Friday, March 29, 2019

வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்?

நீதிமொழிகள் 30:4-ல் குறிப்பிடப்படுபவர் யார்?

   வானத்துக்கு ஏறியவர் என்று நீதி:30:4-ல் ஒருவர் குறிப்பிடப்படுகிறார்.அவர் இயேசுவா? நாம் கண்டுபிடிப்போம்.

                      இயேசு தெய்வீக தன்மை கொண்டவர் என்றும் அவர் கடவுள் என்றும் கிறித்தவர்கள் கூறுகிறோம்.அதை நிரூபிப்பதற்காக மேற்கூறிய வசனத்தை காட்டுகிறார்கள்.ஆனால் அந்த வசனத்தை கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் இவ்வகையான புரிதல் தவறு என்று நிரூபித்து விடும்.
                         யாக்கேயின் மகனாகிய ஆகூர் தனக்கு அறிவு இல்லை என்று கூறி பலவிதமான கேள்விகளை எழுப்புகிறான்.அறிவித்த தேடுகிறவர்கள் கண்டிப்பாக இக்கேவிகளுக்கான பதிலைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறான்.கீழ்கண்டவாறு கேள்விகளை எழுப்புகிறான்.

"வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?"
             
           அனைத்து விதமான அறிவுக்கும் தேவையான அடிப்படை இக்கேள்விகளுக்கான பதில்களில் உள்ளன என்று அவன் நினைக்கிறான்.
                                  அவருடைய நாமம் என்ன?,என்ற கேள்விக்கான பதில் பைபிளில் உள்ள வசனங்களில் உள்ளது என்று நமக்கு நன்றாக தெரியும்.மேலும் பைபிள் நமக்கு கூறுவது என்னவென்றால்,வானங்களையும் பூமியையும் படைத்தவர் கடவுள் என்றும் இயற்கையின் அனைத்து சக்திகளும் அவருக்கு கட்டுப்பட்டே இருக்கிறது என்பதே ஆகும்.
                                      மேற்கூறிய முதல் கேள்விக்கு அடுத்த கேள்வி "அவர் குமாரனுடைய நாமம் என்ன?".முதல் கேள்விக்கான பதிலை பைபிள் வசனங்கள் மூலமாக நாம் கண்டுபிடித்தது போல,இந்த கேள்விக்கான பதிலையும் வசனங்கள் மூலமாகவே கண்டுபிடிக்கலாம்.யாத்திராகமம் 4:22 வசனம் இவ்வாறு கூறுகிறது,

"அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்."

உபா:14:1 இவ்வாறு கூறுகிறது,


"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக."
          
எனவே "இஸ்ரயேல்" என்பதே குமாரனுடைய பெயர்.அவன் அவருடைய முதல் குமாரன்.பைபிளில் அனைத்து இடங்களிலும் தாவீது மற்றும் சாலொமோன் போன்றோர் குமாரனுக்குரிய இடங்களில்தான் உள்ளனர்(சங்:89:27,28 1நாளா:22:10,28:6). வரப்போகும் மேசியா கூட இவ்வகையான உறவுமுறைகளில்தான் இருப்பார்.இஸ்ரேல் மக்கள் அனைவரையும் ஒரே ஒரு மனிதனாக பாவித்து இங்கு கூறப்பட்டுள்ளது.எனவே கடவுளுடைய குமாரன் என்பவர் "இஸ்ரேல்" என்பவரே.அவனுக்கே அந்த உரிமை உள்ளது.அவனே அவருடைய முதல் குமாரன்.
               கடவுளுடன் இஸ்ரயேலுக்கு உள்ள உறவுமுறை என்பது கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள உறவு முறையையே குறிக்கிறது என்ற கிறித்தவர்களின் வாதம் பொய்யானது.இது நிரூபிக்கப்படவும் இல்லை,யூத வேதாகமத்தில் இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.இவை அனைத்தும் தவறான நோக்கமுடைய வாதங்கள் ஆகும்.

இது "https://jewsforjudaism.org" என்ற பக்கத்தில் இருந்து இரா.இருதயராஜ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டது.



No comments:

Post a Comment

My Posts