எரேமியா :31:31-34 ல் கூறப் பட்டுள்ள வசனம் புதிய ஏற்பாட்டின் மூலம் நிறைவேறிய தீர்க்க தரிசனமா?
"புதிய உடன்படிக்கை" என்று எரேமியாவில் கூறப்பட்டுள்ள வார்த்தையின் பொருள் என்ன? நாம் இக்கட்டுரையில் பார்க்கலாம்.
விடை:
எரேமியா எதைப்பற்றி இங்கு குறிப்பிடுகிறார் என்பதின் உண்மையான பொருளை நாம் புரிந்து கொள்ள தவறினால் "புதிய உடன்படிக்கை" என்ற வார்த்தைக்கு பொருளே இல்லாமல் போய் விடும். "பழைய உடன்படிக்கை"யின் புதுப்பித்தலைப் பற்றி இந்கு அவர் பேசுகிறார்.அதாவது பழைய உடன்படிக்கையானது புதுப்பிக்கப் படுகிறது.புதுப்பிக்கப் பட்டு அது தன்னுடைய உண்மையான தன்மையை, தீவிரத்தை திரும்பப் பெறுகிறது.முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, பழைய உடன்படிக்கை என்பது இடையில் மீறப் படுவதற்கோ அல்லது வேண்டாம் என்று கைவிடப்படுவதற்க்கோ அல்ல.அது எக்காலத்துக்கும் உரியது.
லேவி:26:44,45.
கடவுளுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் இடையே உள்ள அந்த பழைய உடன்படிக்கை அந்த எக்காலத்துக்கும் உரியது என்றும் நிரந்தரமாக உள்ள ஒன்றாகும் என்று திருமறையில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதி:17:7,13,19
சங்:105:8,
சங் :10:1
1 நாளா:16:13-18
எரேமியா கூறும் அந்த "உடன்படிக்கையை" பற்றி யூதர்களின் வேதாகமம் கூறுவதற்கு அப்படியே எதிராக கிறித்தவர்களின் வேதாகமம் கூறுகின்றது. எபி:8:13 இவ்வாறு கூறுகிறது,
"புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது"
ஆனால் இதற்க்கு முற்றிலும் வேறுவிதமாக வேதாகமம் கீழ்கண்டவாறு கூறுகிறது.
"அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்" -(சங் :111:7-8)
"புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது." - (ஏசா :40:8).
எரேமியா-வில் கூறப்பட்டுள்ள புதிய உடன்படிக்கை என்பது தற்போது நடைமுறையில் உள்ள உடன்படிக்கைக்கு பதிலாக வேறு ஒரு உடன்படிக்கை என்று பொருள் அல்ல. தற்போது உள்ள அதே உடன்படிக்கையை மேலும் தீவிரப்படுத்துதல் அல்லது இன்னும் முக்கியத்துவப்படுத்துதல் என்பது போன்ற பேச்சு வழக்கில் அவர் பேசுகிறார்.
(இந்த கட்டுரையானது "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து எடுக்க பட்டு இரா.இருதயராஜ் மொழிபெயர்க்கப் பட்டது ஆகும்.)
No comments:
Post a Comment