னை அன்போடு கவனிக்கின்றனர்.ஆனால் நீங்கள் உங்கள் பேரக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் "பரிணாமக் கொள்கைப் படி குரங்குகளுக்கு இரண்டு தலைமுறை பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.எனவே உங்களை அவர்கள் ஏன் கவனிக்க வேண்டும்?என்பதை நினைத்து பாருங்கள்."

                                     நம்பிக்கைகள் விளைவுகளை கொண்டிருக்கின்றன.குழந்தைகள்  மரியாதையுடன் இருப்பது இல்லை என்றும் முதியவர்களை மரியாதையுடன் நடத்துவதில்லை என்றும் நீங்கள் ஏன் நினைக்குறீர்கள். பாரம்பரியங்கள்  மறக்கப்பட்டு விட்டது என்றும் ஏன் நினைக்குறீர்கள்? புதிய கல்விமுறைகளின் விளைவு இது இல்லையா? நம்முடைய குழந்தைகள் வேறு யாருமல்ல , அவர்கள் ஒரு முன்னேறிய விலங்கினமே என்று நாம் அவர்களுக்கு கற்று கொடுக்கும் பொழுது அதற்கேற்றவாரே அவர்கள் செயல் படுவார்கள்.தங்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேறு யாருமல்ல தங்களினும் மிகவும் கீழான பழங்கால  விலங்குகளே என்றுதான் அக்குழந்தைகள் நினைப்பார்கள்.


                         நம்முடைய நம்பிக்கைகள் எவ்விதமான தாக்கத்தை எடுத்தும் என்பதைப் பற்றிய அறிவு நமக்கிருக்க வேண்டும்.மனித உருவாக்கம் ஒரு விபத்தே அல்லது ஒரு விபத்தின் மூலம் மனித உருவாக்கம் நிகழ்ந்தது என்று நீங்கள் நம்பினால் வாழ்க்கை என்பதற்கு எந்த பொருளும் இருக்க போவது இல்லை.எப்படியோ நடந்து விட்டது என்பதில் எந்த பொருளும் இல்லை.அவ்வப்போது அங்கங்கே நடக்கும்  சிறு வெடிப்புகளிலோ அல்லது ஜீன்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களிலோ எந்த நோக்கமும்  இருப்பது இல்லை.என்னுடைய வாழ்க்கைக்கோ அல்லது உங்களுடைய வாழ்க்கைக்கோ அல்லது மனித குலா வ்ரற்றுக்கோ எந்த முக்கியத்துவமும் இருக்கப்போவது இல்லை.நான் ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்கிறேனா அல்லது கேட்ட வாழ்க்கையை வாழ்கிறானா என்பதில் எந்த பொருளோ அல்லது வித்தியாசமோ இருக்க போவது இல்லை.எப்படியாயினும் அனைத்தும் ஒரு மிகப் பெரிய விபத்தே . 

                            நாம் ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருந்தால் மட்டுமே  நமக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.ஒரு நோக்கம் கொண்டிருப்பவரால் நாம் உருவாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.நம்முடைய குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றனர் என்று நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது  மட்டுமே தாங்கள் விலங்குகளை காட்டிலும்  மேலானவர்கள் என்றும் தங்களிடமிருந்து மேலானவர்கள் எதிர்பார்க்கப் படுகிறது என்றும் அவர்கள் உணருவார்கள்.ஆதாம் ஏவாள்  கதை உண்மை என்பதினால் மட்டும் கற்றுக்கொடுக்க வேண்டியது இல்லை ஒழுக்க  வாழ்க்கைக்கு அதுதான் அடிப்படை என்பதினாலும் அதை நாம் அவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டியது உள்ளது.

                                     படைப்புக் கொள்கை மற்றும் டார்வினுடைய பரணமாக் கொள்கை இரண்டுக்குமே நம்பிக்கை தேவைப் படுகிறது.ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார் என்பதை ஒத்துக்கொள்வதற்கு  நம்பிக்கை தேவைப்படுகிறது.ஒரே ஒரு செல் ஒன்று பல ஆயிரக்கணக்கான முறை உருமாற்றம் பெற்று கடைசியாக மனிதன் வந்தான் என்று ஒத்துக்கொள்வதற்கும் நம்பிக்கை தேவைப் படுகிறது.ஆனால் இந்த இரண்டில் ஒன்று மட்டுமே ஒழுக்க வாழ்வை கட்டாய படுத்துகிறது.என்னுடைய குழந்தைகள் அதனைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் .

Rabbi Moss

(தமிழில் இது "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.)


No comments:

Post a Comment

My Posts